தந்தையின் டைரியை பிரித்து படித்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிந்தோடியது.
" சாரிப்பா ... உங்க பீலிங்ச புரிஞ்சுக்க தெரியாதா தத்தியா இருந்துட்டேன் ..." என்று மேலே பார்த்து வாய்விட்டு மன்னிப்பு கேட்டவள்
" நீங்க உயிரோட இருக்கும் போது நிறைவேத்த முடியாத ஆசையை ... இப்போ செஞ்சு காட்றேன் ... என்ன மன்னிச்சுடுங்கப்பா ..." என்று கண்ணீருடன் செறுமியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை.
******************************************
" நீங்க பண்றத பார்த்து உங்களுக்கே வெட்கமா இல்ல ..." என்றவளை பார்த்து, உதட்டை பிதுக்கி தலையை இடமும் வலமுமாக ஆட்டியவன், " இல்லை ..." என்று தோள் குலுக்க,
" ராட்சஷன் ... கொஞ்சம் கூட என்ன பாத்து ஈவு இரக்கமே வரலையா ..." என்று ஆத்திரத்தில் கழுத்து நரம்பு புடைக்க கத்தியவளை, படு கூலாக பார்த்தவன்,
" ஏய் பாத்து ... கழுத்து நரம்பு புடைக்க எதுக்கு கத்துற ... அப்புறம் ..." என்றவன் சைகையில் நெஞ்சு வெடிப்பதை போல காட்டி நாக்கை ஒருபக்கமாக நீட்டி தலையை சாய்க்கவும்,
" நீங்க பண்றது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா ... கயல் அக்காக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுது ..." என்று அழுகையில் வார்த்தை வராமல் தடுமாறியவளின் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன், கதவை சாற்றி தாப்பாளை போட்டபடி,
" ஏய் இப்போ எதுக்கு அழுகுற ... நா மட்டும் என்ன விருப்பப்பட்டா செய்யுறேன் ... எல்லாம் உன் கயல் அக்காகத்தான் ... நமக்குள் நடக்குறது அவளுக்கு தெரியாது ... என்ன நம்பு ..." என்று அவள் கண்ணீரை தன் கட்டை விரலால் துடைத்து விட்டவன்,
" எல்லாம் கொஞ்ச நாள் தான் ... என் கல்யாணம் வரைக்கும் தான் இதெல்லாம் ..." என்றவன் அவள் கண்களை அழுத்தமாக பார்த்தபடி,
" திரும்பவும் சொல்றேன் இதால உனக்கு எந்த பிரச்சனையும் வராது அண்ட் கிடையாது ... நீ என்ன மத்தவங்க போல வேற யாரையோ கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினா சந்தோசமா வாழ போற ... நீயே இன்னும் ஒரு மாசமோ இல்ல அம்பது நாளோ தான் உயிரோட இருப்ப ... மண்ணு சாப்பிடறதுக்கு முன்ன இந்த உடம்ப நா கொஞ்சம் சாப்ட்டுக்குறேனே ... இதுல உனக்கு என்ன ப்ரோப்லேம் ..." சிறிதும் இரக்கமில்லாமல் பேசியவனை கண்டவளின் உடல் எல்லாம் பற்றி எரிந்தது.
' பேசாம அந்த அக்காகிட்ட நாமளே இந்த ராட்சசனை பத்தி போட்டு கொடுத்து கல்யாணத்த நிறுத்திடலாமா ... ம்ப்ச் நாம சொன்ன மட்டும் அவங்க நம்பிட போறாங்க பாரு ... எப்போ பாரு இவன் சுயரூபம் தெரியாம வேந்தன் வேந்தன் உருகிட்டு இருக்கு அந்த லூசு அக்கா ச்ச இந்த கயல் அக்கா இவனை எவ்வளவு நம்புது ... அவங்களுக்கு போய் துரோகம் பன்றானே, கூடவே என்னையும் அவங்க முகத்துல முழிக்காத அளவுக்கு நிக்க வச்சுட்டானே ...' என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தவள் கோபத்துடன் அவனை நிமிர்ந்து முறைத்து பார்க்க உன் கோபமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை என்ற ரீதியில் அவள் இதழ்களை வன்மையாக பற்றிக் கொண்டவனின் இதழ் அணைப்பில் எரிச்சல் போன இடம் தெரியாமல் மறைந்து போனது.