அத்தியாயம் - 1
விழிகள் விலங்கானால்
வீழ்வது விதியாகுமோ...?
காதல் விலங்கானால்
கவிழ்வது மதியாகுமோ...?
விதியோ மதியோ...
காதல் விழிகள்
காவல் விலங்கே!
அந்தப் பெரிய பங்களாவின் செழுமையை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது அதன் வளமை.
தன் வேக எட்டுக்களால் அவன் அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான், வருண் (எ) வருண் கிருஷ்ணன்.
இந்தியாவின் தலை நகரமான டெல்லியின் முதன்மையான காவல் துறை அதிகாரி. தன் செயல்கள் மூலம், இன்னும் பல கூடுதல் பொறுப்பை ஏற்றிருந்தான்.
அவன் வயது ஐம்பதை நெருங்கினாலும், அவன் தோற்றமும் உடல் அமைப்பும் முப்பதின் தொடக்கத்தில் இருப்பது போல் பிம்பம் அளிக்கும்.
அவன் கூரிய பார்வை, தன் கைப்பேசியை தொட்டு மீண்டது.
அவன் அறையைத் திறந்து கொண்டே, “ஜெய் எங்க போனான்? ஆரா, போன் பண்ணியும் எடுக்கலையாம்?” என அவனைக் கடந்து போய் படுக்கையில் அமர்ந்தாள், அவனின் சரி பாதி சம்யுக்தா.
அவள் குரல் கேட்டும், ஏதோ யோசனையில் நடந்து கொண்டிருந்தவன் அருகில் சென்று தொட்டு,
“வருண் ஆர் யூ ஓகே?” என கேட்கவும்,
அப்போது தான் அவளைக் கவனித்தவன், “யுகி..” என அழைக்க,
அவனை உணர்ந்தது போல் “எதுவும் பெரிய கேஸா?” என்றாள் கவலையாய்,
“ம்ம்ம்... ” என்றவனும்,
“இன்னைக்கி அந்த *******நட்சத்திர ஹோட்டலில் ட்ரக்(போதை மருந்து) கடத்தல் நடக்கப் போறாதா, என் நம்பிக்கையான ஆட்கள் கிட்டயிருந்து தகவல் வந்திருக்கு.”
“ஓ” என்றவள் சட்டென அவன் முகத்தைப் பார்த்து, “அதான் இன்னும் ஜெய் வீட்டுக்கு வரலையா?” என்றாள் கொஞ்சம் படபடப்பாய்,
“ப்ச்... யுகி உனக்கு வேணா அவன் பையனா இருக்கலாம். ஆனா, அவன் ஒரு ஏ.சி.பின்னு மறந்துடாத” என்றான் நெற்றியில் முட்டிய படி,
“ஓ... அப்போ என்னைச் சொல்லிட்டு, சார் ஏன் ரூமை அளந்துட்டு இருந்திங்களாம்?”
“நான் டென்ஷனா இருந்ததுக்குக் காரணம் ஜெய் இல்லை, அவன் தான்.” என்றான் முறைப்பாய்.
“ஆஹான்! அப்போ உங்க டென்ஷன்க்கு காரணம் உங்க சிஷ்யப் பிள்ளையா?” என்றாள் சிரிப்புடன்,
“யுகி” என்றான் கோபமாய்,
“நீங்க தானே சொன்னீங்க. பல நேரம் அவன் உங்க சின்ன வயசை நினைவுப் படுத்துறான்னு. அதான் சொன்னேன்.” என்றாள்.
“ம்ம்ம்..” என்றவன் “அதான் கொஞ்சம் டென்ஷன். இது கொஞ்சம், சென்சிட்டிவ் ஆன கேஸ். அந்த ஹோட்டல், ஒரு எக்ஸ் மினிஸ்டரோடது. அவன் இப்போ எதிர் கட்சியிலேயும் உட்கார்ந்து இருக்கான்.
ஜெய் கிட்ட கூட கொஞ்சம் நிதானம் எதிர் பார்க்கலாம். பட் அவன் கிட்ட ஐ காண்ட்.” என்றவன் முகம் யோசனையை தத்து எடுத்தது.
இரவு நேர கேளிக்கைகள் உச்சத்தில் இருக்க, மொழி தெரியாத பாடலுக்கு ஏற்றவாறு தன் உடல்களை அசைத்துக் கொண்டிருந்தனர் அங்கிருந்த இளைஞர் பட்டாளம்.
அதனை கையில் இருந்த பீரை ஓர் மடங்கு விழுங்கிக் கொண்டே, தன் மீசை நுனி இதழில் பட, அதனை மெலிதாய் கடித்த படி பார்த்துக் கொண்டிருந்தான், அவன்.
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த படி, அவன் எதிரில் அமர்ந்து கண்கள் போதையில் சுருங்க, “ஹாய்! ஐ அம் ரீனா.” என கைகளை நீட்ட,
அதனை சட்டை செய்யாது தன் பானத்தை மீண்டும் ஓர் மிடறு விழுங்கிக் கொண்டே “சோ” என்றான்.
“வாவ்! உங்க பிசிக் மட்டுமில்ல, உங்க வாய்ஸ் கூட சோ மேன்லி” என்றவள் விழிகள், அவனை கபளீகரம் செய்ய, அவனை எடை போட்டாள்.
இறுக்கிப் பிடித்த சட்டை அதன் மேல் ஓர் ஜெர்கின், குளிருக்கு இதமாய் போட்டிருப்பான் போல. ஆனால் அவன் உடலுக்குள் குளிர் ஊடுருவுமா என்பது சந்தேகமே!
அவன் டி-ஷர்ட்டில் ஏதோ ஓர் வாசகம் எழுதியிருக்க, என்ன என்பதாய் எக்கிப் பார்த்தவள் மீது,
“வாட்?” என்றான் கடுப்புடன்,
“ஆர் யூ அ சவுத் இந்தியன்?” என கேட்க,
“வொய்?”
“யூவர் கலர் சேஸ் தட்” என்றாள்.
“ஓ... ” என முடித்தவன், விழிகள் சுற்றிலும் ஓர் முறை சுழன்றது.
“உன் டி-ஷர்ட்டில் என்னவோ எழுதி இருக்கே, என்ன அது?” என்றாள்
“ம்ம்ம்... ” என வாகாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டு,
“லவ் பண்ண மாட்டேன் போடி.” என தன் சட்டையில் இருந்ததை சத்தமாய் படிக்க,
“க்யா” என்றாள் புரியாமல் இந்தியில்,
அவளுக்குப் புரியும் படி ஹிந்தியில் சொல்லிய அவனின் கழுகுப் பார்வை, அந்த பாரை மீண்டும் ஓர் முறை வட்டமடிக்க, அவன் எதிர்பார்த்தவன் வந்து கொண்டிருந்தான்.
அதுவும் வந்தவன் அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகிலே அமரவும்,
“எனக்கு தெரியும்டா. நீங்க இங்க தான் உட்காருவிங்கன்னு.” என உள்ளுக்குள் எண்ணிக் கொண்டே,
தனக்கு எதிரில் ஏதோ பேசிக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான்.
நாகரிகத்தின் மொத்த உருவமாய் அவள். அவள் பேசுவது காதில் விழுந்தாலும், அவன் கவனம் முழுவதும் அவன் தேடி வந்தவன் மீதே.
“என்னவோ சொன்ன ஐ.ஜி பெரிய இவன், அவன் பையன் அதுக்கு மேல! கூடுவே இன்னொரு ஏ.சி.பி ஏதோ என்கவுண்டர்ல பெரிய பிஸ்தானு! என்ன பேருடா அவன் பேரு?” என அருகில் நின்றவனிடம் கேட்கவும்,
பின் அவனே நினைவு வந்தது போல் “இந்திரஜித் கிருபாகரனோ பிரபாகரனோ தெரியலை.” என சொல்லிக் கொண்டே அவர்கள் வந்த வேலையில் கவனம் வைக்க,
இவன் எதிரில் அமர்ந்திருந்தவள், “லவ் பண்ண வேணாம், என்னுடன் ஓர் நாள் இரு.” என சொல்லி முடிக்கும் அதே நேரம்,
சட்டென எழுந்து ஓங்கி அறைந்திருந்தான், அருகில் அமர்ந்தவனை.
அவன் அடித்த அடியின் தாக்கத்தில், இதுவரை அவனிடம் பேசிய பெண் கண்கள் வெளியே தெரியும் அளவுக்கு விழித்து எழுந்து இருக்க,
அடித்தவனை இறுக்கி கழுத்தைப் பிடித்துக் கொண்டே “என்ன சொன்ன?” என எதிரில் நின்ற பெண்ணிடம் கேட்க,
அவள் அதிர்ச்சியில் ஒன்றும் இல்லை என தலையசைத்து ஓடி விட, அவளைப் பார்த்துச் சிரித்தவன், “பெட்டர் லக், நெஸ்ட் டைம்!” என்றான் சத்தமாய்,
தன் துப்பாக்கியை சரி பார்த்துக் கொண்டே “எல்லாரும் அலர்ட்டா இருங்க, ஒருத்தன் கூட மிஸ் ஆகக் கூடாது.” என்றான் ஜெய் என்ற ஜெய் கிருஷ்ணன் ஏ.சி.பி.
“எஸ் சார்!” என அவனுக்குக் கீழ் பணி புரியும் காவலர் சொல்ல,
அவன் அருகில் வந்த மற்றொருவன், “சார் பாருக்குள்ள ஏதோ பிரச்சனையாம்.” எனக் கூறவும்,
“வாட்? யார் இந்த நேரத்தில, யாராச்சும் லோக்கல் போலீசை விட்டு கிளீயர் பண்ணச் சொல்லு, அவனுங்க வர நேரமாச்சு.” என அவசரப் படுத்த,
“சார், அவனுங்க அல்ரெடி உள்ள போயாச்சு.” என்றான்.
“ஓ... காட்! என்ன நடக்குது உள்ள” என வேகமாய் உள்ளே செல்லவும், அங்கே நடந்த சண்டையை விலக்க முன்னால் செல்ல,
பின்னாலிருந்தே அடித்தவன் யார் என யூகித்தவன், ‘இவன் எப்படி எப்போ உள்ளே வந்தான்?’ எனக் கேள்வியோடு அருகில் சென்று தோளில் கை வைத்துத் திருப்பவும்,
“அடிங்” என கையை ஓங்கியவன் ஜெய்யை பார்த்ததும்,
“சார், ஏ.சி.பி சார்! வாங்க வாங்க.” என அவன் கூற,
அவனை முறைத்துக் கொண்டே நகர்த்தி முன்னால் பார்க்க, வரிசையாய் நான்கு பேர் கைகள் கட்டப்பட்டு அவனுக்கு முன்னால் நின்றனர்.
அவர்கள் யார் என யூகித்து, ‘என்ன இது?’ என்றான் பார்வையிலே,
“ப்ச்” என அசால்ட்டாய் தோள்களை குலுக்கி வாகாய் டேபிளில் சாய்ந்து, மிச்சம் வைத்த பானத்தை குடித்தான்.
ஜெய் பின்னால் வந்த காவலர்கள், ஓர் முறை அங்கே நடந்த நிகழ்கவுகளை பார்த்துக் கொண்டே சாய்ந்து நின்றவனுக்கு சல்யூட் வைக்க,
அவர்களுக்கு தலையசைப்பை கொடுத்து விட்டு ஜெய்யை பார்க்க,
அனைவரும் பார்ப்பதை உணர்ந்தவன் “அரெஸ்ட் தெம்” என முன்னால் செல்ல,
அவனைப் பின் தொடர்ந்து வெளியே வந்தவன், “ஏ.சி.பி என் மேல செம்ம காண்டுல இருக்கீங்க போல” என ஜெய் மீது கைகளைப் போட,
“ப்ச்...” என தட்டி விட்டவன் நடந்ததை வருணிடம் சொல்ல,
அப்பக்கம் என்ன சொல்லப் பட்டதோ, “எஸ் சார்” என வைத்தான்.
அதற்குள் அரெஸ்ட் செய்தவர்களை வேனில் ஏற்ற, மீண்டும் அவன் வேன் அருகில் சென்று,
“என்ன சொன்ன அப்போ?” என்றான் அடித்தவன்,
நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பயந்து போய் “எ... எப்போ?” என்றவன் குரல் உள்ளுக்குள் செல்ல,
“ப்ச்... இவர் ஒரு ஏ.சி.பி” என ஜெய்யை காண்பித்து, பின் இன்னொரு ஏ.சி.பி பேர் சொன்னியே, அது என்ன பேர் சொன்ன?”
“இந்திரஜித்!” என சொல்லி முடிக்கும் முன் அடித்து விட்டு, திரும்பி சொல் என்றான்.
“இ.. இந்திர” என ஆரம்பிக்கும் முன் அடித்து, மீண்டும் சொல் எனக் கூற,
“இ... ” என ஆரம்பிக்கும் முன்னே அடித்தவன், “பேர், யார் என்னன்னு கூடத் தெரியாம?” என மீண்டும் அடித்தவன்,
“ஒழுங்கா பேர் சொல்லு?” என கேட்க,
“இ..” என ஆரம்பிக்க, .
மீண்டும் அடிக்கவும், “விஷ்” என்றான் ஜெய் அழுத்தமாய்,
“பின்ன என்ன மச்சான் பேர் கூடத் தெரியாம இருக்கான்” என மீண்டும் அடித்து விட்டு,
“பேரு விஷ்வஜித் பிரபாகரன்.” என்றவன் விரல்கள் அவன் கற்றை மீசை மீது தடவி, “எங்க பேரைச் சொல்லு?” என மீண்டும் அடிக்க,
“அடி வாங்கியவனோ வி..” எனக் கூற,
“எதிரினா முதல்ல அவன் பேரைக் கேட்டு தெரிஞ்சுக்கப் பழகனும். புரியுதா!” என அடித்தவன்,
“இனியாவது ஒழுங்கா பேர் சொல்லிப் பழகு” என அவனை முறைத்து விட்டு, தன் கூலர்ஸை எடுத்து மாட்டிக் கொண்டே “எங்க திரும்பிச் சொல்லு.” என்றான்.
அடி வாங்கியவனோ மெல்ல “வி... விஷ்.. விஷ்வஜித் பிரபாகரன்” என்றான் தட்டுத் தடுமாறி,
“சவுண்ட்ஸ் குட்.” என்றவன் குரல் தன் கம்பீரத்தை மீட்டது.
ஜெய் அவன் பேச்சை கேட்டுக் கொண்டே “விஷ் போதும். கெட் இன்சைடு” என அழைத்தவன் முகத்தில் அடக்கப் பட்ட கோபம், அப்பட்டமாய் தெரிந்தது.
“என்ன ஏ.சி.பி சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு.” என நன்றாக இருக்கையில் சாய்ந்து கொண்டே, ஒரு கண்ணை மூடிக் கேட்க,
“ப்ச்... கொன்றுவேன். உன்னை யாருடா அங்க வரச் சொன்னது?” என்றான் கடுப்பாய்,
“ம்ம்ம்.. எப்போதும் காவல்துறை அதன் கடமையைச் செய்யும்.” என்றான் சிரிப்புடன்,
“விஷ்...”
“கூல் மச்சான்.” என்றவன் “ஏன் குருநாதர் எதுவும் சொன்னாரா?” என விஸ்வஜித் கேட்டதும்,
“பின்னே, ஏற்கனவே நடந்த என்கவுண்டருக்கே உன் மேல விசாரணை கமிஷன். இதுல இந்த கேஸ் வேறயா? உனக்கு தெரியுமா இது ஒரு எக்ஸ் மினிஸ்டர் ஹோட்டல்.
அல்ரெடி அவுங்க எல்லாரும் உன் மேல செம்ம காண்டுல இருக்கானுங்க. அதான் இதுல நீ உள்ள வரவேணாம்னு என்னை அசிஸ்ட் பண்ணச் சொன்னாங்க. பட் நீ எனக்கு முன்னாடியே அங்க இருக்க.” என ஜெய் முறைக்கவும்,
“கூல்” என சிரித்த படி, “இந்த மனித உரிமை கமிஷன் ஆளுங்க எல்லாரையும், என்கவுண்டர்ல போட்டு தள்ளனும்டா.
ஏதோ நாட்டுக்கு தியாகம் பண்ணினவனை நான் சுட்ட மாதிரி என் மேல கமிஷன் வச்சுக்கிட்டு இருக்காங்க.” என அவனின் முந்தைய என்கவுண்டரினால் ஏற்பட்ட நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே வர,
“விஷ், நான் சொன்னாக் கேளு. நம்ம வேலை குற்றவாளிகளை பிடிக்கத் தான். அவங்களுக்கு தண்டனை கொடுக்க இல்லை, அண்ட்..” என ஜெய் வாய் திறக்கும் முன்,
“ஜெய், இப்போ என்ன சொல்ல வர, நான் செஞ்சது தப்புன்னா?”
“விஷ்”
“நோ ஜெய்! இப்போ மட்டுமில்ல எப்போவும் நான் செஞ்சது தப்புன்னு ஓத்துக்க மாட்டேன். ஒரு சின்ன பொண்ணுகிட்ட போய் இடியட்!” என அகராதியில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் மொழிய,
“ஓ... காட் நீ இருக்கியே! என் டேடை விட மோசம், ஜஸ்ட் ரிலாக்ஸ் மேன்.” எனக் கூறி அவன் வீட்டில் விட,
“ப்ச்... இன்னும் ரெண்டு காட்டு காட்டி இருப்பேன். உன்னால தான்.” என்றான் இன்னும் வண்டியை விட்டு இறங்காமல்,
“அய்யா சாமி, கொஞ்சம் கீழ இறங்கித் தொலை.” என ஜெய் கூறும் போதே, அவன் அலைபேசி அடிக்கவும்,
விஷ்வஜித் சிரித்துக் கொண்டே இறங்க,
“என்னடா?” என்றான்.
“உன் மேலிடம் தானே!” என்றான் அவன் மனைவி எனத் தெரிந்தும்,
ஜெய் அவனை முறைக்க,
“அது என்னடா லவ் கருமம். என்ன ட்ரஸ் அப்புறம் அது இதுன்னு பேசிக்கிட்டு,
போதாததுக்கு பேபி பிபின்னு வேற சொல்லிக்கிட்டு அலையறது” என்றான் நக்கலாய்,
“இப்போ இப்படி சொல்றவன் தான்டா அப்புறம் பொண்டாட்டியை விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டானுங்க.” என்றவன் விரல்கள் அவன் மனைவிக்கு செய்திகளை அனுப்பத் தவறவில்லை.
வீட்டின் புறம் சென்றவன், மீண்டும் வண்டியை ஒரு முறை சுற்றி வந்து “என்ன தான் ஐ.பி.எஸ் படிச்சாலும், இந்தக் காதல் ஒரு மனுஷனை எப்படி பாடாப் படுத்துது பாரு” என ஜெய்யின் அலைபேசியை பறிக்க.
“விஷ் என்னடா பண்ற?” என இருவரும் உரண்டு பிரள, மீண்டும் ஜெய்யின் அலைபேசியில் வருணின் அழைப்பு வரவும்,
“டேட்” என காதில் வைக்க,
“ஜெய் இன்னும் என்ன பண்ற?” என வருணின் குரலில், .
“என் கூட கட்டிப் பிடிச்சு உருள்றான்” என்றவன் வீடியோவையும் ஆன் செய்து விட,
முகத்தில் மண்ணுடன் இருவரும் இருந்த தோற்றம் பார்த்த வருண்,
அடக்கபட்ட புன்னகையுடன் முகத்தில் கோபத்தைக் கொண்டு வந்து,
“வாட் இஸ் திஸ் கைஸ்? ட்ரைன்டு ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மாதிரி பிஹேவ் பண்ணுங்க, ஜெய் கம் சூன்” என்றவன்,
அருகில் அவன் பார்வையை நேர் நோக்கிப் பார்த்தவனிடம்,
“விஷ்வஜித் நாளைக்கு வந்து என்னைப் பார்!” என வைக்க,
“விஷ், டேட் செம்ம டென்சன் ஆகிட்டார்.” என எழுந்து மண்ணை தட்டிக் கொண்டே, நண்பன் எழ கை கொடுக்க,
அவன் கையைப்பற்றி எழுந்து கொண்டே “ஏன்டா ட்ரைன்டு ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் இப்படி பண்ணக் கூடாதுன்னு எதுவும் லா இருக்கா என்ன?” எனக் கேட்டதும்,
“விஷ்” என்ற ஜெய்யின் குரலில்,
“ஓகே, ஓகே” என ஜெய்யை அணைத்து விடுவித்து, “கோ செப்..” எனக் கூற,
“நீயும் தான்” என்றவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
ஜெய்யை அனுப்பிய பின், அந்த ஓர் படுக்கை அறை மட்டுமே உள்ளே தன் அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றான். இப்படி ஒருத்தன் அருகில் இருக்கிறான் என்பதை அறியதோர் பலர், அங்கே உள்ளனர்.
அவன் வீட்டை திறந்து கொண்டே ஓர் முறை அவன் கண்களைச் சுற்றிலும் அலைய விட்டு, பின் உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்ததுமே அவன் கைகள் தன்னை போல் அங்கிருந்து பிளேயரில் பாடல்களை போட, பின் அவனின் வேலைகள் தொடர்ந்தது. குளித்து முடித்தவன் படுக்கையில் அமர்ந்து அதுவரை அணைத்து வைத்திருந்த கைப்பேசியை உயிர்பிக்க,
சட்டென விழுந்த செய்திகள் அனைத்தும் அவன் தாயிடமிருந்து, அனைத்தும் ஒலி நாடா வடிவில் அழுத்தி விட்டு காதில் ஹெட் போனை சொருக,
“விஷ்வா எப்போ தான் கல்யாணம் பண்ணப் போற, உனக்கு அடுத்து உன் தங்கை இருக்கா, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாமா?” என வரிசையாய் வந்த கேள்விகளில்,
“ஷப்பா இந்த அம்மா இருக்காங்களே” என ஹெட் போனை கழற்றித் தூரப் போடவும்,
அதே நேரம் அவன் பிளேயரில் இருந்து,
“கல்யாணத் தேன் நிலா” என்ற யேசுதாஸ் குரலில்,
“நீங்களுமா!” என அதனை அணைத்து வைக்க, மீண்டும் தொடு திரையில் ஜெய்யின் அழைப்பு வர,
“என்ன ஏ.சி.பி?” என அட்டெண்ட் செய்ய,
“நான் ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாரு.” என ஜெய் சிரிப்புடன் வைக்க, என்ன என்பதாய் திறந்தவன்,
“வாட் தி ஹெல் இஸ் திஸ்?” என எழுந்து அமர்ந்து விட,
அங்கே, அவன் சற்று முன் பாரில் செய்த அனைத்தும் ஒளிபரப்ப, உடனே ஜெய்க்கு அழைத்தான்.
“மீடியா எப்படி உள்ள வந்ததுடா?” என விஷ்வஜித் கேட்கவும்,
“இது மீடியா செய்தது இல்லை..”
“தென்?”
“யாரோ உன் ரசிகை செய்தது. அண்ட் அதுவும் சுட சுட போட்டு விட்டுருக்கா..”
“ஜெய்” என விஷ்வஜித்தின் குரலில்,
“கூல்” என்றவன் “போட்ட டென் செகண்ட்ல ‘டேட்’ க்கு நியூஸ் வந்து அவர் சைபர் க்ரைம் கிட்ட சொல்லி வீடியோ எடுத்தாச்ச்சு. அந்தப் பொண்ணுகிட்ட கூட வார்ன் பண்ணிட்டாங்க. யாரும் அவ்ளோவா பார்க்கல விடு.” என விளக்கியவன்,
“நாளைக்கு வீட்டுக்கு வந்துடுங்க ஆஃபீஸர்” என சிரிப்புடன் வைத்தான்.
யாரும் பார்க்கல என்ற எண்ணத்தில் ஓர் ஆசுவாசம் தோன்றியதும்,
வருணின் நினைவு வர, ‘குருநாதா நீங்க வேற லெவல்!’ என எண்ணிக் கொண்டே,
இன்னும் அவனின் துரித வேகம், அவனுக்கு எப்போதும் போல் ஓர் வித சிலிர்ப்பைக் கொடுக்க, நாளைய அழைப்பு எதற்கு என புரிந்து,
“பெரிய அர்ச்சனை இருக்குடா” என்றவன் விழிகள் தூக்கத்திற்குத் தழுவியது.
அதே நேரம் சென்னையிலிருந்த அவள் விழிகளோ, சற்று முன் தான் கண்ட வீடியோ எங்கே என சோசியல் மீடியாவை சல்லடையாய் சலித்துக் கொண்டிருந்தது, அவள் அவனவள் சஹானா!