இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

என் மீளாக்காதலே கதை திரி

Status
Not open for further replies.
காதல் - 16கூர்க் மாநகரின் குளுமையான காற்று, கூடவே சாரல் துளிகள் எல்லாம் வேத்தின் முகத்தில் பட்டுத் தெறித்தது. காரின் வேகத்தை அதிகப்படுத்தியும் கூட,அவள் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் எதிரொலிக்க, “இடியட்... இடியட்!” என காரினை ஒரு சுற்று சுற்றி, ஓர் இடத்தில் நிறுத்தியவனின் உள்ளத்தில், கோபம் மட்டும் கனன்று கொண்டே இருந்தது.‘எப்படி, இத்தனை தூரம் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வந்தோம்?’ என்ற எண்ணம் தோன்றவும் அதன் காரணத்தை ஊகித்தவன், கூடவே சில வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அவள் இதழின் ஸ்பரிசமும் அவனை இலகுவாக்க, அவளை தீண்டும் போது மட்டும் அவன் உடலில் எழும் உணர்வுகள் எல்லாம்… இது தான் என, ஓர் எல்லைக்குள் அவன் வரையறுக்க முயலவில்லை அவன்!!மீண்டும், அவன் இதழ்கள் முணுமுணுத்தது...."இட்ஸ் டிவைன்" என,இப்போதென்றில்லை, அவளை ஒவ்வொரு முறை தீண்டும் போதும், அவன் உதிர்க்கும் வார்த்தை இது. "இட்ஸ் டிவைன்" என்பான்.அதற்கு அவளின் எதிர்வினையையும், கோபத்தையும் எண்ணியவன், "ப்ச்… ஷீ ஆல்வேஸ் டிரைவ் மீ க்ரேஸி." என இதழ் மொழியும் போது, குளிர் காற்று அவன் முகத்தில் மோதவும், மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.அவள்…! அவள்…! அவள்…! மட்டுமே எல்லாமுமாய் தோன்றியது அவனுக்கு. இப்போதே அவளை தன் கைவளைவுக்குள் சிறை வைக்கும் மோகம் எழுந்தது. அவன் மனதின் எண்ணங்கள் செல்லும் திசை கண்டு, ‘என்னடா இது? ப்ச்… அவ தான் வேணுன்னு அடம்பிடிக்கிற இதே மனசு, அவளப் பார்த்ததும் கட்டுப்பாடின்றி சிதறும் வார்த்தைகளை’ எண்ணி, 'வேத், நீ இன்னும் மாறலடா, மாறவே இல்லை! அவ சொன்னது கரெக்ட் தான். யூ நெவெர் சேஞ்ச்! அதுவும், அவ விஷயத்தில… ப்ச் நெவெர்!' என்றவனுக்கு, நவீன் எல்லாம் ஓர் பொருட்டே இல்லை. அதுவும் பெண்ணவளின் குணம் தெரிந்தவனுக்கு, அவன் எல்லாம் அவனுக்கு விஷயமே இல்லை. ஆனால் அவள், அவளின் கோபம்! என்ன செய்ய? எதைக் கொண்டு அவளை மாற்ற…?" என நின்றவனைத் தடுத்தது, கார்த்திக்கின் அழைப்பு.'இந்தா வந்துட்டான், பாசமலரு…' என எண்ணிக் கொண்டே, "சொல்லுங்க கார்த்திக்." என்றான்."சார் பாப்பா…." என தவிப்பாய் நிறுத்த,'பாப்பாவா அவளா..!' என்ற எண்ணம் தோன்ற, ஓர் சின்ன புன்னகையுடன்,"உங்க பாப்பா தானே, ரொம்ப நல்லா இருக்கா. என்னை எப்படி எப்படி சாவடிகக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு பேசி, அசால்ட்டா என்னை ஹேண்டில் பண்ணிட்டு, ஜாம் ஜாம்ன்னு இருக்கா." என்றான் வேத்."சார்""என்ன மேக்கிங்களடா அவளை மேக் பண்ணாங்க…?" என கேட்டவன் சிரித்து, "அதான் என்னை அவ கிட்ட மீள முடியாம கட்டி வச்சிருக்கு… ஐ லவ் தட் பீல்!" என்றவன் குரலில் அத்தனை ரசனை!!வேத்தை உணர்ந்தது போன்று, கார்த்திக்கின் முகத்திலும் கீற்றாய் புன்னகை!"ஆனா… உனக்கு திடீர் திடீர்னு மாச்சானுங்க முளைச்சு, என்னைப் போட்டு டார்ச்சர் பண்றாங்க…!" என இப்போது நினைத்தவனுக்கு, நவீனை எண்ணி சிரிப்பு தான் வந்தது. “டேய், என்னையே தலையால தண்ணி குடிக்க வைக்கிறாடா! இதுல, இவன் வேற ஜோக்கர் மாதிரி..!" என்ற எண்ணம் தோன்றி மறைய, அவள் அவனை டீல் செய்யும் விதத்தைக் காண, ஆர்வமும் வந்தது.அவன் சென்ற நொடியிலிருந்து, பெண்ணவள் அப்படியே அமர்ந்து விட்டாள். இறுதியாய், அவனின் இதழ் முத்தமும் அவள் காது மடல் உரசி அவன் சொன்ன வார்த்தையும், அவளை அப்படியே விதிர்த்து நிற்கச் செய்ய, ஒவ்வொரு முறை அவன் இதழ் முணுமுணுக்கும் அந்த வார்த்தையை அவன் சொல்லிச் சென்ற நொடி, அவள் தேகம் நடுங்க, அப்படியே அமர்ந்து விட்டாள்.அவனுக்கு அவள் மீதான உணர்வுகளை எல்லாம், அவன் காட்டிய இரவுகள் எல்லாம்.. கண் முன்னால் வந்து போனது. அவன் ‘ராட்சசனா! ரட்சகனா…?” என்ற கேள்வி எப்போதும் போல் இப்போதும் அவளுக்குத் தோன்றச் செய்ய, "ப்ச்" என தலையை பிடித்த படி இருந்தாள்."மேம்.." என அனு அருகில் வந்தவள், சத்யா இருந்த நிலையைக் கண்டு, "என்னாச்சு மேம்?" என கேட்டவள், சிபியைக் கண்டு முறைக்க…அவனோ, சற்று நேரம் முன்பு வேகமாய் சென்ற வேத் பற்றிய எண்ணத்தில் இருந்தான்.சிபியும் அனுவும் பேசிக் கொண்டிருக்கும் போது தான், யாரோ தண்ணீரில் விழும் சத்தம் கேட்க,"ஏதோ சத்தம் கேட்குது…" என்றவளிடம், "அடிக்கடி உன் மூளை துரு பிடிச்சிருக்குனு நிரூபிக்கிற…! யாராச்சும் இந்த நேரத்தில ஸ்விம்மிங் பூல்ல விழுவாங்களா?" என சிபி கேட்க."என் மூளை துருப்பிடிக்குமா…" என்றாள் கோபமாய்."எதுக்குமே யூஸ் இல்லனா, துருப்பிடித்து தானே போகும். அதானே, உலக நியதி." என்றான் சிபி.பின் எப்போதும் போல் இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும், சிபியின் கண் எப்போதும் யஷ் மீது இருப்பதைக் கண்டு,"நீ என்ன, எப்ப பார்த்தாலும் என் குட்டி ஹீரோவ சைட் அடிக்கிற…?" எனக் கேட்க."நான் சைட் அடிக்கிறனா! என் கடமைய செய்யுறேன்மா." எனச் சொல்லி நகர.."என்ன சொல்ல வர்ற?" என்றாள் அனு."ஒன்னும் சொல்ல வரல…" என யஷ்ஷை பார்க்க…யஷ்ஷோ, நவீனிடம் ஏதோ கேட்க…அவனும் ஓர் முறை சுற்றிப் பார்த்துவிட்டு, தலையசைத்துக் கொண்டிருந்தான்."பரவாயில்லை. நானும் கரெக்ட்டா தான் திங்க் பண்றேன்." என்றாள், தன் கைகளால் தன் தோளை தட்டி கொண்டே."அச்சோ… பாருடா! எதுக்கு இந்த தன்னடக்கம்" என்றான் சிபி நக்கலாய்."இல்லை, இன்னைக்கு தான் சத்யா மேம்கிட்ட சொன்னேன். நவீன் சார், உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்னு. அது தான் உண்மைங்கற மாதிரி, அவங்க ரெண்டு பேரையும் பாரேன்." என நவீனும் யஷும் பேசிக் கொண்டிருப்பதைக் காண்பிக்க…"அடியே, நீ தானா அது!" என உள்ளுக்குள் அலறி, “எங்க… பாஸை காணோம்…" என, அவன் பார்வை கண்டது, கோபமாய் செல்லும் வேத்தை தான்.“அப்போ, அங்க…” எனும் போதே,நவீன் அனுவிடம், "சத்யா, எங்க அனு? யஷ் வேற தேடுறான்." என்றவன், தேடி நீச்சல் குளம் பக்கம் விரைய…சிபி, செல்லும் அவனை கைபிடித்து தடுத்து, "நவீன் சார், நான் என்னனு பாக்குறேன். நீங்க உள்ள போங்க… உங்கள தேடுவாங்க." என்றவன், அவனையும் தாண்டி அப்பக்கம் விரைய…அங்கே சத்யா அமர்ந்திருந்த தோற்றம் கண்டு, அவன் வேக எட்டுக்கள் எடுத்து வைக்கும் முன்,அனு "மேம்…" என அவளிடம் விரைந்தவள், சிபியிடம் குற்றம் சாட்டும் பார்வையை வீச,'இவ வேற, நேரம் காலம் தெரியாம பார்த்து வைக்கிறா…' என அனுவை பார்த்துக் கொண்டே, "மேம் கிளம்பலாம்." என சத்யாவிடம் விரைந்தான்.சிபியை நிமிர்ந்து பார்த்தவள், "நான் போய்க்கிறேன்" என நகர்ந்தவள் திரும்பி அனுவிடம், “யஷ்ஷை" எனும் போதே,"மேம் ப்ளீஸ…" என சிபி அவளின் அருகில் வந்து, "இப்படியே நீங்க போக வேணாம்." என்றான் வேண்டுதலாய்.என்ன நினைத்தளோ, ‘சரி’ என்பதாய் யஷ்ஷை காண,"அனு, போய் கூட்டிட்டு வா." என்றான் சிபி."நவீன் சார்" என இழுத்தவளைக் கண்டு, பல்லை கடித்துக் கொண்டே "போய் கூட்டிட்டு வா." என முறைக்க,"இவன் எதுக்கு இப்படி நடந்துக்குறான்?" என எண்ணிக் கொண்டே, யஷ்ஷை அழைக்கச் சென்றாள்.யஷ் காரில் வரும் போதே உறங்கியிருக்க, சிபி அவனை படுக்கையில் விட்டு, அவளிடம் தலையசைத்து வெளியேற,அப்படியே அமர்ந்து விட்டாள். கண்களை மூடியவள் விழிகளுக்குள், வேத் வந்து சதிரடினான். அவனைக் கண்ட நொடி முதல், இதோ இப்போது வரை… அவன் செய்த செயல்களை எண்ணியவளுக்கு, வலிகள் மட்டுமே மிச்சம்."ப்ச்..." என தன் நிலைமையை எண்ணியவளுக்கு, அவளையும் மீறி கார்த்திக்கின் நினைவு தான். எப்போதும் அனைத்திற்கும் உடனிருக்கும் தமையன். அவள் வேண்டும் எனும் போது, அவன் உதிர்த்த வார்த்தைகள் எல்லாம் நினைவடுக்குகளில் மீண்டது. அந்த நினைவுகளே, அவளை தூங்க விடாது துரத்த, அவளையும் மீறி அவள் நயனங்களில் நீர் வீழ்ச்சி தான்.நேற்றைய இரவின் தூக்கமின்மை, தூரத்திய கடந்த கால நினைவுகள் எல்லாம் அவளை ஒரு வழி செய்ய, எதுவும் பேசாது தன் மடிக்கணினியை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள், சத்யா.அனு அவளைப் பார்ப்பதும், பின் தன் வேலையை பார்ப்பதுமாய் இருந்தாள். அனுவிற்கு, ஏதோ ஒன்று புரிந்தும் புரியாத நிலை. அவளிடமே கேட்டு விடலாம் என முயன்று, “மேம்…” என இதழ் திறக்கப்போக,அந்த சூழ்நிலையை கலைப்பது போன்று, சிபி உள்ளே வர… பின்னோடு வந்தான், வேத்.அவனைக் கண்டதும், ‘அனு’ சிரித்த படி எழுந்தவள், பின் எதுவும் பேசாது நிற்க…"என்ன மிஸ்.அனு, எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க? இது தான் ஒரு இன்வெஸ்டர்க்கு கொடுக்கிற மரியாதையா?" என தோரணையாய்சத்யாவின் எதிரில் அமர்ந்தான்.அவன் முகம் பார்க்கப் பிடிக்காது, நிமிராது இருந்தாள் சத்யா."அது... அது சார்.." என்றவளிடம், மீண்டும் பேச்சை வளர்த்தான்.அதே நேரம், நவீன் உள்ளே வர… வேத்தைக் கண்டவன், “ஹலோ சார், உங்கள இவளோ சீக்கிரம் எதிர் பார்க்கல.." என்ற படி உள்ளே வர…அதுவரை கீழே குனிந்து தன் மடிக்கணினியில் மூழ்கியிருந்தவள், நிமிர்ந்து நவீனைப் பார்க்கவும், வேத் முகம் சட்டென மாற, அவன் முகமாற்றத்தைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது.இது தானே அவன்! சில நேரம் தணலாய் இருப்பவன், சில நேரம் மழையாய் குளிர்விப்பான். அவள் புன்னகையை உணர்ந்தது போன்று ஒர் பார்வை வேத்திடம்!நவீன் பார்வை பெண்ணவளைத் தொடர,'இவன் வேற…' என வேத்… "நவீன், நீங்க மட்டும் இன்னும் நம்ம டீல்ல சைன் பண்ணலன்னு நெனைக்கிறேன். இன்னும் சொல்லப் போனா, அதுக்கு தான் இங்க வந்ததே…" என்றவன் சிபியைக் காண,"ஓ.. ஓகே சார்." என்ற நவீன் தவிப்பாய் சத்யாவைப் பார்க்க."ப்ச்..." என்றவன், முயன்று கோபத்தை கட்டுப்படுத்தி, "சிபி…!" என்றான் அழுத்தமாய்."இதோ பாஸ்…” என எழுந்து செல்ல, அவன் பின்னோடு செல்ல வேண்டிய நிலையில் நவீன் இருக்க, ஒன்றும் சொல்ல முடியாது, சிபியோடு சென்றான்.வேத் திரும்பி அனுவிடம், "அந்த டாக்குமெண்ட் பைல் உங்ககிட்ட தானே இருக்கு மிஸ்.அனு." எனக் கேட்டதும்,"அ... ஆமா சார்." என்றவள், கையில் முடிந்த வரை அத்தனை கோப்புகளையும் அள்ளிக்கொண்டு, அவ்விடம் விட்டு ஓடினாள்.இருவர் மட்டும் தனித்திருக்க, அவள் நிமிரும் பாடில்லை."ப்ச்.." என பொறுமை இழந்தவன், "ஏன்? அவன் வந்தா தான் நிமிர முடியுமா?" என்றான்."இருக்கலாம்." என்றாள்."சத்யா!" என்றான் அழுத்தமாய்,அவளிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை."நான் உன்கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம் நெனைக்கிறேன்." என்றான்.அவள் அதனைக் கண்டு கொள்ளாது, தன் வேலையை தொடர,"ஊப்ஸ்" என நீண்ட பெருமூச்சை விட்டு,"சாரி.." என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்,தன் காதில் விழுந்தது உண்மை தானா என்ற கேள்வி அவளுள் எழ, சற்று நின்ற அவள் கைகள், மீண்டும் மடிகணினியை தட்டத் தொடங்கி, இதழ்கள் இகழ்ச்சியாய் வளைய,"ப்ச்.... இது தான், இந்த திமிரு தான்.. நேத்து நடந்த எல்லாத்துக்கும் காரணம்." என்றவன் விழிகள், அவள் இதழ்களை தொட்டு மீண்டது.மீண்டும், அவள் இதழ்களுக்குள் மூழ்கும் எண்ணம் தோன்ற, முயன்று தன்னை மீட்டு… "சத்யா, லெட்ஸ் பிரேக் தி சைலன்ஸ்.. வா, நமக்குள்ள இருக்க ரிலேஷன் ஷிப் பத்தி நவீன் கிட்ட சொல்லலாம்." என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்."நமக்குள்ள என்ன?" என்றாள் புருவம் உயர்த்தி."சத்யா!" என்ற அவன் அதட்டலை புறம் தள்ளியவள், "பாருங்க மிஸ்டர்.வேதாந்த்… நமக்குள்ள இருக்க ஒரே தொடர்பு, நீங்க எங்க கம்பெனி இன்வவெஸ்டர்.. அண்ட் நான் இங்க எம்பிளாயி.. அவ்ளோ தான். அண்ட் மோர் ஓவர், எனக்கும் நவீனுக்கும் நடுவுல என்ன இருக்குன்னு, உங்க கிட்ட விளக்கணும்னு அவசியம் இல்லை." என்றாள்."சத்யா" என எழுந்தவன் அவள் அருகில் வர,அவன் வருகிறான் என்றதுமே எழுந்தவளை, சுவற்றோடு சிறை செய்தவன், அவளைத் தன் பார்வையாலே அளக்க,அவன் பார்வை வீச்சினை தாங்க முடியாது, "நீங்க இப்ப என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? ஜஸ்ட் லீவ் மீ!" என்றாள்."அப்படியா..! பட் வோய்…?" என்றவன் கைகள், அவளை இடையோடு அணைத்து, "நான் எவ்ளோ பொறுமைசாலினு உனக்கே தெரியும். பின்ன, ஏன் என்னை டெம்ப்ட் பண்றடி…?" என சிரித்து விட்டு, "உனக்கும் அவனுக்கும் என்னடி?""அது எங்களுக்குள்ள…" என்றாள் அவளும் சலிக்காது."ம்ம்ம்..." என அவன் கைகள் அவள் இதழ் உரசி, நேற்றைய வன்மையின் பயனாய் அவள் இதழ்களினோரம் சிறு விடு இருக்க, அதனை தடவிய படி, அவள் காது மடல் தீண்டி… "உன்னால என்னை தவிர எவனையும்…" என சிறிய இடைவெளி விட்டு, "உன் சுண்டு விரலைக் கூட தொட விட மாட்டடி.. பின்ன ஏன்?" என்றவன்,
"இனி முத்தத்தோட விடுற அளவு பொறுமை எனக்கில்லை. அது உனக்கும் தெரியும். நமக்குள்ள நடக்குற இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை, நீயே முடிவுக்குக் கொண்டு வந்துரு." என சொல்லியவன்,"இல்ல… நான் முடிவுக்கு கொண்டு வருவேன், என் வழியில்..! அண்ட் யூ நோ அபௌட் மீ" என அவள் கன்னம் தட்டி, அவளை விட்டு நகர்ந்தவன்… கதவின் அருகில் சென்ற பின் திரும்பி, "அவன் உனக்கு தாஜ்மஹால் கட்டுற அளவுக்கு போயிட்டான் பார்த்துக்கோ…! இல்லனா, ஐ…" என தொடங்கியவன், தோள்களை குலுக்கி விட்டு புயலென வெளியில் சென்றான்.வெளியில் வந்தவன், அவளை நெருங்கியதும் தனக்குள் முகிழ்ந்த உணர்வுகளை முயன்று அடக்கி, சிபிக்கு அழைக்க,"பாஸ்" என்றான்."சிபி, நான் இப்போ உடனே மும்பை போகணும். இன்னும் ரெண்டு நாளில வந்துடுறேன். நவீன் சைன் பண்ணின பேப்பர்ஸை லாயர்கிட்ட கொடுத்து, ஒரு தடவ கிராஸ் செக் பண்ணிட்டு, அவங்களுக்கு ப்ரஸ்ட்(first) டேர்ம் அமௌன்ட்டை ரிலீஸ் பண்ணிடு.” என்றான்."சார். அப்போ… உண்மையிலேயே அமௌன்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்றோமா?" எனக் கேட்க.அவன் கேள்வியில் வேத் சிரித்து விட்டு, "ஆமா" என்றான்."ஆனாலும்…" என நிறுத்த…"இது அவனுக்காக இல்லை…" வேத் கூற,அவன் சொல்லாமல் விட்டதை புரிந்தவன்,
"எஸ் பாஸ்" எனக் கூறி விட்டு,
"பாஸ்" என்றான்."என்ன?"


"
 
இல்லை, நான் வேணா மும்பை போகவா…?""ஏன்?""இல்லை, நீங்க அங்க போற அளவுக்கு பெரிய விஷயம் ஒன்னுமில்ல… அப்புறம், ஏன்? தென் உங்க ஹெல்த்க்கு…" என நிறுத்த,"சிபி, ஐ ஆம் பெர்பெக்ட்லி ஓகே. அண்ட் நான் சாவை கிட்ட போய் பார்த்துட்டு வந்துட்டேன்டா." எனச் சிரிக்க,"பாஸ்" என்றான் சிபி."ஓகே, லீவ் இட்!" என கூறிவிட்டு, "நான் சொன்னதை ஃபாலொவ் பண்ணு அண்ட் சத்யா…" என தொடங்க,"நான் பார்த்துகிறேன் பாஸ்." என்றான்."ம்ம்ம்…" என வைத்தவனுக்கு, அவளிடம் பேசிய வார்த்தைகளே எதிரொலிக்க…"ப்ச்.. ஏண்டி இந்தப் பாடு படுத்தி வைக்கிற என்னை..?இதுக்கு மேல உன்னை பக்கதுல வச்சு கைகட்டி பார்க்க மட்டும் என்னால முடியாது"என அவளோடு வார்த்தையாட ஆரம்பித்தான்.அவன் விட்டுச் சென்ற வார்த்தையின் முடிவு என்ன என்பதை, அவளைத் தவிர யார் அறிவார்!புயல் அடித்து ஓய்ந்தது போன்ற ஓர் அமைதி அங்கே. என்ன செய்தும், அவளால் வேலையில் கவனம் வைக்க முடியாது போக, அலுவலகம் விட்டு வெளிய வந்து விட்டாள்.காலையில் இருந்த தலைவலி, வேத்திடம் பேசிய பின் இன்னும் சேர்ந்து கொள்ள, எப்போதும் அவள் செல்லும் கஃபேக்கு முன், தன் வண்டியை நிறுத்தினாள் சத்யா.அவளுக்கு தேவையானவற்றையும் சொல்லி விட்டு, யஷ் உண்ணும் கேக் வகைகளை சேர்த்துச் சொல்லி அமர்ந்திருந்தவள், விழிகள் எங்கோ வெறித்துப் பார்த்த படி இருந்தது.அந்த இடத்தின் அமைதியை கலைப்பது போன்று, "சத்யா" என்ற குரல் கேட்க,'யாரென' பார்த்தாள். நவீன் தான் நின்றிருந்தான்.அவள் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தவன், "என்ன சத்யா? நான் ஊர்லயிருந்து வந்தலிருந்து உங்ககிட்ட பேசணுன்னு…" என நிறுத்த,."என்ன பேசணும் நவீன்?" என்றாள்."சத்யா.." என்றான் தயக்கமாய்."சொல்லுங்க.""அது…!" என இழுக்க,அவன் தயக்கமே, வேத் சொன்னது சரியெனச் சொல்ல,'இவனுக்கு ஏன் இப்படி ஒரு பைத்தியகாரத்தனமான எண்ணம் தோன்றியது' என கோபம் வர,அவள் முக மாற்றத்தைக் கண்டவன்,
தன்னை சரிப்படுத்தி, “சத்யா…” என்றவன், "நான் உங்கள விரும்புறேன். ப்ளீஸ் நோன்னு சொல்லிடாதீங்க… அண்ட் கண்டிப்பா யஷ்க்கு நல்ல அப்பாவா இருப்பேன். யூ கேன் டிரஸ்ட் மீ, அண்ட் உங்களுக்கு நல்ல புருஷனா…" எனத் தொடங்கும் போதே…"நவீன் போதும். எனக்கு உங்க மேல அப்படி ஒரு பீல் இல்லை. சோ, கிளோஸ் தி டாபிக்.. அண்ட் இங்கிருந்து போங்க.""சத்யா, யோசிச்சு சொல்லுங்க." என்றான் மீண்டும்"இதுல யோசிக்க ஒன்னுமில்ல அண்ட் எப்பவும் என்னோட முடிவு இது தான்.""சத்யா, யஷ்ஷை பத்தியாவது கொஞ்சம் யோசிச்சு, என்னை கன்சிடர் பண்ணுங்க ப்ளீஸ்…" என்றான்."ப்ச்… எனக்கு ஏற்கனவே தலைவலி நவீன், அண்ட் லீவ் மீ அலோன்..." என்றவள் எழப் போக…அவள் சென்று விடுவாளோ என்ற அவசரத்தில், "சத்யா…" என பெண்ணவள் கைப்பிடிக்க வரும் முன், அவள் கை அவனை அறைந்திருந்தது.அதனை அப்படியே சிபி அனுப்ப, விரிந்த புன்னகை வேத்திடத்தில்,"நான் சொன்னா இல்லனு சொல்லிட்டு, என்னடி பண்ணி வைக்கிற …" எனச் சிரித்தவனுக்கு, முன்பு அவள் தன்னை அடித்த அடியை எண்ணி, இப்போதும் சிரிப்பு வர,“சத்யா, சத்யா…” என மீண்டும் அந்தக் காணொளியை ஓட விட்டுப் பார்த்தான்.அவளை அறைந்த பின் வேகமாய் வெளியே வர, சிபி எதிரில் வரவும் சரியா இருக்க, அவனைப் பார்த்து முறைத்து விட்டு, “என்ன, உன்ன உளவு பார்க்கச் சொன்னாரா? இன்னும் இந்த வேலையை விடலையா நீ…?" என கோபமாய் முறைத்து விட்டு, வேகமாய் அவ்விடம் விட்டு சென்று விட்டாள்.வீட்டினுள் நுழைந்தவளுக்கு, மொத்தமும் ஓய்ந்த நிலை தான். ‘நவீனை அடித்திருக்க வேண்டியதில்லை. சொல்லிப் புரிய வைத்திருக்கலாம்.’ என எண்ணம் தோன்ற…"ப்ச்.. யார் மேல் உள்ள கோபத்தில்…" என தனக்குள்ளே புலம்ப, அவள் காதினோரம் வேத் சொன்ன வார்த்தைகள் எதிரொலிக்க, கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்து விட்டாள்.எங்கோ கதவு தட்டும் ஓசை கேட்க, முயன்று கண்களை பிரித்தவள், அப்போது தான் உணர்ந்தாள், தன் வீட்டின் கதவைத் தான் யாரோ தட்டிகிறார்கள் என, முயன்று எழுந்தவள் கதவினைத் திறக்க,நவீன் தான், பதட்டதோடு நின்றிருந்தான்."என்ன நவீன்?" எனத் தொடங்கியவள்,
அருகில் பதட்டமாய் நின்ற ராஜத்தையும், பாலனையும் கண்டு…"என்னாச்சு?" என்றாள்.சற்று தள்ளி, சிபி யாருக்கோ அலைபேசியில் பதட்டமாய் அழைத்துக் கொண்டிருக்க,"என்னாச்சு?" என்றாள் மீண்டும்."உங்க போன் என்னாச்சு சத்யா?" என்றான் நவீன்.“ஏன்?” என்றவளும், ‘அப்போது தான் உணர்ந்தாள்… கபே போகும் முன் அலைபேசியை நிறுத்தி வைத்திருந்ததை…!’"கொஞ்சம் தலைவலி… அதான் ஆஃப்…” என்றவளுக்கு, ராஜம் முகத்தைக் கண்டு, "என்னாச்சு ஆண்டி?" என்றாள்."சத்யா…" என்ற நவீன், "யஷ்க்கு அக்சிடென்ட் ஆயிடுச்சாம்.
ஸ்கூல்லயிருந்து கால் பண்ணிருக்காங்க. நீங்க போன் எடுக்கலன்னதும், எனக்கு கால் வந்துச்சு.” எனக் கூறி, “வாங்க போகலாம்.” என அழைக்க…சிபி வேகமாய் வந்தவன், "மேம், யஷ்.. பெங்களூருல இருக்க நம்ம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டாங்க… வாங்க, நம்ம போகலாம்." என்றான்."யஷ்…" என்றாள் கலங்கிப் போய்."மேம், கூடவே கார்ட்ஸ் இருக்காங்க." என்றவன், "பாஸ்க்கு கால் போகலை… நான் அவர ரீச் பண்ண ட்ரை பண்றேன்." என கூறிய எதுவுமே, அவள் காதில் விழுந்த பாடில்லை. அவள் எண்ணம் எல்லாம், யஷ்ஷோடே தேங்கி நின்றது.
 
காதல்:17

சிபியின் கைகள் லாவகமாய், சாலையின் நெளிவு சுழிவுகளைக் கடந்து, எத்தனை விரைவாய் முடியுமோ.. அத்தனை விரைவாய் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

பெண்ணவளுக்கு எதுவும் புரியாத நிலை, “மேம் இறங்குங்க." என சிபி கூற…

இறங்கியவளை, சிறப்புப் பகுதி வழியே, யஷ் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அவனைக் கண்டதுமே, தலைமை மருத்துவர் ஓடி வர,

முகத்தில் பதட்டத்துடன், "பையன், எப்படி இருக்கான்?" என்றான் சிபி.

தலையில் அடியோடு, திடீரெனக் குழந்தையைச் சேர்த்து விட்ட சேர்மேனின் நேரடிப் பேச்சில்.. எதுவும் புரியாத நிலையில் இருந்த மருத்துவர், சிபியின் வருகையில் சுதாரித்து, “எஸ்... ஹெட்ல ஹெவியா அடிபட்டுருக்கு.. அதை விட முக்கியமானது என்னனா, அடிபட்டதும் பையனுக்கு எபிளப்ஸி வந்துருக்குமா? இல்லை, பிட்ஸ் வந்து தான் அடிபட்டிருக்குமா… தெரியல..! நம்ம நியூரோ சர்ஜனைப் பார்க்கச் சொல்லிருக்கேன் சார்." என்றான்.

அவர் கூறியதைக் கேட்டதுமே, “பிட்ஸ் எல்லாம் வந்துச்சா? நான் என் பையனைப் பார்க்கணும். என்னை அங்க கூட்டிட்டு போங்க, ப்ளீஸ்…" என அழ,

அவளை, கம்பீரமாய் மட்டுமே பார்த்தவனால், இப்படி ஒரு சூழ்நிலையில் பார்க்க முடியாது போக, "மேம், ஒன்னும் இல்லை. நீங்க டென்ஷனா ஆகாதீங்க.. ப்ளீஸ்…" எனக் கூறி, பின் மருத்துவரிடம், "நாங்க பார்க்கலாமா?' எனக் கேட்க,
"சார், பையன் ‘ஐ.சி.யூ’ல இருக்கான். அதுனால இவ்வளவு பேர் எல்லாம் அலோவ் பண்ண முடியாது." எனக் கூற,

அப்போது தான் திரும்பிப் பார்க்க,

நவீன், ராஜம், பாலன், அனு என, அனைவரும் அங்கே நிற்க,

‘இவங்க எல்லாம் எப்படி?’ என யோசிக்கக் கூடத் தோன்றாது… “மேம் மட்டும் பார்க்க விடுங்க.” எனக் கூற,

‘சரி..’ என்பதாய் அவளை மட்டும் உள்ளே அழைத்துச் செல்ல, அங்கே மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே, ஓய்ந்து போய் படுத்திருந்தான், யஷ்.

அவனைத் தொட முயன்றவளை, செவிலியர் வெளியே அழைத்து வர, அப்படியே ஸ்தம்பித்த நிலையில் அமர்ந்திருந்தாள்.

சிபி கவலையோடு வெளிய வர, அனு வேகமாய் வந்தவள்…

“யஷ்க்கு எப்படி இருக்கு?" என்றாள்.

"ட்ரீட்மென்ட் போகுது" என, அங்கே உள்ள வரவேற்பு அறையில் அனைவரையும் இருக்கச் செய்தவன் சத்யாவைத் தேட, அவளோ… தீவிர சிகிச்சை பிரிவிற்கு முன்னால், விழி இமைகளைக் கூடச் சிமிட்டாது, அவ்வறையையே பார்த்த வண்ணம் இருந்தாள்.

நிமிடங்கள் நகர… மருத்துவர் ஓடி வந்து…
"சார், பையனுக்கு பிளட் லாஸ் ஜாஸ்தியா இருக்கு. உடனே அவனுக்கு பிளட் கொடுக்கணும். அவனோடது ரேர் பிளட் குரூப்பா இருக்கு. இந்த வகையான ரத்த வகை எல்லாம், எங்கேயும் அத்தனை சீக்கிரம் கிடைக்காது. இல்லனா… டோனர் அவங்களா வந்து கொடுத்தா மட்டுமே சாத்தியம்.” எனக் கூற,

"வாட்?" எனக் கத்தியவன், “யாரு கிட்ட இருக்கோ, அவங்க அட்ரஸ் கொடுங்க." என்றான்.

"சார், நான் கேட்டுப் பார்த்துட்டேன். நம்ம சோர்ஸ் வச்சுக் கூட கேட்டாச்சு. சென்னையில இருக்க நம்ம செயின் ஆப் ஹாஸ்பிடல்ஸ்ல இருக்காம். கொண்டு வரச் சொல்லிருக்கோம். ஆனா இப்போ?" என நிறுத்த,

அவர்கள் பேச்சுக்கள் எல்லாம் புரிந்தும் புரியாத நிலையில், "என்னாச்சு" என்றாள் தள்ளாடி வந்து கலங்கிப் போய்,

"மேம், பையன் கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்கான். உடனே பிளட் தேவைப்படுது." என்றவர் முகத்திலும் அத்தனை பதட்டம்,

"ந... நான் பாக்கிறேன்" என சிபி நகர்ந்து, விஜய் பிரகாஷுக்கு அழைத்தான்.

"பாஸ்" என சிபி தடுமாற,

அவன் குரலின் பதட்டத்தில், "சிபி" என்றார்.

"பாஸ் நான்... என்னால…" என குரல் கம்ம,

"சிபி, நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். என் பேரனுக்கு ஒன்னும் ஆகாது." என கூறும் நேரம், கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், "மேம்… இப்படி பார்க்க முடியல பாஸ்…" எனக் கூற,

மீண்டும் மருத்துவர் முகத்தில் வியர்வை வழிய வந்தவர்.. சிபியைப் பார்க்க, பேசிக் கொண்டிருந்தவன் அவர் அருகில் ஓட,

தவிப்புடன் அவனைப் பார்த்த மருத்துவர், "சார், பையன் பல்ஸ் ரேட் கம்மியாகுது." எனும் போதே, அலைபேசி வழியே கேட்டவருக்கு நெஞ்சம் துடிக்க, அவர் மனைவியிடம் மானசீகமாய்… "உன்ன மாதிரி, உன் பேரனுக்கும் அதே ரத்தம் அதே வியாதி இருக்கே யமுனா… என்ன பண்ணப் போறேன் நான்…? இத்தனை பணம் யாருக்கு?" என புலம்பிய படி,

"நான் செஞ்ச பாவத்தின் தண்டனையா இது? நான் ஏன் அந்தப் பொண்ணை போகச் சொன்னேன்னு உனக்கே தெரியும். அவங்க ரெண்டு பேரையும், நிழல் மாதிரி பாதுகாத்துட்டுத் தானே இருக்கேன்." என கலங்கியவர்,

'உன்ன விட்ட மாதிரி.. யஷ்ஷுக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன். ஆனாலும், இந்த சூழ்நிலையில… நான் என்ன பண்ணி அவனைக் காப்பாத்தப் போறேன்னு எனக்கு தெரியலேயே யமுனா...? நீ தான், நம்ம பேரனைக் பார்த்துக்கணும்.' என ஆயிரம் வேண்டுதலை வைத்தவர், கண்களில் கண்ணீர் வழிய… வேத்தை தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.
…………….
மருத்துவர் சிபியிடம் பேசும் போதே, அங்கே வெளியில் இருந்த அனைவரும் ஓடி வர, யஷ்க்கு என்ன ஆனதோ என்ற பயம் ஓர் புறம் இருந்தாலும், சத்யாவின் நிலைமை கண்டு நவீன் பதட்டமாய்…

"என்ன சிபி? என்ன சொல்றாங்க? இங்க இல்லனா.. வேற பெரிய ஹாஸ்பிடல் போகலாம்." என சத்யாவைப் பார்த்துக் கூற,.

"ப்ச்… நவீன்.. இந்தியால இருக்க டாப் டென் ஹாஸ்பிடல்ல இதுவும் ஒன்னு..” என்றவன், “யஷ்க்கு பிளட் வேணும் இப்போ?" என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்,

"அப்போ நான் கொடுக்குறேன்." என்றான் நவீன்.

"ப்ச்.. அவனுக்கு ஆர்.ஹெச். வகை ரத்தம்.” என பற்களைக் கடிக்க,

ராஜம் சத்யா அருகில் செல்ல விழைய,

சிபி அவரைத் தடுத்து, “அங்க.. அலோ பண்ண மாட்டாங்க.” என்றான். பாலனும் ராஜமும், சத்யாவைக் கண்டு பரிதவித்தபடி நின்றனர்.

அவர்கள் சம்பாஷனைகள் எல்லாம், சத்யாவிற்குக் காதில் விழாது போக… அவள் கவனம் எல்லாம் மருத்துவர் மீது தான்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளிய வந்த மற்றொரு மருத்துவர், “பையன் கண்டிஷன் இஸ் ஹைலி கிரிடிகல் நவ். அவன் பிரைனுக்கு போற பிளட் பிளாக் ஆயிருக்கு. சோ… உடனே ஆபரேஷன் பண்ணுனும். அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சைன் வாங்கிட்டு, ப்ரோசிஜர் ஸ்டார்ட் பண்ணுங்க." எனக் கூற,.

சிபி உடனே, "சார், நீங்க உடனே ஸ்டார்ட் பண்ணுங்க." என்றான்.

அருகிலிருந்த மற்றொரு மருத்துவன், "பிளட் இன்னும் ரீஸிவ் ஆகல டாக்டர்… இன்னும் அரை மணி நேரமாகும்." எனக் கூற,

"வீ ஹேவ் நோ அதர் சாய்ஸ்… எவ்ளோ சீக்கிரம் பிளட் வர முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வரணும். நீங்க ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க." என மற்றொரு மருத்துவன் கூற,

அதற்குரிய செயலாய், கையில் ஓர் படிவத்தை.. நேரடியாக சத்யாவிடம் கொண்டு வந்தாள், செவிலி.

அதுவரை அவள் கண்கள், யஷ் இருந்த அறையியேயே சிமிட்டாது நிற்க, அருகில் காகிதத்தோடு வந்த செவிலியைக் கண்டு, என்ன என்பதாய் பார்த்தாள்.

"மேம், உங்க பையனுக்கு ஆபரேஷன் பண்ணப் போறாங்க. அதான் சைன் போடனும்."

அந்தப் பேப்பரை வாங்க… விழிகளில் விழுந்த கண்ணீரால் எழுத்துக்கள் எல்லாம் சரியாய் தெரியாதவள் மீண்டும் முயற்சிக்க, அவளையும் மீறி, தளர மயங்கிச் சரியப் போனவளைத் தாங்க நவீன் செல்ல,

அவனையும் மீறி, புயலென அவள் முன்னால் நின்றான், வேதாந்த்.

வேதாந்தின் வருகையை யாரும் எதிர்பார்க்காது நிற்க,
நவீனோ, அவனையும் மீறி சத்யாவை தாங்கியவனைக் கண்டு, என்ன செய்வது எனப் புரியாது முழித்தவனுக்கு, ஆயிரம் கேள்விகள். சிபியின் திடீர் உரிமை, இந்த மிகப் பெரிய மருத்துவமனையில் சார்ட்டர் பிளைட் மூலம் கொண்டு வரப்பட்ட யஷ்ஷுக்கு நடக்கும் உடனடி சிகிச்சை, இதோ புயலென உள்ளே நுழைந்து, பெண்ணவளை தாங்கி நிற்கும் வேதாந்த் என, குழம்பிய படி நின்றான் நவீன்.

வேதாந்த் உள்ள வந்ததுமே, அங்கே ஓர் ஆழ்ந்த அமைதி. அதை உணராத சத்யாவின் விழிகள் சொருக, “என் பையன்..” எனப் பிதற்ற,

“ப்ச்... நான் வந்துட்டேன்டி, ஜஸ்ட் காம் டவுன்.” என்றான்.

அருகில் நின்ற செவிலி, திடீரென வந்த வேதாந்த்தை பார்த்துக் கொண்டே, "சார், இவங்க சைன் பண்ணா தான், மத்த ஃபார்மாலிட்டிஸ் ஸ்டார்ட் பண்ணுவாங்க.' என்றாள்.

பெண்ணவளை ஓர் கையில் தாங்கிப் பிடித்தவன், மறு கையோ.. செவிலி காட்டிய படிவத்தில் கையொப்பமிட்டது.

சட்டென ஓர் சலசலப்பு தோன்ற, அங்குள்ள முக்கிய மருத்துவர் எல்லாம், வேதாந்த் முன்னால் வந்து நிற்கவும், செவிலி புரியாது விழிக்க,

"சார், நீங்க இங்க எப்படி?" எனக் கேட்டார் தலைமை மருத்துவர். பின்னே.. இதுவரை நிழற்படத்தில் மட்டும் கண்ட ஒருவனை, இத்தனை அருகில் காணும் போது, இயல்பிலேயே பதட்டம் தொற்றிக் கொண்டது அவருக்கு.

அங்கே நின்ற அனைவரும், ஓர் கையில் சத்யாவை தாங்கிய படி நின்ற வேதாந்த்தை புரியாது பார்க்க,

அவர்களின் ஆராய்ச்சிப் பார்வையோ, பயம் கலந்த மரியாதையோ… எதையுமே கருத்தில் கொள்ளாது… "என்ன கண்டிஷன் இப்போ?" என்றவன் குரலில்… அத்தனை வலி! வலியிலும் அத்தனை கம்பீரத்துடன் கேட்க,

அவன் குரல் மட்டும் அங்கே எதிரொலிக்க, "ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணனும் சார்." என்றான் அந்த நியூரோ மருத்துவன்.

"தென் கோ ஹெட்!" என்றவன் "எதுக்கு வெயிட் பண்றிங்க?" என்றான் கோபமாய்.

"இல்லை பார்ம்.." என இழுத்தவன் கையிலேயே படிவத்தை திணிக்க,

"பையன் பிளட்" என நிறுத்தினான், அங்கிருந்த மற்றொரு மருத்துவன்.

"நான் கொடுக்குறேன்." என்றவனை அதிர்வாய் பார்த்து, "சார் பையனுக்கு ஆர்.." எனத் தொடங்க,

"ப்ச்... என் ரத்தம் தான். உள்ள இருக்கறவனும் என் ரத்தம் தான்." எனக் கூற,

மொத்த கூட்டமும் ஸ்தம்பிக்க, நவீன் காதில் விழுந்த வார்த்தை உண்மையா என அதிர்ந்து சிலையானான்.

அவனோ யாரையும் கண்டு கொள்ளாது, "சிபி" என குரல் கொடுத்தான்.

அதுவரை ரத்தத்திற்காக, ஆங்காங்கே பேசில் கொண்டிருந்தவன், வேதாந்த்தின் குரலில் வேகமாய் வந்தான்.

அவனைக் கண்டதும், ஓர் நீண்ட பெருமூச்சுடன் "பாஸ்.." என அருகில் வர,

"டேக் கேர் ஆப் ஹேர்." என சத்யாவை காண, அவளோ அவன் கை நீங்கியதுமே, வேர் அறுந்த மரமாய் சரியத் தொடங்கினாள்.

அவள் சரியும் நொடி, அவளை இன்னும் தன்னோடு பிணைத்தவன், "டாக்டர்!" என அவன் போட்ட சத்தத்தில், சட்டென அவளை சிகிச்சைக்காக மற்றொரு அறையில் சேர்த்தனர்.

தேங்கி நின்ற மருத்துவர்களைப் பார்த்து, "இன்னும் என்ன?" என்றான் கடுப்பாய்,

"சார்…"

"ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணுங்க.." என உத்தரவிட்டு, "அவன் எங்க..?" என நிறுத்த,

"சார், நான் கூட்டிட்டு போறேன்." என தலைமை மருத்துவன் முன்னால் செல்ல,

செல்லும் அவனைப் பார்த்த படி இருந்த அந்த நியூரோ சர்ஜன், வேத் கையில் திணித்த அந்த படிவத்தைப் பார்த்தான்.

அதில் குழந்தை பெயருக்குப் பின்னால், யஷ்வந்த் வேதாந்த் விஜய் பிரகாஷ் என்றிருக்க, கீழே தகப்பனுக்குரிய இடத்தில்… ‘வேதாந்த் விஜய் பிரகாஷ்’ என்ற கையெழுத்தில், ஓர் நிமிடம் திகைத்து நின்றவன், பின் வேகமாய் ஆபரேஷன் தியேட்டர் நோக்கி ஓடினான்.

ரத்தம் கொடுத்து வந்தவன், யஷ்ஷை காண… ‘உயிரோடு ஒருவனால் மரணத்தை உணர முடியுமா என்ன?’ அதை உணர்ந்தான் வேதாந்த். தலையில் அடிபட்டு யஷ் படுத்திருந்த தோற்றம், தகப்பனாய் அவனை அவ்வளவு வலிக்கச் செய்தது.

சிறுவயதில், அன்னையை இதே கோலத்தில் கண்டு இறுகிய அவன் மனம், இப்போது இளகத் தொடங்கியது. கைகள் அவன் கன்னம் வருட,

"யஷ் மை பாய், போதும் டா! இதுக்கு மேல இழப்புகளை சந்திக்கிற வலிமை என்கிட்ட இல்லை. சேவ் மீ மை பாய்! ப்ளீஸ்… என்னை காப்பாத்திக் கொடுத்துடு." என்றவன் விழிகளில் கண்ணீர் வர, பிடித்த கையினை விடாது பற்றி இருந்தான்.

நொடிகள் நிமிடங்களாய் கழிய, செவிலி வந்து யஷ்ஷுக்கு ஆபரேஷன் தியேட்டர் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூற, தளர்ந்து எழுந்தவன், அறையை விட்டு வந்தான்.

சிபி, சத்யாவின் அறையைப் பார்த்த படி அமர்ந்திருக்க,

"சிபி" என்றான்.

"பாஸ்' என எழ,

அவனை எழ விடாது அப்படியே அமர வைத்தவன், "தேங்க்ஸ்" என்றான்.

"பாஸ்"

"யூ சேவ் மை பேமிலி சிபி." எனக் கூறி விட்டு, சத்யா அறையை நோக்கி நடக்க,

"பாஸ், அவங்களுக்கு ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் வரிசையான அதிர்வு.. அவங்கள மயக்கமடையச் செஞ்சுருக்கும்."

அவன் கூற்றில் நின்றவன் தலையசைத்து விட்டு அவள் அறைக்குள் நுழைந்தான்.

மெல்ல அவளருகில் அமர்ந்தான். சிலும்பி முகத்தில் படர்ந்து கிடந்த அவள் கூந்தலை சரி செய்தவன் கைகள், அவள் கையினை வருட, உயிருக்குப் போராடியவனுக்குக் கிடைத்த பற்றுக்கோலாய், அவன் கைகளை இறுகப் பற்றி கொண்டன, அவளின் மென்மையான கரங்கள்.

தன்னை அவள் உணர்வாள் என்பதை, அவனும் அறிந்து தான் வைத்திருந்தான். ஆயினும், தன்னை மறந்த நிலையில் கூட தன்னை உணரும் அவனவளைக் கண்டு, உவகை கொண்டது அவன் ஆழ் மனம். இது தானே, அவன் வேண்டுவது. ஏன் வேண்டியது எல்லாமே, அவளுடைய காதல் அவனுக்கே அவனுக்காய் வேண்டும் எனத்தானே! இதோ இந்த சிறு தொடுதலிலேயே தன்னை உணர்பவளும், சொல்லாமல் சொல்லி விட்டாளே!’ என எண்ணியவன்,

அவள் கையினை பற்றிக்கொண்டு, "இந்த நிலைமையிலும் உனக்கு என்னைக் கூப்பிடத் தோணலயாடி. அப்படி என்னடி திமிரு உனக்கு?' என சண்டை போடத் துவங்க,

அவளோ அவன் கைகளைப் பற்றியதுமே, அதுவரை அலை பாய்ந்த அவள் ஆழ்மனம், அவன் பார்த்து கொள்வான் என எண்ணியதோ என்னவோ! மெல்ல உறங்கத் தொடங்கியது, பற்றிய அவன் கைகளை விடாமலே!

அவனும் கைகளை விலக்காது, தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

"பாஸ்…" என சிபி உள்ளே வர,

என்ன என்பதாய் பார்த்தான்.

"இந்தியாவோட டாப் நியூரோ, யஷ்காக வந்துருக்கார். இப்போ ஆபரேஷன் தியேட்டர் உள்ள போய்ட்டாரு." என கூற,

"ம்ம்ம்..." என்றவனுக்கு உயிர் வரை வலித்தது. எப்பாடு பட்டாலும், இருவரையும் மீட்டு விடுவான் தான். ஆயினும், இந்த நொடியைக் கடப்பது, முள் மேல் நடப்பது போன்ற நிலை தான். ‘தன் உதிரம் உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, தன் சரிபாதியோ, அவளையே மறந்த நிலையில் கிடக்க… என்ன மாதிரி ஓர் சூழ்நிலையில், என் கைகளுக்குள் அவள்..!’ என்ற எண்ண வோட்டத்தில் “ப்ச்...” என்றான்.

"பாஸ், யஷ்க்கு ஒன்னும் நடக்காது. அவனுக்கு அடி பட்ட உடனே, இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க." என்றான்.

"ஓ..." என வேத் நிறுத்த,

"பாஸ்…" என்றான்.

என்ன என்பதாய் காண,

"நம்ம பிக் பாஸ் தான்" எனத் தொடங்கவும்,

"அவனுக்குப் பின்னாடியும், பாதுகாப்புக்கு கார்ட்ஸ் வச்சிருக்காரு. எனக்கு நாம இங்க வந்த ரெண்டாவது நாளே தெரியும்."

"பாஸ்…"

"லீவ் தட் மேட்டர்.." என்றவன், "வெளிய இன்னும் எல்லாரும் நிக்கிறாங்களா, என்ன?”

“இதை எப்படி மறந்தேன்?’ என நினைத்துக் கொண்டே, “ஆமா பாஸ்" என்றான்.

"அவங்கள எல்லாம் போகச் சொல்லு."

"ச... சரி பாஸ்." எனக் கூறித் திரும்ப,..

"சிபி…" என்றான் மீண்டும், என்ன நினைத்தனோ, "அவங்க யாரும் போக மாட்டாங்க. நீ இங்கயே ஏதாவது பார்த்து கவனிச்சுக்கோ." என்றான்.

சரி எனத் திரும்பிய சிபி கண்டது, சிலையென நின்ற நவீனைத் தான்.

'இவன் எதுக்கு இப்படி நிக்கிறான் தெரியலயே?' என எண்ணிக் கொண்டே, பாலன் அருகில் சென்று, "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, யஷ்க்கு ஆபரேஷன் முடிஞ்சுடும்." என்றான்.
அவனையே குறு குறுவெனப் பார்த்த அனுவிடம், 'என்ன’ என்பதாய் கேட்க,

"ஒன்றுமில்லை…" என்றவள், அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல,

நவீனோ… வேத் சொன்ன… “என் ரத்தம்" என்ற சொல்லிலே தேங்கி நிற்கவும்,

'இவன் அவசரமா கட்டுன தாஜ்மஹால் இடிஞ்ச சோகத்துல இருக்கான் போல…' என அவனைத் தாண்டிச் செல்பவனைத் தடுத்து நிறுத்தி, "அப்போ, யஷ்ஷோட அப்பா வேதாந்த் சாரா…?" என கேட்க,

'ஏன்டா, இன்னுமா உனக்கு டவுட் வருது?' என எண்ணிக் கொண்டே, ஆம் என்பதாய் தலையைசைத்துச் செல்ல, நவீன் அப்படியே அமர்ந்து விட்டான்.

சற்று வெளியே வந்த சிபி, அனு எங்கே எனத் தேட, அவளோ அந்த நீள் அறையில், ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் வந்தவன், அவள் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு, "ஏய், எதுக்கு அழற?" எனக் கேட்கவும்,

"ப்ச், யஷ்…" என்றவளுக்கு நிற்காமல் கண்ணீர் வர,

"ஹீ வாஸ் அவுட் ஆப் டேஞ்சர் நவ். அதான், பாஸ் வந்தாச்சே” எனக் கூற,


"ஏன்? உங்க பாஸ் வந்தா எல்லாம் சரியாயிடுமா? அவர் என்ன டாக்டரா? இல்லை, கடவுளா?"
"ஏய்! உனக்கு என்ன தெரியும் அவரைப் பத்தி? இந்த நிலைமையில மேடத்தைப் பார்த்தவர், என்ன வேணும்னாலும் பண்ணுவார். அது சரி, யஷ்க்கு இன்சிடென்ட் நடந்த உடனே இங்க வந்துட்டான்…. ஏன் எப்படின்னு யோசிச்சுப் பாரு.'

"ஆ... ஆமா" என்றாள் தடுமாறி,

"என்ன நோமா?" என்றான் கடுப்பாய்,

"சிபி" என்றாள் அனு.

"என்ன?"

"வேத் சார் தான், யஷ்ஷோட அப்பாவா?" எனக் கேட்க,

"இன்னுமா உனக்குப் புரியல…" என்பதைப் போல் சிபி பார்க்க,

"இல்லை, ஏன் அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுருக்காங்க?" என அனு கேட்க,

சிபி, அவர்களை பற்றிச் சொல்ல தொடங்கும் அதே நேரம்,

பெண்ணவள் கைகளைப் பற்றியவன் விழிகள், அவளைப் பார்த்துக் கொண்டே தன் வாழ்க்கை பக்கங்களை புரட்டத் தொடங்கினான். எந்த நொடி, அவள் தனக்குள் வந்தாள் என்பதை அவன் அறியான்!!!


ஆனால், தன் மொத்த கர்வதையும், கண்ட முதல் நாளே சுக்கு நூறாய் சிதறடித்தவளைக் கண்ட நொடிகளை எண்ணியவன், இதழ்கள் முணுமுணுத்தது ‘அழகான ராட்சசி’ என!
 
Status
Not open for further replies.
Back
Top