அத்தியாயம் - 3
விஷ்வஜித் வேகம் அவர்கள் இருவரையும் கலவரப்படுத்த, அதே யோசனையில் இருவரும் வெளியே வந்தனர்.
அதனின் தாக்கம் சிறிது கூட இன்றி சம்யுக்தாவிடம் பேசிக் கொண்டு இருந்தான், விஷ்வஜித்.
“யுகி் மா” என விஷ்வஜித் அழைத்ததும்,
“இருங்க ஏ.சி.பி சார். உங்களுக்குப் பிடிச்சதைத் தான் எடுத்துட்டு வரேன்” என அவனுக்கு விருப்பமான இஞ்சி மற்றும் புதினா கலந்த தேநீரை அவன் முன்னால் வைக்க,
அதை ஆவலாய் எடுத்துப் பருகியவன் “நீங்க ஏன் இருபத்தி அஞ்சு வருஷம் முன்னாடி பிறந்தீங்க?”
“ஏன்?” என்ற கேள்வியோடு சம்யுக்தா நிமிர்ந்து பார்க்க,
அவர்கள் இருவரையும் முறைத்த படி, விஷ்வஜித் பின்னால் வருண் நின்று கொண்டு இருந்தான்.
“நீங்க மட்டும் கொஞ்சம் பின்னப் பிறந்திருந்தா, நானே உங்களை பிரித்விராஜ் சம்யுக்தாவை தூக்கின மாதிரி, உங்களை தூக்கி இருப்பேன்” என்றான் சிரித்த படி,
“அடப்பாவி” என தலையில் தட்டி அவன் அருகில் ஜெய் அமர்ந்து, “ஏன்டா, எங்க அம்மா கிட்ட இவ்ளோ பிட்டு போடுறீயே! இதை வேற பொண்ணுங்க கிட்ட போட்டுருந்தா, உனக்கு கல்யாணமாவது ஆயிருக்கும்.”
“ப்ச்” என நன்றாக சாய்ந்து அமர,
வருண் பின்னால் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு தன்னை முறைப்பது தெரிந்ததும், “யுகி மா” என்றான்.
“ம்ம்ம் சொல்லு” என்றவள் பார்வையும் தன்னவனிடமே!
“நீங்க கொஞ்சம் யோசித்து முடிவு பண்ணியிருக்கலாம்.”
“எதைடா?” என ஜெய் கைகளில் டீயை எடுத்து கொண்டே கேட்க,
“ம்ம்ம்... உங்க அப்பாவை கல்யாணம் பண்ணுனதை பத்தி தான்.”
வருண் இன்னும் நகர்ந்து அவன் அருகில் வந்து “என்ன சொன்னீங்க, விஷ்வஜித்?” என்றான்.
“உண்மையைச் சொன்னேன்.” என்றான்.
“ஓ..” என்றவன் கைகள் விஷ்வஜித்தை வாகாய் அமுக்க,
“ஆ... ஓகே ஓகே குருநாதா விட்ருங்க சாரி.”
என உதறிக் கொண்டே கைகளை எடுத்துக் கொண்டான், விஷ்வஜித்.
“வருண்” என சம்யுக்தா முறைக்க,
சம்யுக்தா அருகில் சென்று அமர்ந்து, அவள் தோள் மேல் கைகள் போட்டு, “ஷீ வாஸ் மைன் யங் மேன்.” என்ற வருண் விழிகள் மொத்தமாய் தன்னவள் மீதே, சம்யுக்தாவின் விழிகளும் காதலைப் பொழிந்தது.
இருவரையும் பார்த்த விஷ்வஜித் மனதில் அவர்கள் காதல் கதைகள் கேட்ட பின் எழுந்த அந்த கேள்விகள், மீண்டும் எழாமல் இல்லை. எப்படி இவர்களால் இப்படி காதலிக்க முடிகிறது.
அதுவரை தோன்றாத எண்ணம் கூட அவர்களை பார்த்த பின் எழ, ‘தனக்கானவள் இப்படி இருப்பாளா? எல்லாவற்றையும் விட தான் மட்டுமே உலகம் என என்னில் கரைவாளா?’ என எண்ணம் பரவ, “ப்ச்” என தோள்களை குலுக்கிக் கொண்டான்.
“என்னடா?” ஜெய் கேட்க,
“ஒன்னுமில்லடா” என்றவன் ஜெய்யை மட்டும் அழைத்து வெளியே வந்து, “லவ் எல்லாம் ஹார்மோன் மாற்றம் மட்டும் தான்னு எனக்கு தோனியிருக்கு. பட், அதெல்லாம் யுகிமாவை பார்க்கும் வரை மட்டும் தான். அவங்க காதல் ஒவ்வொரு முறையும், என்னை பிரமிக்க வைக்குது ஜெய். ஜஸ்ட் ஐ லவ் ஹெர் லவ்” எனக் கூறவும்,
“ஜெய் அவன் தோளில் தட்டி, அதுக்கு தான் யாரையாவது லவ் பண்ணு. இல்லை, கல்யாணம் பண்ணுன்னு சொல்றேன். ஆனா நீ தான் மாட்டேன்ங்கிற.
பாவம் ஆண்ட்டி, உன் கல்யாணத்தை பத்தி பேசாத நாளே இல்லை”
“அடேய் நண்பா! எங்க அம்மா தானே. அவங்க உன்கிட்ட சீரியல் டயலாக் எல்லாம் பேசி காமிச்சிருப்பாங்க. அதைப் போய் உண்மைன்னு நம்பிட்டியே!” என சிரிக்க,
“விஷ்” என்றான்.
“ஜெய், எனக்கு யுகி மா மாதிரி பொண்ணு வேணும். என்னை எனக்காகவே நேசிக்கிற பொண்ணாப் பார்க்கலாம். அப்படி ஒருத்தி இருக்காளான்னு. இல்லைனா, விவேகானந்தர் மாதிரி வாழ்ந்திட வேண்டியது தான்.” என முடித்தவன், “பை நாளைக்குப் பார்ப்போம்” என செல்ல,
செல்லும் நண்பனை எண்ணிய படியே “கடவுளே! எப்படியாவது அவனை சம்சாரியாக்கிடு” என வேண்டுதலை வைத்தான் ஜெய்.
அவனவளோ, அவனுடைய நினைவுகளில் சித்தம் மறந்து தவித்துப் போனாள்.
“ப்ச் சஹா, என்னடி? எடிட்டர் கூப்பிடுறார் சொல்றேன். நீ என்னவோ பேன்னு விட்டத்தை பார்த்திட்டு இருக்க.” என அவளை குலுக்கினாள், காவ்யா.
“காவி”
“என்னவாம்?”
“காவி”
“கொன்றுவேன்டி முதல்ல இருந்து ஆரம்பிக்காத.”
“ப்ச் போடி! அவன் பிசிக் பார்த்தா, இப்படி சொல்ல மாட்ட.”
“எனக்கு வேணாஞ்சாமி உன் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி எல்லாம்.” என கும்பிடு போட்டவள், “நீ போய் உள்ள இருக்குற அய்யாசாமியை பாரு தாயி” என உள்ளே தள்ளி விட,
“என்னமா, ஆர்டிகில் எழுதிட்டியா?”
“எஸ் சார்” என தான் எழுதியதைக் கொடுக்க, ஒருமுறை வாங்கிப் பார்த்தவர் “நல்லா இருக்கு. ஆசிரியர் கிட்ட கேட்டுச் சொல்றேன்.” என சொல்லவும்,
“நன்றி” என வெளியே வந்தவள், காவ்யா எதிரில் அமர,
“என்னடி சொன்னாரு?”
“ம்ம்ம்... எல்லாம் நல்லா தான் இருக்காம்.”
“சரி அதுக்கு ஏன் சலிச்சுக்கிற.”
“ப்ச்” என விழிகள் மூடவும், நயனங்களுக்கு உள்ளே நர்த்தனம் ஆடினான், விஷ்வஜித்.
சட்டென விழிகளை திறக்க,
அவளையே பார்த்த படி இருந்த காவ்யா “என்ன?” என்றாள்.
“அவன் தான்டி”
“சஹா” என காவ்யா முறைக்கவும்,
“நிஜமா தான். நீ மட்டும் அவனைப் பார்த்து இருக்கனும். என்ன ஸ்டைல் தெரியுமா! என்ன பிசிக்? ஒரு லுக் தான், நான் காலி!” என அவள் புலம்பும் போதே,
“சஹா” என அழைத்து கொண்டே பாலா வர,
“இதோ வந்துடுச்சு, உன் அடிமை. அதுகிட்ட எதுனாலும் சொல்லு, அது நம்பும்.” என காவ்யா நகர,
“இருடி” என பாலா, காவ்யா கையைப் பிடித்து தடுத்தவன்,
“என்ன சஹா?” என்றான்.
“அது ஒன்னுமில்லடா. நீ சொல்லு. என்ன தல போற காரியம்?”
“சஹா, நான் ஒரு நியூஸ் சொல்லுவேன். ஆனா, நீ அதை ரகசியமா வச்சுக்கோ!”
“ஓ... இது ரகசியம்” என்றவள் “இன்னும் கொஞ்சம் சத்தமாச் சொன்னா, வாசல்ல இருக்க வாட்சுமேனுக்குக் கேட்கும்.”
“சஹா” என பாவமாய் பாலா பார்க்கவும், காவ்யா சத்தமாய் சிரிக்க,
அவள் தலையில் தட்டியவள் “குத்தினது நண்பன்னா, வெளியே சொல்லாம இருக்கனும்.”
“இந்த டயலாக் இப்போ எதுக்கு?” என காவ்யா கேட்டதும்,
“ப்ச் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது” என சஹானா கூற,
“ஷ்ஷ்... உங்க கிட்ட சொல்ல வந்தேன் பாரு. என்னைச் செருப்பால அடிக்கணும்.”
“சாரி, வெளியில இருக்கு எனக்கு நேரம் இல்லை. நீயே போய் அடிச்சுக்கோ” என காவ்யா கூற,
பாலா முறைக்க,
“ப்ச் காவி, சும்மா இருடி. மில்க் ஏதோ சொல்ல வரான். சொல்லு, என்ன விஷயம்?” என்றாள்.
“சஹா என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இன்வெஸ்டிகேஷன் பத்திரிகையில வேலை பார்க்குறான் சொன்னேன்ல.”
“ஆமா”
“அவன், ஒரு சென்ஸ்டிவ் நியூஸ் சொன்னான்.”
“அடேய் இன்னும் நியூசே சொல்லலை. முதல்ல சொல்லு. அது சென்சிட்டீவ்வா இல்லையான்னு, நான் சொல்றேன்.” என காவ்யா சொன்னதும்,
பாலா முகம் பார்த்துக் கொண்டே “காவி சும்மா இரு.” என்றவள் “நீ சொல்லு பாலா” என சாஹனா சொல்ல,
“சஹா இப்போ ஒரு ஆறு மாசாமா சென்னையில இருக்கிற அனாதை ஆசிரமங்கள்ள இருக்க குழந்தைகள் எல்லாம் காணாமப் போகுதாம்.”
“வாட்?”
“ப்ச்.. டேய் இப்போ எல்லாம், இது சாதாரணம்டா. சின்ன பிள்ளைகளை தூக்கிட்டு போய் எல்லாத்தையும் பண்ணிட்டு, அசால்டா போட்டுத் தள்ளிட்டு போய்டுறானுங்க.” என காவ்யா கூறவும்,
“சொல்ல வெட்கமா இருந்ததாலும், நாமளும் அந்த சமுதாயத்தில தான் வாழ்ந்துட்டு இருக்கோம், காவி.” என சஹானா சொல்ல,
“உண்மை தான். அப்படி காணாமல் போனாலும், பொண்ணுங்க மட்டுமே காணாமப் போகனும். இங்க பசங்களும் காணாமல் போயிருக்காங்க, சஹா. அது தான் இங்க நெருடலான விஷயம்.”
“என்னடா சொல்ற?”
“ம்ம்ம்... எதுக்குன்னு தெரியாம இந்த விஷயங்களை கவர் ஸ்டோரியா கூட போடக் கூடாதுன்னு, பெரிய இடத்திலயிருந்து பிரஷராம்.”
“ப்ச்... அப்போ காணாமப் போன பசங்களைப் பத்தி யாரும் கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலையா?” என காவ்யா கேட்க.
“அந்த ஆசிரமத்தில வேலை செய்றவங்க எல்லாம் சேர்ந்து செய்றதா இருக்கும், காவி. ஆனா எதுக்காக?” என யோசித்து கொண்டே “எதுக்கும் இதைப் பத்தி எதுவும் கவர் ஸ்டோரி ட்ரை பண்ணலாமான்னு நான் எடிட்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்.” என சஹானா நகர்ந்து செல்ல,
“ஏன்டா மில்க்கு இவளை எதுக்கு கிளப்பி விட்ட? இனி ஜான்சிராணி மாதிரி, இவபாட்டுக்கு கிளம்பிப் போய்கிட்டு இருப்பா?”
“அவ போனா, உனக்கென்னடி?”
“சனி என்னைக்கு தனியாப் போயிருக்கு. கூடவே என்னையும் கூட்டிட்டு தான் போகும்.” என சோகமாய் சொல்ல,
“அப்ப வர நீ” என பாலா காவ்யா கைகளை பிடிக்க,
“வெளில இருக்குறதுக்கு வேலை வந்துடும் போலவே” என,
இவர்கள் பேசும் போதே சஹானா கோபமாய் வந்தமர,
“என்ன சஹா?” என பாலா கேட்கவும்,
“ம்ம்ம்... அந்த சொட்டை மண்டை எல்லாத்தையும் கேட்டுட்டு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் இங்க போட மாட்டாங்கம்மா. அதுக்கெல்லாம் வேற ஆட்கள் இருக்காங்க. நீ போய் நான் சொன்ன கட்டுரையை எழுதிட்டு வான்னு சொல்லுது.” என்றாள் கடுப்புடன்,
சற்று நேரம் யோசித்தவள் “நான் இதை பத்தின தகவல்களை கலெக்ட் பண்ணத் தான் போறேன்.” என சஹானா கூறவும்,
“இது தான் சஹானா. நானும் உன் கூட வரேன்.” என பாலா கூறி, அவள் கையின் மேல் கைகள் வைக்க, இப்போது இருவரும் காவ்யா முகம் பார்க்க,
“வரேன் வரேன் வந்து தொலையுறேன். வேற வழி!” எனக் கூறி, அவளும் அவர்கள் கைகள் மீதே வைத்தாள்.
“நண்பிடி” என சஹானா கட்டிக் கொள்ள,
“ஆனா, எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணு. இனி அந்த வீடியோல வந்தவனைப் பத்தி பேச மாட்டேன்னு.” என காவ்யா கூற,
பாலா புரியாமல் “என்ன சொல்ற?” என கேட்க,
“அதை, உன் உயிர்த் தோழி கிட்ட கேளு.”
“என்ன சஹா?” என்றான்.
“அது வந்துடா மில்க்கு” என நேற்றைய இரவு நடந்ததைக் கூற,
“என்ன சஹா இது? பாதி தான் பார்த்தேன் சொல்ற, பேர் தெரியலை, வீடியோ இல்லை. அனுப்பினது யாருன்னு தெரியாது. வெறும் பிசிக் மட்டும் வச்சு என்னன்னு தேட முடியும்?” என பாலா கேட்க,
“டேய் மில்க். உனக்கு தான் டெக்னிக்கல்லா எல்லாம் தெரியுமே! யாருன்னு தேடிக் கொடு.” என தன் மடிக்கணினியை அவன் புறம் திருப்பினாள்.
“சரி, எத்தனை மணிக்குப் பார்த்த?” என அவன் கைகள் ஊடகங்களை ஆராய,
“ம்ம்... இருக்கும், ஒரு பதினோன்னு போல” என்றாள்.
“ஓ... ” என சில நொடிகளில் அந்த நேரத்தில் வெளியான அனைத்து வீடியோக்களையும் காண்பித்தான்.
வேகமாய் வாங்கி ஆவலுடன் பார்த்தவள் “இல்லைடா” என உதடு பிதுக்க,
“சஹா இந்த வீடியோக்கள் தான் நீ சொன்ன நேரத்தில வெளியானது. அப்போ நீ பார்த்த அந்த வீடியோ இல்லேன்னா, அது சைபர் வேலையா தான் இருக்கணும்.”
“சைபர் க்ரைம் மா! என்னடா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற?” என காவ்யா அலற,
“உண்மை அதான்டி. ஒண்ணு இவ பார்த்தவன் பெரிய போஸ்டிங்க்ல இருக்கனும். இல்லையா, பெரிய டானா இருக்கணும்.”
“எதேய் டானா?” என காவ்யா வாயைப் பிளக்க,
அவர்கள் சொன்னது எதுவும் காதில் விழாமல், அவளவனோடு கனவுகளில் சஞ்சரித்து இருந்தாள், சஹானா.
அவள் கனவுகளில் திளைக்கும் அதே வேளையில், விஷ்வஜித் மனித உரிமை கமிஷன் முன் நின்று கொண்டிருந்தான்.
“சொல்லுங்க மிஸ்டர்.விஷ்வஜித் நீங்க ட்ரைன்டு ஷூட்டர் அப்படிங்றதனால எதுக்கு எடுத்தாலும் கன் யூஸ் பண்ணுவிங்களா?” என அங்கிருந்த நபர்களில் ஒருவர் கேட்க,
“அதானே! அப்போ மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லயா? நீங்க பாட்டுக்கு தப்பு செய்றவங்களுக்கு எல்லாம் நீங்களே தண்டனை கொடுத்திட்டா, கோர்ட் எதுக்கு? பின்ன நாங்க எல்லாம் எதுக்கு? சொல்லுங்கள் மிஸ்டர். இந்திரஜித்” என ஒருவர் சொல்லவும்,
அங்கே இருந்த காவல் துறையின் முதன்மை அதிகாரி என்ற முறையில் வந்திருந்த வருணைப் பார்த்து ஒற்றை புருவம் உயர்த்த,
வருண் வேண்டாம் என்பதாய் தலையசைக்க,
“ஊப்ஸ்” என்றவன் கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டு நின்றான்.
“நேத்தும் உங்க அராஜகம் தொடர்ந்து நடந்து இருக்கு மிஸ்டர். இந்தர்” என ஆரம்பிக்க,
வருணை பார்த்து “ஐ காண்ட்” என்றவன் அவர்கள் அமர்ந்திருந்த மேஜையின் மீது கைகளை ஊன்றி,
“வெல் ஆஃபீஸர்ஸ்.” என முதலில் கேள்வி கேட்டவரை நோக்கி, “கன் இருக்குன்னு நான் ஷூட் பண்ணலை சார். இனி அந்த உயிர் பூமிக்கு தேவை இல்லை அப்படின்னு தான் சுட்டேன்.”
“அதைச் சொல்ல நீங்க கடவுள் இல்லை மிஸ்டர். விஷ்வஜித்.”
“நான் கடவுள் இல்லை தான்.” என்றவன் “கொஞ்சம் பழைய டெக்னிக் தான் இருந்தாலும் சொல்றேன். உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கா?” என கேள்வி கேட்க,
“யா, ஐ ஹவ் டூ” என்றார்.
“ஓ... எத்தனை வயசு?”
“சிஸ்ட்டின் அண்ட் எய்ட்டீன்.”
“குட்... உங்க பசங்க ஸ்கூலுக்கோ, இல்லை காலேஜ்க்கோ போய்ட்டு, வீட்டுக்கு வரலைனா, உங்க மனநிலை எப்படி இருக்கும். அந்த மனநிலையில என்கிட்ட வந்தவங்க கிட்ட என்னால காமிக்க முடிஞ்சது, எந்த ஆடையும் இன்றி முகங்கள் சிதைக்கப் பட்ட ஒரு உயிரில்லா பிணத்தைத் தான்.”
“என்னால எல்லாரையும் போல அந்த விஷயத்தை சாதாரணமா கடக்க முடியல, சார். எஸ், ஐ ஷூட் தெம். அதைக் கொஞ்சம் கர்வமாச் சொல்லுவேன். உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அந்த நிலையில உங்க பொண்ணைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோன்னுமோ, அது தான் அந்தப் பெண்ணுக்கு அண்ணனா, ஓரு போலீஸ் ஆஃபீஸரா, எனக்கு தோணுச்சு செஞ்சேன். தட்ஸ் இட். அவளோ தானே! ஐ கேன் லீவ்”
என நகர்ந்தவன் அருகில் இருந்த இன்னொருவனைப் பார்த்து, அவன் எதிரில் நின்று, “நேத்து, ஏன் அடிச்சேன் கேட்டிங்க தானே?” என அவன் ட்ரிம் செய்த தாடியை தடவிக் கொண்டே,
“என் பெயரை தப்பா சொன்னான். அதான் அடிச்சேன்.” என நகர்ந்தவன்,
“என் பெயர் விஷ்வஜித்... விஷ்வஜித் பிரபாகரன்” என்றவன், “காட் இட்” என விழிகள் உயர்த்த,
அதைக் கேட்டவன் தலை தானாய் ஆடியது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த வருண் முகத்தில் கர்வம் தானாய் வந்தமர்ந்து கொண்டது.