இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

என் மீளாக்காதலே கதை திரி

Status
Not open for further replies.

sudhahari

Moderator
Staff member
ஹாய் மக்களே... இனி வேதாந்த் மற்றும் சத்யாவோடு பயணிப்போம் ❤️❤️❤️
 
  • Love
Reactions: POP
EMK:1

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை

என கந்தனின் பாடல் வரியில் எப்போதும் போல் தன் நாளை தொடங்கினாள் அவள்! என்றோ சிறுவயதில் அவள் தாய் ஏற்படுத்திய பழக்கம் இது!இன்றுவரை அவர்கள் நினைவுகளோடு தொடரும் பழக்கமுமாய் போனது!கைகளை நன்றாய் தேய்த்து விட்டு தன் விழி திறந்தவளுக்கு எப்போதும் போல் ஜன்னல் வழியே வந்த குளிரின் தாக்கம் நெஞ்சுக்குள் ஜில்லென்ற உணர்வை தர,மெல்ல அதனை அனுபவித்தபடி அமர்ந்திருந்தவளை கலைத்தது இன்றைய அலுவல்.

இன்று அவள் நிறுவனத்தின் தலைமையகம் செல்ல வேண்டிய நாள் என்ற எண்ணம் தோன்ற, அதுவரை இருந்த சோம்பல் கூட விலகி சென்றது. வேகமாய் தன்னை சுத்த படுத்தியவள் கையில் காபி கோப்பையுடன் வெளியே வந்தாள் சத்யா.


எங்கும் இருள் சூழ, அதனை இன்னும் அடர்த்தியாய் காட்டியது சூழ்ந்திருந்த பனிமூட்டம். குளிர் அவளுக்கு பழக்கமான ஒன்று தான். 'அதனால் தானோ என்னவோ? இந்த ஊரின் மேல் ஓட்டுதல் வந்து இயல்பாய் தன்னால் இங்கு பொருந்தி கொள்ள முடிந்தது' என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு.

"என்னமா இன்னைக்கு இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட?!" என்றார் பாலன். அவளின் அடுத்த வீட்டுக்காரர். அவள் தணிக்கை செய்யும் தேயிலை தோட்டத்தில் கணக்கராய் பணிசெய்து கொண்டு குடும்பத்துடன் இங்கிருக்கும் தமிழ்காரர்.அவர்கள் நிறுவனத்தின் சிறப்பு இது அங்கு பணிபுரியும் ஆட்களுக்குக்கு அவர்கள் தகுதிகேற்ப்ப குவார்டஸ் போன்று வீடுகளை கொடுத்து அவர்கள் குடும்பங்களையும் இருக்குமாறு பார்த்து கொள்வார்கள்.

நான்கு வருடங்கள் முன்பு இங்கு வந்தவளை குழந்தை இல்லாத பாலனும் ராஜமும் அரவணைத்து கொண்டனர். அதுவும் அவளிடம் எந்த கேள்வியும் கேட்காது. அன்று என்ன? இதோ இன்று வரை எதுவும் கேட்டதில்லை என்பதே அவரது மனைவி ராஜம் மீது பாசம் வர காரணமாய் போனது.

மீண்டும் அவளை பாலன் அழைக்க,

" இன்னைக்கு நான் பெங்களூரு போகணும் அங்கிள் அதான்" என்றாள்.

"ஓ.... ஆடிட்டிங் இருக்குல"என்றவர் பார்த்து போய்ட்டு வாம்மா" என கூறி விட்டு சால்வையை இழுத்து போர்த்தி விட்டு "பெங்களூரை விட இங்கே கொஞ்சம் குளிர் அதிகம்"என தன் போல் பேசி கொண்டே செல்ல,


அவர் கூற்று உண்மை தான் என எண்ணி நிமிர்ந்து எதிர்புறம் பார்த்தாள்.

எதிர்புறம் இருந்த பங்களா இப்போது மாளிகையாய் உருமாறி கொண்டிருந்தது.இன்று நடமாட்டம் கொஞ்சம் அதிகமாய் தெரிய,கடந்த சில மாதங்களாய் நிகழும் ஒன்று தான் என்பதால் ஓர் புருவ உயர்தலுடன் திரும்பி தன் வேலையில் கவனம் வைத்தாள்.

இன்று இந்த ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் மீண்டும் ஒரு முறை தன் மடிக்கணினியை உயிர்பித்து சரிபார்த்து விட்டு, மூடி இருந்த அறை கதவை ஒரு முறை பார்த்து வெளியே வர, ராஜம் அவளருகில் வந்தார்.

"கிளம்பிட்டியா ?!"என கேட்கவும்,

"ஆமா மா சீக்கிரம் போனா சீக்கிரமா திரும்பிடாலாம்" என்றவள்," உங்கள தான் சிரமப்படுத்துறேன்"என்றாள் தயக்கமாய்,

"இதிலென்ன சிரமம்?!சும்மா எதுவும் சொல்லாம நீ எதை பத்தியும் கவலைப்படாம போ நான் பாத்துகுறேன்"என்றார்.

மீண்டும் ஒரு முறை தன் வீட்டை பார்த்தவள், எப்போதும் போல் அவர் பார்த்து கொளவார் என்ற நிம்மதியுடன் தன் வீட்டை கடந்தவள் திரும்பி பார்க்க, ராஜம் அவள் வீட்டின் முன்னால் கோலமிட ஆரம்பத்திருந்தார்.உறவில்லாத தனக்கு பாதுகாப்பாய் மட்டுமின்றி தாயாய் மாறி போன அவரின் எதிர்பார்ப்பில்லா அன்பில் நெகிழ்ந்து,தன் இருசக்கர வாகனத்தை செலுத்தும் நேரம் அவளின் அலைபேசியும் ஒலி எழுப்ப,

தன் வாகனத்தை ஒரு கையிலும் அலைபேசியை ஒரு கையிலும் பிடித்து கொண்டு வண்டியை தள்ளி அந்த வீதியின் எல்லையில் திரும்ப, அதே நேரம் அந்த உயர் ரக வாகனத்தில் இருந்தவன்," ஹிட் ஹேர் "என்றான் அவனின் கர்ஜனை குரலில் ஓட்டுனரிடம்,

"என்ன சொல்வது?!"என புரியாது அவள் வாகனத்தை அந்த கார் இடிக்க,அதனை பற்றிய சிந்தனையின்றி இருந்தவள் எதிர்பாரா இந்த நிகழ்வால் கையிலிருந்த அலைபேசி சிதற , வண்டியுடன் கீழே விழ போனவள் முயன்று நிதானமாய் நின்று நிமிர, எதிர்புறத்தில் பிரமாண்டாமாய் நின்றது ஆடியின் உயர் ரக வடிவம்.

"இவ்வளவு பெரிய கார்ல வந்தா கண் தெரியாதா?!" என ஆங்கிலத்தில் திட்ட தொடங்க,

வேகமாய் காரிலிருந்து இறங்கி ஓடி வந்த ஒருவன்," சா... சாரி மேடம், டிரைவர் கவனிக்கல ஓ... ஒன்னும் அடிபடலயே?" என்றான் பதட்டமாய், அதற்குள் ஓட்டுனர் ஓடி வந்து கன்னடத்தில் மன்னிப்பு கேட்டு அவளின் வாகனத்தை நிமிர்த்தி கொடுக்க, இருவரையும் முறைத்தவள் நகர தொடங்க,

"சிபி" என்ற அக்குரல் அவள் செவிப்பறையில் பட்டுதெறிக்க,நிமிர்ந்து பார்த்தாள். கண்ணாடி இறங்கி, அவன் கூர் விழி மட்டும் தெரிய அதில் அத்தனை கடுமை,அவன் கண்கள் ஓர் நிமிடம் அவளிடம் தொட்டு மீண்டது. இன்னும் விழிகளில் கோபம் ஏற," ரோடுல வண்டில போகும் போது மொபைல் யூஸ் பண்ண கூடாதுங்கற பேசிக் சென்ஸ் இல்லை. இதுல நீங்க ரெண்டு பேரும் இறங்கி நின்னு சேவகம் பண்ணிட்டு இருக்கீங்க,கெட் இன்டூ தி கார் இடியட்ஸ்" எனும்போதே கண்ணாடி மேல் இழுக்க பட, சிபியாகபட்டவன் விழிகள் அவளிடம் மன்னிப்பை இறைஞ்சி காருக்குள் சென்றான்.

புழுதி பரப்பி சென்ற காரின் தடம் மறையும் வரை பெண்ணவள் கால்கள் வேரூன்றி நின்றது.

காரில் அமர்ந்திருந்தவன் இதழ்களில் கீற்றாய் புன்னகை வர, அவனையே விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஓட்டுனர். சிபிக்குமே இன்று அவன் செய்தது கொஞ்சம் அதிகப்படி என்றே தோன்றியது. பின்னே அவன் தானே அவளை இடிக்க சொன்னதே என எண்ணியவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்வுகள் வந்து போனது.

காரினுள் எப்போதும் போல் மடிக்கணினியை பார்த்துக் கொண்டே அந்நாளின் பங்குச் சந்தை விவரங்களை பேசிக் கொண்டிருந்தவன். நிமிர்ந்து பார்த்த சொற்ப நொடிகளில் ஓட்டுனரிடம் ,"கோ அண்ட் ஹிட் தி வெஹிகிள் "என கூற,

"ச.... சார்"என்றான் பயத்துடன் அவன்,

"ஜஸ்ட் டூ வாட் ஐ சே"என்றான்.

சிபிக்குமே உள்ளுக்குள் பதட்டம் தோன்றி,"வேண்டாமே "என்றான்.

நிமிர்ந்து அவன் கூர் விழியால் அவனை காண, "அதற்கு மேலே பேசுவானா அவன்?! ",இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்பதை போல் ஓட்டுனரிடம்,"அவர் சொல்வதை செஞ்சுரு இல்ல நீ இங்க இருக்க மாட்ட!!" என்றான்.

அடுத்த நிமிடம் அவள் வண்டியினை மோத, நடந்த நிகழ்வுகளை எண்ணிய சிபிக்குமே பெண்ணவள் மீது பரிதாபமே தோன்றியது.

அவன் விழி அசைவை கண்டே அவன் மனதைப் படித்தவன் போல் ,"என்ன சிபி உள்ளுக்குள்ள என்ன திட்டிட்டு இருக்கியா?" என்றான்.

"இ....இல்ல சார்" என்றவன் குரலும் தடுமாற

"எனக்கு தெரியும் "என்றவன் கொஞ்சம் சிரியதாய் இதழ் விரித்து ,"மொபைல் யூஸ் பண்ணிக்கிட்டே வண்டி ஓட்டுறதெல்லாம் தப்பு இல்லையா!யூ நோ அது அவங்களுக்கு மட்டும் இல்ல அவங்களுக்கு முன்னாடி போறவங்க, பின்னாடி வரவங்கன்னு எல்லாருக்குமே கஷ்டம்தான்.இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் அவங்க அந்த தப்பபண்ண மாட்டாங்க இல்லையா?! ஜஸ்ட் ஃபார் சேப்டி " என தோள்களை குலுக்கினான் அவன்.... வேதாந்த் விஜய்பிரகாஷ்.

'அவனை கண்ட நொடி உண்மை தானா?அவனா? மீண்டுமா?' என அடுக்கு அடுக்காய் அவளுள் எழும் கேள்விகள், அவளை மூர்ச்சையாக்க முயல,கண்களை இறுக்க மூடி கொண்டாள். உறைகின்ற பனியில் சூடாய் விழிநீர் அவள் இதழ் தொட்டது. கண்கள் கலங்கி தேங்கி நின்றவளை எழுப்பியது அவளின் அலைபேசி, அவளின் கீழ் பணிபுரியும் அனு அழைக்க அதனை ஏற்றவள்,

"சொ.... சொல்லு அனு"என்றாள்.

"மேம் இன்னும் நீங்க வரல அதான் "என கூற,

"யா ஐ ஆம் ஆன் தி வே"என வைத்தவள் தன் முகத்தை துடைத்து விட்டு அவன் செய்த செயல்களின் தாக்கதிலிருந்து மீண்டு மெல்ல அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

நேரத்தை பார்த்து விட்டு ," அனு லேட் ஆகலேயே?!" என கேட்கவும்,

"இல்ல மேம் இப்போ கிளம்பினா கூட இன்னும் சில மணி நேரங்களில் நாம பெங்களூரு போய்டலாம்" என்றவள்," டிரைவர் வந்துட்டாரா பாக்குறேன்!" என அவள் விலக,

"ம்ம்ம்... "என்றவளுக்கு காலையில் நடந்த விபத்தின் பயனாய் கையில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அதனை கழுவியவளுக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது. தண்ணீர் பட பட எரிச்சல் சற்று அதிகமாவதாய் தோன்ற,ப்ச்... "என முயன்று கண்ணீரை உள்ளடக்கியவள் அதனை துடைத்து நிமிர,

அனு வந்து கொண்டிருந்தவள் அவளின் காயங்களை கண்டு ,"மேம் என்ன ஆச்சு?!" என பதற,

"ஒன்னும் இல்ல நான் வரும்போது ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சு!! நார்மல் நவ்" காயத்தில் உதட்டால் ஊதிவிட்டு கொள்ள,

அலுவலகத்தில் இருக்கும் முதலுதவி பெட்டியை எடுத்து வந்த அனு" அப்படியே விட்டா செப்டிக் ஆயிடும் மேம்" என கூறி ப்ளஸ்திரியை போட்டு விட,

"தாங்க் யூ அனு "என கூறி விட்டு," டிரைவர் வந்தாச்சா?" என கேட்க,

"எஸ்... மேம்"

"தென் நாம போகலாம்"******அந்த கம்பெனியோட ஷேர் எஸ்ப்போர்ட் பைலை எடுத்துட்டிங்க தானே அனு ?"என கேட்ட படி நடந்தாள் சத்யா.

முழுதாய் விழுங்கிய ஐந்து மணி நேரம் கழித்து கூர்க்கிலிருந்து அவர்களின் தலைமையகம் வந்தனர் இருவரும்.

அவர்கள் உள்ளே செல்லவும் ,"வாங்க சத்யா "என்றான் அந்நிறுவனத்தின் உரிமையாளன் நவீன்.

அவனுக்கு ஓர் தலையசைப்பை கொடுத்தவள்," அனு ஆடிட்டிங் பண்ணனுன எஸ்ப்போர்ட் பைலை மட்டும் ஓபன் பண்ணுங்க, நீங்க இங்க இருக்க மத்த டாக்குமெண்ட்ஸை ஒரு தடவ செக் பண்ணி மேனேஜர் கிட்ட கொடுத்துடுங்க" என்றாள். சில மணிநேரங்கள் நீடித்த அந்த அலுவல் ஓர் முடிவுக்கு வர,அவள் வேலையில் கண்ட திருப்தியுடன் நிமிர்ந்தான் நவீன்."வெல் சத்யா இந்த தடவ நம்ம ஷேர் ஹிட் தி வேர்ல்ட் பாருங்க, இந்தியா முழுதும் தென் உலகம் முழுசும் நம்ம பிசினஸ் பண்ண போறோம் "என்றான் விழிகளில் சந்தோஷம் மின்ன,

"பட் நவீன் நம்ம பங்குசந்தை புள்ளிகள் எல்லாம் ஆவரேஜா தான் போய்ட்டு இருக்கு" என்றாள் விழிகள் சுருக்கி கூடவே ,"நான்கு வருடங்களாக அந்த கம்பெனியின் ஆடிட்டர் என்பதால் அவர்களின் சொத்து விவரங்கள் முதல் வங்கி கணக்கின் இருப்பு வரை அனைத்தையும் அறிந்தவளாய் புரியாது கேட்டாள்.

"ம்ம்ம்....ஆனா வீ ஹவ் அ அதர் சாய்ஸ் சத்யா"என கூற,

பேங்க் லோன் என கூறியவள் பட் அதுக்கு சூரிட்டியா நிறைய கேட்பாங்க நவீன்.

"பேங்க்கா நோ, இது வேற சத்யா"என்றவன் இழுக்க,

"இன்வெஸ்டர்ஸ் "என அவள் முடித்து வைத்தாள்.

"எஸ்... எஸ்..."என்றான் மகிழ்வாய்,

"பட் நவீன் இதுக்கு இன்வெஸ்மென்ட் ஜாஸ்தி ஆகும் "என்றாள் உண்மையான அக்கறையுடன்,

"ஆமா சத்யா ஆனா நம்ம இன்வெஸ்டரஸ்க்கு இதெல்லாம் ஒரு அமௌன்ட் இல்ல யூ நோ "என்றான்.


சத்யா அவன் முகம் பார்த்தாள் அவளை விட இரண்டு வயது இளையவனாய் இருக்கலாம், மூன்று வருடங்களுக்கு முன் தன் தந்தையிடம் இருந்து இந்த கம்பெனியின் பொறுப்புகளை கைப்பற்றி இருந்தான். எப்போதும் தான் ஒரு முதலாளி என அவளிடமும் ஏன் யாரிடமும் தன் குரலை உசத்தி பேசாதவன் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் தன் தொழிலை மேலே கொண்டு வர துடிக்கும் ஒரு இளைஞனின் விழிகளில் தோன்றிய ஒரு பளபளப்பு அவளையுமே தலையசைக்க வைத்தது.

"தேங்க்யூ சத்யா நீங்க சொன்னா அப்பா ஓகே சொல்லிடுவாங்க தேங்க்யூ சோ மச்" என்றான் கைகளை குலுக்கி.

"ஓகே ஓகே இன்வெஸ்டர்ஸோட டிமாண்ட் என்னனு பார்த்து பண்ணுங்க நவீன்" என வெளியே செல்ல எத்தனிக்க,

"வாட் நீங்க இல்லாமையா? கண்டிப்பா நீங்க வரனும்" என்றான்.

"நானா?நான் எதுக்கு? உங்களுக்கும் நல்லா தெரியும் என்னால இதுக்கு மேல இங்க ஸ்டே பண்ண முடியாது. இட்ஸ் டைம் டூ லீவ் நவீன் "என்றான்.

"எஸ்... எஸ்.. ஐ நோ ஆனா இன்வெஸ்டர்ஸ்க்கு கூட மீட்டிங் இங்க இல்ல கூர்க்ல"

"அங்கேயா? "என்றாள்.

"எஸ்... நீங்க என் கூட இருந்தா நான் கொஞ்சம் பெட்டரா ஃ பீல் பண்ணுவேன்.யூ ஆர் மை வெல்விஷ்ஷர் அதுனால யூ மஸ்ட் அண்ட் தென் அவங்க கொடுக்குற டெர்ம்ஸ் எல்லாம் சரியான்னு செக் பண்ணிடலாம்" என்றான் கெஞ்சலான பார்வையில்.

"ஓகே ஓகே"என்றவள் "இப்போ நான் கிளம்பனும்" என எழ,

"நானே ட்ராப் பண்றேன் சத்யா" என நவீன் எழ,

"எதுக்கு நவீன்? நாங்க போயிடுவோம்"என்றாள்.

"எப்படியும் நான் நாளைக்கு அங்க வரப்போறவன் தானே, நோ ப்ரோப்ளம் நான் அங்க கெஸ்ட் ஹவுஸ்ல ஸ்டே பண்ணிட்டு, மார்னிங் உங்க கூட சேர்ந்து எஸ்டேட் கணக்கும் பார்த்துடுவேன், ஈவினிங் இன்வெஸ்டரை பார்த்துட்டு ரிட்டர்ன்" என கூற,

"ம்ம்ம்..." என தலைசைத்தவள்" சரி அப்போ அனு அவங்க ஒர்க் முடிச்சிட்டாங்களா பாக்குறேன் "என்றவள் எழுந்து செல்ல,செல்லும் அவளை விழி அகலாமல் பார்த்து கொண்டிருந்தான் நவீன்.எப்போதும் போல் ஒரு காட்டன் புடவை தன் கருங்கூந்தலை ஒரு கிளட்சினுள் அடக்கி இருந்தாள்.

சத்யா என அவள் பெயரை உச்சரித்து பார்த்தான், சிறு புன்னகை எட்டி பார்த்தது. எப்போதும் அவளிடம் ஒரு மரியாதை உண்டு தான் ஆனால் சமீபகாலமாய் மற்றொரு உணர்வு அவனையும் மீறி முகில தொடங்க, இப்போது ஏதேதோ காரணம் கொண்டு ஒவ்வொரு வாரமும் அவளைக் காண கூர்க் சென்று கொண்டு தான் இருக்கிறான். அதனை அவள் உணர்ந்தபாடில்லை மெல்ல பெருமூச்சிட்டு,"சத்யா என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்களேன் "என அவள் சென்ற திசை பார்த்து வேண்டுதலை வைத்தான்.
 
காதல் : 2

அந்த மலையின் கடைசி வளைவை கடந்து, அவளது இருப்பிடம் நெருங்க நள்ளிரவாய் போனது. காலையில் அவள் கடந்த சாலை… இல்லை இல்லை அந்த தருணம்! நிகழ்வுகள் எல்லாம் அவளை சுழற்றி அடித்து அணிவகுத்தது. அந்த குரல்… கண்கள்!! இன்னமும் அதன் தாக்கம் அவளின் மேனியில்! உதறிய உறவின் சொச்சங்களின் பிரதிபலிப்போ!?
தன்னிலை மறந்து அமர்ந்திருந்தவளை,

“சத்யா” என நவீன் அழைத்தான்.

அவனின் விளிப்பில் சுயம் உணர்ந்தவள் இடத்து, 'என்ன?' என்பதாய் ஒரு பார்வை மட்டுமே!

"வீடு வந்துருச்சு" என்றான் நவீன்.

"ஓ.." என சத்யா வேகமாய் இறங்க, அவள் வேகத்தில் கால் இடரவும்,

“ப்ச் காலையிலயிருந்து இப்படி தான் நடந்துட்டு இருக்கு” என முணுமுணுத்தவளின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முயல, வலியின் தாக்கத்தில் அவள் முகம் சுணங்கியது.

"ஹேய்… சத்யா என்னாச்சு?" என நவீன் அருகில் வர,

"நத்திங் நவீன்… கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டு" என கால்களை உதறினாள்.

"இருங்க சத்யா" என வேகமாய் அவள் புறம் வந்தவன், அவளின் கால்களை ஆராயா கீழே கால்களை பிடிக்க வர,

அவன் செயலில், "ஒன்னும் இல்லை" என்றவள் முயன்று நடக்க, அவள் முயன்றுமே வலியின் பிரதிபலிப்பு அவள் முகத்தில்!

அவள் சுணங்கிய முகத்தைக் கண்டு, அவளின் கை பிடித்து அந்த வீட்டின் வாசல் வரை வந்தவன், "நீங்க வீட்டுக்கு போய் கதவை ஓபன் பண்ணுங்க, நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்" என அருகில் இருந்த பாலனின் வீட்டிற்குள் விரைந்தவனை வரவேற்பாய் புன்னகை செய்த பாலன்,

"என்ன தம்பி இந்த நேரம்?" என கேட்டவர், சத்யா தன் வீட்டினைத் திறப்பதைக் கண்டதும், "சத்யாவை நீங்களே கூட்டிட்டு வந்துட்டிங்களா?" என கேட்க,

"ஆமா பாலன், ஆடிட்டிங் முடிய கொஞ்சம் லேட் ஆயிடுச்சு நீங்க போய் என் ரூமை ரெடி பண்ணுங்க, நான் இவனை தூக்குறேன்" என பாலன் வீட்டின் கட்டிலில் இருந்தவனை அள்ளிக் கொண்டான் நவீன்.

"தம்பி டீ போடவா?" என வந்த ராஜத்திடம்,

"வேணாம் ராஜம்மா, தூக்கம் போய்டும். நான் இவன படுக்க வச்சிட்டு வீட்டுக்குப் போய்டுவேன்" என சொல்லியபடி செல்ல,

அதற்குள் சத்யா வீட்டினுள் சென்று படுக்கையை வேக வேகமாய் சரி செய்ய, அவனைப் படுக்கையில் கிடத்திய நவீன், "காலையில எனக்கு செம்ம திட்டு இருக்கு சார்கிட்டயிருந்து" என்றபடி, அவன் நெற்றியில் முட்டி விட்டு எழுந்தான்.

நவீனை வீட்டின் வாயில் வரை வந்து விடை கொடுத்து உள்ளே வந்தவள் பின் தன்னை சுத்தப்படுத்தி மகன் அருகில் சென்று தன்னை சாய்த்து கொண்டாள்.

கைகள் அவனின் சிகை கோதியது.கூர் விழி, சற்று சிவந்த நிறம் எல்லாம் அவளவனை கொண்டது.

“யஷ்வந்த்…” மகனின் பெயரை இதழ்கள் முணுமுணுத்தது. அவனின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். இந்த மூன்று வயதில் அவனின் புத்திசாலிதனமும் குணநலன்ங்களையும் எண்ணியவளின் முகம் தன்னைப்போல புன்னகை பூசிக்கொண்டது.
கூடவே சிறியவனின் பிடிவாதம் கூட யாரிடமிருந்து வந்தது என நினைக்கும் போதே அவளின் கடந்த கால நிகழ்வுகள் கண் முன்னால் வந்து செல்ல, யாரோ அவனை அவளிடம் பிரிப்பது போன்றதொரு எண்ணம்! இறுக்கமாய் மகனை அணைத்துக் கொண்டாள்.

விழிகள் கலங்கியது அவள் வாழ்கையின் பொக்கிஷம் அல்லவா இவன்! யாருமின்றி தனித்து கிடந்தவளுக்கு பாலைவனத்தில் நீர் ஊற்றாய் வந்து, அவளை திடம் செய்தவன். அவளின் பலம் பலவீனம் என அனைத்துமாய் இருப்பவனை ஆதாரமாய் இன்னும் இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

காலையில் அவனை கண்டவனின் தாக்கம் தான் போலும்.அன்றைய நிகழ்வை எண்ணித் தூங்காது விழித்து கிடந்தவளுக்கு, அவனின் வருகை, ‘எதார்த்தமானதா? இல்லை எப்போதும் போல் அவனின் திருவிளையாடலின் தொடக்கமா?’ என எண்ணும் போதே அவளுக்குள் நடுக்கம் பிறக்க, அவன் நினைவுகளைக் கூட தொடரக் கூடாது என கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

சிந்தையில் கூட அவனை தொடரக்கூடாது என முயல்பவளிடம், அவளை அவனது பருந்து பார்வைக்குள்ளாகவே வைத்திருப்பவனின் பராக்கிரமத்தை, யார் அவளிடம் சொல்வது!!..

அவன் வீட்டின் பால்கனியிலிருந்து அவளின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் நின்ற சிபியைக் காண, அவனின் பார்வை புரிந்தது, அவன் கேட்காத கேள்விக்கு பதிலுரைத்தான்.

"அவன் தான் நவீன் பாஸ்! இங்க சுத்தி இருக்க டீ பிளாண்டஷன், ரிசார்ட், பெங்களூருல ரிசார்ட், எஸ்ப்போர்ட் கம்பெனி இருக்கு அண்ட் மேடம் அவன்கிட்ட" என கூறும் போதே, வேதாந்த்தின் பார்வையில்,

"அது வந்து முன்ன அவங்க அப்பா கிட்ட தான் ஜாயின் பண்ணாங்க. ஆனா இப்போ இவன் டேக் ஓவர் பண்ணதில இருந்து, இவன் கிட்ட தான் ஒர்க் பண்றாங்க. இங்க வீட்டுக்கு முன்னாடி இருக்க குவார்ட்டஸ் எல்லாம் அவங்க கிட்ட ஒர்க் பண்றவங்களுக்கு கட்டிக் கொடுத்தது" என நவீனின் வரலாற்றை ஒப்பித்தவன்,

“நாளைக்கு அவன் கூட தான் மீட்டிங் இருக்கு” என முடிக்க,

"ஓ..." கண்களை மூடி இருந்தவன்,

"சொன்ன நேரம் இல்லாம ரெண்டு மணி நேரம் முன்னாடி வரச் சொல்லு" என்றான் அவன்.

"பட் பாஸ் நமக்கு அப்போ" என சிபி கூறும் போதே, அவனின் பார்வை மாற்றத்தில் வார்த்தைகள் நிறுத்தி "சரி" என தலையசைத்து நகர்ந்தான்.

மீண்டும் ஆணவனின் பார்வை அவளின் வீட்டைக் கண்டது. "சத்யா" என அவள் பெயரைச் சொல்லிப் பார்த்தான் இயல்பாய் புன்னகை அவன் இதழ்களில் தஞ்சம் கொண்டது.

"என்னப்பத்தி தெரிஞ்சும் நீ தப்பு பண்ணிட்டியே உன்ன என்ன பண்ண?" என அவளோடு பேசிய நொடி, நவீன் அவளைக் கைப்பற்றி அழைத்துச் சென்றது நினைவில் தோன்ற,

"ஹாவ் டேர் டூ டச் ஹேர்" என கோபமாய் வார்த்தைகளைத் துப்பியவனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைய,
“எனக்குன்னு எங்கயிருந்து டா வருவீங்க? ஷப்பா முடியல!" என பேசியபடி கைகளை நெற்றியில் வைத்தவன், 'நாளைக்கு இதுக்கான பதிலைக் கொடுத்துடுவோம்' என எண்ணிக் கொண்டே, அந்த பால்கனியில் உள்ள சாய்வு நாற்காலியில் தலைசாய்த்தவன் விழிகள் மட்டும் அவள் வீட்டினை விட்டு அகலவில்லை.

இரை தேடும் சிங்கத்தின் தீர்க்கம் அவன் விழிகளில்! கடந்து சென்ற நாட்களில் தொலைந்த தூக்கம் இப்போதும் அவன் அருகில் வர மறுக்க "ப்ச்... வேத் உன்னால ஒரு நாள் கூட அது இல்லாம தூங்க முடியாதா!" என வேகமாய் சென்று வார்ட்ரோப் கதவைத் திறந்தவன், அதனை எடுத்து வந்து முகத்தில் மூட நித்திரை தேவி அவனை அணைத்துக் கொண்டாள்.

விடியலின் தொடக்கம் அவளை எழ சொல்ல, ஆனால் நேற்றைய இரவின் தூக்கமின்மை, அவளை எழ விடாது கண்கள் சூழல, "ப்ச்" என முயன்று வேகமாய் எழவும்,

அவளை அசைக்க கூட முடியாது அவளின் கழுத்தோடு முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருந்த மகனை கண்டு சிரிப்புடன், அவன் தலை கோதவும், அவனின் கை இன்னும் அவளை இறுக்கிக் கொண்டது.
"யஷ்" என்றாள் மெல்ல, வேகமாய் தலைசைத்தான்.

"ஊப்ப்ஸ்ஸ்ஸ்… என்னோட பிரேவ் பாய் எழுந்துட்டாரு போலவே!" என கேட்கவும்,
'இல்லை' என்பதாய் அவளை இன்னும் இறுக்கிக் கட்டி கொள்ள,

“என்னாச்சு இன்னைக்கு யஷ் என்கிட்ட பேச மாட்டாரா?"

‘ஆமாம்’ என்பதாய் தலையசைக்க,

"ஏன்?"

"நேத்து நீங்க யஷ் தூங்கும் போது பக்கத்துல இல்லை" என கூற,

"அச்சோ அம்மா இல்லைனு யஷ் பயந்துட்டனா!?" என கேட்க,

"நோ…” என எழுந்து உக்காந்தவன், "ஐ ஆம் அ பிரேவ் பாய், ஆனா அம்மா யஷ் இல்லாம பயந்துப்பாங்க" என்றான் விழிகள் சிமிட்டி,

"அப்படியா! அம்மாக்கு யஷ் இல்லனா பயமா தான் இருந்துச்சு. பட் உன்னோட பிரண்ட் நவீன் அங்கிள், அனு ஆண்ட்டி எல்லாம் கூட வரும் போது, எனக்கு கொஞ்சம் பயமில்லை" என கூற,

முகத்தை சுருக்கி அவள் மூக்கோடு மூக்கை உரசி கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்தவன் மீண்டும் மழலையர் பள்ளி கதைகளையும், தன் நண்பர்கள் கதையையும் கூற, அதனைக் கேட்டுக் கொண்டே அவளின் அன்றாட வேலைகளை தொடர்ந்தாள்.
 
காதல் :3


அந்திமாலை இரவை தொட காத்திருக்க, சத்யாவிற்கு காலையில் மகன் சொன்னது வேறு நினைவில் தோன்ற, வெகு நேர காத்திருப்புக்கு பின் நேரத்தை பார்த்து கொண்டே "நவீன் யஷ் வெயிட் பண்ணுவான். ஐ நீட் டூ கோ" என்றாள்.

"எனக்கு புரியுது... ப்ச்.. வேணும்னா நான் போய் அவனையும் இங்க கூட்டிட்டு வரேன். மீட்டிங் முடிஞ்சதும் நம்ம இங்கேயே டின்னர் முடிச்சிட்டு போயிடலாம் சத்யா" என எழ,

"இல்ல வேணாம் நவீன், இட்ஸ் அ அஃபிஸியல் மீட்டிங்" என நிறுத்தப் பார்க்க,

"நோ இது இன்னும் அஃபிசியல் ஆகல சத்யா. ஜஸ்ட் அ ஃபார்மல் மீட்டிங் தான். நம்ம ப்ரொபோஸல் அவங்க அக்ஸப்ட் பண்ணனும் இல்லனா அவங்க டிமாண்ட் நமக்கும் பிடிக்கணும். இப்படி நிறைய இருக்கு அண்ட் மோர் ஓவர் அவர் நம்ம பிசினஸ் மீட்டிங்க்கு கூர்க் வரல.
அவர் கொஞ்ச நாள் மைண்ட் ரிலாக்ஸ் பண்ண தான் வந்திருக்கார். சோ இது ஒரு அன்அஃபீஸியல் டின்னர் மீட்டிங் தான்” என்றவன்,

“நம்ம ரிசார்ட் தானே சத்யா. அவனுக்கும் இது பழக்கமான இடம் தான். சோ நீங்க இங்க இருங்க. நான் போய் யஷ்ஷை கூட்டிட்டு வரேன்" என அவள் சொல்வதைக் கூட கேட்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து இருந்தான்.

நவீன் சென்ற மறுநொடி தன் வேக எட்டுக்களுடன் பெண்ணவள் முன் நின்றிருந்தான் வேதாந்த். அவன் தூரத்தில் வரும் போதே தன் இதய துடிப்பின் மாறுதல் அவன் வருகையை சொல்லாமல் சொல்ல, அவனா?என விழிகளை சுழல விட, அவனே என அவனின் பிரத்தியேக வாசனை திரவியம் சொல்லாமல் சொல்ல, நிமிர்ந்து பார்க்க தோரணையாய் அவள் முன் நின்றிருந்தான் வேத். உள்ளுக்குள் தோன்றிய படபடப்பை மறைத்து முயன்று தன்னை நிதானப்படுத்தி அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவள்!

அவன் பின்னால் எப்போதும் போல் அனுமார் வாலாய் சிபி வந்து கொண்டிருந்தான். இருவரையும் கண்டதும் ஓர் புருவ உயர்த்தல் மட்டுமே! பின் அவளுக்கு ஒன்றுமில்லை என்பது போல் அமர்ந்திருக்க,

அவளைத் தாண்டிச் சென்றவன் பின் அவளை அப்போது தான் கண்டது போல் நின்று நிதானமாய் ஓர் பார்வை அவனிடம்! அவன் கூர் விழி பார்வையால், அவள் நெஞ்சாங்கூட்டில் ஓர் ஜில்லிட்ட உணர்வு அவளையும் மீறி எழ,

“எ... என்ன?” என்றவள் பார்வை அவனிடமின்றி சிபியிடம் செல்ல,

"அதை என்கிட்டயே கேக்கலாமே" என தன் கோட்டினை சரி செய்து கொண்டே அவள் அருகில் இருந்த நாற்காலியை நகற்றி அமர்ந்தான்.


அவன் அமர்ந்ததும் இவள் எழப்போக, அவள் கையினைப் பற்றி, "டேபிள் மேனஸ் தெரியாதா உங்களுக்கு மிஸ்....” என வார்த்தையை நிறுத்தி,

“மிஸ் தானே!" என புருவம் உயர, அவன் கேட்கும் போதே "மம்மி" என்ற குரலில் இருவருமே திரும்ப,
"அப்போ மிஸ் இல்லையா நீங்க?" என சோகம் போல கூறினான் பற்றிய கையை விடமால்.

"கொஞ்சம் கையை விடுறிங்களா?" என்றாள் பற்களை கடித்துக் கொண்டு,

"ஓ... வோய் நாட்?" என்றவன் அவள் புறம் குனிந்து "சந்தூர் மம்மியா நீங்க?" என்ற ஏக்க பெருமூச்சுடன் நகர்ந்து அமர்ந்தான்...... அவன்!!

நவீன் உள்ளே வரும் போதே சத்யாவின் அருகில் வேதாந்த் அமர்ந்திருப்பதைக் கண்டதும் வேகமாய் வந்தவனுக்கு முதலில் கண்ணில் பட்டது அவனின் தோற்றம் தான்.

கருநீல நிற பிளேஸர் நெற்றியில் படர்ந்த மூடி, சற்று ட்ரிம் செய்யபட்ட தாடி என பக்கா கார்ப்பரேட் முதலாளியாய் அமர்ந்திருக்க, அவனின் செல்வாக்கினை பற்றித் தெரிந்ததால் அவன் அருகில் வந்தவன்,

"வி. பி சார், ச... சாரி லேட்டாயிடுச்சு! இப்போ தான் வெளிய போனேன்" என என்ன சொல்வது என புரியாது கூற,
வேதாந்த் அவனை குற்றம் சாட்டும் பார்வையில், "பிசினஸ்ல எப்போவும் டைய்மிங் ரொம்ப முக்கியம்” என
பிளாஸரை சரி செய்து கொண்டே “அதுவும் நம்ம நீட்க்கு ஒரு இன்வெஸ்ட்டரை பார்க்க வரும் போது இன்னும் முக்கியம்” என தன் கூலர்சை அணிந்து கொண்டு, "மிஸ்டர்...?" என கேள்வி போல் சிபியைக் காண,

அதற்கு பதிலாய், "நவீன்' என்றான் அவன்.

"யா... மிஸ்டர்.நவீன் இது ஆஃபிஸியல் மீட்டிங் இல்லை தான் அதுக்குன்னு குழந்தையெல்லாம்" என அவன் கைகளை பற்றி இருந்த யஷ்ஷை காண,

சத்யாவும் உணர்ந்து தான் இருந்தாள். அவனின் விழியசைவை, சட்டென நவீனிடமிருந்து குழந்தையை வாங்க, ஆணவன் பார்வை அங்கே வந்ததும் தாயிடம் தாவிய யஷ்ஷிடம் சென்றது.
நவீன்,வேதாந்த்தின் பார்வை சத்யா மற்றும் யஷ் மீது படரவே,

வேதாந்தை சத்யாவிடம் காட்டி, “சத்யா இவரு...” என சொல்ல வந்தவன்,

“எங்க இருந்து தொடங்க இவரு... டோட்டலி ஹீ வாஸ் அ யூனிகார்ன் ஆப் பிசினஸ் வேர்ல்ட்! என்னோட ரோல் மாடல் அண்ட் யூ நோ சத்யா? அவர பாக்க அப்பொய்ன்ட்மென்ட்க்கு எல்லாம் நம்ம வெயிட் பண்ணிருக்கணும். பட் காட் பிளெஸ்ஸிங், இப்போ கூர்க்ல நம்ம முன்னாடி தி கிரேட் வேதாந்த் விஜய் பிரகாஷ்" என வேதாந்தின் புகழ் பாடி முடிக்க,

யாரோ யாரைப் பற்றியோ கூறியது போன்ற பிரதிபலிப்பு அவனிடம்! "நாட் பேட் மிஸ்டர் நவீன்... பட் இட்ஸ் எனப்" என கூறி இவங்க என பெண்ணவளை நிறுத்தி நிதானமாய் காண,

"ஓ... சாரி சார் இது சத்யா என் கம்பெனியோட ஆடிட்டர் அண்ட் சச் அ பிரிலியண்ட் வுமன்! எங்க அப்பா சத்யா சொன்னா சரின்னு சொல்ற அளவுக்கு” என்ற நவீன் விழிகளில் காதல் அப்பட்டமாய் தெரிய,

அவன் சொன்னதை துளி கூட காதில் வாங்காத பாவனை வேத்திடம்,

"ஓ...குழந்தை?" என புருவம் மேலேற,

"எங்க குழந்தை தான்" என்றான் நவீன்.

"ஓ"... என்றவன் பார்வை மட்டும் அவளிடம்!பின் நிறுத்தி நிதானமாய் நீங்க சிங்கிள்னு கேள்வி பட்டேனே? அப்படித்தானே சிபி?" என பின்னால் இருந்த சிபியிடம் பார்வை செல்ல,

"எஸ் பாஸ்" என்றான் அவன்.

"ஓ... எஸ்... எஸ்.... நான் என்ன சொல்ல வந்தேனா இது எங்க தட் மீன் சத்யா குழந்தை" என நவீன் சொல்லி சிரிக்க,

வேத் விழிகள் கூர்மையாய் சத்யாவைக் காண, அவன் பார்வை வீச்சை கண்டவள், "நவீன் வந்த வேலையைப் பார்க்காலாமா?" என்றாள் சத்யா.

இதற்கு மேல் விட்டால் வேத்தின் அடுத்த கேள்வி எதை நோக்கி செல்லும் என்பதை உணர்ந்தே இருந்தவள், அங்கிருந்த பணியாளர்களிடம் வேத்தை கொடுத்து பிளே ஏரியாவில் விளையாட சொல்லி தன் கண் பார்வைக்குள்ளே வைத்துக் கொண்டாள்.

அவளின் பேச்சை கேட்டு, "மேடம் ரொம்ப ஷார்ப் போலவே ஐ லைக் இட் அண்ட் ஐ இம்ப்ரெஸ்ட்" என்றவன் பார்வை ஒரு நிமிடம் அவள் மீது தவழ விட்டு,"நவீன் நீங்க உங்க ப்ரொபோசலை சொல்லுங்க" என அமர்ந்தான்.

நவீன் தன் எதிர்கால திட்டங்களை கூற, அதனை கேட்டவன் விரல்கள் புருவத்திலிருந்து கன்னத்தை தாங்கி இருக்க, விழிகள் மூடி கண்கள் சுருக்கியவன் "ஓகே எவ்ளோ அமௌன்ட் வேணும்” என்றான்.

அவன் செய்கைளை கண்ட நொடி பெண்ணவளும் உணர்ந்து தான் இருந்தாள், ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிறான் என்பதையும் , இனி அவனின் பதில்களும் கேள்விகளும் எதிரில் இருப்பவனின் திடத்தை சோதிக்கும் என்பதையும் !? அவளின் ஒரே கவலை, ‘இதனை சமாளிக்க நவீனால் முடியுமா?’ என்பது தான். அதே தான் நடந்தும் கொண்டிருந்தது.

அவனின் முதலீடுகள் எதில் என்பதைக் கேட்டு அதனைப் பற்றிய கேள்விகளில் எதிரில் இருப்பவனுக்கு தலைசுற்றிப் போக, பேச்சுக்கள் முழுதாய் ஒரு மணிநேரத்தை விழுங்கியது.

"நவீன் நீங்க கொஞ்சம் இன்னும் பெட்டர் ஐடியா யோசிக்கனும். நம்ம ப்ரோடக்ட் ஒன்ன சந்தைப் படுத்தும் போது ஏற்கனவே அங்க மார்க்கெட்ல ப்ரோடுக்ட்டை விட, நம்மது பெட்டர்னு மக்களை நம்ப வைக்கணும், அண்ட் அது எந்த பிசினஸா இருந்தாலும் இது தான் ஸ்ட்ராடர்ஜி" என வேத் முடிக்க,

அதுவரை வேதாந்த் மீதிருந்த பார்வை கூட முற்றிலும் மாறி அவனின் பேச்சை ஆ வென கேட்டு கொண்டிருந்தான் நவீன்.

அவன் முடிக்கவும் “சார் இப்போ தான் புரியுது நீங்க எப்படி இத்தனை பெரிய இடத்துல இருக்கீங்க அண்ட் இவ்ளோ பிசினஸ் ரன் பண்றிங்கன்னு அப்படி தானே சத்யா?” என கூற,

அதனை கேட்ட பாவனை கூட இல்லை வேத்திடம், "தென்... சொல்லுங்க எங்க இன்வெஸ்ட்மென்ட்க்கு உங்க சூரிட்டி என்ன? ஆர் பிப்டி பிப்டி பார்ட்னர்ஸ்ஸா தொடங்கலாமா?" என வேத்தின் புருவம் உயர்ந்து சிபியிடம் கண்கள் சிமிட்ட,

சிபி இதழ்கள் தன்னால் விரிந்தது. 'அதானே யாருகிட்ட?' என பலியாக போகும் ஆட்டின் பார்வையை நவீன் மீது வீசினான். இருவரின் பார்வை பரிமாற்றங்களை உணர்ந்து சத்யாவால் அதற்கு மேல் அமைதியா இருக்க முடியாது போனது.

ஆனால் வேத்தை பற்றி அறியாத நவீன் என்ன சொல்வது என முழித்தான்.

"இட்ஸ் நாட் ஃபேர் பிப்டி பிப்டி எல்லாம் பாசிபிள் இல்ல" என்றாள் சத்யா.

அதுவரை அவள் இருந்ததை உணராதது போல் இருந்தவன் பின் அவள் பக்கம் இமைகள் திருப்பி, “ஏனோ?” என்றான் புருவம் உயர,

“பார்ட்னர்ஸ் எப்போவும் செட் ஆகாது” என்றாள் அவள்.

“ஏன்? என் பார்ட்னர்ஷிப் பிடிக்கலயா உங்களுக்கு?”

“இல்லை” என்றாள்.

“ஏன் இன்னும் ஏதாவது பெட்டர் ப்ரொபோஸல் கூட சொல்றேனே?”என்றான் அவளுக்கு மட்டும் நொடி நேரத்தில் கண்களை சிமிட்டி,

“தேவையில்லை” என்றாள் அவனின் செயல்களில் கோபம் கொண்டு,

“அப்போ நீங்க சொல்லுங்க நாங்க கேட்கிறோம்” என்றான் வசதியாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டு.

“நீங்க வேணும்னா டுவெண்ட்டி இல்ல…” என சத்யா தொடங்க,

“இல்ல கேட்கல மேடம்?” என அவள் புறம் சாய,

“ப்ச்... ஓகே தேர்ட்டி"என்றதும்,

வேத் அடக்க மாட்டாது சிரிக்க, சிபியும் தொடர, சத்யா கோபமாய் வேத்தைப் பார்த்தாள்.

“ஹலோ சந்தூர் மம்மி நீங்க என்னை என்னனு நினைச்சிட்டு இருக்கிங்க? கந்துவட்டிகாரன் போல தெரியுதா? டிட் யூ நோ தி வேல்யூ ஆப் மீ” என புருவம் மேலேற அவன் தொடங்கும் போதே, அவர்களின் பேச்சு செல்லும் திசையையும் வேத்தின் பார்வை சத்யாவை சீண்டுவதையும் கண்ட நவீன்,

“லேட்டர் வி டிஸ்கஸ் வி. பி சார்” என முடித்து வைத்தான்.

“நவீன் இது…” என சத்யா தொடர,

"சத்யா ஹீ வாஸ் அ பிக் ஷாட்! எதுவும் உடனே பதில் சொல்ல முடியாது. ஹோப் யூ நோ" என பதில் கூறியவனும் வந்தது முதல் உணர்ந்தே தான் இருந்தான் வேத்தின் பார்வை சத்யா மீது ஆர்வமாய் படிவதை, ‘என்ன சொல்லி இங்கிருந்து அவளை அனுப்புவது?’ என நவீன் யோசிக்கும் நேரம்,

தன் தொண்டையை கணைத்து விட்டு, "என்ன சொல்றாங்க உங்க ஆடிட்டர்?" என வேண்டுமென்றே அவள் புறம் சாய்ந்த படி வேத் கேட்க,

“நத்திங் சார்” என நவீன் கூற,

‘அப்படியா?’ என ஒரு பார்வையையும் இருவர் மீதும் படரவிட்டான். ‘இவனை கண்டால் எனக்கென்ன பயமா என்ன?’ என சற்று முன்னே வந்தவள்,

"அஸ் அ ஆடிட்டர் என்னோட கருத்து யூ ஆர் ஜஸ்ட் அ இன்வெஸ்ட்டர் அண்ட் யூ வில் ஸ்டே அஸ் ஆன் யுவர் லிமிட். டோன்ட் டிமாண்ட் அ ஷேர் ப்ள... ப்ள.." என கோபம் மற்றும் ஒரு வித பரிதாவிப்புடன் கூற,

"ஆஹான் தென்" என்றவன் மேஜை மீது கையை வைத்து அவன் கன்னம் தாங்கி சத்யாவை சுவாரசியமாய், ‘இன்னும் சொல்லு’ என்பதை போல் பார்த்தான்.

அவன் பேசிய தினுசில், "சார் வீ வில் ப்ரோசீட் லேட்டர்" என நவீன் கூறி முடிக்கப் பார்க்க,

ஆணவன் விழிகளோ பெண்ணவளை உரசிய படி "ஓகே தென் மிஸ்டர் நவீன் நான் பிசினஸ் பேச இங்க வரல அண்ட் என்னோட பிசினஸ் டாக் இப்படியும் இருக்காது. பட் ஐ ஹாவ் அ குட் டைம்" என தன் உடையை சரி செய்து கொண்டே,

"லேட்ஸ் டூ பி அ பிரண்ட்ஸ்" என நவீன் புறம் கைகளை நீட்ட, ‘அவனோ இவன் என்ன தான் சொல்ல வருகிறான்?’ என புரியாது, 'பிசினஸ் பேச வரலனா அப்போ இவ்ளோ நேரம் இவன் என்ன பண்ணிட்டு இருந்தான்?' என யோசித்தபடி கைகளைப் பற்ற,

அவன் குழம்பிய முகத்தை பார்த்து சிபி மனதுக்குள் ‘ஏன்டா இத்தனை வருஷம் கூட இருக்கேன் எனக்கே இவரோட மூவ் தெரியல! இவரு வந்த அரை மணி நேரத்தில புரிஞ்சுடுமா? அடேய் அப்பரன்டிஸ் வெட்ட போற ஆட்டுக்கு மஞ்ச தண்ணி தெளிச்சு விட்டு இருக்காரு’ என உள்ளுக்குள் சிரிக்க,

வேத்தோ, "நைஸ் டூ மீட்டிங் யூ சத்யா" என அவள் புறம் கைகளைத் திருப்ப, அவ்ளோ கைகளை குவித்து, “நன்றி" என எழுந்தாள்.

அவள் செயலில் சிரித்துக் கொண்டே, "எங்க கூட டின்னர் ஜாயின் பண்ணலாமே நவீன்" கேள்வி அவனிடம் என்றாலும் பார்வை என்னமோ அவளிடமே!

‘இதென்ன நம்ம ரிசார்ட்ல நமக்கே டின்னர் ஆஃபர்! பண்றான்’ என நவீன் முழிக்க, அவன் முழித்த தினுசில், ‘அடேய் இனிமே இது எங்களோடதுன்னு அர்த்தம் டா' என எண்ணியவன் சற்று சத்தமாய் சிரிக்கவும்,

அதில் சிபிபுறம் திரும்பி என்ன என்பது போல் வேத் காண, அதோடு வாயை மூடிக் கொண்டவன், ‘மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு பேசாதடா, அவருக்கு மைண்ட் ரீடிங் தெரியும்’ என வாயை இறுக மூடிக் கொண்டான்.

"வி. பி சார் இது நம்ம ரிசார்ட் தான். சோ... இது என்னோட டின்னர் ட்ரீட்னு வச்சுக்கோங்க" என சிபியைக் காண,

‘வேத் சென்று விடுவானோ?’ என அவன் எழும் போது மிளிர்ந்த அவள் விழிகள். பின் அவனின் பேச்சுகளில் சுருங்கிப் போக, ஏனோ அவனுக்கு அவளுடனா இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பிடித்து இருக்க, தன் மீசைக்குள் புன்னகையை மறைத்தவன், "வோய் நாட் நவீன்" என்றவன், “சிபி லெட்ஸ்" என தொடங்க,
"எஸ் பாஸ்" என அவனுக்கான நாற்காலியை நகர்த்தி விட்டு வேத்தின் உணவினை அங்கிருந்த பணியாளர்களிடம் கூற,

அதே நேரம், "ஓகே நவீன் நான் கிளம்புறேன்” என்றவள், "யஷ்" என குழந்தையை அழைக்க, அவள் செல்ல தொடங்கவும் ஒரு புருவ முடிச்சோடு அவளை வேத் பார்க்க,

"என்னாச்சு சத்யா? நம்ம பிளான் இங்க டின்னர் முடிச்சுட்டு போறது தானே! வாட் ஹாப்பன்" என்றான் நவீன்.

"இட்ஸ் ஓகே நவீன் ஐ வில் லீவ் நவ்" என எழுந்து கொள்ள,

"என்ன ஆடிட்டர் மேடம் நாங்க இருக்கறது டிஸ்டர்ப்பா இருக்கா என்ன? வேணும்னா நாங்க கிளம்புறோம்" என வேத் எழவும்,

"அச்சோ! நோ சார் சத்யா அப்படி யோசிக்கறவங்க இல்லை" என்றவன்,
"சத்யா இன்னும் கொஞ்ச நேரம் எல்லாரும் சாப்ட்டுட்டு போய்டலாம்" என்றான் கெஞ்சலான குரலில். இதற்கு மேல் தவிர்ப்பது நாகரிகம் இல்லை என்பதால் "ம்ம்ம்...” என்றவள் "யஷ்"என அழைக்க, ஆணவன் விழிகளும் அவன் புறம் செல்ல,

தாயின் குரலுக்கு ஓடி வந்த குழந்தையை அழைத்து அருகில் இருக்கும் குழந்தைகளுக்கான நாற்காலியில் அமர வைத்தாள்.

யஷ் விழிகளோ அங்கே புதிதாய் எதிரில் இருந்த மனிதனை எடை போடுவது போல் காண, அதை உணர்ந்தது போன்று வேத் புருவம் உயர்த்தியவன், டிஷு பேப்பர் கொண்டு கைகளைத் துடைக்க,
அவனைப் போலவே புருவம் உயர்த்தியவன், "உங்க அம்மா ஹாண்ட் வாஷ் பண்ண சொல்லி கொடுக்கலையா?" என்றான் தோரணையாய்.
 
அவன் பாவனையில் வேத் சிரித்து விட, அவனை போன்றே யஷ்ஷும் சிரித்து வைத்தான். இருவரின் செயல்களை அங்கிருந்த அனைவரும் பார்த்து கொண்டிருக்க,

"யஷ் சச் அ ஸ்மார்ட் கிட் சார். நான் இவன பார்க்கவே வீக் எண்ட் இங்க வந்துடுவேன்" என கூறியவன், "வாங்க அம்மா சாப்பிடட்டும்" என அவனை தூக்கியவன் எழுந்து செல்ல, அவன் சென்றதுமே அதுவரை அமைதியாய் இருந்த சிபியும் எழ,

அவன் எழுந்த அரவத்தில் சத்யா சிபியை ‘என்ன?’ என்பதாய் காண,

"கை... கையை வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன் மேம்” என வேகமாய் நகர்ந்தான். அவன் சென்ற நொடி சத்யா எழ,

"எனக்கு கம்பெனி கொடுக்கலாமே ஆடிட்டர் மேடம். ஒழுங்கா சாப்பிட்டு பல வருஷமாச்சு" என கூறி உணவை விழுங்க, அவன் பாவனையில் எழுந்தவள் மீண்டும் அமர்ந்தாள்.

அவளின் உணர்வுகளை புரிந்தவன் போன்று, "ரொம்ப ஹாட்" என்றான் அவளை விழியால் பருகி உணவை விழுங்கிக் கொண்டே, அவன் பார்வை சென்ற திசையைக் கண்டு பெண்ணவள் முறைக்க,

சத்யா முறைக்கவும் கையில் காரமான பச்சை மிளகாயை வைத்த படி, "இதை சொன்னேன்" என்றவன், "பையன் ரொம்ப ஸ்மார்ட்" என்றான்.
எந்த பதிலும் இன்றி அமர்ந்திருந்தாள்.

எந்த நொடியும் தன் உணர்வுகள் எல்லை மீறும் என்ற நிலையில் பெண்ணிருக்க,

"ஆமா பையன் எப்படி உங்கள மாதிரியா இல்லை அவன் அப்பா போலவா?" என கேட்க, அப்படியே அருகில் இருந்த குளிர்ந்த நீரை அவன் முகத்தில் ஊற்றும் வேகம் பிறந்தது அவளுள்.

அவனோ வேகமாய் அவன் முகத்தை துடைத்து கொண்டே, “இப்போ ஓகே யா?” என்றான்.

‘என்ன சொல்ல வருகிறான்?’ என புரியாது, “என்ன?” என்றாள்.

"இல்லை என் மூஞ்சில தண்ணியை ஊத்துனிங்களே அதான் ஒழுங்கா தொடைச்சுட்டேனான்னு கேட்கிறேன்" என்றான் சிரித்துக் கொண்டே,

இந்த புன்னகை அவளின் திடத்தை சோதிக்க, அதற்கு மேல் முடியாது, "ப்ச்" என எழ போக,

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே?" என்றான் வேண்டுமென்றே.

"அது உங்களுக்கு தேவை இல்லாதது மிஸ்டர். வேதாந்த் விஜய்பிரகாஷ் " என அவ்விடம் விட்டு நகர்ந்து யஷ் இருக்கும் திசை நோக்கிச் சென்றாள் சத்யா.

"வேதாந்த் விஜய்பிரகாஷ், நல்ல முன்னேற்றம் தான்" என சிரித்து விட்டு "பட் இன்னும் காரம் குறையல இட்ஸ் இண்டெர்ஸ்ட்டிங்" என தன் உணவினை முடித்து எழுந்தவன் அவர்கள் அனைவரும் இருக்கும் இடம் நோக்கி வர,

நவீன் அவனிடம், "நைஸ் டூ மீட்டிங் யூ வி. பி சார்” என கைகள் குலுக்கி விடை பெறப் போக,

"நவீன் நீங்க பெங்களூரு போகணும் சொன்னிங்களே?" என்றான்.

"எஸ் சார்... இவங்கள ட்ரோப் பண்ணிட்டு அப்படியே போகணும்" என கூற,

“அப்போ திருப்பி இதான் ரூட் இல்லையா?” என கேட்டான் வேத்.

“ம்ம்..” என்றான் நவீன்.

“இட்ஸ் ஆல்ரெடி லேட். நீங்க கிளம்புங்க வீ வில் ட்ரோப் தெம்” என வேத் கூறவும், சத்யா முகம் சட்டென மாற,

நவீன் வேத்க்கு என்ன பதில் சொல்வது என புரியாது முழித்தான்.

“ஏய் கம் ஆன் நவீன் யூ நோ உங்க பிளாண்டஷன் அண்ட் குவார்ட்டஸ் எதிர்ல இருக்க பங்களா, எங்களோடது தான் சோ இட்ஸ் நாட் அ பிக் இஸ்ஸு” என்றான் வேத்.

இந்த செய்தி நவீனுக்கு புதியதில்லை என்பதை போல் இருக்க, சத்யாவிற்கு இந்த செய்தி முற்றிலும் புதிது. அவனின் அக்டோபோஸ் விரல்கள் தன்னை சூழ தொடங்கியது என்பதை புரிந்தவள் அந்த அதிர்வில் தேங்கி நிற்க,

“இல்லை அதுக்கில்லை சார் சத்யா கொஞ்சம் ரிசர்வ்ட் டைப் அதான். பரவாயில்லை சார்… ஐ கேன் ட்ரோப் ஹேர்” என நவீன் நகரப் போக,

“ஆல்ரெடி இட்ஸ் லேட் மேன்! நீங்க பெங்களூரு போக மிட்நைட் ஆகிடும் அதான் சொன்னேன். அண்ட் இங்க நிறைய பெண்ட் இருக்குற ரோட் என்னவேனா நடக்கலாம்” என நிறுத்தி நிதானமாய் சத்யாவைப் பார்த்தான்.எதை சொன்னால் அவளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிந்தவன் அல்லவா அவன்!!அவன் நினைத்தது சரி தான் என்பதை போல் அவளின் பிரதிபலிப்பும் இருக்க, உன்னை நானறிவேன் என்ற பார்வை அவனிடம்!


வேத் சொன்ன நொடி “நீ... நீங்க போங்க நவீன். நான் போய்கிறேன்” என்றாள்.

“இல்ல சத்யா நான் ட்ரோப் பண்றேன். நீங்க வாங்க” என நவீன் சொல்லவும்.

இனி எனக்கொன்றுமில்லை என்பதை போல, “ஓகே சிபி நம்ம போகலாம் கெட் இன் தி கார்” என வேத் கிளம்ப,

“நான்... அவங்க கூட போறேன் நவீன். நீங்க போங்க” என சத்யா மீண்டும் கூறவும்,

நவீன் இதற்கு மேல் என்ன செய்வது என புரியாது, “ஓகே நான் கிளம்புறேன்” என்றவன் அரை தூக்கத்தில் இருந்த யஷ்ஷிடமும் சத்யாவிடமும் விடைபெற்று ஒரு குழம்பிய மனநிலையில் விலகிச் சென்றான்.

அவன் சென்ற நொடி வேத்தின் பார்வை டிரைவர் சீட்டில் இருந்த சிபியைக் காண,

அவனோ, “பாஸ்” என நிறுத்தினான்.
கடந்த மூன்று ஆண்டுகளாய் அவனின் நிலை புரிந்து எப்போதும் அவனை காரினை ஓட்ட அனுமதித்தில்லை, ஆனால் இன்று!? என்ற கேள்வியும்,

இவனிடம் சரி என்றாலும் கூட அவனின் தந்தையின் குணம் அறிந்தவனால் என்ன செய்வது என புரியாது,மீண்டும் கெஞ்சலாய் வேத்தைப் பார்த்து "பாஸ் வேண்"என தொடங்க,

வேதாந்த் பார்த்த பார்வையில் அதற்கு மேல் அமர்ந்திருப்பானா அவன்? உடனே கீழே இறங்க, அடுத்த நொடி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான் வேத்.

காரில் ஏறாது நின்றவளை கண்டு, “என்ன ஆடிட்டர் மேடம் ஏற ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்றான்.

“ப்ச்...” என்றவள் நிமிர சிபி காரின் முன் கதவை திறந்து நிற்க, அவனை முறைத்தவள் கதவினை அடித்து சாத்தி பின்புறம் ஏற, அடுத்த நொடி கார் அவனின் வேகத்தில் பறந்திருந்தது.

சிபி சென்ற காரினை பார்த்து கொண்டிருந்தவன் நேரத்தை பார்த்து கொண்டே லண்டனில் இது விடியலின் தொடக்கம் தான் என எண்ணி வேத்தின் தந்தையும் வேத் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மென்னுமான விஜய்பிரகாஷ்க்கு அழைக்க,

அதனை ஏற்றவர்,

"எஸ் சிபி "என்றார்.

"சார்... பாஸ் கார் எடுத்துட்டு போயிருக்கார்"என்றான் பதட்டமாய்,

"வாட்? சிபி என்ன பண்ணிட்டு இருக்க நீ அங்க? அவன் ஹெல்த் இஸ்ஸுஸ் தெரியும் தானே உனக்கு. தெரிஞ்சும் நீ எப்படி அக்ஸ்ப்ட் பண்ணுன?அவனோட கார்ட்ஸ் எங்க? நீங்க எல்லாம் அங்க என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க? " என அவர் திட்ட தொடங்க,

"இல்லை சார் மேடம்" என சிபி நிறுத்த

மகனை பற்றி அறிந்தவர் தான் என்றாலும் "யாரு?"என்றார்.

"சத்யா மேடம் கூட போயிருக்காரு, என்னால அவரை தடுக்க முடியல" என்றான்.


"ம்ம்ம்..."தன் மகனின் குணத்தைப் பற்றி தெரிந்தவரால் சிபி சொன்னாலும் கேட்டு இருப்பானா? இல்லை கேட்கும் குணம் தான் கொண்டவனா அவன்?' என அவர் எண்ணும் போதே, 'நீ சொன்னாலே கேட்க மாட்டான் இதுல சிபியை திட்ற நீ?'என மனசாட்சி கேள்வி கேட்டதும் அவரையும் மீறி சிரித்து விட,

"சார்" என்றான் சிபி.

"எஸ் சிபி கார்ட்ஸ் பாலோ பண்றாங்க தானே!இல்ல அவனுக்கு பயந்து அதையும் செய்யலையா? "என கேட்டதும்,


"நோ சார், நீங்க சொன்னது எல்லாம் கம்ப்ளீட்டா நடக்குது" என்றவன் "சார்" என நிறுத்த,

"சொல்லு சிபி" என்றார்.

"நான் போட்டோஸ் எல்லாம் அனுப்பிருக்கேன்" என கூறவும்,

"ம்ம்ம்...பாக்குறேன் சிபி டோன்ட் ரீப்ட் இட் அண்ட் டேக் கேர் ஆப் ஹிம்"என வைத்தவர் மனது மகனிடம் சென்றது.


காரின் வேகத்தில் அந்த குளுமையில் கூட அவளுக்கு வேர்த்தது . காரின் வேகம் சற்று அதிகரிக்க அவன் வேகம் அவளுக்கு ஒன்றுமில்லை என்பதை போல் அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் காரின் வேகம் குறைய,

'என்ன' என்பதை போல் பார்த்தாள்.
அவனின் பக்கவாட்டு தோற்றத்தில் தாடைகள் இறுக, ஸ்டியரிங்கில் பதிந்த கைகள் இறுக்க பற்றி இருக்க,ஒற்றை கையால் தன் தலை கோதியவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்து தூக்கி போட,

தன் கோபத்தை குறைக்க வழி தேடுகிறான் என்பது புரிய,பெண்ணவளுக்கு உள்ளுக்குள் ஒரு வித நடுக்கம் பிறந்திருந்தது.

எதுவும் பேசாது அமைதியாய் வர இருவர் உள்ளத்திலும் ஆழி பேரழை தான். எப்போதும் அவள் கடந்து செல்லும் பாதை தான். ஆனால் இன்று சற்று நீண்ட நேர பயணம் போல் தோன்றியது அவளுக்கு! எந்த நொடியிலும் அவன் வெடித்து சிதறுவான் என்றதொரு பயம் தொற்றிக் கொள்ள, முயன்று தன்னை திடப்படுத்தி கொண்டாள்.வாகனம் சட்டென நிற்க, ‘என்ன?’ என்பதாய் பார்த்தாள்.

அவனோ எதுவும் பேசாது சாலையைக் காண, திரும்பி பார்த்தவளுக்கு அவளின் வீடு வந்திருப்பது தெரிய ஒரு நீண்ட பெருமூச்சுடன் இறங்க முற்பட, “சத்யா” என்றான்.

முன்னேற முயன்றவள் கால்கள் அங்கேயே தேங்க, “என்கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?” என்றான் குரலில் அத்தனை கடுமை.

என்ன சொல்வாள் பெண்ணவள்? விழிகளில் கண்ணீர் பெருக! எதுவும் பேசாது நின்றவள் தூங்கிய குழந்தையை தூக்க, அதே நேரம் பாலனும் அவளை நோக்கி, “வந்துட்டியா சத்யா நவீன் சார் போன் பண்ணதில இருந்து இவ்ளோ நேரம் ராஜம் வாசலேயே நின்னுட்டு இருந்தா, இப்போ தான் உள்ள போனா” என குழந்தையை வாங்கியவர் ராஜம் என குரல் கொடுத்து கொண்டே முன்னால் காரினை திறந்து இறங்கி வந்த வேத்தை கண்டதும்,

"தம்பி நீங்க தானா? நவீன் தம்பி சொன்னதும் யாரோனு நினைச்சுட்டேன்" என கேட்க,

அவருக்கு ஓர் அறிமுகமான புன்னகையை கொடுத்தவன் தலைசைக்க, அதற்குள் ராஜம் வர,

"மெதுவா தான் வாயேன்" என பாலன் கடிய,

"பனி இப்படி இருக்கு,குழந்தை பனில இருக்கான் இதுல நான் மெதுவா அசைஞ்சு வரேன் "என பாலனை கடிந்தவர் வேகமாய் வந்து குழந்தையை வாங்கி கொண்டே “சத்யா குழந்தை ஏதாச்சும் சாப்பிட்டானா இல்லையா? நான் அப்பவே சொன்னேன் அவனை அனுப்ப வேணாம்னு கேட்டாரா இவரு, குழந்தை என்ன சாப்பட்டானோ என்னவோ? நீங்க குழந்தையை படுக்க போடுங்க. நான் போய் அவனுக்கு குடிக்க பால் எடுத்துட்டு வரேன்” என்றபடி உள்ளே செல்ல,

“இவ்ளோ நேரம் புலம்பிட்டு இருந்தா இப்போ பாருங்க என்னை திட்டிட்டு போறா” என குழந்தையைத் தூக்கி கொண்டு "தம்பி வாங்க,உள்ள வந்துட்டு போங்க" என அவரும் அவர் பின்னோடு நடந்தார்.

இப்போது இருவரும் தனித்து நிற்க, பேசா மடந்தையாய் நின்றவளைக் கண்டவன் முயன்று தன்னை மீட்டு, தன் தோள்களை குலுக்கி சிகை கோதி தன் பிளேஸரை சரி செய்து கொண்டே அவளை திரும்பியும் பாராது காரினை நோக்கிச் செல்ல,

அவன் செல்லவதை உணர்ந்தவள் “இது வேணாமே…” என்றாள்.

நிதானமாய் திரும்பியவன், “எது?” என்றான்.

‘உங்களுக்குத் தெரியும்!’ என்றவள் விழிகள் அவனை காணாது திரும்பிக் கொள்ள,

எந்த நொடியும், ஏன் எந்த சூழலிலும் கூட அவனை ஈர்க்கும் அவள் விழிகள்! அந்த உண்மை தெரிந்ததால் தானோ என்னவோ அவள் விழிகள், அவன் விழிகளைக் காண தயங்கும்.

அதனை புரிந்தது போன்று அவன் தாடிக்குள் கீற்றாய் புன்னகை ஒளிந்து கொண்டது. ஒரு நீண்ட பெருமூச்சினை விட்டவன், இரண்டு எட்டுக்கள் முன்னால் வந்து, “எனக்கு நிறைய தெரியும் ஆனா எனக்கு தெரிஞ்ச எது உங்களுக்கு தெரியணும்?” என்றான்.

அவன் எட்டுகளில் இவள் இரண்டடி பின்னால் நகர்ந்து, “ப்ச்.. நவீன் பாவம்” என்றாள் எங்கோ திரும்பி கொண்டு,

ஏனோ அதுவரை இருந்த உணர்வுகளற்று போய், “ஓ...” என நிறுத்தி அவள் புறம் திரும்பி, "அப்போ அவன்? இப்போ இவனா?யூ... அப்போ நான்?என்றவன் அவளிடம் கோபமாய் நெருங்க, பின் என்ன நினைத்தானோ தன் கரங்கள் கொண்டு காரின் மேல் அவன் குத்திய வேகத்தில் கார் ஒரு முறை குலுங்கி நின்றது. அவனின் கோபத்தின் அளவு தெரிந்தவள் இதயமும் ஒரு முறை துடித்து நின்றது.
 
காதல் :4

வேத் விழிகள் கோபத்தில் அத்தனை சிவந்திருந்தது. இன்னும் சில நொடிகள் அங்கே நின்றிருந்தால் தான் எல்லை மீறுவது நிச்சயம் என எண்ணியவன் முயன்று தன்னை மீட்டு கோபத்தை அடக்கி வீட்டினுள் நுழைந்தான்.

தன் டையினை அவிழ்த்து எறிந்து வீசியபடி உள்ளே நுழைய,
சிபி அவன் வருகையில் எழ, அதனை கூட காணாது இரண்டே எட்டுகளில் அறைக்குள் நுழைந்தவன் பாத்ரூம் சென்று ஷவரின் அடியில் நின்றான். எத்தனை மணித்துளிகள் அப்படியே கரைந்தனவோ அவன் உணரவில்லை!ஏன் உணரும் நிலையில் கூட அவனில்லை!!

கண்களை இறுக்கி மூடி கொண்டான்.அவன் நினைவுகளில் எல்லாம் அவள் முகமே!!எத்தனை முயன்றும் அவளை எட்டி நிறுத்த முடியவில்லை அவனால்.

"சத்யா சத்யா" என சுவற்றில் குத்திக் கொண்டே அவன் கத்திய கத்துக்கள் எல்லாம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

"பாஸ்"என்ற சிபியின் குரலில் மீண்டவன் சுற்றம் உணர்ந்தான். எந்த நொடியிலும் தன்னை மீட்கவும் தன்னிலை இழக்க வைக்கவும் அவளால் மட்டுமே முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதை இருந்தது அவனின் நிலை. ஒரு விரக்தி இதழ் விரிப்பு அவனிடம், மீண்டும் அவனின் செவியில் சிபியின் குரல் கேட்க,

"ஊப்ஸ்" என தலையை உலுக்கியவன் வெளிய வந்து உடை மாற்றி "எஸ்" என கூறியதும் உள்ளே வந்த சிபி "பாஸ்,சேர்மன் கால் பண்ணிருக்காரு, உங்களுக்கு கால் பண்ணாறாம் நீங்க எடுக்கலனு" என தொடங்க,

அவன் சொன்ன நொடி உன் வேலை தானே என்பதை போல் பார்த்து விட்டு "ம்ம்ம்..." என கூற,

இந்த ஒற்றை மொழி பதில் இது அவனின் நேரம் என சொல்லாமல் சொல்ல, சிபி தலையசைப்போடு செல்ல,அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.அவளின் மடி ஏங்கியது அவன் மனம்!!.

அந்த உணர்வை கடக்க முயலாது கண்களை இறுக்க மூடி பின்னால் சாய,அவள் கொடுத்த காயங்களின் சுவடுகளாய் விழிகளில் கண்ணீரின் சாயல்கள்.

அவனை மீட்பது போன்றே, அதே நேரம் அவனின் அலைபேசி தன் இருப்பை உணர்த்த கண்களை திறவாமலே அதனை ஏற்று "டேட்" என பேச தொடங்கினான்.

"வேத் உன்னை டிரைவ் பண்ண கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காருல தென் வோய்?" என்றவரின் குரலுக்கு,

"டேட்" என்றான் மீண்டும்,

மகனின் குரல் மாற்றத்தில் அவனை உணர்ந்த படி "ஆர் யூ ஓகே" என்றார் விஜய் பிரகாஷ்.

"நோ டேட் நோ " என்றவன் "நீங்க அப்படி பண்ணிருக்க கூடாது. டேட் இட்ஸ் ஹர்டிங் மீ அண்ட் யூ டேமிட் இட்ஸ் கில்லிங் மீ டேட்" என கைபேசியை தூக்கி எறிய, சில லட்சங்களை விழுங்கிய கைபேசி சுக்கு நூறாய் சிதறி கிடந்தது.

மகனை பற்றி தெரிந்த விஜய் பிரகாஷ் முகம் யோசனையில் மூழ்கியது. வேத்தை பற்றிய எண்ணங்கள் சுழன்றது. அருகில் இருந்த அவன் புகைப்படத்தை பார்த்தவருக்கு இவன் தன் மகன் என்ற பெருமை எப்போதும் போல் இப்போதும் தோன்ற தான் செய்தது.

வேதாந்த் இந்த நீண்ட சாம்ராஜியத்தின் அரசன் அவன்!!எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எளிதில் கடந்து வரும் சூத்திரதாரி அவன்!!.
வியாபார உலகில் தனக்கே பாடம் சொல்லும் தனயன் அவன்!!

ஆனால் இன்று நிர்கதியாய் நிற்பது போன்றதொரு குரலில் கதறிய அவன் பேச்சை கண்டு தந்தையாய் வலித்த அதே நேரம், தேர்ந்த வியாபாரியாய் அவன் வாழ்க்கையை இனி அவன் சரி செய்து கொள்வான் என எண்ணமே மேலோங்கியது.

ஒரு நீண்ட பெருமூச்சினை விட்டு அவரின் தங்கமூலாம் பூசிய பிரேம்லெஸ் கண்ணாடியினை அணிந்தவர் சிபி அனுப்பிய நிழற் படத்தை மீண்டும் கண்டு அதில் தெரிந்தவற்றை பார்த்து கொண்டே எதிர்புறத்தில் நிழற்படத்தில் தெரிந்த மனைவியின் முகத்தை பார்த்து உன் பையனுக்கு காதல் வந்துடுச்சு என சிரித்து விட்டு, "இது ஸ்டுபிட் பீலிங், ஹம்பக் ஜஸ்ட் அ ஹார்மோனல் ரியாக்ஷன் சொல்லிட்டு இருப்பானே இப்போ அந்த உணர்வு மீள முடியாத காதலா அவனையே மூழ்க வைக்கிற காதலா மாறிட்டு இருக்கு" என்றவர் இதழ்கள் புன்னகை பூத்தது.

தந்தையிடம் பேசியவன் பின் கூட எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுப்படுத்த இயலாதவனுக்கு அந்த அறையே மூச்சு முட்டுவது போலிருக்க, வேகமாய் அவன் மூச்சு காற்று அங்கிருப்பது போன்று திறந்தவெளி பால்கனிக்கு அவன் கால்கள் அவனை இழுத்து சென்றது.அங்கே சென்றதும் அவன் விழிகள் அவனையும் மீறி அவள் புறம் செல்ல,அவன் விட்டு சென்ற இடத்திலேயே சிலை போல் நின்றவளை கண்டு மனதில் ஏதோ ஒரு வித அமைதி படர்வதை உணர முடிந்தது.


அதுவரை இருந்த அலைபாறுதல் எல்லாம் அமைதியடைவது போன்ற உணர்வு அவனுக்குள் எழ,எப்போதும் போல் அந்த நாற்காலியில் அமர்ந்தவன் விழிகள் மட்டும் தூரத்தில் நின்றவளை விட்டு அசையவில்லை.

பெண்ணவளோ ஆணவன் சென்ற நொடி கூட அறியாது அவ்விடமே தேங்கி நின்றாள்.எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பாளோ அவள் அறியாள். வெகுநேரமாய் அவள் வரவில்லை என்பதை பார்த்து வெளியே வந்த ராஜம் தேடி வர,

கொட்டும் பனியில் சிலையாய் நின்றவளை கண்டு "என்ன சத்யா இது? எதுக்கு இந்த கொட்டுற பனில நிற்கிற?"என உள்ளே இழுத்து செல்ல,

அவள் நின்றிருந்த பிம்பம் மறைய அவளை காணாது பரிதவித்தது ஆண் மனம்.

ராஜம் இழுக்க ஒரு பொம்மை போல் உள்ளே வந்தவளுக்கு சுயம் மட்டும் வந்தப்பாடில்லை.

"என்னாச்சு உனக்கு?" என அவள் தோள்களை பற்றி உலுக்க,

"ஹான் " என சுற்றும் முற்றும் பார்த்த படி அருகில் நின்றிருந்த ராஜத்தை கண்டதும் என்ன நினைத்தாளோ அவரை அணைத்து அழ தொடங்க, ராஜம் ஏதோ கேட்க வந்தவரை,

'வேண்டாம்' என்பதாய் தலைசைத்தார் பாலன்.

கொஞ்ச நேரம் அழுதவள் அவள் கண்களை துடைத்து விட்டு கொண்டே "சாரி ராஜம்மா நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்" என்றவளுக்கு கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை

ஏனென்று இருவருமே கேட்கவில்லை,பாலனுக்கு ஏதோ புரிந்தும் புரியாத நிலை, அவரே சென்று அவள் கையில் காபி கோப்பையை திணிக்கவும்,

"அங்கிள்" என்றவள் தடுமாற,

"இதை குடிச்சிட்டு நிம்மதியா தூங்குமா!" என்றவர் "சத்யா மனுஷனோட மனசு கோவில் தான் கூடவே நம்ம மூழ்கடிக்கிற சாத்தானும் அதான். அதை நம்ம எப்படி உருவக படுத்துருமோ அதுவும் அப்படி தான் நம்ம பிரதிபலிக்கும். இப்போ நீ அமைதியா தூங்கு எல்லாம் சீக்கிரம் சரியாகும்" என அவளை விட்டு இருவரும் வெளியே வர,

"தேங்க்ஸ் அங்கிள்" என்றவள் கதவினை பூட்டி விட்டவளின் கண்கள் அவளையும் மீறி அவன் இருக்கும் திசை பக்கம் செல்ல அவன் விழிகள் அவளை தொடர்வது போன்றதொரு பிரம்மை தோன்ற, வேகமாய் கதவினை சாத்தியவள் உள்ளே வந்தாள்.

அங்கே அவளின் படுக்கையில் மகன் உறங்க, அவன் அருகில் படுத்தவளுக்கு தூக்கம் மட்டும் எட்டாக்கனியாய் இருந்தது.

எவ்வளவு முயன்றும் அவன் கூறி சென்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க, விழி மணிகள் உருள, கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட, அதனை துடைக்க கூட தோன்றாது அப்படியே கிடந்தாள்.

'அப்போ அவன்?'என அவன் வீசி சென்ற வார்த்தைகளின் கணத்தை கடக்க முடியாது போனாள்.

எத்தனை எளிதாய் கூறி விட்டான் அந்த வார்த்தையினை,கடந்த காலத்தை கடந்து வெகுதூரம் வந்து விட்டவளை மீண்டும் அந்த சிறைகுள் அடைக்க பார்க்கிறான்.கண்களை மூடி கொள்ள இரு துருவமாய் இருவரின் முகம். ஒருபுறம் ரௌத்திரமாய் வேத் நின்றிருக்க, மறுபுறத்தில் புன்னகை முகமாய் அவன்!!

'நந்தா' என அவளையும் மீறி இதழ்கள் அசைய கண்களை இறுக மூடி கொண்டாள்.

மீண்டும் அவனின் முகம்! தன்னை பாசமாய், காதலாய் பார்த்த அவன் விழிகள்! எல்லாம் அவள் நினைவடுக்குகளில் தோன்ற வேகமாய் எழுந்தவள் தான் பார்க்கவே கூடாது என பத்திர படுத்தியதை எடுத்து அங்கு தெரிந்த முகத்தை பார்த்தாள்.அதில் அவன் விழிகளோடு இதழ்களும் சிரித்த படி நின்றிருந்தான் ரகுநந்தன் அவளுக்கு மட்டும் நந்தா!!!.


அவனை கண்ட நொடி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் தோன்ற, 'நந்தா!!சாரி நந்தா... நான்... நான் தான் எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான் காரணம். சாரி சாரி' என இதழ்கள் முணுமுணுக்க்க அவனை கண்ட நொடி நடந்த அனைத்தும் நிழலாடியது.

குன்னூர் ஊட்டியின் குழுமையை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு சிறிய ஊர். சத்யாவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறக்க, அவளை தன் மகளை போன்றே வளர்த்தனர் அவளின் சித்தப்பா சுவாமிநாதனும் சித்தி தனலக்ஷ்மியும்.அவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் இருக்க அவர்களுடனே வசித்து வந்தாள் சத்யா.

கார்த்திக் கல்லூரியின் இறுதியில் இருக்க, இவளோ பள்ளியின் இறுதியில்!
கோவை பிரதான நகரமாய் இருந்ததால் அவனின் கல்லூரி படிப்பு அங்கிருக்க விடுமுறைக்கு மட்டும் வீடு வருவது அவனின் வாடிக்கையாய் இருக்க, அன்று காலையில் அப்படி தான். கார்த்திக் வேகமாய் கிளம்பி கொண்டிருந்தான்.

"சத்யா என்னடா பண்ற அண்ணா ஷூஸ் எங்க இருக்கு?அவனுக்கு லேட்டாகுதாம்" என்றார் தனம்.

"தனாம்மா அங்க தான் ரேக்ல இருக்கு" என்றவள் பூக்கள் பறித்து கொண்டிருக்க,

"சத்யா உன்னை யாரு என் ஷூஸை எடுக்க சொன்னது?" என்று அங்கு வந்து நின்றான் கார்த்திக்.

"உன்னை யாரு என் ஷூஸ் பக்கத்துல வைக்க சொன்னது" என்றாள்.

"சத்யா" என கத்தியவன் "ஏய் என் பிரண்ட் வந்துருவான் டி எனக்கு எடுத்து கொடு" என்றான்.

"முடியாது அடுத்த வாரமும் வருவேன்னு சொல்லு" என்றாள்.

"சத்யா நெக்ஸ்ட் வீக் ப்ராஜெக்ட் இருக்கு என்னால வர முடியாது"

"ப்ச்... நோ நோ நீ வா டா அண்ணா" என்றாள்.

"சத்யா" என கார்த்திக் கூற,

"நான் கண்டிப்பா கூட்டிட்டு வரேன்" என அவள் அருகில் குரல் கேட்க, சட்டென திரும்பியவள் அவள் வைத்திருந்த பூக்களை அவன் மீதே அர்ச்சித்தவள் கீழே விழ போக, அவளை கைபிடித்து தாங்கினான் ரகுநந்தன்.


"ஏய் பாப்பா" என கார்த்திக் வேகமாய் அருகில் வந்து,"உன்னை என்ன செய்ய?எதையும் பார்த்து பண்ண மாட்ட, சரி அடி எதுவும் பட்டுச்சா" என கை பிடித்து அழைத்து சென்றவன்,பின்னால் திரும்பி "வா டா ரகு" என கூறி விட்டு செல்ல,

"நல்ல மரியாதை தெரிஞ்ச குடும்பம் தான் டா நீங்க" என நந்தா கூற,

"ஆமா பா அப்படி தானே வளர்த்துருக்கேன்" என அவன் பின்னால் வந்தார் கோவையின் பிரபல நிறுவனங்களின் தணிக்கை கணக்காளாரும் கார்த்திக்கின் தகப்பனான சுவாமிநாதன்.

"அங்கிள் நீங்களும் இங்க தான் இருக்கிங்களா" என்றவன் தடுமாற,

'இதென்ன கேள்வி' என்பதை போல் பார்த்தார் சுவாமிநாதன்.

'என்னடா உளறிட்டு இருக்க' என தனக்குள் கேட்ட படி அவரை பார்த்து சிரித்து வைத்தான் ரகுநந்தன்.

"ஆமா உங்க அப்பா எப்படி இருக்காரு? எஸ்டேட் எக்ஸ்போர்ட் டாக்குமெண்ட்ஸ் கேட்டு இருந்தேனே கொடுத்து விட்டாரா"என கேட்க,

"ஆமா ஆமா" என தன் காரில் இருந்தவற்றை எடுக்க சென்றவன் சமீபகாலமாய் சத்யாவை பற்றிய எண்ணங்கள் தன்னுள் விருட்சமாய் வேர் விட்டு வளர்வதை அனுபவித்து கொண்டிருந்தான். அடுத்த ஆண்டு அவனின் மேற்படிப்பும் அவளின் கல்லூரி படிப்பும் தொடங்கியதும் தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவனிருக்க, அவளோ இப்படி ஒருவன் தன்னை நேசிக்கிறான் என்பதை உணராத வளர்ந்த குழந்தையாயிருந்தாள்.

சுவாமிநாதன் தான் அவர்களின் எஸ்டேட்டிற்கும் ஆடிட்டர் என்பதால் அவர் கேட்ட பைலை எடுத்து கொண்டு வீட்டினுள் நுழைய, சத்யா கார்த்திக் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, தனலட்சுமி அவள் காலுக்கு மருந்தினை தடவி கொண்டிருந்தார்.

"என்னடா சத்யா வேலையை பார்த்து பண்ண மாட்ட ஏன் டா இப்படி பண்ற?" என்றவர் கடிந்து கொள்ள,

"அச்சோ அப்பா எனக்கு ஒண்ணுமில்ல கார்த்திக் தான் இப்படி பண்றான்" என்றாள்.

"ஏதேய்" என கார்த்திக் அதிர,

"ஆமா டா அண்ணா" என்றாள் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு,

"உனக்காக நான் காலேஜ் கூட போகாம உக்காந்துருக்கேன் ஆனா நீ போடி" என அவள் காலினை தள்ளி விட்டு செல்ல, அவன் பின்னால் குழந்தையாய் ஓடினாள் சத்யா. அதனை காதலாய் ரசித்துக் கொண்டிருந்தன நந்தாவின் விழிகள்.
 
காதல்:5


கோவையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் தன் இளநிலை படிப்பில் சத்யா சேர, கார்த்திக் மற்றும் நந்தா இருவரும் தன் என்ஜினீயரிங் துறையில் முதுநிலை படிப்பின் இறுதியில் இருந்தனர்.அவள் கல்லூரியில் சேர்ந்தது முதல் அவளை காண்பது நந்தாவிற்கு அரிதாய் இருக்க,

காலையில் கார்த்தியிடம் பேசும் போது எப்போதும் போல் சலசலத்து பேசும் அவள் குரல் கொஞ்சும் சலங்கையாய் அவன் காதில் எதிரொலித்தது.


வெகுநாட்களுக்கு பின் அவளின் குரலை மட்டுமே கேட்ட அவனின் காதல் கொண்ட மனது அவளை காண வேண்டும் என சண்டிதனம் செய்ய,என்ன சொல்லி அவளை பார்ப்பது என யோசிக்க தொடங்கினான்.அவள் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே அவளை காணாது ஆணவன் தவித்து விட்டான். இத்தனை தூரம் தன்னை ஈர்த்து இருக்கிறாள் என்பதை அவனே உணர்ந்த தருணம் அது!!ஒவ்வொரு நாளும் அவளை காணும் சந்தர்ப்பத்திற்காக ஏங்கி கொண்டிருந்தான்.


எப்படி அவளை பார்ப்பது என்று புரியாது அங்கும் இங்கும் நடக்க,அவன் அம்மா அருகில் வந்து "என்ன தம்பி எதுக்கு இந்த நடை, போய் ரெஸ்ட் எடுப்பு" என்றாள்.

"ம்ம்ம்...."என்றவன் நகர்ந்து உள்ளே செல்ல விழைய அவன் தந்தை வந்து கொண்டிருந்தார்.

"ஏனுங்க என்ன அதுக்குள்ளையும் வந்துட்டீங்க? ஆடிட்டரை பார்க்கலையா" என அவன் அம்மா கேட்க,

'ஓ... அப்பா அங்க தான் போயிட்டு வராரா' என எண்ணிய படி தன் அலைபேசியை பார்த்துக் கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

"நான் தான் போன் போட்டு போறேன் சொல்றேன் சொன்னேன்ல, இப்போ பாரு அங்கின ஆரும் இல்லை அவரு பொண்ணை தவிர பின்ன என்ன செய்ய அதான் வந்திட்டேன்" என்றவர் கூறிய படி அமர்ந்து கொண்டார்.

"என்ன சொல்றிங்க? அவருக்கு தான் பொண்ணே இல்லையே"என புரியாது கேட்க,

"இது அவரு அண்ணன் பொண்ணு அவரும் ஆடிட்டரா இருந்தவர் தான். இந்த பொண்ணு பொறந்த கொஞ்ச வருஷத்தில அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடென்ட்ல செத்துட்டாங்க அதுக்கு அப்புறம் சுவாமிநாதன் தான் வளர்க்குறாரு. இப்போ அதுவும் ஆடிட்டர்க்கு தான் படிக்குதாம்" என முடிக்க,

"அப்படியா,என்ன படிச்சு என்ன? பெத்தவங்கள ஒரே நேரத்தில முழுங்கிருக்கா என்ன ராசியோ என்னவோ" என சொல்லி கொண்டே உள்ளே செல்ல,

"இவ ஒருத்தி எதுனா சொல்லனும்னு சொல்லிட்டு இருக்கா, அந்த பொண்ணு அறிவுக்கும் அழகுக்கும் அவிங்க இருந்து பார்க்கலனு போவியா, இதுல அந்த புள்ளைய குறை சொல்லிட்டு இருக்கா. ஏன்டா ரகு நீயாவது உங்க அம்மாகிட்ட எடுத்து சொல்ல கூடாது எப்போ பாரு ராசி ஜோசியம்னு எதுனா சொல்லி புலம்பிகிட்டு கிடக்கா"என நந்தாவின் தந்தை சொல்லி செல்ல,

அது எதுவும் காதில் ஏறாத நந்தாவின் மனதோ செக்கிலிட்ட மாடாய் அவளிடம் சுத்தியது.

அவளின் பள்ளி இறுதி முடிவு வந்ததும் அதிக மதிப்பெண்கள் எடுத்தும்,அவள் விரும்பி எடுத்தது ஆடிட்டர் சமந்தபட்ட படிப்பே,அதிலும் அவளின் பிடிவாதம் அவனே எதிர்பாரா ஒன்று! முகம் சுருக்கி அவள் நின்ற தோற்றம் இன்னும் அவன் முன்னால். அதற்கு மேல் அவனால் வீட்டில் இருக்க முடியாது போக,

"மா நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்" என்றவன் எத்தனை விரைவில் அந்த வழித்தடத்தை கடக்க முடியுமோ அத்தனை விரைவில் வந்து சேர்ந்தான்.

வீடு வரை வந்தவனுக்கு அதற்கு மேல் செல்ல கால்கள் சண்டிதனம் செய்தது.கேட்டினை திறந்ததும் அவனை வரவேற்றது அவளின் ஊஞ்சல், அதனை தடவிய படி உள்ளே வந்தவன் 'நந்தா இன்னைக்கு சொல்லலை பின்ன எப்போவும் சொல்ல முடியாதுடா கம் ஆன் மேன்' என தன்னையே திடப்படுத்தி கொண்டு அழைப்பு மணியை அழுத்தினான்.

"யாரு?" என்றாள்.

என்ன பதில் சொல்வது என புரியாது நின்றவனை கேமரா வழியே கண்டு கதவினை திறக்க,ஒரு லாங் ஸ்கர்ட் அதற்கு மேல் பூக்களை தெளித்தது போன்ற மேல் சட்டை தூக்கி கட்டிய எண்ணெய் வழிந்தோடிய கொண்டை, அங்கே அங்கே அவளின் கார்கூந்தலின் சிலும்பகளால் முகத்திலும் எண்ணெய் வழிய நின்றிருந்தவளை கண்டதும் துள்ளிக் குதித்த மனதை அடக்கி 'கொஞ்ச நாள்ல இம்புட்டு அழகா மாறிட்டாளே' என உள்ளே நுழைந்தவன் தடுக்கி விழ போக,"ஆ "என நிமிர,

"என்னாச்சு? " என்றாள் வேகமாய்


"ஓ... ஒண்ணுமில்ல கா... கார்த்திக் இல்லையா" என உள்ளே வர,

"அண்ணா அப்பா அம்மா எல்லாம் வெளிய போயிருக்காங்க. இப்போ வந்துடுவாங்க"என்றாள்.

"என்ன இப்போ வந்துடுவாங்களா?" என்றான் அதிர்வாய்,

'என்ன சொல்கிறான் இவன்!' என பெண்ணவள் புரியாது புருவம் உயர,

'ஆஹா டேய் நந்தா அவ ஓவர் ஸ்மார்ட் டா உளறாத' என தனக்குள்ளே சொல்லி கொண்டே "இல்லை கோயம்பத்தூர் போய்ட்டு எதுக்கு இவ்ளோ சீக்கிரமா வரணும்" என கூற,

"அப்போ அண்ணா இல்லாதது தெரியுமா உங்களுக்கு?" என்றாள்.

'போச்சு டா இப்போ என்ன சொல்லி சமாளிப்ப' என முழித்து விட்டு "காலையில போன் பேசும் போது சொன்னான்" என அவனே முடித்தும் வைத்தான்.

'அப்புறம் ஏன் வந்தாய்?' என சத்யா பார்க்கவும்,

"ப்ச்.. ஏதோ தெரியாம வந்துட்டேன் மா. சும்மா துருவி துருவி கேள்வி கேட்காம கொஞ்சம் தண்ணீ கொடு குடிச்சிட்டு போறேன்" என்றான் வேகமாய்,

'தண்ணீர் குடிக்கவா இவ்வளவு தூரம் வந்தான்' என்பது போல் காணவும்,

"ம்ம்ம்...ஊட்டியை விட இங்க குன்னூர்ல தண்ணி நல்லா இருக்கும்னு எங்க பாட்டி சொன்னுச்சு அதான் இங்க வந்தேன்" என்றான் என்ன பேசுவது என புரியாது உளறி கொட்ட,

அதுவரை அவன் தடுமாற்றத்தை பார்த்து கொண்டிருந்தவள். எப்போதும் அவனின் குறும்புகளை கண்டு ரசிப்பவள் தான் என்பதால் அவனின் பேச்சில் தன்னையும் மீறி சிரித்து விட,

அவன் பேச்சுகள் எல்லாம் அப்படியே நின்றது.அவளின் சிரிப்பில் தன்னிலை இழந்தவன் அவளை பார்த்த படி நிற்க, அவனை கலைத்தது பெண்ணவளின் அலைபேசி. ஸ்தம்பித்த அவன் நிலையை கண்டவள் அலைபேசியை ஏற்று "சொல்லு டா அண்ணா" என்றாள்.

அவளின் பேச்சில் தெளிந்தவன் 'அச்சோ கார்த்திக் பேசுறான் போலவே இப்போ என்ன கேட்பான் தெரியலயே எதுக்கும் அலெர்ட் ஆயிடுடா நந்தா' என முனக,அந்த பக்கம் என்ன கேட்க பட்டதோ "ம்ம்ம்... சாப்பிட்டேன்" என்றவள் "டேய் அண்ணா உன்னை தேடி நந்தா அண் "என தொடங்கியவளின் இதழ்களை கை கொண்டு மூட, பெண்ணவளுக்கு ஸ்தம்பித்த நிலை தான்.

"சத்யா" என கார்த்திக்கின் குரல் எதிரொலிக்க, அதனை பிடுங்கி அப்படியே நிறுத்தியவனை கண்டு முறைத்தாள்.

'என்ன சொல்ல வந்தாள்' என எண்ணியவனுக்கு எங்கியிருந்து தான் இத்தனை தைரியம் வந்தது என்பதே தெரியவில்லை.முதல் முறை தன்னவளின் ஸ்பரிசம் உணர்ந்து அனுபவிக்க,அவன் வாயினை மூடிய நொடி அவளுக்குமே ஒன்றும் புரியாத நிலை தான்.விழிகள் மருக அவள் விழிக்க,

அவள் கலங்கிய விழிகளை கண்டவன் கைகளை எடுத்தான்.

"எ... என்ன செஞ்சிங்க இப்போ?" என்றாள்.

அவளின் குரலில் மெல்ல நிதானத்துக்கு வந்தான் நந்தா. பெண்ணவள் முகம் பார்த்தான் "ப்ச்... சத்யா நத்திங் ஜஸ்ட் ரிலாக்ஸ் " என்றவன் தன்னை நிதானப்படுத்தி கொள்ள "கொஞ்சம் தண்ணீர் கொடு" என்றான்.

சத்யா அவனை முறைத்து பார்க்க,

"சத்யா உண்மையிலே தண்ணீர் வேணும்மா" என்றான் பாவமாய்,

எத்தனை முயன்றும் அவனை தவறாக நினைக்க முடியாது போக,"ம்ம்ம்..." என்றவள் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல,

'என்ன இவ நம்மள இப்படி பார்த்திட்டு போறா ஏதோ பத்து பேர ரேப் பண்ணிட்டு பதினோன்னா இவள பார்க்க வந்த மாதிரி, ஏன்டா நந்தா உன் மூஞ்சி அப்பிடியா இருக்கு' என எதிர்புறம் கண்ணாடியில் தன்னை பார்த்தான். ஒரு நீல நிற பேண்ட் வெண்மை நிற சட்டை, அலையாய் அவன் நெற்றியில் படர்ந்த கேசம் என ஒருமுறை தன்னையே ரசித்தவன் 'நல்லா தானே இருக்க பின்ன ஏன் இவ இப்படி பார்த்து வைக்கிறா?' என புலம்பிய படி திரும்ப,


அவன் செய்யகையை பார்த்து கொண்டே வந்தவள் கையில் இருந்த தண்ணீரை கொடுக்க,

"கோடான கோடி நன்றிகள்" என அதனை வேகமாய் குடிக்கவும், புரை ஏற இருமியவன் "நான் வீட்டுக்கு ஒரே பையன்" என்றான் இருமி கொண்டே,

'அதுக்கு' என்றதொரு பார்வை,

"திட்டும் போது சத்தமா திட்டு மா, நீ பாட்டுக்கு சைலன்ட்டா திட்ற" என்றவன் "எனக்கு உன் அண்ணன் வீட்ல இல்லாதது தெரியும்" என்றான்.

'பின்ன ஏன் வந்தாய்?' என பெண்ணவள் பார்க்க,

"ம்ம்ம்..." என தொடங்கியவன் "இந்த ஜென்மத்துல நீ லவ்க்கு செட்டாக மாட்ட போல டா நந்தா" என தனக்குள்ளே முனங்கிய படி "என்ன படிக்கிற சத்யா?" என்றான்.

அவனை முறைத்து கொண்டே "பி. காம் ரெண்டாவது வருஷம்" என்றாள்.

"ம்ம்ம்... அடுத்த வருஷம் படிப்பு முடிஞ்சிடும் இல்லையா "

"பின்ன சி. ஏ படிக்கணும்" என்றாள்.

"தெரியும் தெரியும்" என்றவன் "சத்யா" என்றான்.

அவன் முகம் பார்த்தாள் முகத்தில் வியர்வை வழிய,நா வரண்டு "ஐ" என அவன் இதழ் பிரியும் நேரம் அவளின் கைபேசி ஒலிக்க,

"ஊப்ஸ் "என மூச்சை விட்டு அலைபேசியை இருவருமே காண, கார்த்திக் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.


அவள் எடுக்கும் முன் அதனை ஏற்ற நந்தா காதில் வைக்க,

"பாப்பா கட்டாயிடுச்சுடா என்னவோ சொல்ல வந்தியே?" என்றான் கார்த்திக்.

"நான் வந்திருக்கேன்னு சொல்ல வந்தாடா, நீ எப்ப வருவ?" என்றவன் பார்வை முழுதும் எதிர்புறம் நின்ற பெண்ணிடமே!

"உன்கிட்ட காலையில சொல்லிட்டு தானடா வந்தேன். இப்போ நீ வீட்டுக்கு வந்துருக்க?" என்றான் கேள்வியாய்,

"ஏப்பா தெரியாம வந்துட்டேன் டா, எல்லாரும் ஒரே கேள்வியை கேட்காதீங்க டா பதில் சொல்ல எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?" என பொரிய தொடங்க,

"என்னடா உளர?" என்றான் புரியாமல் கார்த்திக்.

"உளறேன்ல்ல ம்ம்ம்... சும்மா இந்த பக்கமா வந்தேன்டா, நீ இல்லைன்றதை மறந்துட்டு இங்க வந்துட்டேன் போதுமா!" என அவள் கையில் அலைபேசியை திணித்துவிட்டு புலம்பியபடி வெளியே சென்றான்.புலம்பியபடி சென்றவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

நாட்கள் வேகமாய் நகர, கார்த்திக் கேம்பஸில் தேர்வாகி இருக்க, நந்தாவோ அவர்களின் எஸ்டேட் மற்றும் தொழில்களை பார்த்து கொள்ள எந்த வேலையும் ஏற்காமல் இருந்தான்.

இறுதி ஆண்டின் தொடக்கத்தில் பெண்ணவள் இருக்க, கையில் புத்தகத்தையும் தட்டில் பழங்களுடன் வந்தவள் "டேய் அண்ணா என்ன படிக்கிற?" என அவளும் அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.

"ப்ச்.. டிஸ்டர்ப் பண்ணாத சத்யா" என தீவிரமாய் படித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"என்னத்த தான் மாஞ்சி மாஞ்சி படிக்கிற?" என அந்த அட்டை படத்தை பார்த்தவள் "தி பிஸிஸனஸ் வேர்ல்ட் " என எழுதியிருக்க,

"ஏன் உனக்கும் பிசினஸ் பண்ற எண்ணம் வந்துருச்சா?" என்றாள் பழங்களைத் தின்று கொண்டே காலை ஆட்டியபடி,

"சத்யா காலை ஆட்டாத" என்ற தனலட்சுமியின் குரலில்,

கார்த்திக் மேலே காலை போட்டுக்கொண்டு மீண்டும் பழங்களை உண்ணத் தொடங்கினாள்.

வெகுநேரமாய் படித்தவன் "வாழ்ந்தா இவனை போல ராஜாவா வாழனும்" என்றான் பெருமூச்சுடன்,

"யாரை போல? "என்றாள் சத்யா கேள்வியாய்,

"இந்த வேதாந்த் போல தான்"

"அது யாரு?" என்றாள் புரியாமல்,

"ம்ம்ம்... தி பிஸனஸ் டைக்கூன் விஜய் பிரகாஷோட ஒன்லி சன்" என்றான் கார்த்திக்.

"யார் அந்த விஜய்?" என சத்யா தொடங்க,

"அவர் யாருன்னு கேட்கிற அதானே!" என கார்த்திக் கேட்க,


"ஆமாம்" என்பதாய் வேகமாய் தலையாட்டினாள் சத்யா.

"லண்டன்ல இருக்க என். ஆர். ஐ பிஸ்னஸ்மேன் அண்ட் அவங்க இன்வால்வ் ஆகாத துறையே இல்லைனு சொல்லலாம்.நானே அவங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணிருக்கேன் "என்றான்.


"ஓகே... இதுல நீ சொன்ன சோ... அண்ட் சோ எங்க வரார்? "என்றாள்.

"ஓ... அவரா?" என சிரித்த கார்த்திக் "அவர் பேரு வேதாந்த் சத்யா" என்றான்.

"அவரு எவரா வேணா இருந்துட்டு போகட்டும்,அதுக்கு நீயே பெருமூச்சு விட்டுட்டு இருக்க,பணக்கார ஸ்பயில் கிட்டா அப்பா காசுல சாப்பிடுறவன் எல்லாம் என்ன புள்ளையோ! "என சத்யா தொடங்க,

"ஷ்ஷ்... நோ நோ அவரும் பெரிய மண்டை தான் போல, அவரு அவங்க கம்பெனில பொறுப்பு ஏத்த உடனே அவரோட சென்செக்ஸ் ட்ரேட் ரேட் வந்து எங்கேயோ போயிட்டு இருக்கு. யூ நோ அந்த ரேட்ட மத்த கம்பெனிஸ் ரீச்சாக கண்டிப்பா அவங்களுக்கு ஒன்றிலிருந்து ரெண்டு வருஷம் ஆகும் .அந்த அளவுக்கு கொண்டு போய் டாப்ல நிறுத்தி இருக்காரு. அதை அவங்க அப்பாவே சொல்றாரு இன்னும் சொல்ல போனா ஹீ வாஸ் ஆல்ரெடி இன் இந்தியன் மார்க்கெட்" என வேதாந்த் புகழ் பாடி முடிக்கும் நேரம் நந்தா வேகமாய் வந்தான்.வியர்வை வழிய வந்தவனை கண்டு இருவரும் முழிக்க,

"ஏன்டா இப்படி வந்துருக்க?" என்றான் கார்த்திக்.

"நானே ஆத்திர ஆத்திரமா வந்திருக்கேன் நீ வேற ஏதாவது பேசி என்னை குழப்பாத" என்றான் தீவிர முகப்பாவனையில்,

"ஏதேய் ஆத்திர ஆத்திரமா வா என்ன டா சொல்ற?",

"ச்சே அவசர அவசரமா டா" என்றான் நந்தா.

அவன் பேச்சில் சத்யா சிரிக்கவும்,

அவளைப் பார்த்துக் கொண்டே "சிரிச்சாச்சா முடிஞ்சிடுச்சில்ல போய் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வர முடியுமா" என்றான் நந்தா.

"ம்ம்ம்.. " என சிரித்து கொண்டே உள்ளே செல்ல,

"சரி எதுக்கு ஆத்திர ஆத்திரமா வந்த?" என்றான் சிரித்துக் கொண்டே கார்த்திக்.

"டேய் என்னை கொலைகாரன் ஆக்காத உன்கிட்ட கொஞ்சம் பேசணும் முதல்ல நீ வா" என்றான்.

"இப்பவா!"

"பின்ன அதுக்கு தானே" என நந்தா தொடங்க,

"நீ ஆத்திர ஆத்திரமாய் கிளம்பி வந்திருக்க அதானே!" என்றவனை நந்தா பின்னால் துரத்த வேகமாய் தன்னறைக்கு சென்று கதவை அடித்து சாத்தினான்.

"டேய் கார்த்திக் முதல்ல ஒழுங்கா கதவ திற இல்ல" என நந்தா தொடங்க,

"நீ தானே பேசணும்னு சொன்ன அதான் டா டிரஸ் மாத்திட்டு இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு " என்றான்.

"ம்ம்ம்.. " என அங்கும் இங்கும் நந்தா நடக்க தொண்டையை செருமியபடி "தண்ணீர்" என்றாள் சத்யா.

அதனை வாங்கி அவளைப் பருகிக் கொண்டே தண்ணீரை குடித்து முடித்தான் நந்தா.

அதனை வாங்கியவள் மீண்டும் ஊஞ்சலில் அமர அதில் கார்த்திக் விட்டு சென்ற இதழ் கிடக்க,

அதனை அவள் திறக்க, கார்த்திக்கும் நந்தாவும் வெளியில் வரும் ஓசை கேட்கவும் அவர்கள் இருவரையும் காணத் திரும்பினாள்.

"சத்யா அப்பா வந்தா சொல்லிடு நான் நந்தா கூட வெளிய போயிருக்கேன்னு" என்று கார்த்திக் தலையசைத்து வெளியே செல்ல,

நந்தாவோ 'இன்னைக்கு உங்க அண்ணன் கிட்ட நம்ம காதலை பத்தி சொல்ல போறேன்.அதுக்கு அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான் தெரியல, ப்ச் அதை விடு அவனை எப்படி நேருக்கு நேர் பார்த்து சொல்ல போறேன்னு கூட தெரியல. அதுக்கும் சேர்த்து எனக்கு தைரியம் சொல்லுடி' என அவளை உள்ளத்தில் ரசித்துக்கொண்டே வெளியே சென்றான்.

அவர்கள் சென்றதும் மீண்டும் அந்த இதழை பிரித்தவள் அதில் இருந்த படங்களை பார்க்க,

'இது என்ன இந்த புக்ல பாதிக்கு மேல் அவங்கள பத்தியே போட்டுருக்கு' என ஒவ்வொரு பக்கமாய் அவர்கள் தொடும் உயரத்தையும் வளர்ச்சியையும் வேதாந்தை பற்றிய புகழுறையுமே கண்டவள் "போதும் போதும்ங்குற அளவுக்கு போட்டு இருக்காங்கப்பா" என அடுத்த பக்கம் திருப்ப,

அதில் நீச்சல் குளம் ஒன்றில் பெண்கள் சூழ கால்சிராய் மட்டும் அணிந்து ஆறடி உயரத்தில் அவன் அதில் ஒருத்திக்கு இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுத்தபடி நின்றிருந்தான் வேதாந்த். கீழே அதற்கு தலைப்பாய் வேதாந்தின் திருவிளையாடல் என கொடுத்திருக்க,

"ச்சே... என்ன பிசினஸ்ல டைக்கூனா இருந்து என்ன? கேரக்டர் இவ்வளவு மோசமா இருக்கு, ஏதோ கோபியர்களுக்கு நடுவே இருக்க கிருஷ்ணா மாதிரி"என அந்த புத்தகத்தை தூக்கி ஏறிய அதில் அட்டை படத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் வேதாந்த் விஜய் பிரகாஷ்.
 
காதல் :6

தி பிசினஸ் வேர்ல்ட் பிரதியை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தார் விஜய் பிரகாஷ். மகனின் பராக்கிரமங்களை எல்லாம் படிக்கும் போது இவன் தன் மகன் என்ற கர்வம் மேலோங்கி படித்துக் கொண்டிருக்க, கூடவே இவருடைய நேர்காணல் நிகழ்வையும் திறம்பட எழுதியிருந்தார் பேட்டி கண்டவர் "நைஸ் நல்லா தான் கவர் அப் பண்ணியிருக்கான்" என அனைத்தையும் வாசித்தவர் இறுதியாய் இருந்த வேத்தின் புகைப்படம் அதில் இருந்த தலைப்பை கண்ட அவருக்குமே சற்று நெருடல் தான்.

லண்டன் போன்ற நாடுகளில் இரவு நேர கேளிக்கைகள் தவிர்க்க முடியாத ஒன்றுதான் , அதுவும் தொழில் வட்டாரத்தில் முக்கிய புள்ளியானவர்களுக்கு சொல்லவே வேண்டாம். சில ரகசிய ஒப்பந்தங்கள் அனைத்துமே இந்த இரவு நேர கேளிக்கைகளில் முடிவு செய்வது தான். அதனை ஒரு தேர்ந்த வியாபாரியாய் உணர்ந்தாலும் ஒரு தந்தையாய் வேத்தின் இந்த அசுர வளர்ச்சி அவரையே மிரள செய்தது.எந்த நொடியிலும் அவனின் முடிவுகள் எல்லாம் அசாத்தியமான விளைவுகளை கொடுக்க அவை அனைத்தும் தொழில் வட்டாரத்தில் அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை.வேத்தை பற்றிய சிந்தனையிலே உழன்றவரை கலைத்தது அவனின் ப்ரத்யேக காரின் ஒலி, நேரத்தை பார்த்தார் விடியலின் தொடக்கம் இது!அவனின் வளர்ச்சியில் அவருக்கு உண்டாகும் பெருமை, அவனின் பழக்கவழக்கங்களை கண்டு மனது சோர்ந்து போகும்.

வேத் வேகமாய் உள்ளே வர அவன் பின்னால் சிபி வந்து கொண்டிருந்தான்.

வேத் வரும் வழியிலேயே சில ஆணைகளை சிபிக்கு பிறப்பித்த படி வந்து கொண்டிருந்தான்.

சிபி "ஐ ஆம் டையர்ட் நவ் நாளைக்கு என்னென்ன அப்பாயின்மென்ட் இருக்கோ அதை ஸ்கெடுயூல் பண்ணிடு. தென் சவுத் இந்தியால பிசினஸ் செட் அப்க்கு ம்ம்ம் சென்னை வேண்டாம் கோயம்பத்தூரை டார்கெட் பண்ண சொல்லு, ஏற்கனவே அது தொழில் வளர்ச்சி உள்ள ஏரியா தான் இட்ஸ் ஒர்க்ஸ். தென் நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு மெசேஜ் பண்ணிடு குட் நைட்" என செல்ல முயல,

விஜய் பிரகாஷ் வரவேற்பறையில் நிற்பதை பார்த்ததும் தன்னறைக்கு உள்ளே செல்ல லிபிட்டின் பொத்தானை தொட சென்றவன் மீண்டும் தந்தை அருகில் வந்து "டேட் நீங்க தூங்கலையா?" என கேட்க,

"உனக்காக தான் வெயிட் பண்றேன் வேத்" என்றார்.

"வாட் எனக்கா? பட் வோய்?" என்றான்.


"வேத் நீ வீட்டுக்கு வர டைமா இது?" என்றார் சற்று கோபமாய்,


"டேட் நான் ஒன்னும் ஸ்கூல் கோயிங் கிட் கிடையாது. டோன்ட் பிஹேவ் லைக் திஸ்" என்றான் கோபமாய்,

"வேத் என்னதான் லண்டன்ல இருந்தாலும் நம்ம வேர் டிபிக்கல் இந்தியன் கல்ச்சர் தான்" என கூற,


"ப்ச்... டேட் ஜஸ்ட் அ ட்ரிங்க் "என்றான்.

"சோசியல் ட்ரிங்க்ஸ் எல்லாம் சரி தான் ஆனா அதுக்கு பின்னால?"என நிறுத்த,

அவர் எதை சொல்ல வருகிறார் என புரிந்து "டேட்" என வேத் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

"வேத் சிரிக்காத ஐ ஆம் சீரியஸ்" என கூறவும்,

"ஊப்ஸ் சிபி" என்ற குரலில்,

"எஸ் பாஸ் "என்றவன் வேகமாய் சென்று குளிர்சாதன பெட்டியில் உள்ள ட்ரிங்ஸை எடுத்து வந்து கொடுக்க,

"டேட் டேக் இட்" என அவர் கையில் ஒன்றை கொடுத்தவன் "வாட்ஸ் யுவர் ப்ரோப்ளம் அதை சொல்லுங்க" என்றான் நிதானமாய்,

வேத் எப்படி சொல்வது, தன் தோளுக்கு மேல் வளர்ந்தாலும் சில விஷயங்கள் அவனிடம் சொல்ல முடியாது போக, "வேத்" என தொடங்க முடியாது நின்றவரை கண்டு,

"டேட் இதென்ன ஏதோ பழைய இந்தியன் பிலிம்ல வர மாதிரி தயங்கி நின்னுட்டுருக்கிங்க" என சிரிக்க தொடங்க,

"வேத் ஜஸ்ட் ஸ்டாப்" என கையிலிருந்த பிரதியை காட்டி "பாரு உன்ன பத்தி எப்படி எழுதி இருக்காங்கனு" என கொடுக்க,

"ம்ம்ம்... வாட்ஸ் திஸ்"என்றான் புருவம் சுருக்கி,

"பாஸ் இது இந்தியால வர ஒரு பிசினஸ் வேர்ல்ட் புக் லாஸ்ட் மந்த் இன்டெர்வியூ வந்தானே ஒருத்தன்"என சிபி சொல்லவும்,

"எஸ்... "என ஒருமுறை திருப்பி பார்த்தவன் "நாட் பேட்" என சொல்லி அந்த இதழை தூக்கி போட்டவன் "டேட்" என அழைக்க,

'என்ன 'என்பதாய் திரும்பிப் பார்த்தார்.

"நீங்க என்கிட்ட என்ன சொல்ல வரீங்க? நான் பொண்ணுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதை பத்தியா"என கேட்க,

விஜய் பிரகாஷ் சிரித்தபடியே அவன் தோளில் தட்டி "உனக்கு ஒரு பொண்ணு மேலே இஷ்டம் இருந்துச்சுன்னா சொல்லு கல்யாணம் பண்ணிக்கோ இல்லை டேட்டிங் பண்ணிக்கோ லைப்பை என்ஜோய் பண்ணு பட் அதை விட்டுட்டு இப்படி டெய்லி "என கூற,

"டேட், டேட்" என சிரித்துவிட்டு "சிபி"என அழைத்தான்.

"பாஸ்!"

"இன்னைக்கு எவளோ கொடுத்தோம் தட் கேர்ள் வாட்ஸ் ஹேர் நேம்?"என்றான்.

"டீ... டினா பாஸ் "என சிபி விஜய் பிரகாஷை பார்த்து கொண்டே கூற,

"யா... டினா "என சிரித்து விட்டு "டேட் ஜஸ்ட் சம் பவுண்ட்ஸ் அவளோ தான்.மேட்டர் முடிஞ்சது இதுக்கு போய் லவ் டேட்டிங் மேரேஜ்ன்னு கமிட்மென்ட்ஸ்ல மாட்டிக்க சொல்றிங்க" என தோள்களை குலுக்க,


"வேத் லைப் இஸ் பூல் ஆப் கமிட்மென்ட்ஸ்" என கூற,"ப்ச்..டேட் உங்களுக்கு புரியல,யூ நோ உங்களுக்கு மார்னிங் எந்திரிச்சா கண்டிப்பா ஒரு காபி வேணும் ரைட் அண்ட் எப்படியும் நைட் சம் ட்ரிங்க்ஸ் இல்லையா அது போல ஐ நீட் அ கேர்ள்ஸ் அது எனக்காக இல்லை என்னோட ஹார்மோன்ஸ்க்காக" என கண்களை சிமிட்டியவன் விஜய் பிரகாஷ் அருகில் வந்து "டேட் நான் உங்களுக்கு பிரீ அட்வைஸ் சொல்லவா" என கேட்க,

'என்ன' என்பது போல் காண,

"ஒரு பையனா ஐ நோ தெ பீலிங்ஸ் ஆப் மேன் ஓகே. உங்களுக்கும் அந்த பீல் இருக்கும் ரைட், அண்ட் நவ் யூ கெட் சம் கேர்ள்ஸ் என்ஜோய், யூ ஆர் லூக்கிங் ஸ்டில் யங் என்ன சொல்றிங்க?" என்றான்.

"வேத்" என முறைக்க,

"டேட் கம் ஆன் நீங்க உங்க லைஃப் ரொம்ப போரீங்கா ஹாண்டில் பண்றீங்க, நல்லா சாம்பாரிக்கனும் அது நம்ம தேவைக்கு,தென் வீ லீவ் ஃபார் அஸ் அது தான் லைப்.இங்க வாங்க லைஃப் என்ஜாய் பண்றதுக்கு ஐ வில் கிவ் சம் டிப்ஸ் மெல்ல அவர் காதில் அருகில் வந்து கொஞ்சம் சேஃப்டியாவே" என சிரிக்க,

விஜய் பிரகாஷ் முறைக்க வந்தவர் அவரையும் மீறி சிரித்து விட "ஓகே நீ போய் தூங்கு" என அனுப்பி வைத்து விட்டு செல்லும் மகனிடம்" வேத் "என அழைக்க,

வேகமாய் சென்றவன் நிதானமாய் திரும்ப, அவன் அருகில் வந்தவர்" நீ சொன்ன பீலிங் எல்லாம் உங்க அம்மாவோட போய்டுச்சு" என கூற,

ஏதோ கூற வந்தவனை தடுத்தவர் "வேத் என்னோட எமோஷன்ஸ் என்னோட மூளையில இல்லை மனசுல இருக்கு.நீ சொன்ன எமோஷனுக்கு பேரு லஸ்ட்(காமம்) நான் சொல்ற எமோஷனுக்கு பேரு லவ்(காதல்) அது எப்போவும் நம்மோட ஆன்மா கூட கலந்தவங்களோட மட்டுமே கலக்க முடியும்.நான் உங்க அம்மா கூட கலந்த மாதிரி. அது டிவைன்(தெய்விகம் ). உனக்கு இப்போ புரியாது. ஏன்னா உனக்கு காதலோட உணர்வுகள் புரியல அது புரியும் போது உன்னால நினைச்சாலும் யூ காண்ட் ஷேர் யுவர் பெட் வித் அதர்ஸ்.அது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னால மீள முடியாத உணர்வா இருக்கும் உன்ன மூழ்கடிக்கிற உணர்வா இருக்கும் "என கூற,

"டேட் "என சிரித்தவன் "போதும் உங்க பிலாசபி நீங்க எந்த உலகத்துல இருக்கிங்க டிவைன் அது இதுன்னு" என சிரிக்க தொடங்க,

தந்தையின் முகத்தை கண்டதும் சிரிப்பை கட்டு படுத்த முயல மீண்டும் முடியாது சத்தமாய் சிரித்து கொண்டே அறைக்குள் செல்லும் மகனை ஒரு வித இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் பிரகாஷ்.

ஊட்டியின் குறுக்கு வழி சாலை அது,ஒரு நான்கு சக்கர வாகனம் அவர்களை தாண்டி சத்தத்தோடு செல்ல, அதை உணரும் நிலையில் கூட நந்தா இல்லை, வெகுநேரமாய் அமைதியாய் நின்றிருந்தான்.

கார்த்திக் எதுவும் புரியாது நண்பனை காண,

அவனோ கண்களை மூடி காரில் சாய்ந்த படி நின்றிருந்தான்.

"நந்தா" எனக் கார்த்திக் அழைக்க,

'என்ன' என்பதாய் பார்த்தான்.

"ஏன்டா இப்படி ஒரு மணி நேரமா ரோட்ல நிக்கவா அப்படி ஆத்திர ஆத்திரமாய் வந்த?" என கேட்க,

"டேய்" என நந்தா முறைக்க,

"பின்ன என்ன டா நானும் பார்கிறேன் வந்ததுல இருந்து ஏதோ காரை நீ தான் தாங்கி நிற்கிற மாதிரி சாஞ்சு நின்னுகிட்டே இருக்க, என்னன்னு சொல்லி தொலைஞ்சா அடுத்த வேலையை பார்க்கலாம். சத்யா வேற வெளிய கூட்டிட்டு போக சொன்னா டா" என்றான் கார்த்திக்.

சத்யா என்ற பெயரை கேட்டதும் நந்தா முகம் மென்மையடைய, கார்த்திக் புருவம் உயர்ந்தது.

அதனை கண்ட நந்தா "கார்த்திக் நானே எப்படி தொடங்கலாம் யோசிச்சுட்டு இருந்தேன் நீயே தொடங்கிட்ட" என்றான் தயக்கமாய்,

"என்ன டா சொல்ற?"

"கார்த்திக் எனக்கு சத்யாவை பிடிச்சிருக்கு" என்றான் சட்டென,

"பிடிச்சிருக்குனா?!"

"கார்த்திக் ஐ லவ் ஹேர்,என்கிட்ட அவளை கொடுத்துடுங்க டா பிரின்சஸ் மாதிரி, ம்ம்ம்... இல்லை அதுக்கும் மேல என்னோட உசுரா பாதுகாப்பேன் டா. என்னால அவளை தவிர எதையும் யோசிக்க முடியலை. அவளுக்காக என்ன வேணா செய்யாலம் தோணுது.அது ஒரு டிவைன் பீல் கார்த்திக்" என குரல் கமற, "என்னோட காதலை எப்படி உனக்கு சொல்லுவேன் ப்ச்.. என்னால உனக்கிட்டவே சொல்ல முடியலை பின்ன எப்படி அவகிட்ட?ப்ச்... சொதப்புறேன் டா கார்த்திக்" என்றான்.

கார்த்திக் நண்பனை பார்த்த படி நின்றான். அவன் பார்த்த நந்தா இல்லை இவன். யாரிடமும் எந்த தயக்கமும் இன்றி பேசுபவன். இன்னும் சொல்ல போனால் அவன் கல்லூரியில் இவனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளாமே உண்டு. கண்டிப்பாய் ஒரு முறை தன்னை தாண்டி செல்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகன் தான். கார்த்திக்குத் தெரிந்தே சில பெண்கள் அவனுக்கு தன் விருப்பங்களை சொல்ல அதை நந்தா தவிர்த்த கதையும் தெரியும்.ஆனால் அனைத்திற்கும் பின்னால் சத்யா இருப்பாள் என கற்பனை கூட கண்டதில்லை இவன்,இதோ விழிகள் கலங்கி தன் முன்னால் நின்றவனை கண்டு என்ன பதில் சொல்வது என தெரியாது நின்றான்.


"கார்த்திக்" என நந்தா அழைக்க,

"ஹா.. ஹான் என்ன டா? " என்றான்.

"என் மேல கோவமா இருந்தா ரெண்டு அடி கூட அடிச்சிருடா இப்படி அமைதியா இருக்காதடா"

கார்த்திக் ஒரு பெருமூச்சை விட்டவன் "நியாயமா நீ சொன்னதுக்கு உன்னை அடிச்சு மூஞ்சிய பேத்து இருக்கணும். ஆனா நீ எப்படி சத்யாவை. அவ குழந்தை டா எங்களுக்கு ஆனா காதல் கல்யாணம்ன்னு சொல்ற,எனக்கு ஒன்னும் புரியல நந்தா" என்றான் கார்த்திக்.

நந்தா சிரித்த படி "அதான் எனக்கும் தெரியல மச்சான்" என்றான்.

'மச்சானா' என கார்த்திக் முறைக்க,

நந்தா அவனை கட்டி பிடித்த படி "எனக்கு தெரியும் டா உன்னோட நிதானமே சொல்லிடுச்சு" என கத்தியவன்" ஐ ஆம் இன் லவ் கார்த்திக். ஐ ஆம் இன் லவ்.யாரும் வாழாத ஒரு வாழ்க்கையை நான் அவ கூட வாழ போறேன் டா மச்சான்" என அவன் கன்னத்தில் முத்தம் வைக்க,

"அட ச்சே என்ன டா பண்ற?" என கார்த்திக் கன்னத்தை தடவ,

"ப்ச்... போடா" என மீண்டும் முத்தம் வைக்க அவனை அடிக்க துரத்தினான் கார்த்திக்.காதல் எந்த ஒரு அசாத்திய செயலையும் அசாதாரணமாய் செய்ய வைப்பதை உணர்த்திக் கொண்டிருந்தான் நந்தா.
 
காதல் :7


மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

என ரகுமான் இசையில் தன்னையும் மீறி இதழ் அசைய,


எத்தனையோ முறை இந்த பாடலை கடந்து இருக்கிறான் தான். ஆனால் இன்று அந்த உணர்வு கூட அவனை பித்தாக்கியது.ஒரே நேரத்தில் தன்னை உருகவும் வைத்து இறுகவும் வைக்கிறதே!என எண்ண நினைவுகளில் எல்லாம் அவள் முகமே இம்சிக்க, அவளை காண துடித்த மனதை முயன்று கட்டு படுத்தி அமர்ந்திருந்தவனுக்கு கார்த்திக்கிடம் தன் விருப்பத்தை கூற அதற்கு அவனின் கோபமும், முடிவாய் தான் இருந்த நிலையை கண்டு அவன் கூறி சென்றது எல்லாம் நினைவடுக்கில் வந்து போனது.

இறுதியாய் செல்கையில் "ஒன்னு அவ உன்னை லவ் பண்ணியிருக்கணும் அதுவும் இல்லை, இல்ல நீயாவது போய் அவகிட்ட சொல்லிருக்கணும் அதுமில்லை.சோ நீ உன் அம்மா அப்பாகிட்ட சொல்லி நேரா வந்து அப்பாகிட்ட பேசு நந்தா. அவளுக்கு அண்ணாவாவும் உனக்கும் பிரெண்ட்டா என்னால இதான் சொல்ல முடியும்" என சொல்லி சென்றிருக்க,அடுத்து என்ன செய்வது என யோசனையில் மூழ்கியிருந்தான்.


நந்தா தன் அறையில் யோசனையில் மூழ்கியிருக்க, அவனின் தந்தை அவனை தேடி அவனறைக்கு வந்தவர் மகனின் நிலை கண்டு,

"நந்தா" என அழைக்க,

அவனோ எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான்.உள்ளுக்குள் கார்த்தியோடு பேசியது வேறு எண்ணகிடங்கில் தத்தளிக்க,

"டேய் நந்தா" என்றார் அவர் மீண்டும்,

இன்னும் அவன் அசைந்தபாடில்லை.


"டேய்" என அவர் அவன் தோள் தட்டி விட்டு அவனுக்கு எதிர் திசையில் அமர,

"பா எப்போ வந்திங்க?" என்றான்.

"ம்ம்ம்... அது ஆச்சு ஒரு மணி நேரம். ஆனா நீ தான் எதோ கனா கண்டுட்டு உக்காந்திருக்க, சொல்லு என்ன விஷயம்?" என கேட்க,

"ப்ச்... பா நத்திங் சும்மா தான் உக்காந்துட்டு இருக்கேன் " என்றான் நன்றாக நாற்காலியில் சாய்ந்து,

"ம்ம்ம்... நம்பிட்டேன் சரி சொல்லு காலேஜ் முடிஞ்சிடுச்சு, கேம்பஸும் போகல வேற என்ன ஐடியா?என்ன பண்ண போற?நம்ம எஸ்டேட் பாத்துக்குறியா சொல்லு" என அவர் பேசி கொண்டே செல்ல,

"கல்யாணம் தான் பா" என்றான்.

"ஓ...அப்ப சரி" என்றவர் "என்ன?" என அதிர்வாய் கேட்க,

"ஆமா பா" என்றான் தீவிரமாய்,

எப்போவும் விளையாட்டு குணம் கொண்டவன் தான் என்றாலும் கூட இன்று அவன் குரல் தீர்க்கமாய் வந்ததை கண்டு தந்தையாய் அதிர்வு இருந்தாலும் கூட அவனை புரிந்தவராய் "யாரு பொண்ணு?" என்றார்.

"பா"

"உன் அப்பா தான் சொல்லு உன்னை எங்கேயும் போக விடாம இங்கேயே கட்டி போட்டு வச்சிருக்க பொண்ணு யாரு?" என்றார்.

"பா.. அது" என நின்றவனை கண்டு,

"நீ கேம்பஸ் வேணாம் சொல்லும் போதே யோசிச்சேன் தான். ஆனா அது எங்க மேல இருக்க அன்பாலன்னு நினைச்சேன். இப்போ தான் தெரியுது அது நீ அந்த பொண்ணு மேல வச்சிருக்க காதல் தான் காரணம்னு சொல்லு அதையும் தெரிஞ்சிக்கலாம்" என்றார் சிரிப்புடன்,

"சத்யா" என பெயர் சொல்லி முடிக்கும் போதே அவனையும் மீறி அவன் குரல் மென்மையாய் மாற,

அவன் மாற்றத்தை கண்டவர் நந்தாவின் தோள் தொட்டு "அவ்ளோ இஷ்டமா டா அந்த பொண்ணு மேல" என்றார் ஆச்சர்யமாய்,

"ம்ம்ம்" என்றவன் முகம் வெக்கம் கொள்ள,

நந்தாவை பார்த்து கொண்டே "ஈஸ்வரி" என தன் சரிபாதியை அழைத்தார்.

"எதுக்கு இத்தனை சத்தம் போடுறீங்க, காபி தானே எடுத்துட்டு வரேன்.வச்சிருக்கிறது டீ எஸ்டேட் ஆனா பொழுதுக்கும் காபி வேணும் ரெண்டு பேருக்கும்" என முணங்கிய படி காபி கோப்பையை இருவருக்கும் நடுவில் வைத்து நிமிரவும்,

"இருமா காபியும் வேணும் தான் ஆனா இப்போ நான் அதுக்கு கூப்பிடல" என்றார்.

"பின்ன?"

"உன் பையன் என்னமோ சொல்றான் அதான் ரெண்டு பேரும் ஒரே மூச்சுல கேட்டுட்டா சட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தையும் பார்க்கலாம் பாரு" என்றார்.

"என்ன சொல்றிங்க? என்ன நந்தா?" என்றார் மகனிடம்,

"மா" என தடுமாற,

அவன் தடுமாற்றத்தை கண்டு சிரித்து கொண்டே "உன் பையன் ஒரு பொண்ணை விரும்புறாராம் அதான் சொல்ல வராரு" என்றார்.

"விரும்புறானா" என கேட்டவருக்கு அதில் அத்தனை உடன்பாடில்லை என்பது அவர் குரலிலேயே வெளிப்பட்டது.

"ம்ம்ம்...அதான் யாரு என்னனு கேட்டுட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்" என கூறவும்

"ப்ச்... சும்மா இருங்க உங்களுக்கு எப்போவும் விளையாட்டு தான். நந்தா அப்பா சொல்றது உண்மையா அப்டினா பொண்ணு யாரு? நம்ம ஆட்களா இல்ல வேற எவருமா?" என கேட்கவும்,

"ஈஸ்வரி இதென்ன இப்போ போய் இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க? அவனுக்கு பிடிச்சா போதாதா" என்றார் தந்தையாய்,

இருவர் பேசுவதை கண்டு "மா... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போடுறீங்க? பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சவ தான் பா" என தாயிடம் ஆரம்பித்து தகப்பனிடம் முடிக்க,

"என்ன டா யாரு?" என்றார் ஈஸ்வரி வேகமாய்,மனதில் உறவினர் பெண்கள் எல்லாம் வந்து போக,

"மா கார்த்திக் தங்கச்சி சத்யா" என்றான்.

"ஓ.. ஆடிட்டர் பொண்ணா நல்ல பொண்ணு தான். சரி நான் இப்போவே பேசி இதை முடிவுக்கு கொண்டு வந்துடுறேன்" என எழ,

"நந்தா உனக்கு அந்த பொண்ணு வேணாம்" என தாயின் குரலில்,

அத்தனை நேரம் இருந்த நந்தாவின் எதிர்பார்ப்பு, அவள் மீதான பிடித்தங்கள் எல்லாம் ஒரே நொடியில் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போக தன்னை மீறி

"மா"

"ஈஸ்வரி" என இருவரும் குரல் கொடுக்க,

"ஆமாங்க அவ வேணாம் பொறந்த உடனே அம்மாவையும் அப்பாவையும் முழுங்கிட்டு இருக்கிறா,அவளை போய் இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும் சொல்றிங்க"என கூறியவரை கண்டு சோர்ந்து போனது நந்தாவின் உள்ளம்.


தந்தையாய் மகனின் முகம் பார்த்தவருக்கு மனைவியின் குணமும் தெரிந்து பொறுமையாய் "ஈஸ்வரி அது விதி அதுக்கும் அந்தப் பொண்ணுங்கும் என்ன சம்பந்தம்? நீ ஏதவாது ஏடாகூடாம் பண்ணாம விடு" என அதட்ட,

"வேணாம் இதுக்கு மேல இத பத்தி யாரும் எதுவும் பேச வேணாம். அவ எப்போவும் இந்த வீட்டுக்கு மருமகளாக முடியாது" என அவர் உள்ளே செல்ல, தன் காதலின் நிலை என்ன? இனி என்ன செய்வது என புரியாது நின்றிருந்தான் நந்தா.

என்ன சொல்லி அவரை மாற்றுவது, இத்தனை வருடம் அவள் மீது விதையாய் முளைத்த காதல் இப்போது விருட்சமாய் அவன் உள்ளம் எல்லாம் வேர் விட்டிருக்க, அதனை அடியோடு சாய்ப்பது போன்ற தன் தாயின் வார்த்தையில் முற்றிலும் உடைந்து போய் அமர,

"நந்தா" என்ற தந்தையின் அழைப்பில், நிமிர்ந்து பார்த்தவன் "பா அவ எனக்கு உலகம், எந்த நொடியில எனக்கு அவ மேல காதல் வந்துச்சு தெரியல, ஆனா நான் சாகும் வரை அவ மட்டும் தான் பா மனசுல இருப்பா என் பொண்டாட்டியா" என எழுந்து உள்ளே சென்றவன்

அப்படியே தொம் என கட்டிலில் சாய்ந்தவன் மனது சத்யாவை சுற்றியே வட்டமிட, கைகள் அவனின் அலைபேசியில் கடந்து நாட்களாய் சேகரித்த அவளின் புகைப்படம் வர, அத்தனை நேரம் இருந்த அலைப்புறுதல் எல்லாம் முற்றிலும் அற்று போய் ஒரு இதழ் விரிப்புடன் அதனை பார்த்தவன் 'யூ ஆர் மைன் சத்யா, என்னை என் காதலை கொஞ்சம் புரிஞ்சிகோயேன். நீ மட்டும் சரின்னு சொல்லு அதுக்கு அப்புறம் நம்ம காதலுக்கு இடையில ஏன் நமக்கு நடுவுல யாரையும் வர விட மாட்டேன்' என பேசிய படி இருக்க,

அதே நேரம் அவர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்ற,காதல் என்ற உணர்வே வேண்டாம் என்பவன் அவளுக்காக மட்டுமே மீள முடியாத காதலில் மூழ்க, தன் முதல் படியை எடுத்து வைத்து கொண்டிருந்தான் வேதாந்த்.

வி. பி குரூப்ஸின் அனைத்து மேல்மட்ட அதிகாரிகளின் கூட்டம் அது! எதற்காக இந்த கூட்டம் அதுவும் இந்த திடீர் ஏற்பாடு என உள்ளே சலசலத்து கொண்டிருக்க, ஒரு சிலரோ அவரு நைட் பார்ட்டி பண்ணிட்டு தூங்கவே விடிய காலையில ஆகி இருக்கும். இதுல நம்மளை கூப்பிட்டு இங்க உட்கார வச்சிருக்காரு.அப்பா காசுல வந்து அதிகாரம் பண்ணும் போது நல்லா தான் இருக்கும்" என சிரித்து கொண்டே, "நீ வேணா பாரு அவரு இவ்ளோ சீக்கிரம் இங்க வர சான்ஸே இல்லை, விஜய் பிரகாஷ் வந்து லீட் பண்ணுவாரா இருக்கும் " என சிரிக்க,

அது உண்மை என்பது போல் அங்கே அவர்களுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தார் விஜய் பிரகாஷ்.


'நான் சொல்லலை அவன் வர மாட்டான்' என்பது போல் பார்த்து வைக்க,

விஜய் பிரகாஷ் அனைவருக்கும் ஓர் அறிமுக புன்னகையை கொடுத்து விட்டு அவனுக்கு ஓர் நாற்காலி விட்டு தள்ளி அமர்ந்தார்.

"சார் மீட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாமே" என சொல்லவும்,

"சாரி ஸ்ரீதர் இதை நான் அரேஞ் செய்யலை. வேத் சொல்லிருக்காரு" என கூற,

அவனோ கடிகாரம் பார்த்துக் கொண்டே "சார் டைம் இஸ் ரன்னிங் என கூறி அவரு ஒரு நைட் பீ (இரவு தேனீ) இதை நம்ம வேணா நைட் வச்சுக்கலாமா" என்றான் சிரிப்புடன்,

விஜய் பிரகாஷ் ஏதோ சொல்ல வர,


சரியாய் அவர்கள் பேசும் போதே,கண்ணாடி கதவுகள் திறக்க கருநீல பிளேஸரில் ஜெல்லிட்டு வாரிய சிகையுடன் தன் வேக எட்டுக்களில் உள்ளே வந்தான் வேதாந்த்.

உள்ளே வந்தவன் "குட் மார்னிங் ஆல்" என கூறி, "சிபி வாட்ஸ் தி டைம் நவ்" என்றான்.

"ஷார்ப்லி அட் டைம் சார்" என்றான் சிபி.

"எஸ்... தட்ஸ் இட்" என தன் ப்ளேசரை சரி செய்த படி அமர்ந்தவன் தன் முன்னால் இருந்த சிறு மைக்கை கிட்டே நகர்த்தி "வெல் இந்த மீட்டிங் எதுக்குனா" என வி. பி குரூப்ஸின் எதிர்கால திட்டத்தை சொல்ல சொல்ல, அங்கே இருந்தவர்களுக்கு அவன் மீதான பிரமிப்பு உயர்ந்து கொண்டே போனது.

"சார் இப்பவே வீ ஆர் அல்மோஸ்ட் ரீச் தான். பட் உங்க ஐடியாலஜி இஸ் சம் திங்க் ராங்" என ஒருவன் கூற,

அதனை புன்னகையுடன் ஏற்றவன் "எனி கொஸ்டின்ஸ்" என வினா எழுப்ப,

"சார் நம்ம டார்கெட் இந்தியா எனும் போது நாம் ஏன் நார்த் பக்கம் நம்ப தொழிலை தொடங்க" எனும் போதே வேத் பார்த்த பார்வையில் "தட் மீன் இன்னும் கொஞ்சம் பெருசா பண்ணலாம் இல்லையா" என நிறுத்த,

"வெல் இட்ஸ் அ ரைட் திங்க் மிஸ்டர். ஸ்ரீதர், ஆனா இது வரைக்கும் நம்ம டார்கெட் இந்தியா இல்லை. பட் இப்போ வீ நீட் டு டூ சோ நம்ம வி. பி குரூப்ஸா உள்ள போக போறோம்" என முடித்தும் வைத்தான்.

பின் எழுந்தவன் "எனி திங்க் எல்ஸ்" என கேட்க,

இல்லை என்பதை போல் தலையாட்டினர் அனைவரும்,


"பைன் நாம இப்போ தொடங்க போறது கோயம்பத்தூர்ல யூ ஆல் நோ இட்ஸ் அ மான்சிஸ்டர் ஆப் தமிழ் நாடு. சோ நம்ம இன்வெஸ்ட்மென்ட் அங்க தான். ஓரளவு என் சர்வே படி இட்ஸ் அ ரைட் டைம் டூ ஸ்டார்ட்" என தொடர்ந்தவன் சற்று முன் கேள்வி கேட்டவன் முன்னால் வந்து "யூ மிஸ்டர் ஸ்ரீதர் நீங்க தான் அங்க போய் எல்லாத்தையும் சிஸ்டமேட்டிகா மாத்த போறீங்க. கெட் ரெடி ஃபார் தட் அண்ட் யூ நோ யாரும் அப்பா காசு இருக்குனு பிசினஸ் பண்ண முடியாது பாருங்க" என வெளியில் செல்ல,

ஸ்ரீதர் என்பவனுக்கு தலை சுற்றி போனது. அவன் ஆழ் மனதில் 'ஹீ வாஸ் டேஞ்சரஸ்' என முணுமுணுக்க,

அங்கிருந்த அனைவரும் இப்போது என்ன நடந்தது என புரிந்து கொள்ள சில நொடிகள் பிடிக்க,மகனின் செயல்களில் விஜய் பிரகாஷ் இதழ்கள் புன்னகை பூத்தது.


"தனம் இன்னைக்கு தான் ஆடிட்டர் மெம்பெர்ஸ் மீட்டிங் இருக்கு நான் கிளம்பனும் சீக்கிரமா டிபன் முடி" என சுவாமிநாதன் கூற

"ம்ம்ம்.. சரிங்க அதுக்கு தான் இன்னும் நேரம் இருக்கே பின்ன என்ன?" என்றார்.

"மா நீங்க இப்போ சொன்னா தான் செய்விங்கன்னு அப்பா சொல்றாங்க" என்றாள் சத்யா சிரிப்புடன்,

"சத்யா உங்க அம்மாகிட்ட என்னை மாட்டி விட பிளான் பண்ணிட்ட வாலு" என்றவர் "எங்க உன் அண்ணன் ஆளையே பார்க்க முடியல" என கேட்க,

"இப்போ எல்லாம் ஏதோ யோசனையில சுத்திட்டு இருக்கான் பா, மாடில தான் இருக்கான்" என்றாள்.

"என்ன யோசனையா இருக்கும்?"என்றார் கேள்வியாய்,

"தெரியலயே ஒருவேளை யாரையும் லவ் பன்றானோ?"என்றாள் மெதுவாய்,

"அப்படியா?" என்றார் அவருமே!..

"எனக்கு அப்படி தான் தோணுது."

"ஏன்?"

"ஒருநாள் என்கிட்ட அவன் லவ்வை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்டான் பா அதான் சொல்றேன்"என்றாள் ரகசியமாய்,

"வாட்? உன்கிட்டயா? இடியட் கூப்பிடு அவனை" என்றவர் "கார்த்திக் "என அழைக்க,

அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே இறங்கியவன் "ஆத்தி என் ஜோலியை முடிச்சிட்டாளே. அடேய் நந்தா குலதுரோகி உன்னால இன்னைக்கு எனக்கு அடி விழும் போலவே, இப்போ என்ன செய்ய?" என புலம்பி கொண்டே கீழே இறங்க,

"பா அண்ணா வந்துட்டான்" என்றாள்.

"அவருக்கு என்ன கண்ணா தெரியாது. இவ வேணும்னே எடுத்து கொடுக்கிறா" என வாய்க்குள் முனங்க,


"அங்க என்ன டா மென்னுகிட்டு இருக்க?" என கேட்க,

"என்ன மெல்லுறேனா? உயிர் பயத்துல புலம்பிகிட்டு இருக்கேன் பா" என்றான் கார்த்திக்.

"என்ன டா நான் கேட்டுட்டு இருக்கேன் நீ என்னை பார்த்துட்டு நின்னுட்டு இருக்க" என்றார் சுவாமிநாதன்.

"பா அவன் உங்கள முறைசிட்டு நிற்கிறான்" என்றாள்.

"அடிப்பாவி நானும் நீயும் எத்தனை தடவ கிழக்கு சீமையிலே, பாச மலர் படம் எல்லாம் பாத்துருப்போம் அதுல ஒரு சீன் கூடவா மண்டையில ஏறல, பாவி" என முனங்க,


"பா அவன் ஏதோ திட்றான்" என்றாள்.

"அடி பாதகத்தி" என எண்ணியவன் "ஏன்டா நந்தா ஊர்ல அத்தனை பொண்ணு இருக்கும் போது உனக்கு இவ மேலயா லவ் வரணும். இப்போ என்ன செய்ய? " என்பதை போல் பார்க்க,

"கார்த்திக் உன்ன தான் கேட்கிறேன்" என்றார் சுவாமிநாதன்.

"என்ன பா?" என்றான்.

"சத்யாகிட்ட என்ன கேட்ட? "

"ஓ... ஒன்னும் கேக்கலயே" என்றான் வேகமாய்,


"இல்லை பா கேட்டான்" என்றாள் அவளும்,..

"இங்க என்ன பஞ்சாயத்து? " என்றபடி வந்தவர் "உங்களுக்கு லேட்டாகலயா?" என கணவனை கேட்க,

"நான் போறது இருக்கட்டும் உன் பையனை என்னனு கேளு?" என்றார்.

"ஏன் அவனுக்கு என்ன?" என திரும்பி மகனின் முகம் பார்க்க,

"சத்யாகிட்ட காதலை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்டுட்டு திரியிறானாம்" என அவர் சிரிக்க,

"அப்படியா?" என தனலட்சுமியும் சிரிக்க,

'என்ன டா நடக்குது இங்க?' என்பதை போல் கார்த்திக் பார்க்கவும்,

"சரி சொல்லு யாரு பொண்ணு?" என்றார் சுவாமிநாதன்.

'ஓ.. கதை அப்படி போகுதா, விளங்குச்சு' என எண்ணி கொண்டே "இல்ல பா எனக்கு இல்ல நந்தா தான்" என கூறி முடிக்கும் முன்னே, வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்ப,

சத்யா சென்று கதவினை திறக்க நந்தா அவனின் தந்தையோடு நின்று கொண்டிருந்தான்.
 
காதல் :8

வீட்டின் கதவை திறந்தவள் அங்கே ஒரு நீல நிற டேனிம் பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையோடு நந்தா நின்றிருக்க, அவளை கண்டதும் அவனின் விழிகள் சுருங்கி விரிந்து பின் கண் சிமிட்ட,


அவனின் செயலில் திடுக்கிட்டவள் நந்தாவை பார்த்த படி நிற்க, அவனோ தன் புருவத்தை ஏற்றி இறக்கி அருகில் இருந்த தந்தையை பார்வையால் காட்ட,அப்போதுதான் அவரை கண்டவள் 'வா...வாங்க அங்கிள்" என்றதும், சுவாமிநாதன் "யாரும்மா" என கேட்கவும் சரியாய் இருந்தது.

நந்தாவின் தந்தை உள்ளே வர, அதிர்வாய் இடையில் நின்றவளிடம் "நீங்க கொஞ்சம் தள்ளுனா நாங்களும் உள்ளே போவோம்" என அவளை தாண்டி சென்றவன் பின் மெல்லிய குரலில் "என்ன பெர்ஃபுயூம் யூஸ் பண்றிங்க" என ஒரு முறை அவள் வாசனையை நுரையீரலில் நிறைத்து கொண்டான்.

சற்று தள்ளி நின்ற கார்த்திக்கோ 'பெரிய காதல் மன்னன் ரேஞ்ல எதோ பண்ணிட்டு இருக்கான் பாரேன். அதுவும் நான் பக்கத்துல இருக்கும் போதே, இங்க என்ன நடக்க போகுதோ ஏது நடக்கபோகுதோ தெரியல, இதுல இவன் பண்ற அக்க போரு இருக்கு பாரு' என்றவன் "நந்தா" என சத்தமாய் அழைக்க,

"மச்சான்" என கார்த்திக் அருகில் வந்தவன் அணைக்க வர,


"வேணாம் கொஞ்சம் அடக்கி வாசி ராசா, அங்க பாரு எங்க அப்பா உன்னை தான் பார்த்துட்டு இருக்காரு அதுனால கம்முன்னு உன் வாலை சுருட்டிகிட்டு போய் உக்காரு" என பற்களை கடித்து அந்த பக்கம் தள்ளி விட்டான்.

"சரி சரி" என்றவன் பவ்யமாய் சென்று தந்தை அருகில் அமர்ந்தான்.

சுவாமிநாதன் இருவரையும் பார்த்து கொண்டே "என்ன கேசவன் சார் எதுவும் சொல்லாம இரண்டுபேரும் ஒன்னா வந்துருக்கிங்க" என்றவர் தன் சரிபாதியை பார்த்து "தனம்" என அழைத்ததும்,

"இதோ கொண்டு வரேங்க" என அடுக்களைக்குள் நுழைய, "சத்யா சாரோட பைல் கொண்டு வா" என சுவாமிநாதன் கூறவும்,

"பா அங்கிளோட டிடையில் எல்லாம் லேப்டாப்ல மாத்திட்டேன்" என்றவள் அவர் முன் தன் மடிக்கணினியை திறக்க முயல,

"இருங்க சுவாமிநாதன் நான் ஆடிட்டிங் பற்றி பேச வரல கொஞ்சம் பெர்சனல் விஷயமா வந்தேன்" என்றார்.


"பெர்சனலாவா" எனும்போதே தனம் காபி கோப்பைகளை நீட்ட,

"எடுத்துக்கோங்க சார் பின்ன பேசலாம்" என கூற, அதனை எடுத்து கொள்ள நந்தாவின் பார்வையோ அவளை ரசித்த படி இருக்க, "அடங்குறானா பாரேன்" என கார்த்திக் முணுமுணுத்தான்.


சற்று நேரம் பொறுத்தவர் "சொல்லுங்க சார் என்ன விஷயமா வந்துருக்கீங்க? " என கேட்கவும்,

"ஒன்னும் இல்லை சுவாமிநாதன் நந்தாக்கு கல்யாணம் பண்ணலாம் இருக்கோம் அதான்!" என கேசவன் நிறுத்த,


"கல்யாணமா இவ்ளோ சீக்கிரமாவா?!" என கேட்க,

"ஆமா... அதான் உங்ககிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தோம்" என நிறுத்தவும்,

"ஓ.... பொண்ணு வீடு எப்படி? உங்க வசதிக்கு சரியான வரன் தான் பார்த்திருப்பிங்க, சரி கல்யாணம் எப்போ" என கேட்க,

"அதை நீங்க தான் சொல்லனும்" என்றார் சிரித்தபடி,

"நானா?" என்றவர் புரியாது முழித்தார்.

"ஆமா சுவாமிநாதன் நான் நேரடியா விஷயத்துக்கே வந்துடுறேன். நந்தாக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கும் தான்" என்றார் தடாலடியாய்.


அவர் கூற்றில் அதிர்ந்து "என்ன சத்யாவா?" என கேட்டவர் மனைவி மற்றும் மகளின் முகத்தை காண அதில் தெரிந்த அதிர்வு கார்த்திக்கிடம் இல்லை என்பதை பார்த்துக் கொண்டே "சத்யாக்கு இப்போ கல்யாணத்தை பத்தி எல்லாம் நாங்க யோசிச்சதே இல்லை சார். அவ சின்ன பொண்ணு வேற,அதுனால நீங்க வேற இடம் பார்த்துகோங்க" என முடிக்கும் நேரம்..

"அங்கிள்" என நந்தாவின் குரலில் கீழே பார்க்க அவனோ அவரின் கால்களை இறுக பற்றி "அங்கிள் சத்யாவை எனக்கே கொடுத்துடுங்களேன்" என்றான் இறைஞ்சும் பார்வையில்,


"தம்பி என்னப்பா முதல்ல எழுந்துரு" என தனலெட்சுமி கூறி அருகில் வர,


அவர் கால்களையும் பற்றி கொண்டு "ஆன்ட்டி சத்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளிஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்களேன்" என்றான்.


கார்த்திக் நந்தாவை பார்த்து கொண்டே "இதே டெக்னிக்கை பயபுள்ள எல்லார்கிட்டயும் யூஸ் பண்றான்" என சிரித்து கொண்டே கார்த்திக் மெதுவாக கூற,

சத்யா கேள்வியாய் பார்த்தாள்.

"இதேதான் என்கிட்டையும் செஞ்சான் இந்த நல்லவன்" என்றான் கார்த்திக் கோபமாய்,


கார்த்திக்கின் கூற்றிலும் நந்தாவின் சேட்டையிலும் பெண்ணவள் தன்னை மறந்து சிரிக்க, தனம் மகளை பாரத்து கொண்டே கணவரிடம் கண் ஜாடை காட்டினார்.

அதனை கண்ட சுவாமிநாதன் புருவங்கள் முடிச்சிட யோசனையில் இருந்தவரை, "எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன் உங்களுக்கே தெரியும் அவனோட விருப்பம் உங்க பொண்ணுங்கறதால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நந்தாவை பத்தி நான் உங்ககிட்ட சொல்லணும் எந்த அவசியமும் இல்ல" என கேசவன் கூறி முடிக்கும் முன் "ஆமா அங்கிள்" என நந்தா கூற,

"பாருங்க சுவாமிநாதன் இப்படி ஒரு மாப்பிள்ளை உங்களுக்கு எப்போவும் கிடைக்க மாட்டான். சீக்கிரமா சரின்னு சொல்லி அவனை மேல எழுப்பி விடுங்க" என சிரித்த படி கேசவன் சொல்ல,


அவரது கூற்றில் சுவாமிநாதன் சிரித்து கொண்டே "நந்தா முதல்ல எழுத்துருப்பா" என அவனை எழுப்பி விட்டு "இது நான் மட்டும் முடிவு பண்ற விஷயம் இல்ல. நான் என் பையன் பொண்ணுகிட்ட பேசிட்டு" என தொடங்க,


"அய்யோ அங்கிள் கார்த்திக்கு எல்லாம் டபுள் ஓகே தான், என்ன மச்சான்?" என கார்த்திகை பார்க்க,

அதனை கண்டு சுவாமிநாதன் 'எல்லாம் உன் வேலையா' என கார்த்திக்கை முறைக்கவும்,

'பயபுள்ள இன்னைக்கு என் ஜோலியை முடிக்காம கிளம்ப மாட்டான் போலயே வெளில வாடி எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு மொத்துறேன்' என முனங்க,

"மச்சான் என்கிட்ட ஏதாச்சும் பேசணுமா" என நந்தா அவன் புறம் வந்து கேட்கவும், கைகள் கோர்த்து இரண்டையுமே தூக்கி ஒரு கும்பிடு போட்டு இல்லை என்பது போல் தலையசைத்து அவனை காணாது வேறு பக்கம் நின்று கொண்டான்.

"சத்யாகிட்ட கேட்கணும் இல்லையா, பேசிட்டு நான் போன் பண்றேன்" என சுவாமிநாதன் கூற,

"அதுக்கு எதுக்கு சுவாமிநாதன் இரண்டு மூணுநாள் இழுத்துகிட்டு சத்யா இங்கதான் இருக்கு, நானே கேட்கிறேன் அம்மா சத்யா என் பையன் நந்தாவை கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா டா" என்றார் கேசவன் நந்தாவிற்கு தகப்பனாய்,

'அவன் மீது காதலா என்றால் சத்தியமாய் இல்லை. பின் என்ன உணர்வு இது? எதிலும் வரையிருக்க விரும்பவில்லை அவள்! காதலனா கணவனா இருப்பானா என்பதை விட தோள் சாயும் தோழன் என்பதை அவள் உணர்ந்த தருணங்கள் அதிகம் என்பதால் என்ன பதில் சொல்வது' என பெண்ணவள் யோசிக்கும் சில நிமிடங்களில், நந்தா முகத்தை பார்த்த கார்த்திக் "மரண பயம் உன் மூஞ்சில தெரியுதே நண்பா" என்றான் சிரிப்பாய்,

அவன் கேலியில் சத்யா அவன் முகம் பார்த்தாள். இதுவரை இருந்த இயல்புகள் மாறி பதட்டமாய் அவன் நின்றிருந்த தோற்றம் கண்டு என்ன நினைத்தாளோ! தந்தையிடம் சரி என தலையசைத்து உள்ளே சென்று விட,

அவளின் சமத்தத்தில் நந்தாவின் சத்தம் அவள் அறைக்குள் வந்தும் கூட எதிரொலிக்க, இயல்பாய் இதழோரம் ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

"வந்த விஷயம் நல்லா படியா முடிஞ்சது" என கேசவன் கூறும் போதே, சுவாமிநாதன் "இருங்க சத்யா பற்றி உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் சொல்ல வேண்டியது எங்க கடமை சத்யா எங்க பொண்ணு இல்லை என் அண்ணன், தனத்தோட அக்கா பொண்ணு. அவ பொறந்த ஆறு மாசத்தில இதோ வந்துடுறேன் போனவங்க திரும்பி வரவேயில்லை. அன்னிலிருந்து இன்னைக்கு வரைக்கும் சத்யாக்கு நாங்கதான் அப்பா அம்மா எல்லாமே! "என முடிக்க,

"என்ன சுவாமிநாதன் இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே!" என்றவர் "அப்புறம் நானும் ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லனும் நந்தா ஜாதகப்படி இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம் முடிச்சிடனும்ன்னு ஜோசியர் சொல்றாங்க" என தொடங்க,


"என்ன இவ்வளவு சீக்கிரமாவா?" என தனம் கேட்க,

"அதானே இன்னும் சத்யா காலேஜ் கூட முடிக்கலையே" என சுவாமிநாதன் கூறவும்,

"அதுனால என்ன கல்யாணம் முடிஞ்சதும் படிப்பை முடிக்கட்டும். அப்புறம் சி. ஏ பண்ணட்டும் யாரு வேணாம் சொல்றது. எங்க மருமக பெரிய ஆடிட்டரா வருவா" என முடித்து வைத்தார்.

இன்னும் தனம் முகம் தெளிவில்லாமல் இருக்க,

"என்னமா எதுவா இருந்தாலும் கேளுங்க?" என்றதும்,

"இல்ல நீங்க மட்டும் வந்துருக்கீங்க? நந்தவோட அம்மா" என தனம் கேட்கவும்,

"ஒரு சிரிப்புடன் நீங்க கேட்கிறது சரி தான். அவளுக்கு இந்த கல்யாணத்தில அவ்ளோ விருப்பம் கிடையாது மா"என கூற,

"அப்புறம் எப்படி?" என்றார் தனம்.

"ம்ம்... எப்படினா இப்போ உங்ககிட்ட எப்படி சம்மதம் வாங்கினானோ அப்படி தான் வாங்கினான்" என சிரித்து கொண்டே மகனை கண்டவர் "மத்த விஷயங்கள் பேச அவளை அழைச்சிட்டு வரேன் மா" என சொல்லி செல்ல,

குழப்பத்தில் நின்ற தனத்தின் அருகில் வந்த நந்தா "ஆண்ட்டி நீங்க ரொம்ப யோசிக்காதிங்க சத்யாவுக்கு எது வந்தாலும் என்னை மீறி தான் வரும்" என்றான்.

அவரோ புன்னகையுடன் நந்தாவின் கன்னத்தில் தட்ட,

"இதே மாதிரி சிரிச்சுகிட்டே உள்ளே போங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்" என்றவன் கார்த்திக்கை அணைத்து விடுவிக்க,

"வாழ்த்துக்கள் சொல்லுங்க மச்சான்" என்றான் கார்த்திக்கிடம்,

அணைத்திருந்தவனை விடுவித்து "ப்ச் என்ன பண்ணியோ எல்லார்கிட்டயும் சம்மதம் வாங்கிட்ட, ஆனா சத்யா எங்க எல்லாருக்கும் ராணி மாதிரி டா. அவ வந்த பின்னாடி அவள சுத்தி மட்டும் தான் எங்க வாழ்க்கை ஓடுனுச்சு. இப்போ யாரோ முகம் தெரியாத ஒருத்தனுக்கு அவள கொடுத்துட்டு அவன் எப்படியோனு யோசிக்கறத விட நீன்னு வரும் போது எனக்கு சந்தோசமா தான் இருந்தது.அதே சந்தோசம் சத்யாக்கு நீ கொடுப்பங்கற நம்பிக்கை இருக்கு" என முடிக்க,

நண்பனை பார்த்தவன் "கார்த்திக் அவ எனக்கு உசுரு டா கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்" என அவனை மீண்டும் அணைத்து விடுவித்து சென்றான் நந்தா.

காரில் அமர்ந்திருந்த கேசவன் மகனின் வருகையில் "இப்போ சந்தோஷம் தானே டா"என்றார்.

அவரை வாரி அணைத்து கொண்டவன் "தேங்க்ஸ் பா.ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என்றவன் விழிகள் கலங்கிருக்க,

"ப்ச் நந்தா என்ன இது? நீ என் பையன் டா. இதுக்கெல்லாமா அழுவ சின்ன பையன் மாதிரி வா வண்டியை எடு உங்க அம்மாவை வேற சமாளிக்கனும்" என கூற,

"அதெல்லாம் நீங்க பார்த்துப்பீங்க பா எனக்கு எதுக்கு அந்த பிரஷர்?"என சிரிப்புடன் காரை ஸ்டார்ட் செய்ய,

"நீ பொழச்சிபடா"என மகனின் முதுகை தட்டியவர் கேசவனின் நினைவுகள் கடந்த சென்ற நாட்களில் வீட்டில் நடந்தவற்றை அசை போட்டது.

அன்று நந்தா தன் விருப்பத்தை கூறியதும் கோபத்தில் சென்ற மனைவியையும் வருத்தமாய் சென்ற மகனையும் சமாதானம் படுத்த முடியாது சோர்ந்து போனார் கேசவன்.

அடுத்த நாள் எப்போதும் சுறுசுறுப்பாய் சேட்டைகள் செய்து கொண்டிருப்பவன், காலையிலேயே அவரிடம் வந்து "பா நான் எஸ்டேட் போய்ட்டு வரேன்" என கிளம்பி நிற்க, "என்ன சொல்வது?" என தெரியாமல் கேசவன் தான் குழம்பிப்போனார்.

நந்தா சென்றதும் மனைவி முகம் பார்க்க,அவருக்கும் இது அதிர்ச்சி தான். எப்போதும் அவர் எவ்வளவு சொல்லியும் எஸ்டேட் பக்கம் போகதவன் இன்று தானாய் கிளம்பி சென்றது எந்த மாற்றத்திற்கான தொடக்கம் எனப் புரியாது குழம்பி நின்றனர் பெற்றோர் இருவரும்,

சற்று நேரத்திலேயே திரும்பி வந்தவன் அன்றைய அலுவலையும் பின்" பா லோக்கல் எக்ஸ்ப்போர்ட் லோடுக்கு நம்ம வண்டி போற மாதிரியே,ஆல் ஓவர் இந்தியா போறதுக்கு ஒரு வண்டியை நம்ம பேங்க்ல லோன் கேட்டு அரேஞ்ச் பண்ணிக்கலாம்னு யோசிக்கிறேன்" என்றான்.

"ஏன் நம்மளே சொந்தமா வாங்கணும்னா பேங்க்ல ஏன் லோன் போடணும்,நம்மளே வேணும்னா வாங்கிடலாம் நந்தா "என யோசனையில் கேசவன் கேட்க,

"இல்லப்பா நம்ம பேங்க்ல லோன் போடும்போது அது ஆடிட்டிங் பண்ணும் போது நமக்கு யூஸாகும்" என இன்னும் சில அறிவுரைகளை தந்தைக்கு வழங்க, இவன் என் மகன் பெருமை தெரிய "நந்தா உன்கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கவே இல்லடா" என வாய்விட்டு சொல்லிவிட்டார் கேசவன்.

"பா நான் சின்ன பையன் இல்ல. என் முடிவுகள் எப்பவும் சரியாத்தான் இருக்குன்னு உங்களுக்கு இப்ப நம்பிக்கை வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்" கூறி உள்ளே சென்றான்.

அதனை கேட்டு கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இப்படியே சில நாட்கள் செல்ல நந்தா தன் வியாபாரத்திலும் முன்னேற வழி முறைகளை கையாள தொடங்கினான். அதில் கேசவனுக்கு மகிழ்ச்சியே!இப்படியே அவர்கள் வாழ்க்கை தொழில் பற்றிய போய் கொண்டிருக்க,

அன்று காலையில் அன்றைய நாளிதழ் செய்திகளை படித்து கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் கேசவனும் நந்தாவும்,

"என்னங்க" என அருகில் வந்த மனைவியை கண்டு "சொல்லுங்க" என்றார் சிரிப்புடன்,

"இந்த போட்டோ எல்லாம் பாருங்க "என அவர் கையில் பெண்களின் புகைப்படங்களை திணிக்க,

"ம்ம்ம்... நல்லாதான் இருக்காங்க" என்றார்.

"நந்தா நீயும் பாரு" என மகனிடம் கொடுக்க,

எதற்கு என்று புரிந்தவன் எதுவும் பேசாது அதனை வாங்கி பார்த்தான்.

"பொண்ணுங்க எல்லாம் எப்படி இருக்காங்க?" என கேட்க

"நல்லாதான்மா இருக்காங்க" என்றான்.

"ம்ம்ம்... எல்லாம் நம்ம பக்கம் உள்ள பொண்ணுங்க தான்" என அவர்களைப் பற்றிய தகவல்களை சொல்ல ஆரம்பிக்க, அப்போதுதான் கேசவனுக்கு புரிந்தது மனைவியின் செயல்களின் அர்த்தம்.

அத்தனை புகைப்படங்களையும் கீழே வைத்தவன்" இதெல்லாம் ஏன் மா என்கிட்ட சொல்றீங்க? " என்றான் நந்தா

"ப்ச்... என்ன டா இது எதுக்குன்னு உனக்கு தெரியாதா? இதுல ஏதாவது ஒரு பொண்ணை நீயே தேர்ந்தெடு, அந்த பொண்ணை இந்த வீட்டுக்கு உன் பொண்டாட்டியா கூட்டிட்டு வந்துடலாம் " என சிரிப்புடன் கூறிய தாயைக் கண்டவன்,

"ம்ம்ம்... எல்லாம் சரிதாம்மா, ஆனா அந்த பொண்ணுங்க கிட்ட எல்லாம் இது என்னோட இரண்டாவது கல்யாணம் சொல்லிட்டீங்க தானே" என கேட்டவன் குரலில் அத்தனை நிதானம்.

"நந்தா என்ன உளறிட்டு இருக்க?" என்றார் கோபமாய்,

"மா... நான் அன்னைக்கே சொல்லிட்டேன். எனக்கு பொண்டாட்டின்னா அது சத்யா மட்டும் தான்னு "என தோள்களை குலுக்கியவன் எழுந்து நின்று, "அப்பா எனக்கு ஆஃபீஸ்க்கு லேட் ஆகுது" என உள்ளே செல்ல,

"என்னங்க அவன் இப்படி சொல்லிட்டு போறான். நீங்க எதுவுமே சொல்லாம இருக்கிங்க?" என ஆதங்கமாய் கேட்ட மனைவியிடம்,

"நீ அன்னைக்கு அவன் சொன்னது அவனோட சின்ன பிள்ளைத்தனமான முடிவுன்னு சொன்ன,ஆனா அவன் அவ சின்னப்பிள்ளை இல்லைன்னு தொழில் இறங்கி அதை நிரூபிச்சு காட்டிட்டான். இப்பவாச்சும் உனக்கு புரியுதா சத்யாவை எவ்வளவு விரும்பிருக்கான்னு, அவளுக்காக தான் இந்த மாற்றம், அவ ஒருத்திக்காக தான் இதெல்லாமே!" என கூற,எதுவும் கூறாது அமைதியாய் இருந்தார் அவரின் சரி பாதி.

சற்று நேரத்தில் அலுவலகம் கிளம்பி வந்தவனை "நந்தா இப்ப என்னதான் சொல்ல வர?" எனக்கேட்க,


"அம்மா உங்க விருப்பப்படி நீங்க என்ன வேணாலும் செஞ்சுக்கலாம். நான் அந்த பொண்ணுங்கள பார்க்க வரணுமா வரேன்.தாலி கூட கட்டுறேன் ஆனா அவங்க கிட்ட ஏன் எல்லாரும் முன்னாடியும் சொல்லிடுவேன் இது என்னோட இரண்டாவது கல்யாணம்னு" என கூறி செல்ல, அவன் பேச்சில் தந்தையாய் கேசவனுமே சற்று அதிர்ந்துதான் நின்றார்.

"என்னங்க?" மீண்டும் ஆதங்கமாய் கேட்ட மனைவியை கண்டு "நீ வந்தாலும் வராட்டியும் நாளைக்கு நான் சுவாமிநாதனின் வீட்ல போய் பேச தான் போறேன், நீ முடியாதுன்னு சொன்னாலும் சத்யா தான் இந்த வீட்டுக்கு மருமக" என அந்த பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டவர், இங்கே வரும் போது கூட நந்தாவின் அன்னையை கேட்க,

"எனக்கு அந்த பொண்ணை பிடிக்கல. உங்களுக்கும் உங்க பையனும்கும் அவ தான் முக்கியம்னா போங்க நான் எதுக்கும் வரமாட்டேன்" என பிடிவாதமாய் கூற, தயங்கி நின்ற மகனை தேற்றி அழைத்து வந்தவர்க்கு இங்கு வந்ததும் சத்யாவை கண்டதும் நந்தாவின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை கண்டவருக்கு எப்படியும் மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணம் பிறக்க, அதனாலேயே சுவாமிநாதன் எத்தனை தயங்கினாலும் அவரை சரி செய்து திருமணம் வரை பேசி கொண்டு வந்திருந்தார். அனைத்தையும் எண்ணிப் பார்த்தவர் எல்லாம் நல்லபடியாய் அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டார்.

நந்தா சென்றதும் உள்ளே வந்த கார்த்திக்கை சுவாமிநாதன் பார்க்க,

"என்னப்பா" என்றான்.

"உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் தானே கார்த்தி ஏன் என்கிட்ட சொல்லல" என்றார் தந்தையாய்,

"பா.. எனக்கும் இப்பதான் தெரியும். நந்தா சத்யாவை விரும்புறேன்னு சொல்லும் போது எனக்கு நந்தாவை விட சத்யாவுக்கு பெஸ்ட் சாய்ஸ் யாரும் தோணாலபா, நண்பன்னு இல்ல நந்தா உண்மையிலேயே நல்லவன் சத்யாவை அவ்ளோ விரும்பறான் பா எனக்கு அது தெரியும். நம்ம கிட்ட இருக்கிறத விட நந்தா கூட சத்யா ரொம்ப பாதுகாப்பா சந்தோஷமா இருப்பா"என்றான் அண்ணனாய்,

"ம்ம்ம்.." என்றவர் மனைவி முகத்தில் தெரிந்து யோசனைக் கண்டு "என்ன தனம் உனக்கு இதுல விருப்பம் இல்லையா" என கேட்க

"அப்படியெல்லாம் இல்லைங்க ஆனா எல்லாம் ரொம்ப அவசர அவசரமா நடக்கிற மாதிரி தோணுது. அதுவும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணங்கறப்போ எனக்கு என்ன சொல்றது தெரியலங்க" என்றவர் சில நொடிகள் கழித்து "ஏங்க நா வேணா நம்ம ஜோசியர்கிட்ட ஒரு தடவை போய் சத்யா ஜாதகத்தை பார்த்துட்டு வந்துடவா" என கேட்டதும்,

"ம்ம்ம்... இந்த மாசம் உனக்கே தெரியும் எனக்கு கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும் தனம்" என இழுத்தவரிடம் "நானும் கார்த்திக்கும் போய் பாத்துட்டு வந்துடுறேங்க" என முடித்து வைத்தார் தனலட்சுமி.
 
காதல் :9கொஞ்சம் படபடக்கும் இதயத்தோடு தான் தனலட்சுமி அமர்ந்திருந்தார். கார்த்திக் தான் அவரை பார்த்து சிரித்து கொண்டே "மா எதுக்கு இப்படி இருக்கிங்க, ஏதோ பெரிய ஹாஸ்பிடல்ல வியாதிக்கு ரிசல்ட்க்கு வெயிட் பண்ற மாதிரி ஜஸ்ட் காம்" என்றான்."இதென்ன பேச்சு கார்த்திக். இவரு பார்த்து சொன்னா எல்லாமே சரியா இருக்கும். உங்க பெரியப்பாக்கு இவரு நண்பரும் கூட அதான்" என்றார்."ஓகே அதுக்கென்ன இப்போ நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனாகுறீங்க?""இல்ல கார்த்திக் நந்தா நல்ல பையன் தான், இருந்தாலும் எல்லாமே அவசரமா நடக்கிற மாதிரி இருக்கு அதான்" என்றவருக்கு இன்னும் சஞ்சலமே!"உங்கள அய்யா உள்ள கூப்புடுறாங்க " என ஒருவர் கூறவும்,"வா கார்த்திக்" என அவனையும் அழைத்து கொண்டே உள்ளே செல்ல,தனத்தை கண்டதும் "வாங்கம்மா" என்றவர் அவர்களின் நலனை விசாரித்து விட்டு "சொல்லுங்க மா யாருக்கு ஜாதகம் பார்க்கணும்?" என கேட்கவும்,"நம்ம சத்யா ஜாதகம் தான் அய்யா" என்றார் தனம்."சத்யாவா நம்ம விஷ்வநாதன் பொண்ணு தானே!" என்றவர் அவளின் ஜாதகத்தை பார்த்து கொண்டே "என்ன விஷயம்?" என கேட்க,"அவளுக்கு வரன் ஒன்னு தகைஞ்சு வருது அதான்" என நிறுத்த,"கல்யாணமா இப்பவா அவளுக்கா?" என கேட்டதும்,"ஆமா சாமி நல்ல வரன் பையனுக்கு சத்யாவை ரொம்ப பிடிச்சு போய் கேட்கிறாங்க,பையனும் ரொம்ப நல்ல பையன். அதான் விட்டுட வேண்டாமே பார்க்கிறோம்.அந்த பையன் ஜாதகப்படி இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணம் வைக்கலாம் சொல்றாங்க. அதான் உங்ககிட்ட கேட்டு செய்யலாம் வந்தோம்" என கூற,"ம்ம்ம்... " என்றவர் விழிகள் மீண்டும் ஜாதகத்தை பார்த்தது."ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு ஒரு உயிர் பூமியில ஜனிக்கும் போதே அதோட பாவ புண்ணியங்களை பார்த்து தான் அதன் பயணங்களை முடிவு பண்ணி மேல இருக்கிறவன் அனுப்பி வைக்கிறான். அது மாதிரி சத்யாக்கு சரியானவனா ஒருத்தன் வருவான். அவளுக்கானவனா வருவான்" என அவள் ஜாதகத்தை கீழே வைக்க,தனம் அவர் கூற்று புரியாது "சாமி இப்ப சத்யாவுக்கு கல்யாணம் பண்ணலாமா? வேணாமா" என கேட்க,"அவளுடைய கர்மா வினையின் படி தான் எல்லாமே நடக்கும். நீங்களே நினைச்சாலும் அதை மாற்றுகிற சக்தி நம்ம யாருக்கும் இல்லை அதுனால நீங்க வேலையை பாருங்க நடக்கிறது எல்லாம் நல்ல படியாவே நடக்கும்" என தலை அசைத்தார்.அவ்வளவு தான் இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டார் என்பதால் குழம்பிய மனதுடனே வெளியே வந்தார் தனம்.தனம் வெளியே சென்றதும் ஜோசியர் முகம் யோசனையில் மூழ்கியது. பின் எது நடந்தாலும் ஈசனுக்கே சமர்ப்பணம் என ஆண்டவன் மீது பாரத்தை போட்டவர் அடுத்த வேலைகளை கவனிக்க சென்றார்.இன்னும் தனம் தெளிவே இல்லாது இருக்க கார்த்திக் அவரை அழைத்து கொண்டிருந்தான்."அம்மா" என அவன் அருகில் வந்து தோள் தட்டி திருப்ப,"எ... என்ன கார்த்திக்" என கேட்டவரை கண்டு "மா உங்களுக்கு என்னாச்சு எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கிங்க?" என கேட்க,"ஜோசியர் சொன்னத தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என கூறவும்,"அதுல யோசிக்க என்ன இருக்கு எல்லாம் நல்லா நடக்கும்னு தானே சொன்னாரு"."ம்ம்ம்.. "என்றவர் முகம் மீண்டும் யோசனையில் மூழ்க,"மா... என்ன நீங்க?" என கார்த்திக் தொடங்கும் போதே சுவாமிநாதன் வந்தவர் "என்ன தனம் ஜோசியர் என்ன சொன்னாரு?" என கேட்க,நடந்தவற்றை கார்த்திக் கூறி "அங்க இருந்து வந்ததுலருந்து அம்மா தான் யோசனையிலே இருக்காங்க பா" என கூறி முடித்தான்."தனம் கார்த்திக் சொல்றது சரி தானே! நீ அவரை பார்க்க போன,அவரும் சொல்லிட்டாரு அதோட முடிஞ்சது. அதையே யோசிச்சுட்டு இருக்காத சரியா, ஜோசியம் மேல நம்பிக்கை இருக்கலாமே தவிர அதையே நம்பிட்டு இருக்க கூடாது. போ அடுத்து என்ன பண்ணலாம் பாரு " என உள்ளே அனுப்பி வைத்தவர் கார்த்திக்கிடம்,"கார்த்திக் நீ நந்தாகிட்ட பேசி இல்லை வேணா நானே அவங்க அப்பாகிட்ட பேசுறேன்" என்றவர் கேசவனுக்கு அழைக்க,"அதனை ஏற்றவர் சொல்லுங்க சுவாமிநாதன் நல்லா இருக்கிங்களா? சத்யா எப்படி இருக்கா" என்றார் பாசமாய்,"எல்லாரும் நல்லா இருக்கோம். சத்யா காலேஜ் போயிருக்கா கேசவன்" என்றார்."சரி சரி சொல்லுங்க என்ன கால் பண்ணிருக்கிங்க" என கேட்கவும்,"இல்லை கல்யாணம் பத்தின மற்ற வேலைகளை பத்தி பேசிடலாமே நாளும் பக்கத்துல வந்துருச்சு "என கூறவும்,"அதுவும் சரி தான். நானும் நந்தாவோட அம்மாவும் கிளம்பி வரோம் பேசி பைனல் பண்ணிடலாம்" என கேசவன் வைத்ததும் தன் சரி பாதி முகம் பார்க்க,அவரோ அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அமர்ந்திருக்க, அருகில் தன் மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகனை காணவும்,"சொல்லுங்க அப்பா' என்றான் நந்தா."அது ஒன்னும் இல்ல நந்தா சுவாமிநாதன் போன் பண்ணி இருந்தாரு கல்யாணத்தை பத்தின மத்த விஷயங்களை பேசிடலாம் கூப்பிடுறாரு" என மனைவியை பார்த்து நிறுத்தவும்,"நான் கண்டிப்பா வரமாட்டேன் எப்பவும் போல நீங்களும் உங்க பையனே போங்க, எனக்கு அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர்றது பிடிக்கல அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன்" என பிடிவாதமாய் அமர்ந்திருந்த அன்னையைக் கண்டு எதுவும் பேசாது மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவன்,அதனை முடித்து எழுந்து " சிம்பிளா பண்ணிக்கலாம் பா. எனக்கு சத்யா தான் வைஃப்னு முடிவானதுக்கு அப்புறம் அதை க்ராண்டா பண்ணுனா என்ன?சிம்பிளா பண்ணுனா என்ன? ஏதாவது கோவில்ல வச்சு பண்ணிக்கலாம் சொல்லுங்கப்பா" என அன்னையை ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.அமைதியாய் உள்ளே சென்ற மகனை கண்ட கேசவன் "உனக்கு என்னதான் பிரச்சனை?நமக்கு இருக்கிறது ஒரே பையன் அவன் விருப்பப்படி சந்தோஷமா கிராண்டா ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு அவனை இத்தனை வருத்தப்பட வைப்பியா? நமக்கு இருக்க சொத்துக்கு அவன் அனாதை மாதிரி கோவில்ல கல்யாணம் பண்ணனுமா? அதான் உனக்கு விருப்பமா?இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை" என கோபமாய் கடிய,"எனக்கு மட்டும் அவன் கல்யாணம் அப்படி கோயில நடக்கனும்ன்னு ஆசையா என்ன? நான் பார்கிற பொண்ணுக்கு அவனை சரின்னு சொல்ல சொல்லுங்க. எப்படி கோயம்புத்தூரே மிரண்டு திரும்பி பார்கிற அளவுக்கு அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்றேன் பாருங்க" என முணுமுணுக்க,"நீ பிடிவாதம் பிடிக்கிற, அவன் உன் பையன் டி அவன்கிட்ட போட்டி போடுவியா? அவன் உனக்கு ஒரே பையன் அவனுக்கு நல்லபடியா கல்யாணம் முடிச்சு சந்தோஷமா இருக்குறதை பார்க்கணும்னு மட்டும்தான் இப்ப நம்முடைய எண்ணமா இருக்கணும் ஆனா உனக்கு" என கூறும்போதே,அவர்கள் பேசியது காதில் விழ,உள்ளே உடை மாற்றிக் கொண்டவன் வெளியே வந்து, "அப்பா இவ்வளவு தூரம் நீங்க அம்மாகிட்ட பேசணும்னு அவசியம் இல்லப்பா. அவங்களுக்கு என் மனசு புரியும் இருந்தாலும் அவங்களுக்கு என்னை விட ஈகோ பெருசா இருக்கு" என்றவன் "மா நீங்க வந்தா மட்டும் தான் என் கல்யாணம் நடக்கும். அதுவும் உங்களுக்கு தெரியும் நான் உங்க பையன் உங்களை மாதிரி பிடிவாதம் எனக்கும் இருக்கு" என வெளியே சென்றான்."ப்ச் அவன் சாப்பிடல கூப்பிடுங்க" என அருகிலிருந்த கேசவனை பணிக்க,"உன்னை என்ன பண்றது அவன் வருத்தப்படுற மாதிரி நீயே நடந்துக்கிட்டு இப்ப அவன் சாப்பிடலன்னு புலம்பிகிட்டு கிடக்க, கொஞ்சம் பேசாம இரு"என அவரும் கோபமாய் கூற,"உங்க ரெண்டு பேருக்கு என்ன இப்போ?நான் அவ வீட்டுக்கு வரணும் அதானே! நான் வரேன் இப்போ அவனை கூப்பிடுங்க. அவன் சாப்பிட்டு போகட்டும்" என அன்னையாய் அவர் மனம் துடித்தது."அதெல்லாம் அவன் சாப்பிடுப்பான் இப்போ சீக்கிரம் கிளம்பு போய் பேசிட்டு வந்துடலாம்" என அவரை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு மகனுக்கு அழைத்தார் கேசவன்."நந்தா உங்க அம்மா சத்யா வீட்டுக்கு வர சரின்னு சொல்லிட்டா டா" என்றார் சந்தோசமாய்,"என்னப்பா? சொல்றிங்க?" என்றவன் காரினை மெதுவாய் செலுத்திய படி கேட்க,"நீ ஆபீஸ்ல சாப்பாடு வாங்கி தர சொல்லி சாப்பிட்டுக்கோ! இதை சொல்ல தான் போன் பண்ணினேன்" என வைக்க போனவரை "அப்பா" என அழைத்து தடுத்தான் நந்தா."சொல்லுடா "என்றார் கேசவன்."அப்பா சத்யாக்கு இன்னும் ஒன் மந்த்ல இந்த வருஷம் முதல் செமஸ்டர் எக்ஸாம் வந்துடும் அது முடிஞ்சதுக்கு அப்புறம் டேட் பிக்ஸ் பண்ணிக்கோங்க" என்றான்."ஆஹ்... ஓ.. சரிங்க சார்" என சிரித்த படி வைத்தார் கேசவன்.அவர்கள் வந்து பேசிய பிறகு கார்த்திக் நந்தாவுக்கு அழைத்தான்."அடேய் இப்பவே மாப்பிள்ளை முறுக்கு காட்டுறியா? ஏன்டா இன்னைக்கு வீட்டுக்கு வரல" என கார்த்திக் பொரிந்து தள்ள,"இல்ல மச்சான் ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருந்துச்சு" என் நந்தா கூறவும்,"ம்ம்ம்... அப்பாவும் சொன்னாங்க உங்களோட மார்க்கெட்டிங் டெக்னிக் எல்லாம் பயங்கரமா இருக்குனு நடத்துங்க நடத்துங்க" என கார்த்திக் சிரிக்க,"ஏன்டா? இப்ப என்ன புகழ்றியா இல்ல ஓட்டுறியா?" என சிரித்த படி நந்தா கேட்டான்."டேய் இப்பதான் நீ எங்க வீட்டுக்கு மாப்பிள்ளை. அதுக்கு முன்னாடி என் நண்பன் தான் டா ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்துட்டு போ" என கார்த்திக் கூற,எப்படிச் சொல்வன் அவள் இல்லாத வீட்டில் அந்த வெறுமை தன்னை இம்சிக்கிறது என்பதை,"ம்ம்ம்... வரேன் டா" என சலிப்புடன் கூற,"அடுத்த வாரம் சத்யா வரா, அதுக்கு முன்னாடி வந்துட்டு போ" என்றான் கார்த்திக்."அப்போ நானும் அடுத்த வாரம் வரேன்" என்றான் வேகமாய்,"அப்படி வாடி மாப்பிள்ள வழிக்கு.இப்ப பூனைக்குட்டி வெளியில வந்துருச்சா? சோ சத்யா இருந்தா தான் நீ வீட்டுக்கு வர அப்படித்தானே!"ஸஎன்றான்நந்தாவும்,சிரித்தபடி "அப்படித்தான்" என்றான்."சரி சொல்லு என்ன சொல்லிட்டு போனாங்க எங்க வீட்ல "என்றவன் கார்த்திக் அம்மா எதுவும்" என சங்கடமாய் நிறுத்திய நண்பனை எண்ணி,"ஒன்னும் சொல்லல டா, எதுவும் பேசல அவ்ளோ தான்.அம்மா கூட சங்கடப்பட்டாங்க என்ன இப்படி இருக்காங்கன்னு? என்றவன், ஆனா அதுக்கு சேர்த்து உங்க அப்பாவே பேசிட்டு போயிட்டாரு சோ நோ ப்ராப்ளம் நீ எதைப் பத்தியும் யோசிக்காமல் கல்யாணத்துக்கு ரெடியா இரு மாப்பிள்ள" என சிரித்த படி வைத்தான் கார்த்திக்.கார்த்திக் அப்படி சொல்லி வைத்ததும் சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தான் நந்தா.பின் வேகமாய் தன் வீட்டிற்குள் வர அப்போது தான் அவர்களுமே வந்திருக்க,அப்போது அந்த நேரத்தில் மகனை எதிர்பாராத கேசவன் "என்ன ஆச்சு நந்தா? எதுவும் எஸ்டேட்ல பிரச்சனையா?" என்றார்."ஒன்னும் இல்லப்பா சும்மாதான் வந்தேன்" என்றவன் அமைதியாய் தன் அன்னை அருகில் அமர்ந்திருந்தான்.தந்தையைப் பார்த்து "அப்பா எனக்கும் அம்மாவுக்கும் ஸ்ட்ராங்கா காபி ஒன்னு உங்க கைப்பக்குவத்துல" என கூற அப்போதே கேசவன் புரிந்து கொண்டார் ஏதோ அவளிடம் தனியாய் பேச விழைகிறான் என்பதை,"ம்ம்ம்" என்றவர் நகர,அருகில் அமர்ந்திருந்தவரை பார்த்து "அம்மா" என அழைத்தான்.'என்ன' என்பதாய் அவர் பார்க்க,"நான் உங்க மடியில படுத்துக்கட்டுமா" என கேட்கவும்,இது நந்தாவின் குணம் தான்.மகிழ்வோ கவலையோ அதனை கடக்க அவனுக்கு அன்னை மடி வேண்டும். சில நாட்களாய் காணாமல் சென்ற தருணம் மீண்டு வர, அதுவும் அவன் முகம் பார்த்ததும் அவருக்கு உள்ளுக்குள் ஏதோ உடைவது போலிருக்க,சட்டென அவன் படுக்க வாகாய் அமர்ந்து கொண்டார்.எதுவும் பேசாமல் அமைதியாய் படுத்திருந்தான் நந்தா."மா!"அவரும் அவன் முகம் பார்க்க,"என்மேல கோபமா இருக்கிங்க தானே எனக்கு தெரியும். ஆனா சத்யா என் உயிரோட கலந்துட்டாமா, எப்படி அவ மேல காதல் வந்துச்சு எனக்கு தெரியல, ஆனா அது என்னை இவ்ளோ தூரம் கொண்டு வரும்னும் தெரியல, ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா அம்மா" என்றவன் "நான் அவள இவ்வளவு லவ் பண்றேன்னு கூட அவளுக்கு தெரியாது மா. ஏன்னா நான் இதுவரைக்கும் அவ கிட்ட சொன்னதே இல்ல" என முடித்து வைத்தான்.'என்ன' என்பதாய் அதிர்வாய் அவன் அன்னையின் முகம் பிரதிபலித்தது."ம்ம்ம்... இதுவரைக்கும் நான் சொன்னதில்லை, ஏன் நான் அவள தனியா பார்த்தது கூட இல்லை" என்றவன், "சத்யா ரொம்ப நல்ல பொண்ணு மா.அவ பிறந்ததும் அவ பேரண்ட்ஸ் செத்ததுல சத்யாக்கு என்ன சம்மந்தம் சொல்லுங்க"என்றான்.அவனின் கேள்விகள் நியாயம் என்றாலும் கூட அவரின் முகம் இன்னும் கோபத்தில் இருக்க,"மா... நான் கார்த்திக்கிட்ட, அவ பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிருக்கேன் அவளுக்கு நீங்க ஒரு அம்மாவா இருப்பிங்கன்னு, மா நீங்க இருக்கனும்னு நானும் நினைக்கிறேன்,அண்ட் இருப்பிங்கன்னு எனக்கு தெரியும் என்றான்.அவன் அன்னை அதிர்வாய் அவன் முகம் காண,"மா ஐ நோ யூ "அண்ட் "எப்போவும் உங்களுக்கு எல்லாரையும் விட நான் தான் முக்கியம்ன்னு தெரியும். இப்போ நான் என்ற புள்ளியில் சத்யாவும் சேர்ந்துட்டா மா அவ்ளோ தான். ப்ளீஸ் எனக்காக" என தொடங்கவும் ,அவனின் பேச்சில் "நந்தா" என இதழ் திறந்தவரின் வாயினை மூடியவன் "நீங்க என்னோட அம்மா மா. உங்க ஒரே பையன் கல்யாணத்துல நீங்க இப்படி தான் இருப்பிங்களா அம்மா ப்ளீஸ்" என கெஞ்சிய மகனின் தலையை கலைத்து விட்டு, "ராஸ்கல் சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் உனக்கு வேணும்னா என்கிட்ட ஐஸ் வச்சே வாங்கிருவியே "என அவன் சிரிக்கவும்,"இப்போ நான் உள்ள வரவா?" என கேட்டார் கேசவன்."வரலாம்" என்றான் சிரித்துக் கொண்டே நந்தா.காபி கோப்பையோடு உள்ளே வந்த கேசவன் "அம்மாவும் பையனும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா? இனி என்னை டீல்ல விட்ருவிங்களே!" என சிரிக்க,"ம்ம்ம்... நாங்க அப்படி தான்" என்றவர் "நந்தா சீக்கிரம் சம்மந்தி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண புடவை நகை எல்லாம் எங்கே எப்படி எடுக்கிறது எல்லாம் கேட்டுவை?" என உள்ளே செல்ல,நந்தா சிரித்தபடி அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான்.'என்னடா பண்ணுன உங்க அம்மாவை?அவங்க வீட்ல அப்படி உக்காந்துட்டு வந்தா, இப்போ போன் பண்ணனும் சொல்லிட்டு போய்ட்டு இருக்கா"என செல்லும் மனைவியை பார்த்துக் கொண்டே கேசவன் கேட்க,"அப்பா அது ரகசியம்!"என சிரித்தபடி எடுத்தவன் அம்மா சொல்ற மாதிரி சீக்கிரம் சத்யா வீட்டுக்கு போன் பண்ணி விசாரிச்சு சொல்லுங்க!என அவரிடம் விட்டு நகர்ந்தான் நந்தா. 
எப்போதும் போல் ஜெல்லிட்டு வாரிய சிகை, ட்ரிம் செய்த தாடி இதழ்களில் ஒட்டிய கார்ப்பரேட் புன்னகை என அமர்ந்திருந்தான் வேதாந்த்.அங்கே பெரிய ப்ரொஜெக்டர் போன்ற அமைப்பில் காணொளிகள் ஸ்ரீதரை வைத்து செய்து கொண்டிருந்தான். சுற்றிலும் அக்குழும மேலதிகாரிகள் சூழ்ந்திருக்க,நடுவில் ராஜாவின் தோரணையில் வேத்."சொல்லுங்க ஸ்ரீதர் எப்போ நம்ம ரிசார்ட் ஓபன் பண்ணலாம்.""சார் இன்னும் கொஞ்ச நாள்ல பண்ணிடலாம். இன்டீரியர் ஒர்க்கும் ப்ரோஸஸ்ல இருக்கு" என பவ்யமாய் பதில் அளித்தான் ஸ்ரீதர்.அவன் சொன்ன பாங்கில் சிபி சிரிக்க அதனை கண்டு உறுத்து பார்த்தான் வேத்."இவர் கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பாது சிபி கண்ட்ரோல் பண்ணிக்கோ டா" என தன்னை தானே தேற்றி அமைதியாய் நின்றான் சிபி."வெல்..." என சற்று இடைவெளி விட்டு யோசித்தபடி இன்னும் சில நுணுக்கமான விஷயங்களை ஸ்ரீதருக்கு பரிந்துரைத்து விட்டு ஒரு தேதியைக் கூறி அன்னைக்கு ஓபன் பண்ணிடுங்க "டோன்ட் மேக் இட் லேட்" என்றவன் "இது எங்க அப்பா சம்பாதித்தாலும் நான் வேஸ்ட் பண்ண கூடாது இல்லையா அதுக்காக சொல்ல வந்தேன் ஹோப் யூ காட் இட் மிஸ்டர். ஸ்ரீதர்" என வைத்து விட, அங்கே காணொளியில் இருந்த ஸ்ரீதருக்கு வேர்த்து வழிந்தது எப்போது இந்த வார்த்தையை அவன் விடுவான் என,அங்கிருந்த அனைவரும் அவனை திகிலோடு பார்க்க விஜய் இதழ்கள் புன்னகை பூத்தது.தகப்பனாய் அவனின் குணத்தை அறிந்தவராக சிறு வயதிலிருந்து அவனின் குணம் இது!! ஏதோ ஒன்று அவன் மனதுக்குள் ஆள பதிந்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது மூழ்கி விடுவான்.அது வார்த்தை என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி என எண்ணி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவர் இன்னும் மாறவேயில்லை யா டா என்றதொரு பார்வையை மகன் மீது வீச,மெல்ல அவர் காதில் அருகில் குனிந்தவன் "நான் ஏன் மாறனும் எனக்காக வேணா இந்த உலகம் மாறட்டும்" என புன்னகையுடன் எழுந்து சென்றான் வேதாந்த்.நாட்கள் வேகமாய் நகர அன்று சத்யாவின் இறுதி தேர்வு என்பதால் கார்த்திக் அவளை அழைத்து வர கிளம்பி கொண்டிருந்தான்."கார்த்திக் இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு கல்யாணதுக்கு நீ பாட்டுக்கு அவ சொல்றான்னு அங்க இங்க கூட்டிட்டு போய்ட்டு இருக்காத, அங்க கிளம்பினா உடனே வீட்டுக்கு வரணும் புரிஞ்சதா" என தனம் சொல்லவும்,"அடடா! எதுக்கு இத்தனை தடவ சொல்ற தனம் அதெல்லாம் கார்த்திக் கூட்டிட்டு வருவான்" என சுவாமிநாதன் கூறிய படி நாற்காலியில் அமர்ந்தார்."ம்ம்ம்... சத்யா மாமியார் இப்போவே நாலு தடவ போன் பண்ணி சத்யா எப்போ வருவா? அப்படி இப்படினு போன் பண்ணிட்டாங்க. இதுல இவுக ஊரை சுத்திட்டு வந்தா அவங்க போன் பண்ணும் போது நான் என்ன சொல்ல?" என கேட்டவர் மீண்டும் மகனுக்கு ஆணயை பிறப்பித்த படி இருக்க,"மா போதும் இப்போ நீங்க என்னை விட்டா தான் நான் போய் அவள கூட்டிட்டு வர முடியும்" என அன்னையிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டிலிருந்து வெளியே வந்தான்.அவன் தன் வாகனத்தை செலுத்த தொடங்க அவன் அலைபேசி ஒலித்தது. நந்தா தான் அழைத்து கொண்டிருந்தான்.'வாடா வா' என எண்ணிய படி!சொல்லுங்க மாப்பிள்ளை சார்" என்றான் சிரித்து கொண்டே,"கார்த்திக் எங்க போய்ட்டு இருக்கா?" என்றான் நந்தா."எங்க போவேன் கோவையை நோக்கி தான்.எங்க வீட்டு மகாராணியை அழைத்து வர சொல்லி உத்தரவு" என்றான்."கார்த்திக்" என நந்தாவின் குரலில்,"சொல்லுங்க மாப்பிள சொல்லுங்க""டேய் விளையாடத டா "என்றான் நந்தா தீவிரமான குரலில்,"நான் சீரியசா சொன்னாலும் அவள கூப்பிட தான் போறேன்" என்றான் கார்த்திக்."ஓகே எங்க இருக்க இப்போ?""ஆன் தி வே""கார்த்திக்""என்னடா? ""கார்த்திக்""சொல்லு""கார்த்திக்!!""ச்சே போனை வச்சிட்டு போய்டு" என்றான் கடுப்பாய்,"கார்த்திக்" என நந்தா அழைக்க,எதுவும் சொல்லாது அமைதியாய் இருக்க,"என்னடா எதுவும் பேசாம அமைதியா இருக்க" என கேட்டான் நந்தா."எப்படியும் என் பேரை தான் ஏலம் விட போற பின்ன என்ன?" என்றான்."கார்த்திக்""சொல்லி தொலையேன்""ந... நான் போய் சத்யாவை கூட்டிட்டு வரேனே" என்றான்."ஏதேய் நீயா? விளையாடுறியா இன்னும் பதினாஞ்சு நாளுல கல்யாணம் டா. எங்க அம்மாவை விடு உங்க அம்மாக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்.""தெரிஞ்சா தானே!""வேணாம் நந்தா" என்றான் கார்த்திக்."கார்த்திக் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ டா. ந.. நான் அவ கிட்ட ஒழுங்கா பேசினது கூட இல்லை டா. இதுல லவ் மேரேஜ் வேற" என முணங்க,"நான் அவ அண்ணன் டா" என்றான்."அதுனால தான் வேற எதுவும் உன்கிட்ட சொல்ல முடியல" என நந்தா மீண்டும் முணங்க,"எதேய்!!!""கார்த்திக்" என மீண்டும் அழைக்க தொடங்க,"அச்சோ போய் கூட்டிட்டு வந்து தொலை டா" என்றவன் "அவ கூட பேசிட்டு என்னை கூப்பிடு நானே வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் "என அதற்கான மாற்று வழியும் கூற,"நண்பேன் டா" என வைத்தவனுக்கு அத்தனை படபடப்பு! அவள் வரும் நேரம் தெரிந்து கல்லூரி வாயிலில் நந்தா நின்றிருக்க, கடந்து வரும் பெண்கள் சிலர் அவனை ஆர்வமாய் பார்த்து செல்ல, அவனோ அவளுக்காக காத்திருந்தான்!!".
 
காதல் :10

நந்தாவை கடந்து சென்ற பெண்கள் எல்லாம் அவனை விழுங்கும் படி பார்த்திருக்க, அவனோ அவன் தேவதை பெண்ணின் வருகைக்காக காத்திருந்தான்.நீண்ட நேர காத்திருப்புக்கு பின் அவன் தேவதையின் தரிசனம்.

ஆலிவ் பச்சை நிற குர்த்தியோடு எழிலாய் வந்தவளை கண்டு நந்தா இதயம் நின்று துடித்தது. அவளின் குண்டு கன்னத்தில் தன் நாவினை அடக்கி ஒற்றை கண்ணை மட்டும் மூடி அவள் தோழியை துரத்தி அடித்தவள் இறுதியாய் சிரிக்க மொத்தமாய் வீழ்ந்து போனான் நந்தா.

தோழிகளுடன் பேசிக் கொண்டே வந்தவள் விழிகள் கார்த்திக்கை தேடி கொண்டே நடக்க, அவள் விழிகள் சூழல அங்கே நந்தா நின்று கொண்டிருக்கவும் சட்டென நின்றாள்.

அவனின் வருகை ஏன்? என்று புரியாது இவன் ஏன் வந்துருக்கிறான்? என்ற கேள்வி எழுந்தது பெண்ணுக்கு,
திருமணம் என முடிவான பின் இருவரும் நேரில் கூட பார்த்து கொள்ளவில்லை ஏன் அவனிடமிருந்து அலைபேசி அழைப்பு கூட இல்லை என்பதால்
இவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் இங்கே படிக்கிறார்களோ? என்ற எண்ணம் தோன்ற பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

யாரும் இல்லை என்பது உறுதியாய் தெரிய, கூடவே அவன் விழிகள் இவளை தவிர எங்கும் அசையவில்லை என்பதை உணர்ந்து கேள்வியாய் அவனை கண்டாள்.

'இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற நிலையில் ஒருவேளை என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறானோ!' என்ற எண்ணமும் தோன்றத்தான் செய்தது. உடனே கார்த்திக்குக்கு அழைத்தவள் "எங்க இருக்க டா அண்ணா ?" என்றாள்.

"சத்யா நான் வரல உன்னை கூப்பிட நந்தா தான் வந்திருக்கான்.உன்கிட்ட பேசணும் சொன்னான் உனக்காக தான் அங்க வந்து நின்னுட்டு இருக்கான் நீ அவன் கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணு" என கூறவும்,

"அண்ணா.. அப்பாகிட்ட கேட்டு" என இழுக்க,

"சத்யா அவன் உன்கூட பேசணும் சொல்றான் அதான்" என கார்த்திக் நிறுத்த,

"இல்லை" என சத்யா தொடங்க,

"அவன் கூட வந்துரு பின்ன நான் பிக்கப் பண்ணிக்கிறேன் "என கூறி வைத்துவிட,

"அ..."

"அண்ணா டேய்.. " என பெண்ணவள் சத்தமிட,அவள் விளிப்பில் எப்போதும் போல் நந்தாவிற்கு இதழ்கள் புன்னகை பூத்தது. இன்னும் கூடவே அவள் வரவை எதிர்பார்த்தது அவன் விழிகள்!!

'என்ன சொல்வது?' என திணறினாள் பெண்.

"போலாமா" என நந்தா கேட்க சரி என்பதாய் தலையசைத்தாள். வேகமாய் பின்னால் ஏற சென்றவளை தடுத்து நிறுத்தியவன் காரின் முன் கதவை திறந்து நிற்க,உள்ளே வந்தமர்ந்தாள் சத்யா.

கோவையின் பரபரப்பை தாண்டியது வாகனம், எங்கும் பசுமையும் அதையும் மீறிய குளுமையும் பெண்ணவள் மேனியை தழுவியது.

நந்தா விழிகள் அவளை பருகுவதும் பின்பு சாலையில் கவனம் வைப்பதுமாய் இருக்க, 'என்ன எதுவும் பேசாம அமைதியா வரான்' என சத்யா யோசிக்கும் போதே,அவளின் ஊருக்கு செல்லும் சாலையை விட்டு எதிர்புறமாய் வாகனம் செல்ல,

"வீட்டுக்கு அந்த பக்கம் போகணும்" என்றாள்.

"ஓ...அது தெரியாமலா இத்தனை வருஷம் கோயம்பத்தூர்ல படிச்சோம்" என்றவன் "ஒரு கப் காபி குடிக்கலாம் வா" என கூற,

"இந்த பக்கமா" என பெண்ணவள் கேட்க,

"ம்ம்ம்... இப்போ கொஞ்ச நாள் முன்ன இங்க ஒரு கிராண்ட் ரிசார்ட் ஓபன் பண்ணிருக்காங்க" என்றவன் அங்கே சென்று நிறுத்த,பெண்ணவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

எங்கும் தன் ஆடம்பரத்தை எளிமையாய் பறைசாற்றியது அந்த ரிசார்ட். அதனை கண்டு பெண்ணவள் விழிகள் ரசனையாய் உயர, அவள் முக பாவனை கண்டவன் "நல்லா இருக்கா? " என கேட்க,

'ஆமாம்' என்பதாய் வேகமாய் தலையசைத்தாள்.

"ம்ம்ம்... உனக்கு பிடிக்கும்னு தெரியும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.அது மட்டுமில்ல இங்க ஸ்விம்மிங் பூல் வித் வில்லா கூட தனி தனியா இருக்கு" என்றவன் அவள் கரங்களை பற்ற வர, அதனை உணர்ந்தும் உணராதது போன்று அவனுடன் நடந்தாள்.

அதனை கண்ட நந்தாவின் இதழ்கள் விரிய உள்ளே சென்றனர்.

இரவு நேர இலகுவான உடையில் தன் வீட்டின் உடற்பயிற்சி அறையில் நின்றிருந்தான் வேத்.எப்போதும் இந்நேரம் இரவு நேர கேளிக்கையில் இருப்பவன் இன்று செல்லாது தன்னை மீறிய நிலையில் கண்களை மூடிய படி அவன் பூஜங்களில் வியர்வை வழிய ஓடி கொண்டிருந்தவனிடம் அருகில் வந்தான் சிபி.

"ஸ்ரீதர் ஆன் லைன் பாஸ்" என கூற,

விழி திறந்தவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.அங்கிருந்த நீண்ட திரையில் அதனை இணைக்க புருவம் உயர்த்த,

"எஸ் பாஸ்" என்றவன் இணைக்கவும், காணொளி தொடங்கியது.

"எஸ் ஸ்ரீதர் ரிசார்ட்க்கு பீபிளோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?" என்றான் நேரடியாக,

"சார் இட்ஸ் ராக்கிங் நிறைய பேர் வராங்க, அதுவும் ஊட்டியை சுத்தி பார்க்க வரவங்க மட்டுமில்ல இங்க லோக்கல்ல இருக்கறவங்களும் தான்" என்றான்.

"ம்ம்ம்..."என்றவன் "ஸ்ரீதர் எப்போவும் அங்க வரவங்க எல்லாரையும் எங்கேஜ்ஜா வச்சிக்கற மாதிரி பாருங்க அண்ட் " என்றவனின் தொடுத்திரையில் அங்குள்ள எல்லா இடங்களும் சிசிடிவி மூலம் அவனுக்கு தெரிய,

அதனை புருவம் சுருக்கி பார்த்து கொண்டே வந்தவன் "ஸ்ரீதர் லெப்ட்ல இருக்க எண்ட்ரன்ஸ்ல பிளான்ட்ஸ் எல்லாம் மெஸ்ஸியா இருக்கு. அதை கொஞ்சம் நீட் டா அரேஞ் பண்ணுங்க அண்ட் தென் சேன்ஞ் தி கர்ட்டைன்ஸ் (curtains) லைட் கலரா போடுங்க" என்றான்.

"எஸ் சார்"

"ம்ம்ம்.." என்றவன் பார்வை மீண்டும் ஒரு முறை அணைத்து இடங்களிலும் சூழல விட்டு கொண்டே "தென் அடுத்த இன்வெஸ்ட்மென்ட் டார்கெட் என்னனு தெரியும்ல ஸ்ரீதர்? "என கேட்க,.

"எஸ் சார் நீங்க இங்க வரேன் சொன்னதுமே, இங்க எல்லாரும் ரொம்ப எக்சைட் ஆகிட்டாங்க சார். அதனாலயே நீங்க இங்க வரும் போது சைன் பண்ணிடலாம் இங்க இருக்க டீலர்ஸ்கிட்ட பேசிட்டேன்" என்றான்.

"இட்ஸ் சவுண்ட்ஸ் குட்" என கூறியவன் "கேரி ஆன் யூவர் ஒர்க்" என்றான்.

"சார்" என நிறுத்த,

'என்ன' என்பதாய் ஓர் பார்வை அவனிடம்!,

"ஹாப்பி பர்த்டே சார்" என ஸ்ரீதர் கூற,

சட்டென சிரித்தவன் தலையசைய்த்து ஏற்றான்.

"அதுக்கு இங்க சின்ன ஆரஞ்சுமென்டஸ் பண்ணிருக்கோம்" என்றான் ஸ்ரீதர்.

வேத்தின் விழிகள் சுருங்க,

"இன்னும் கொஞ்ச நேரத்தில கனெக்ட் பண்றேன் சார் "என்றவன் வைத்து விட,

"ஹாப்பி பர்த்டே பாஸ்" என்றான் சிபி.

ஒரு சின்ன சிரிப்பு மட்டுமே பதிலாய் அவனிடம், அவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் அவனின் அன்னை யமுனாவோடு முடிந்தது. எப்போதும் கேளிக்கைகளில் தன்னை தொலைப்பவன் அன்று மட்டும் எந்த நிகழ்வையும் ஏற்க மாட்டான். இன்றும் அப்படியே அவனின் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்தவன் தன் அறை நோக்கி செல்ல, அங்கே ஆளுயர அவன் அம்மாவின் நிழற்படம்.

அங்கேயே நின்றவன் கைகள் பாசமாய் அவர் முகத்தை தடவியது. சில நொடிகள் நின்றவன் பின் எதுவும் பேசாது அவனறைக்குள் புகுந்து கொண்டான்.
மகனின் செயலில் விஜய் பிரகாஷ் விழிகள் கலங்கியது. அவனை புரிந்து கொள்ள முயன்று தோற்று போனார். அவர் விழிகளும் நிழற் படத்தின் மீதே!அவரின் சரிபாதியை எண்ணவும் அன்றைய நாள் கண் முன்னால் வந்து போனது.

அன்று அவனின் பத்தவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஆர்ப்பாட்டத்துடன் கழிய, சற்று அமைதியாய் அமர்ந்திருந்தார் யமுனா.

"மாம்" என வேகமாய் ஓடி வந்தவன் அவரை அணைக்க, அவரும் மகனின் சிகை கோதி "வேத் கண்ணா" என அழைத்து, "இங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நான் உனக்கு திருஷ்டி சுத்தி போடுறேன்" என வீட்டில் வேலை செய்பவர்களை அழைத்து அதற்கு தேவையானவற்றை கொண்டு வர சொல்ல,

"மாம் ஐ ஆம் டையர்ட்" என வேத் மாடியிலிருந்து கீழே ஓட,

"வேத்"என யமுனா பின்னால் ஓடி வர எண்ணியவருக்கு திடிர் என தோன்றிய வலிப்பு நோயால் அவரால் தன்னை சமபடுத்த முடியாது படிகளில் உருள,

வேத் "மாம்" என ஓடி வரும் முன் தலையில் ஏற்பட்ட காயத்தால் நினைவிழந்து போனார் யமுனா.

வேகமாய் அவரை மருத்துவமனையில் சேர்க்க, யமுனாவை பரிசோதித்த மருத்துவர் "மிஸ்டர். விஜய் உங்களுக்கே தெரியும் அவருக்கு பேரண்டல் எபிலெபிசி(parental epilepsy)இருக்குனு, அதுனால ஏற்படுத்திய அதிர்வும் அவர் கீழே விழுந்ததால் அவரின் தலையில் அடிபட்டது என அனைத்தும் சேர்த்து அவரை சாவின் விளிம்பில் வைத்துள்ளது. வி ட்ரை அவர் லெவல் பெஸ்ட் (we will try our level best)" என சொல்லி சென்ற மருத்துவரால் எவ்வளவு முயன்றும் யமுனாவை பிழைக்க வைக்க முடியாது போனது.

அன்னையின் பிரிவில் சோர்ந்து, தன்னை சுருக்கி கொண்டான் வேத் . கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மீட்டு வந்த வேத் மீண்டும் இயல்பு நிலைக்கு வர வர குணநலன் எல்லாம் முற்றிலும் மாற, விஜய் பிரகாஷால் அதனை நம்ப முடியாது போனது.

வேதாந்த் வளர வளர இன்னும் இன்னும் தன்னை சுயம்பாய் வளர்த்து கொண்டான்.தான் செய்யும் செயல்களை தவறு என புரிந்ததால் தான் என்னவோ தன் கட்டுபாட்டை மீறிய நிலையில் அவனின் அன்னையின் அறைக்குள் நுழைய மாட்டான்.

ஏனோ அந்த குணம் மட்டுமே தன் மகனின் குணத்தை மீட்டு வரும் என எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு.

மெல்ல மனைவியின் முகத்தை பார்த்து கொண்டே தன்னை மீட்டவர் "யமுனா உன் பையன் என்னை இயல்பாக்க தன்னையே மாத்திகிட்டவன்" என்றவர் மனது தன்னால் தானோ என்ற எண்ணம் தோன்ற ஒவ்வொரு நாளும் தன் முகத்தை பார்த்து தன்னை தேற்றும் மகன் வந்து போனான்.

"ஆனாலும் உன்னுடைய இழப்பு என்னை விட அவனை ரொம்பவே பாதிச்சிருக்கு" என சட்டென சிரித்தவர் "அன்னைக்கு உன் பையன் என்கிட்ட கேக்குறான் டாட் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? யூ ஆல்சோ ஹவ் அ ஸ்ட்ரெஸ் சோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க " என மெல்ல அருகில் வந்து " டாட் ஐ டோன்ட் மைண்ட் ஷல் ஐ ரெபெர் சம் ஒன்" என கூறவும் அப்போது எதுவும் பேசாது வந்தவர் இப்போது அதை நினைத்து வாய்விட்டே சிரித்தவர்" யமுனா எனக்கு பயமா இருக்கு.எங்க வேத் இப்படியே இருந்துருவனான்னு, அவனுக்கு எல்லா உணர்வுகளுக்கும் ஒரு விலை இருக்கு. ப்ச் அவனுக்கு எப்படி சொல்வேன் உண்மை காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை" என மனைவியை பார்த்தவர் "அவனுக்கான காதலை அவனுக்கு காட்டு, காதல்னா என்னனு அவனுக்கு புரியனும், அந்த உணர்வோட ஆழம் அவனுக்கு தெரியணும். உன் பையன் வேத்தா மீண்டு வரணும்" என தன் சரி பாதி முன்னாள் என்று வேண்டிக்கொண்டார்.

அழகான இயற்கைக்கு நடுவே ஒரு மேசையினை பார்த்து "நாம அங்க போகலாம் வா" என நந்தா முன்னால் செல்ல,

"ம்ம்ம்.." என்றவள் அங்குள்ள அலங்காரத்தை ரசித்த படி அவன் பின்னால் சென்றாள்.

"என்ன சாப்பிடுற?" என நந்தா கேட்க,

"காபி "என்றாள்.

"இரு நான் போய் சொல்லிட்டு வரேன்" என நகர,

"ஏன் இங்க வந்து ஆர்டர் கேக்க மாட்டாங்களா?"

"உண்டு பட் இங்க இன்னொரு தனித்துவமும் இருக்கு?"

"என்ன? "

"இங்க உலகத்தில இருக்க பெஸ்ட் காபி கொட்டைகள் எல்லாம் டிஸ்பிலேவில் இருக்கும் அதை நம்ம சொன்னதும் அவங்க மேசர்மெண்ட் எடுத்து ரோஸ்ட் பண்ணி காபி போட்டு கொடுப்பாங்க" என்றவன் "சோ நான் உலகத்தோட பெஸ்ட் காபி உனக்காக ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்" என நந்தா எழ,

"நானும் வரேனே!" என சத்யா எழவும்,

"வேணாம் யூ ஜஸ்ட் ஸ்டே ஹியர்" என்றவன் அங்க அடுக்கி வைத்த பத்திரிகைகளை அவள் கையில் திணித்து விட்டு செல்ல,

ஏனோ அவன் செயல்பாடுகளில் தன்னை மீறிய புன்னகை அவளிடம்!மெல்ல அங்கிருந்த புத்தகங்களை புரட்ட, இறுதியாய் அவள் கையில் அந்த மாதத்தின் 'தி பிசினஸ் வேர்ல்ட் 'பிரதி அதனை திருப்ப, அதில் எழுதபட்டிருந்த டேக் லைனை கண்டு ஒரு முறை புருவம் உயர்த்தினாள். "அ ஸ்ட்ரோம் ஆன் தி வே டூ கோவை வித் இன் பிப்டின் டேஸ் (புயல் கோவையை நோக்கி வரவிருக்கிறது)" என எழுதபட்டிருக்க கீழே வேதாந்த்தின் புகைப்படம் வேறு,

"இந்த பிளே பாய்க்கு இவ்ளோ பில்ட் அப் பா " என அந்த கட்டுரையை வாசிக்க தொடங்கவும் தான் புரிந்தது இந்த ரிசார்ட் கூட அவனுடையது என்பதும் மேலும் அவன் வருவதே கோவையில் உள்ள புகழ் பெற்ற வணிக நிறுவனத்தையும் பள்ளிகளையும் தனதாக்கி கொண்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்பதே ஆகும்.

"இதெல்லாம் எப்படி இவனுக்கு கொடுக்குறாங்க என யோசித்தவள் இந்த கம்பெனி எல்லாம் அப்பா ஆடிட் பண்ற இடம் தானே! முதல்ல என்னனு கேட்கணும்" என எண்ணி கொண்டே அமர,

அவள் அருகில் ஒரு குடுவையை வைத்து சிப்பந்தி ஒருவன் நகர்ந்தான்.

"என்ன இது? "என்றாள் சென்றவனை தடுத்து நிறுத்தி,

"மேடம் இன்னைக்கு எங்க சி. இ. ஓக்கு பிறந்தநாள் அதான் சின்ன கேம்" என சொல்லி செல்ல, அப்போது தான் பார்த்தாள் அங்கிருந்த அனைவர் மேசையிலும் இருப்பதை,

"ஓ... இவனுக்கு இது வேறயா!" என என்னும் போதே காபி கோப்பையுடன் நந்தா வந்தமர்ந்தான்.

"என்னாச்சு?" என நந்தா கேட்க,

"ஒன்றுமில்லை" என தோள்களை குலுக்கினாள்.

"ஓகே காபியை குடி "என அவள் புறம் தள்ளி வைக்க,ஒரு மிடறு அருந்தியவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

அவள் நயனங்களின் பாஷையில் நந்தா பெண்ணவள் முகம் காண,

அவளோ 'என்ன' என்பதாய் புருவம் உயர்த்தி கேட்கவும்,

"சத்யா" என அழைத்தான் மெல்லிய குரலில்,

அவன் குரல் மாற்றத்தில் நிமிர்ந்து பார்த்தாள். அவன் விழிகளில் அத்தனை கிறக்கம்! பெண்ணவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்க,

'எதுவும் சொல்லிடுவானோ? அப்படி சொன்னா என்ன பண்றது?எப்படி ரியாக்ட் பண்றது?' என யோசித்த படி அமர்ந்திருக்க,

நந்தாவுக்கும் அவள் நிலைமை புரிய மெல்லிய இதழ் விரிப்பு அவனிடம்!அவளின் சுருள் கூந்தளில் அங்கு அங்கு சிலும்பிய முடிகளை ரசனையாய் தீண்டியது அவன் விழிகள்,ஒரு அழகான மௌனம் இருவரிடத்திலும்,

"சத்யா" என்றான் மீண்டும்,

சத்யா என்ன என்பதாய் நிமிர்ந்து பார்த்தாள். இப்போது அவன் இதயம் படபடக்க, தண்ணீரை அவன் புறம் தள்ளி வைத்தாள்.

நந்தா விழிகள் குறும்பில் மின்ன, "என்ன கிண்டல் பண்றியா?" என சிரித்து விட்டு "பட் இப்ப எனக்கு இது வேணும்" என்றவன் தண்ணீரை குடிக்க,

சத்யா சத்தமாய் சிரித்து விட, மெல்ல அவள் கரம் பற்றினான்.

அவள் விடுவிக்க பார்க்க,

"இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணம்" என்றான்.

"அ.. அதுக்கு"

"ஆனா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணவே இல்லையே!" என்றான் கவலையாய்,

என்ன இது அர்த்தமற்ற கேள்வி என்பதொரு பார்வை அவளிடம்!

"நான் உன்கிட்ட பேசணும் சத்யா" என்றான்.

'சொல்' என்பதாய் பார்த்தாள்.

"எனக்கு உன்ன அவ்ளோ பிடிக்கும் சத்யா. எவ்ளோனா சொல்ல தெரியல ம்ம்ம்...."என நிதானித்தவன் கைகள் அவன் உணர்வுகளை அவளிடம் கடத்த முயன்றது.

அவள் கரங்கள் நழுவ தொடங்க அதனை இறுக பற்றியவன் "என் கூடவே இருன்னு சொல்றேனே தவிர இந்த உலகத்தில் கூடுதலாய் எனக்கு எந்த ஆசையும் இல்லை சத்யா!" என்றான்.
 
அந்த வார்த்தை கொடுத்த உவகை, அவன் அன்பில் அவள் தான் விதிர்த்து போனாள். மௌனமாய் இருந்தவன்" ஐ லவ் யூ சத்யா!" என முடிக்கும் நேரம் அந்த ரிசார்ட்டின் தலைமை அதிகாரி என ஸ்ரீதர் பேச ஆரம்பித்தான்.

"லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன் ஹார்ட்லி வெல்கம் டூ அவர் ரிசார்ட்" என பேச தொடங்க, அனைவரின் கவனமும் அங்கே சென்றது.

"உங்களின் நேரம் எங்களுக்கும் முக்கியமானது தான். ஆனாலும் இங்கு சில நொடிகள் நான் எடுத்து கொள்ள விரும்புகிறேன்.இன்று எங்களின் சி.இ. ஓ திரு.வேதாந்த் விஜய் பிரகாஷ் அவர்களின் பிறந்தநாள் அதனை இன்னும் சிறப்பாக்க சில சலுகைகள் வழங்கி உள்ளோம். அதை இங்குள்ள அனைவரும் சிறப்பாக உணர்வீர்கள்" என ஆரம்பித்தவன் இன்னும் சில நொடிகள் பேசி விட்டு,

"உங்கள் அனைவரின் மேசையிலும் உள்ள குடுவையில் எண்கள் உள்ளது அதில் இன்றைய நாள் யாரிடமும் இருக்கிறதோ அவர் இங்கு உள்ள கேக்கினை வெட்டுவார் கூடவே அவருக்கு சிறப்பு சலுகைகள் உண்டு" என கூறியவர் "ஜஸ்ட் மேக் திஸ் பார் பன்" என முடிக்க,

அதனை எல்லாம் திரை வழியாய் பார்த்து கொண்டிருந்த வேத்தின் விழிகளும் அனைத்தையும் உள்வாங்கி கொண்டிருந்தது. எல்லா திசைகளிலும் உள்ள கேமராக்காள் அனைத்தையும் அழகாய் படம் பிடிக்க, அதில் நந்தா கரம் பெண்ணவளை பற்றி கொண்டு ஏதோ பேச முகம் தெரியாது போனாலும் ஸ்தம்பித்த நிலையில் பெண்ணவள் அசைவற்று இருந்ததை பார்த்து விட்டு,

"கோ டூ ஹெல்" என்றான் வேத் சத்தமாய், அன்னை இழந்ததும் தந்தையின் உணர்வுகளை பார்த்தே வளர்ந்தவனுக்கு, வெளி உலகத்தில் விஜய்யின் வெற்றி சிறப்பாய் இருந்தாலும் கூட வீட்டின்னுள் வந்ததும் அவன் அன்னையின் முகம் மட்டுமே பார்த்த படி அமர்ந்து விடும் அவர்!, பல நாட்கள் உணவை கூட உண்ணாது ஏன் அங்கு அவன் இருக்கிறான் "என்பதை கூட மறந்து அவர் உலகம் யமுனா என்ற நிலையில் மட்டுமே இயங்க தொடங்க,

இப்படியே நாட்கள் கடக்க,ஒருமுறை அவர்தன் சுயமிழந்து மயங்கி கிடக்க, அவனின் குடும்ப மருத்துவரை அழைக்க, வந்து பார்த்தவர் "மிஸ்டர். விஜய் உங்க ஹெல்த் உங்களுக்கு முக்கியம் இல்லயா, பாருங்க வேத் எப்படி பயந்து போய்ட்டானு, எனக்கு உங்க நிலைமை புரியுது ஆனாலும் அதற்கான தீர்வு இது இல்லையே!" என்றவர் "நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. உங்களுக்கு இன்னும் வயசாகல நீங்க நெனைச்சா அடுத்து "என தொடங்க,

விஜய்பிரகாஷ் சத்தமாய் சிரித்து விட்டு "வாட் யூ மீன் பை திஸ் டாக்டர்?" என சிரித்தவர், "எதுக்கு இன்னொரு கல்யாணம் செக்ஸ்க்காகவா அதெல்லாம் லஸ்ட் டாக்டர். நானும் யமுனாவும் வாழ்ந்தது லவ் ப்ச்.. சில உணர்வுகள் அவளுக்காக மட்டுமே!" என முடித்து வைக்கவும்,

அந்த மருத்துவர் "உங்கள மாதிரி ஆட்கள் பார்க்கும் போது தான் கடவுள் எவ்வளவு கொடுமையானவர்னு புரியுது" என அவர் தோளினை தட்டி விட்டு "வேத்காக மட்டுமாவது உங்கள மாத்திக்கோங்க "என கூறி சென்றார்.

அவரின் நிலையை கண்டவனுக்கு காதல் என்ற வார்த்தை கூட அவனுக்கு பிடிக்காமல் போனது.மெல்ல மெல்ல அவரை மீட்கவே தன்னை மாற்றி கொண்டான் வேத்.

வளர வளர பெண் என்பவளின் பங்காளிப்பு ஆணின் வாழ்க்கைக்கு எதற்காக தேவை என்பதை ஆணித்தனமாய் தவறாய் புரிந்து கொண்டான். அதனாலயே ஏன் மகன் என்பதையும் மீறி அவன் நேரடியாய் கூட" டேட் நவ் ஐ ஆம் கிரௌன் அப் அண்ட் ஐ நோ தி பீலிங்ஸ் ஒப் மேன் டூ (அப்பா நானும் வளர்ந்து விட்டேன் என்னால் ஒரு ஆணின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்)" என்றான்.

ஏதோ விவகாரமாய் சொல்ல போகிறான் என எண்ணி கொண்டே "சோ" என்றார்.

"டாட் வி ஹவ் அ சேம் ஹோர்மோன் ஆக்ஷன் அதுனால நான் என்ன சொல்றனா ஜஸ்ட் ஷேர் தி பெட் வித் கேர்ள்ஸ்" என மொழிய,

விஜய்பிரகாஷ் ஒருநிமிடம் திகைத்தவர் பின் சிரித்து கொண்டே "காதல், ஆன்மா" என பிதற்ற தொடங்க,

ஆம் அவரின் கூற்றெல்லாம் வேத்க்கு பிதற்றலாய் தோன்ற அதனை காதில் கூட வாங்காது நகர்ந்து விடுவான். ஆனால் இன்று காணொளியில் நந்தா, சத்யா கையினை பற்றி ஏதோ பேசி கொண்டிருக்க,

அதனை கண்டவன் தந்தையை போலவே எவனோ ஒருவன் பெண்ணிடம் பிதற்றுகிறான் என நந்தாவை பற்றிய எண்ணங்களில் இருந்தவனுக்கு எதிர்புறத்தில் இருந்தவள் "யார்? " என அறியும் எண்ணம் கூட இல்லை அவர்களை கண்டு "எமோஷனல் இடியட்ஸ்" என முணங்கியவனை,

காணொளியிலிருந்து வந்த கரகோஷ ஒலி அவனை மீட்க அவன் பார்த்தது நந்தா விழிகள் சந்தோசமாய் பெண்ணவளை காண,அவளோ கேக்கினை வெட்ட தொடங்கியிருந்தாள்.

"ஃபூவர் பெல்லொஸ்" என நந்தாவை எண்ணி பரிதாபம் கொண்டு எழுந்து குளியல் அறையில் புகுந்து கொண்டான்.
 
காதல் :11

நந்தா மகிழ்ச்சியின் எல்லையில் நின்றிருந்தான். இன்னும் இரு நாட்களில் திருமணம் என்ற எண்ணமே அவனை இலகுவாக்க, இன்று நலங்கு வைக்கும் நிகழ்வு!!.. வீட்டில் உள்ள அனைவரும் சென்றிருக்க அவன் மட்டுமே தனியாக வீட்டில் நேரத்தை கடத்தி கொண்டிருந்தான்.

எவ்வளவு முயன்றும் முடியாது போக கார்த்திக்கு அழைத்தான்.

கார்த்திக் அதனை ஏற்க,

"ஏன்டா இவ்ளோ லேட்டா போனை எடுக்குற?! இடியட்!!.." என நந்தா திட்ட தொடங்க,

"மாப்பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன். ஏன்டா நீ என்னமோ இப்போ தான் கால் பண்ற மாதிரி பேசுற, நொடிக்கு ஒரு தடவை பேசிட்டு இருக்க? இதுல இவுங்க போன் பண்ணதும் நாங்க எடுக்கலன்னு பேச்சு வேற?"

அவன் கூற்றில் நந்தா சிரித்து விட்டு," மச்சான்..." என அழைக்க,

"இப்போ என்ன டா?" என்றான்.

"சத்யா இல்ல நம்ம சத்யா..."

"ஆமா அதுக்கு என்ன டா? அவ பொறந்ததிலிருந்தே எனக்கு தெரியும். நீ அறிமுக படுத்தாத!!"என்றான் கடுப்பாய்,

"டேய்"

"யப்பா சொல்லி தொலைடா. வேலை கிடக்கு!! இப்பவே உன் மாமனார் என்னை மொறச்சு பாக்குறாரு!" என அங்கிருக்கும் நிகழ்வுகளை கண்காணித்து கொண்டே கார்த்திக் கேட்க,

"சத்யா" என தொடங்கிய நந்தாவை," டேய் முதலயிருந்து தொடங்காத டா.. முடியல எனக்கு" என கார்த்திக் கூறவும்,

"டேய் எனக்கு சத்யாவோட நலங்கு போட்டோஸ் எல்லாம் வேணும். அனுப்பி விடு, அவளோ தான்!!"என்றான்.

"இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். அதெல்லாம் முடிஞ்சதும் மொத்தமா தருவானுங்கடா..அப்போ பிரேம் போட்டு உன் வீடு முழுக்க மாட்டி விட்டு, ரசிச்சுக்கோ ராசா!!இப்போ போனை வச்சிட்டு போடா" என கார்த்திக் கூற,

"ப்ச்.. கொஞ்சம் கூட மனுஷன் பீலிங்ஸ் புரியாதவன்" என முனங்க,

"டேய் நான் அவ அண்ணன் டா!! எதுக்கு எடுத்தாலும் என்கிட்ட பேசி என் உயிர எடுக்காத டா" என கத்தி விட்டு வைக்க,

ஏனோ அவனின் திட்டு கூட நந்தாவுக்கு தேனிசையாய் தான் கேட்டது.

நந்தாவிடம் கத்தினாலும் சிரித்து கொண்டே அவன் சொன்னதை செய்து கொண்டு தான் இருந்தான் கார்த்திக்.


இரவின் கொண்டாட்டங்கள் தொடங்க பெண்ணவள் கைகள் இரண்டிலும் மெஹந்தி வரையப்பட, அதனை அப்படியே நகல் எடுத்து நந்தாவிற்கு அனுப்பி விட்டு கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் புகைப்படம் எடுப்பதை உணர்ந்து சத்யா முறைக்க,

"யம்மா நான் இல்ல.. அங்க ஒருத்தவன் இருந்து என் உசுர வாங்குறான்மா" என கூற,

கார்த்திக் யாரை சொல்கிறான் என புரிந்ததும் மெல்லிய இதழ் விரிப்புடன் அமர்ந்திருந்தாள் சத்யா.

அதுவும் அன்றைய நிகழ்விற்கு பின் சத்யாவின் மனது அவனை ஏற்க தொடங்கி இருந்தது. இது காதலா? என கேட்டால் அவளிடம் பதில் இல்லை.ஆனால் அவளின் சரிபாதியாய், தன் மீது அவன் கொண்ட நேசத்தின் பிரதிபலனாய் அவனை தன்னுள் பதிய வைக்க முயன்று கொண்டிருக்கிறாள்.'ப்ச் இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம்.இன்னும் உன் அண்ணன் பிரண்டா தான் பார்ப்பியா என்ன? கம் ஆன் சத்யா' என எண்ணி கொண்டவள் இதழ்களும் புன்னகை பூத்தது.

அவ்விரவின் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடித்து அனைவரும் செல்ல, எப்போதும் போல் ஊஞ்சலில் அமர்ந்து கைகளில் இருந்த மருதாணியை பார்த்தவள் முகத்தில் கலவையான உணர்வுகள்,'இத்தனை விரைவில் தனக்கு திருமணமா?' என மீண்டும் அந்த கேள்வி எழ, அவள் கண்களில் புன்னகையோடு குறும்பு கண்ணனாய் காதலை சொன்னவன் முகம் வந்து போக, முயன்று தன்னை மீட்டு கொள்ள மெல்லிய இதழ் விரிப்பு அவளிடம்!

"பாப்பா சீக்கிரமா தூங்கு டா, நாளைக்கு நிச்சயதார்த்தம் இருக்குல்ல" என அவள் சித்தப்பாவின் குரல் கேட்க,

"ஹான்.... பா "என்றவள் விழி மூட, அவளை கலைத்தது அலைபேசி,நந்தாதான் அழைத்திருந்தான்.

அட்டென்ட் செய்தவள்,

"ஹா...ஹலோ" என்றாள்.

"தூங்கிட்டியா?" என்றான்.

"இ..இல்லை "என்றாள்.

அவளின் தடுமாற்றத்தை ரசித்த படி "அட என்ன பட்டாசு நமத்து போய் வெடிக்குது" என்றான் சிரிப்புடன்,

அவள் அமைதியாக,

"ஏய்... பாப்பா ஆர் யூ ஓகே?" என்றான் பதட்டமாய்,

"உங்களுக்கும் பாப்பாவா நான்?"என அவள் கேட்க,

"பாப்பாவா நீயா? எனக்கா?நோ நெவர், அப்படி இருந்தா ப்ரப்போஸ் பண்ணுவேனா?இல்லை அடம் பிடிச்சு தான் இந்த கல்யாணம் பண்ணுவேணா?"என்றான்.

"அதுக்கு ரொம்ப கவலைப்படுறீங்க போலவே?"என்றாள் இலகுவாய்,

"இருக்காதா பின்ன, எத்தனை போராட்டம்? உன் அண்ணன், உன் சித்தப்பா, என் அப்பா அம்மா, முடிவா உன்னையும் சேர்த்து சமாளிச்சு ஷப்பா என கூறியவன் ஆனாலும் அன்னைக்கு ப்ரப்போஸ் பண்ணுனதுக்கு இன்னைக்கு வரைக்கும் பதில் இல்லை உன்கிட்ட சோ இப்போ சொல்லு" என்றான்.

"இப்போவா!"

"எஸ்..."

"வேணாம். அதான் நமக்கு கல்யாணமே ஆகபோகுதே!" என நிறுத்த,

"அதான் உன்கிட்ட கேக்குறேன் இப்போ சொல்லு, ஏன்னா எனக்கு உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றோமோனு தோணுது"என்றவன் குரலில் இருந்த வேற்றுமை புரிய,

"ஏன் இந்த மாதிரி?"என்றாள் அவளும் அவன் வருத்தம் போக்க,

அவளின் உணர்வை புரிந்தவன் போன்று,
"சரி இப்போ சொல்லு!! நான் காதலில் ஜெயிச்சு உன்னை கல்யாணம் பண்ணுனதா நினைச்சுக்குறேன்" என்றான்.

அவன் பேச்சில் சிரித்து விட்டு "ம்ம்ம்ம்..... கண்டிப்பா சொல்லனுமா?" என கேட்க,

"எஸ்..."என்றான் காதலாய்,

"அப்போ நேர்ல வாங்க சொல்றேன்" என்றாள் சிரிப்புடன்,

"இப்போவா?"என்றான்.

"எஸ்"என்றாள் அவனை போலவே!

"ம்ம்ம்... தென் ஓகே, ஜஸ்ட் கீப் வெயிட்டிங் பேபி "என வைக்க,

'என்ன செய்ய போகிறான்'என உணர்ந்தவள் மீண்டும் அவனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்காமல் போக, இனி என்ன செய்வது என தெரியாது அங்கும் இங்கும் நடக்க தொடங்கினாள்.

அதே நொடி அவள் அறை கதவை திறந்து உள்ளே வந்த கார்த்திக் அவள் முகத்தை பார்த்து நிற்க" என்ன அண்ணா?" என்றாள்.

"நந்தா என்ன சொன்னான்? "என கேட்கவும்,சத்யா முழிக்க,

"இடியட்.. இந்த நேரம் இங்க கிளம்பி வரான். வேணாம் சொன்னாலும் கேட்கலை" என நண்பனின் பிடிவாதம் நினைத்து திட்ட, பெண்ணவளோ தன் மீது அவன் கொண்ட நேசத்தின் அளவை எண்ணி பிரமித்து போய் நின்றிருந்தாள்.

சத்யா என கார்த்திக் அழைக்க,

"அ..... அண்ணா அது" என நின்றிருந்தவள், அவர்கள் இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையினை கூற,

கார்த்திக் யாருக்கு என பேசுவது என தோணாது நிற்க,

"அண்ணா" என்றாள்.

"விடு நீ சொன்னாலும் கேக்க மாட்டான்.வா அவன் வரும் வரை வெளிய உட்கார்ந்துக்குவோம்"என அமர்ந்து கொண்டனர்.

கண்களில் கண்ணீர் துளிகள் எல்லாம் அன்றைய நாளின் பிரதிபலிப்பு!! அவள் விழிகளில் நீர் வழிய அப்படியே நின்று கொண்டிருந்தவளை கலைத்தது யஷ்ஷின் குரல்,

"அம்மா" என்ற யஷ்ஷின் அழைப்பு அவளை மீட்டு நிகழ்காலத்திற்கு மீட்க,கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் கானல் நீராய் மறைய மகனை காண,அவனோ எப்போதும் போல் அவளை கட்டிலில் தேட ஆரம்பித்திருந்தான். யஷ் அப்படி தான் எப்போதும் அவனுக்கு அவள் வேண்டும். அதுவும் தூங்கும் போது கண்டிப்பாய் அவள் வேண்டும். மகனை பற்றிய எண்ணம் தோன்றியதுமே!அவனும் அப்படி தானே!என நினைக்க அவன் முகமும் நினைவடுக்கில் எழ, அப்படியே நின்றவளை கலைத்தது யஷ்ஷின் குரல்,


மீண்டும் அவனின் தேடுதலை உணர்ந்தவள் நந்தாவின் புகைப்படத்துடன் அவன் நினைவுகளையும் வைத்து பூட்டி விட்டு, வேகமாய் வந்து மகனை அணைத்து தட்டி கொடுக்க ஆரம்பித்தாள்.

யஷ்ஷின் உடல் ஜில்லிட்டு இருக்க, நிமிர்ந்து பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்க,எப்போதும் போல் கூர்கின் குளுமை ஜன்னல் வழியே உள்ளே நுழைய, "ப்ச் இதை கூட க்ளோஸ் பண்ணாம இருந்துருக்கேன்" என அறை ஜன்னலை மூட எத்தனிக்க,எதிர்புறமாய் தூரத்தில் அவன் நின்றிருப்பது போல் தோன்ற, இன்னும் கூர்ந்து பார்த்தாள்.அவனின் விழிகளும் அசைவின்றி அவள்புறம் தான் பார்த்து கொண்டிருந்தது.அவனின் கூர் விழிகள் எதிரில் இருப்பவரின் உணர்வுகளை எளிதாய் கடத்தி விடும் ஆயுதம். இதோ எங்கோ நின்று கொண்டு அதனை செயல் படுத்தும் அவன் திறனை எண்ணி எப்போதும் போல் இப்போதும் வியப்பு தான்!

எப்போதும் போல் வேத்தின் விழி மொழிகளை உணர்ந்தவள்," அவன் தான்!அவனே தான்!" உறுதிபடுத்தியவள் வேகமாய் வந்து படுத்து கொண்டாள்.


அதுவரை நந்தாவை பற்றிய எண்ணம் எல்லாம் எங்கோ போய் மீண்டும் மனம் செக்கிலிட்ட மாடாய் வேத்திடம் வந்து நின்றது.அவனை சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னால் தோன்ற, முயன்று தன்னை மீட்டவளை தூக்கம் கண்களை தழுவ,அவளையும் மீறிய நிலையில் தூங்கி போனாள்.

எங்கோ அவள் அலைபேசி அழைப்பதை உணர்ந்து விழிகளை திறக்க முயல, அப்போதும் முடியாது போனது.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, "ப்ச்.." என முயன்று கண்களை திறந்து அலைபேசியை காதில் வைக்க அனு தான் அழைத்திருந்தாள்.

"ஹலோ.." என்ற அனுவின் குரலில்,


"சொல்லு அனு" என்றாள்.

"மேம் தீபக் சார் மெயில் பண்ணிருக்காங்க" என்றாள்.

"யாரு? நவீன் அப்பாவா?" என்றாள்.

"ஆமா"

"அவரா அவர் எதுக்கு?" என்ற கேள்வி உதிக்கவே சட்டென எழுந்தமர்ந்தாள். நவீன் பொறுப்பு ஏற்ற பின் அவரின் தலையீடு என்பது இல்லை என்பதால் என்ன என்பதே புரியாத நிலையில், "என்னாச்சு அனு?"என்றாள்.

"மேம் நவீன் சார் அப்ராட் போய்ட்டாராம்" என,

"வாட்?எங்க?"

"அது தெரியல மேம்!"என்றாள்.

"சோ?"

"இன்னைக்கு அவர் வருவார்னு நெனைக்கிறேன்" என்றாள்.

"ம்ம்ம்... நான் யஷ்ஷை ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு வரேன். நீ பார்த்துக்கோ" என வைத்தவள் யோசனையில் மூழ்க, அப்போது தான் புலனம் வழியே நவீன் அவளுக்கு அனுப்பிய செய்தியை பார்த்தாள்.

"ஹாய் சத்யா... நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா யூரோப் கன்ட்ரிக்கு போக வேண்டிய வேலை வந்துடுச்சு சோ நான் கிளம்புறேன். டேக் கேர் அண்ட் யஷ்ஷும் பத்திரம்" என சொல்லும் போதே விமான பணி பெண்கள் அவனை அலைபேசியை வைக்க சொல்ல,

"எஸ்" என்றவன் குரலும் கேட்ட படி நிறுத்தபட்டது.

'நேற்றைய இரவு இங்கு இருந்தவன் இரவோடு இரவாக செல்ல வேண்டிய அவசியம் என்ன?' என்ற கேள்வி எழ, வேதாந்த் அதற்கு பதிலாய் வந்து நின்றான்.

அவனை தவிர வேறு யாராலும் இதனை நிகழ்த்தியிருக்க முடியாது. ஏன்?! முடியாது!! என்பது அவன் அகராதியிலேயே இல்லை என்பதை அவளை தவிர யார் முழுதாய் உணர முடியும். அவனின் ஆக்டோபஸ் விரல்கள் அவளை சூழ தொடங்கி விட்டது என எண்ணியவள் விழி மணிகள் உருள அவள் முயன்றும் தடுக்க முடியாது கண்ணீர் வழிந்தது.

எதுவாயினும் சமாளிக்க வேண்டும் என கடவுளை வேண்டி கொண்டே கிளம்ப தயாரானாள் சத்யா.
 
காதல் :12

நேற்றைய இரவின் தூக்கமின்மை அவள் நெற்றி பொட்டில் தெறிக்க, அதனை ஒதுக்கி விட்டு வேகமாய் கிளம்பி கொண்டிருந்தாள் சத்யா. இப்போது சில மாதங்களாய் தான் யஷ்ஷை ப்ளே ஸ்கூலுக்கு(மழலையர் பள்ளி)அனுப்புகிறாள். ராஜம் கூட நான் பார்த்துகொள்கிறேன் என சொல்லியும் சத்யா விடாது அனுப்பிருந்தாள். ஒற்றை பிள்ளையாய் இருப்பதால் அவன் மற்ற பிள்ளைகளுடன் பழக வேண்டும் என்பாதாலேயே இந்த முடிவை எடுத்திருந்தாள்.அவளின் சிந்தனைகள் அனைத்தும் அவளை மீறிய நிலையில் எங்கங்கோ செல்ல முயன்று தன்னை மீட்டு,


"யஷ்"என்றாள் சத்தமாய்,

அருகில் உள்ள பாலன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தவன்" மா" என ஓடி வர,

அவனை குளிக்க வைத்து கொண்டே "யஷ் அங்க உன் பிரண்ட்ஸ் யாரையும் எதுவும் செய்யாமல் சமத்தா இருக்கனும் சரியா?" என்றாள்.

"ம்ம்ம்.." என வேகமாய் தலையாட்ட, அவன் சிகையை கோதியவள் "தட்ஸ் மை பாய்" என கூற,

"மா" என தன் சிகைக்குள் தாயின் கைகளை மீண்டும் வைக்க,கண்கள் கரித்து கொண்டது அவளுக்கு, இதுவும் அவனின் குணம் தான். அவள் முடியாது என்று சொல்லியும் அவளை பிடிவாதமாய் தன் சிகையை கலைத்து விட சொல்லி அவன் நிற்கும் தருணங்கள் எல்லாம் வந்து போனது.

அவன் நினைவுகளில் மூழ்க போனவளை மீட்டது மகனின் குரல்,

"மா" என்றான்.

மெல்லிய இதழ் விரிப்புடன் அவன் சிகை கலைத்து விளையாடி கொண்டே அவனை தயார் படுத்தினாள்.

நேரத்தை பார்த்த படி வெளிய வந்தவள்,ராஜத்தை கண்டு தலையசைப்புடன் நகர, கேட் வரை சென்றவள் "கேஸ் ஆப் பண்ணினேனா இல்லையா தெரியலயே!" என எண்ணி கொண்டே "யஷ் இங்கயே நில்லு" என உள்ளே செல்ல,

கைகள் ரெண்டையும் கட்டி கொண்டு தோளில் சின்ன பை அணிந்து யஷ் நின்று கொண்டிருக்க,

அதே நேரம் சிபி எதிர் வீட்டிலிருந்து வெளியே வர, தனியாய் நின்ற யஷ்ஷிடம் வந்தவன்,

"ஹாய் "என்றான்.

யஷ் அவன் முகம் பார்த்து முறைத்து விட்டு திரும்பி கொள்ள,

"ஹாய் யஷ்" என்றான் மீண்டும்,

அவனோ எதுவும் பேசாது அமைதியாய் நிற்க,

"நாம நேத்து பார்த்தோமே சாம்ப் அதுக்குள்ள அங்கிளை மறந்துட்டியா?" என்றான்.

'அதுக்கு என்னடா' என்பதை போல் ஓர் பார்வை மட்டுமே யஷ்ஷிடம்.

"சாக்லேட் தரவா?" என சிபி கேட்க,

"தேவையில்லை.. அம்மா ஸ்ட்ரேஞ்சர்ஸ் எது கொடுத்தாலும் வாங்க கூடாது சொல்லிருக்காங்க" என்றான்.


"நான் ஸ்ட்ரேரேஞ்சர்ஸ் இல்லை" என சிபி சொல்லும் போதே,

"அவங்கள விட மோசமானவங்க" என சத்யா வந்தவள் சிபியை முறைக்க,


அவள் வருகையை கண்டதும்" மேம்" என்றான் தடுமாறி,

"பாருங்க மிஸ்டர். சிபி இவன் என்னோட பையன். அவனுக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துப்பேன். நீங்க எல்லாரும் அவன் கிட்ட இருந்து தள்ளி இருந்தா போதும்" என தன் வாகனத்தை கிளப்பி கொண்டு செல்ல,

"பாஸ்" என்றான் சட்டை பையில் காணொளியில் இருந்த விஜய் பிரகாஷை பார்த்து,


"எஸ் சிபி" என்றார் அலைபேசியில் இருந்த விஜய் பிரகாஷ்.அவரின் எண்ணங்கள் எல்லாம் கடைசியாய் அவளை பார்த்த தினம் கண் முன்னால் வந்து போனது. கலங்கிய விழிகளுடன் அவள் நின்ற தோற்றமும், இவர் சொன்ன சொல்லுக்கு எதிர் பேச்சு பேசாது சென்றவள் நினைவுகள் எல்லாம் நிழற்படமாய் கண் முன்னால் விரிந்தது.

"பாஸ்" என்றான் சிபி மீண்டும்,

"என்னடா?" என்றார்.

"மேடம் விட்டா என்னை அடிச்சுருப்பாங்க" என்றான் சலுகையாய்,

"மேடம் அடிக்காட்டி என்ன? உன் பாஸ் மேலேயிருந்து உன்னை தான் பார்த்துட்டு இருக்கான்.. அவன் அடிப்பான்" என்றார் சிரிப்புடன்,

"பாஸ் "என அலறி திரும்ப, அவனோ பால்கனியிலிருந்து கைகள் இரண்டையும் கட்டி கொண்டு சற்று முன் வேத் நின்ற தோரணையில் நின்றபடி செல்லும் அவளையே பார்த்த படி நின்றிருந்தான்.

யஷ்ஷை பள்ளியில் விட்டு வேகமாய் சத்யா உள்ளே வர, அங்கே தீபக் அமர்ந்திருக்க,

"குட் மார்னிங் சார்" என்றாள் சிரிப்புடன்,

"வா வா சத்யா குட்டி பையன் எப்படி இருக்கான்?அவனையும் அழைச்சிட்டு வந்திருக்காலமே!" என்றார்.

"அவன் இப்போ ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டான் சார்".

"ஓ.. அவளோ பெருசாயிட்டாரா!" என கேட்க,

"ஆமா இப்போ எல்லாம் அவனே அப்படி தான் சொல்லிக்கிறான்" என்றவள் "என்ன சார் இவ்ளோ தூரம்?" என்றாள்.நவீன் பொறுப்பு ஏற்ற பின் அவரின் வரவு முற்றிலும் நின்றே விட்டது. இப்போது திடீர் என்று நவீன் வெளிநாட்டு பயணமும் அவரின் விஜயமும் எதற்கு என்பது போல் பார்த்தாள்.

"சத்யா நீ இங்க ஆடிட்டர் மட்டுமில்ல.. நானோ நவீனோ இங்க வராமல் பிசினஸ் சக்ஸஸா போய்ட்டு இருக்குனா அதுக்கு முழு காரணம் நீ தான்.எனக்கு அதுவும் தெரியும்" என நிறுத்தியவர்,"இனி நம்ம கம்பெனி பெரிய பெரிய ரீச்சாக நமக்கு ஒரு வாய்ப்பு வந்துருக்கு" என நிறுத்த,

சத்யாவால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றும் இதெல்லாம் யாரால் என்றும் புரியத்தான் செய்தது. ஆயினும் மனம் ஒரு ஓரத்தில் அப்படி இருக்கக்கூடாது என வேண்டுதலை வைத்த படி அவரை பார்க்க,

அவர் முகமோ மகிழ்ச்சியில் விகசித்துருந்தது."சத்யா தி பேமஸ் இண்டஸ்ட்ரியலிஸ்ட் வேதாந்த் நமக்கு இன்வெஸ்ட்மென்ட் பண்ண ஓகே சொல்லிட்டாரு. இதெல்லாம் நான் கனவுல கூட யோசிச்சது இல்லை.இனி நம்ம கம்பெனி ஷேர் மார்க்கெட் எல்லாம் எங்கயோ டாப்ல போக போகுது" என்றவர் "ஆனா அதுக்கெல்லாம் உன்னோட உதவி வேணும். உனக்கே தெரியும் என்னால அடிக்கடி இங்க வர முடியாது. நவீன் வரும் வரைக்கும் நீ தான் இங்க எல்லாம் பார்த்துக்கணும்"என்றார்.

அவர் முகம் பார்த்து சரி என்பதாய் தலை அசைத்தவள் உள்ளுக்குள் அவள் மனமோ வேதாந்தின் வருகையை எப்படி எதிர்கொள்வது என யோசிக்க தொடங்கியது.

இருவரும் பேசி கொண்டிருக்க "குட் மார்னிங் மேம் "என உள்ளே நுழைந்தாள் அனு.

"அனு நீயும் வந்துட்டியாமா!" என வேதாந்தின் வருகையை பற்றி கூற,

"வாட் தி கிரேட் வேதாந்த் விஜய் பிரகாஷா!!" என சத்தமாய் கூற,

"ஆமா மா" என்றவர்," அவர் வர நேரமாச்சு நான் முன்னாடி போய் என்னன்னு பாக்குறேன்" என கூறி செல்ல,

அனுவோ இன்னும் யோசனையில் இருக்க,

"ஏய் அனு என்ன இப்போ? எதுக்கு இப்படி நிக்கிற?" என்றாள் சத்யா.

"மேம் வேதாந்த் சார் மேம் "என்றாள்.

"அதுக்கு" என்றபடி அன்றைய அலுவலை பார்க்க தொடங்க,

"மேம் நான் எல்லாம் அப்படி ஒரு கம்பெனில தான் வேலை பார்க்கனும் நினைச்சேன் தெரியுமா!என் கால கிரகம் இப்படி ஒரு கம்பெனில வந்து மாட்டிகிட்டேன். ஆனாலும் கடவுள் இருக்காரு மேம்!! இருக்காரு!! இல்லைன்னா..." என்றவள் ஒற்றை கையை மேலே தூக்கி வைத்து," அவரு இங்க இருக்கார்", மற்றொரு கையினை கீழே இறக்கி" நாம இங்க இருக்கோம், நம்மால அங்க போக முடியுமா? முடியாது. அதனால அவரே நம்ம தேடி இங்க வந்துட்டாரு மேடம்.அச்சோ இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன் தெரியலயே!"என அனு குதிக்கவும்,

அவளை ஏற இறங்க பார்த்து கொண்டே" புலம்பி முடிச்சுட்டேன்னா... கொஞ்சம் போய் அந்த எக்ஸ்போர்ட் பைலை எடுத்துட்டு வா" என்றாள் சத்யா.

"மேடம் என்ன நீங்க இன்னைக்கும் வேலை வேலைன்னு?.. "என்றாள் சலிப்பாய்,

"அனு "என சத்யா அரட்டும் போதே, வேதாந்தின் வருகையை அங்கிருப்பவர்களின் பேச்சு சத்தம் சொல்ல, அனு வேகமாய் தன் கையிலிருந்த பையில் உள்ள சிறு கண்ணாடியில் முகத்தை பார்த்து கொள்ள, சத்யாவிற்கு தலையில் அடிக்காதகுறை தான்.

தீபக் முன்னால் வர அவர் பின்னால் வேத் வர,கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்தாலும் அவன் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்து கொண்டவள் நிமிர்ந்து அவனை காண, தன் வேக எட்டுகளுடன் வந்து அவள் முன்னால் நின்றிருந்தான் வேதாந்த்.

வேத்தின் பார்வையின் போக்கை கண்டதும் உடனே தீபக்," சார் இது சத்யா. எங்க கம்பெனி ஆடிட்டர் என்னோட பொண்ணு மாதிரி, அவங்க தான் இங்க நானோ நவீனோ வர வேண்டிய அவசியம் இல்லாம எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க" என்றார்.

"ம்ம்ம்ம்..."என்றவன் கண்ணில் உள்ள கூலர்ஸை கழட்டி வைத்து விட்டு" ஓ..." என அவளை நேர் பார்வை பார்த்து "நைஸ் டூ மீட்டிங் யூ மிஸ்?"என நிறுத்த,

"அச்சோ அவங்களுக்கு பையன் இருக்கு சார்" என்றாள் அனு.

"ஓ... இஸ் இட்" என அனுவை பார்த்து கூறிவிட்டு" சாரி மிஸஸ் சத்யா" என்றான்.இதழ்களில் இகழ்ச்சியாய் புன்னகையுடன் கைகளை அவன் நீட்ட பெண்ணவளோ கைகளை குவித்து "வெல்கம் சார் "என்றாள்.

அவனின் புன்னகையை மற்றவர்கள் உணராமல் இருந்தாலும் அவளால் உணர முடிந்தது. இது அவனின் தீவிர மனோபாவத்தின் எதிரொலி. நேற்றைய இரவு கண்டிப்பாய் அவனுக்கும் தூங்கா இரவாய் தான் முடிந்திருக்கும். ஆயினும் இன்றைய விஜயமும் தோரணையும் அவனின் முடிவை சொல்லாமல் சொன்னது.இது அவனின் இன்னொரு முகம் அவள் மட்டுமே நன்கு உணர்ந்த முகம் என எண்ணிய போதே அவளை மீட்டது அவன் குரல்!

அவன் புருவம் ஏறி இறங்கி தோள்களை குலுக்கி விட்டு "தென் மிஸ்டர். தீபக் என்னோட கேபின் எது?"என கேட்க,

"என்ன கேபினா? அப்போ இங்கயே தான் இருக்க போறிங்களா சார்?" என அனு கேட்ட கேள்வியில்,

"எஸ்.... மிஸ்... "என நிறுத்தி விட்டு "மிஸ் தானே!" என வேத் கேட்க,
"ஆமா ஆமா நான் மிஸ் தான் "என அனு வேகமாய் கூறி,
"உங்க பெயர்?"என புருவம் சுழிக்க,
"அனுரேகா.... எல்லாரும் அனுன்னு சொல்லுவாங்க "என்றாள்.
"ஓ... "என வேத் நிறுத்த,
தீபக் உள்ளே வந்து "சார் உங்க கேபின் அங்க இருக்கு "என கூறவும்,
மெல்லிய தலையசைப்பை அனுவிற்கு மட்டும் கொடுத்து விட்டு நகர்ந்தான்.

அவன் சென்ற மறுநொடி சிபி உள்ளே நுழைய, அதனை எதிர்பாராத அனு வேகமாய் திரும்ப சிபி மீதே மோதி நின்றாள்.

"ஏய்" என சிபி தலையை தடவி கொண்டே நிமிர,

"சாரி சாரி" என அனு கண்களை மூட, அவளை கண்டதும் சிபி இதழ்கள் "மேனாமினுக்கி" என முணுமுணுத்தது.

அனுவோ அவன் கூற்றில் நிமிர்ந்து "இவனா!" என்பதாய் பார்க்க!

"நானே தான்!" என்பதை போல் சிரித்த படி நின்றிருந்தான் சிபி.

"ப்ச்... ரூம்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரனும்.அறிவு இல்லை?"என்றாள்.

"அதை நீ சொல்லாத.. நல்லா பொதிமாடு மாதிரி இருந்துகிட்டு என் மேல வந்து மோதுற"என சிபி தொடங்க,

இங்கே நடக்கும் நிகழ்வின் எந்த பிரதிபலிப்பும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருந்தாள் சத்யா.

மனதில் கலவையான எண்ணங்கள் எல்லாம் அணிவகுக்க அமர்ந்திருந்தாள். உள்ளம் மட்டும் வேதாந்த்தின் விழி மொழியையும் உடல் மொழியையும் பற்றிய சிந்தனையில் மூழ்கியது.

சிபி அனு இருவரின் சண்டையும் சற்று எல்லை மீற அந்த சத்தத்தில் விழிகளை திறந்தாள்.

"ஏய் நீ பண்ணினது தான் தப்பு!" என்றான் சிபி.

"ஆமா இவரு பெரிய சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். வந்துட்டாரு தீர்ப்பு வழங்க!" என்றாள் அனு.

இருவரையுமே நன்றாக தெரியும் என்பதால் "இதென்ன சிறுபிள்ளை போல் சண்டை போட்டு கொள்கிறார்கள்?" என சத்யா புரியாது பார்க்க,

"ஏய் நீ இங்க என்ன பண்ற? இது என் ஆபீஸ்" என்றாள் அனு.

"ஓ... அப்படியா!அப்போ நவீனுக்கு நீ யாருமா? "என நக்கலாய் கேட்டவனை கண்டு அனு முறைத்து விட்டு,

"அது உனக்கு தேவையில்லாத ஒன்னு மிஸ்டர் "என அனு தொடங்க,சத்யாவின் குரல் அவளை தடுத்தது.

"அனு என்ன இது?" என கேட்டதும்,

"மேடம் நான் ஒன்னும் "என தொடங்க,

"போதுமே!" என சத்யா அவளிடம் கூறி விட்டு சிபியை பார்க்க,

அதுவரை அவனிடம் இருந்த உடல் மொழி முற்றிலும் மாறி நின்றான் சிபி.

'என்ன?'என்பதாய் சத்யா பார்க்க,

"இல்லை பாஸ் என்னை விட்டுட்டு வந்துட்டாரு "என்றவன் பதிலாளிக்க,

"அப்படியா!" என்றதொரு வியப்பு அவளிடம்!

"ஆமா" என்பதாய் தலையசைத்தான் சிபி.

"நெக்ஸ்ட் கேபின்" என்றாள் சத்யா.

சரி என்பதாய் சத்யாவிற்கு தலையாட்டி விட்டு அனுவை முறைத்து கொண்டு சென்றான் சிபி.

"இங்க என்ன நடக்குது அனு? எதுக்கு அவர் கிட்ட அப்படி நடந்துகிட்ட?"என்றாள் சத்யா.

"மேம் அவனை எல்லாம் பெரிய ஆளா பேசாதீங்க, அவனெல்லாம் பிட் அடிச்சு பாஸ் பண்ணினவன்" என்றாள் கடுப்பாய்.

"அவர் யாருன்னு தெரியுமா, உனக்கு?"


"ஏன் தெரியாம?இவன் என்னோட ஸ்கூல்ல தான் படிச்சான். அப்புறம் எங்கயோ ஓடிப்போயிட்டான்.பின்ன அவனை இப்ப தான் பாக்குறேன்" என்றாள் கடுப்பாய்,

"ப்ச் நான் அப்படி சொல்ல வரல அனு. இவர் தான் வேதாந்தோட ரைட் ஹாண்ட் பி. ஏ எப்படி வேணுமானாலும் சொல்லலாம்" என சத்யா கூற,

"யாரு இவனா?"என்றாள் ஆச்சர்யமாய்,
"எஸ்... சோ இனி அவர எங்க பார்த்தாலும் மரியாதையா பேசு.இப்போ போய் வேலையை பாரு" என்றாள்

"இவனெல்லாம் எப்படி இப்படி ஆனான்? ஒன்னும் புரியலயே!"என்றவள் சிந்தனையில் சிபி வந்தமர்ந்து கொண்டான்.


தன் அறையில் அமர்ந்திருந்த வேத்க்கு தான் என்ன செய்கிறோம் என்பது மட்டும் புரியவேயில்லை. அவனை எதிர்பார்த்து ஒரு சாம்ராஜ்யமே காத்து கொண்டிருக்க, அவனோ இந்தியாவில் எதோ ஒரு மூலையில்,' ப்ச்... எல்லாம் யாருக்காக? அவ அவளுக்காக மட்டுமே!இன்னும் நீ மாறலை வேத்' என எண்ணும் போதே, வேதாந்த்தின் நினைவுகள் எல்லாம் சற்று முன் பார்த்த சத்யாவிடமே தேங்கி நின்றன.

அவள் மீதான அத்தனை கோபமும் அவள் விழி அசைவில் ஒன்றுமில்லாமல் போக தன் மீதே அவனுக்கு கோபம் எழ, "இடியட்... எதுக்கு இப்படி பீல் பண்ற? கமான் வேத்!! பி நார்மல்!அவளை பார்த்ததும் எதோ சின்ன பையன் மாதிரி உள்ளுக்குள்ள ஹார்ட் பீட் எல்லாம் சிம்போனி வாசிக்குது.இதான் இதுனால தான் அவளுக்கு அவ்ளோ திமிரு, அவளுக்கு எல்லாம் பழைய வேதாந்த் தான் சரி... எஸ்...அவளே உன்கிட்ட வர மாதிரி செய், செய்யனும்! இல்லன்னா.. நான் என்ன வேதாந்த் விஜய்பிரகாஷ்?" என தன்னையே தன்னிடம் போராடி மீட்டு கொண்டிருந்தான் அந்த தீரா காதலன்!!!
 
காதல் :13

சிபியின் நினைவுகள் எல்லாம் அவனின் பள்ளி பருவத்திற்கு சென்று வந்தது. பள்ளியின் இறுதியிலும் வாலிபத்தின் முதல் படியிலும் இருப்பவர்களுக்கு உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள் எல்லாம் சிபிக்கும் தொடங்கி இருந்தது.
"டேய் உன் ஆளு வர்றா டா" என நண்பன் ஒருவன் கூற, வேகமாய் பரபரப்பாய் தன் சிகையைக் கோதி கொண்டவன் அவள் வரும் வழியை பார்த்துக் கொண்டிருக்க, வாயில் எதையோ அரைத்தபடி வந்து கொண்டிருந்தாள் அனு.
"இன்னைக்காவது சொல்லித் தொலைடா" என நண்பன் சிபியை விட்டு நகர,
"ம்ம்ம்..." என தன்னை தயார் படுத்தி, டியூஷன் முடித்து வந்து கொண்டிருந்தவளின் எதிரில் நின்றான் சிபி.
'இந்த மாடு ஏன் இப்படி நிக்குது?' என முணுமுணுத்து கொண்டே அவனை தாண்டி செல்ல,
"அனு" என்றான்.
'என்ன' என்பதாய் பார்த்தாள்.
"ந.. நான்... "என தொடங்கியவன் "இந்தா!" என கையில் ஒரு பேப்பரை திணித்துவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்.
அடுத்த நாள் காலையில் அவள் பதிலுக்காக வருகையை எதிர்பார்த்து பள்ளியின் வாயிலில் நின்று கொண்டிருக்க,நண்பன் ஒருவன் அவனை தலைமையாசிரியர் வர சொல்லவும் உள்ளே சென்றவன் திகைத்து நின்று விட்டான்.
அங்கே அவனது தந்தை மட்டும் அல்லாது அனுவின் தந்தையும் சேர்ந்து நின்று கொண்டிருந்தனர்.
"அப்பா அவன் தான் "என அனு கூற,
"சரி டா பாப்பா நீ பயப்படாத"என்றவர் "இந்த மாதிரி பையனெல்லாம் முதல் வேலையா ஸ்கூல விட்டு அனுப்புங்க சார்!! இல்லன்னா புள்ளைங்க எல்லாம் கெட்டு போய்டுவாங்க.அதுவும் என்னோட பொண்ணு எல்லாம் குழந்தை மாதிரி சார் அவளுக்கு எதுவும் தெரியாது. அவளுக்கே லவ் லெட்டர் குடுத்து இருக்கான்!? இவன என்ன செஞ்சா தேவலாம் சொல்லுங்க!"என முறையிட,
சிபியின் தந்தையோ, சிபியை கண்டு," என்ன?" என்பதாக கேட்க வேகமாய் தலையை குனிந்து கொண்டான் சிபி.
"பாருங்க சார் செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி நிக்கிறான்னு?" என அதற்கும் அனுவின் தந்தை வாதாட,
'இந்தாளு என்ன லூசா? நானே எங்கயும் போக முடியாம?குறுக்கு சந்துல நிக்கிற மாதிரி இங்குட்டும் போக முடியாம அங்குட்டும் போக முடியாம நிக்கிறேன்.இந்தாளு மீண்டும் மீண்டும் வந்து என்கிட்ட மோதறாரு' என பாவமாய் அவரைக் காண,
"பாருங்க சார் நல்ல பையன் மாதிரி பாவமா பாக்குறான். என் பொண்ணை பாருங்க சார் நல்லா படிக்கிற பொண்ணு சார்.முதல்ல அவனுக்கு டீசி கொடுங்க இல்ல எங்களுக்கு டீசி கொடுங்க "என அவர் சத்தம் போட,
"சார், என் பையனுக்கு டிசி வாங்கிக்கிறேன்" என சிபியின் தந்தை சொல்லவும், அனைத்தையுமே ஒரு நொடி பொழுதில் முடித்து அந்த பள்ளியை விட்டு வந்து விட்டான் சிபி.
இறுதியாய் செல்லும் முன் அவளைப் பார்த்தவன் இதழ்கள் தானாய் "சரியான மேனாமினுக்கி" என, அங்கே நின்ற அவள் அருகில் சென்றவன், "இந்த ஸ்கூல விட்டு போறது கூட கவலையா தெரியல போயும் போயும் உனக்கு லவ் லெட்டர் கொடுத்து அதுக்காக போறேன் பாரு! அதுதான் எனக்கு கேவலமா இருக்கு.." என கூறி செல்ல அப்படியே ஸ்தம்பித்த நிலையில் நின்று விட்டாள் அனு.
அன்று அவளை கண்டது தான் அதற்கு பின் இப்போதுதான் அவளை காண்கிறான்.
அவளுடைய எண்ணங்களிலேயே வேத்தின் முன்னால் யோசனையுடன் நிற்க,அதுவரை சத்யாவை பற்றிய எண்ணங்களிலே சுழன்றவன் அவன் முன்னால் ஏதோ யோசித்து கொண்டு நின்ற சிபியை கண்டு புருவம் சுருக்கினான்.
சில மணி துளிகள் சென்றாலும் எதுவும் பேசாது நின்றவனை கண்டு "சிபி"என அழைக்க,
அப்போதும் அவனுக்கு அனுவை பற்றிய எண்ணங்கள் தான்.
"சிபி" என மீண்டும் அழைக்க, அப்பொழுதும் அவன் மீளாது போக, அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான் வேத்.
அலைபேசியின் ரிங்கடோனின் ஒலியில் மீண்டவன் யாரென பார்க்கவும் வேத்தின் எண் என்று புரிந்ததும் நிமிர்ந்து பார்த்தவன்" பாஸ் நீங்க எனக்கு கால் பண்ணிட்டு இருக்கீங்க"என்றான் சிபி.
"ஓ... "என்ற வேத்தின் புருவம் உயரவுமே!அச்சோ அந்த மேனாமினுக்கி நெனைப்புல நம்ம இவர் கூப்பிடறதை கவனிக்கல போலவே! ஏற்கனவே கோவமா இருந்தவரு இப்ப என்ன செய்ய போறாருன்னு தெரியலையே!' என பாவமாய் முழிக்கவும்,
"எதுக்கு டா இந்த லுக்கு?"என்றான் வேத்.
"இன்னைக்கு காலையில என்னை விட்டுட்டு வந்துடிங்க நீங்க?" என்றான் குறையாய்,
"சரி நீ என்ன பண்ணின?"
"ந... நான் ஒன்னும் பண்ணலையே!" என்றான்.
"ஆஹான்" என வேத் கூற,
"இல்லை பிக்பாஸ் தான் "என சிபி தொடங்க,
அவனை கை நீட்டி தடுத்தவன்" பாரு சிபி எந்த உறவையும் தானா நம்ம போய் திணிச்சுக்க முடியாது. அதுவா வரணும்" என வேத் நிறுத்த,
'இவர் எப்ப இவ்வளவு நல்லவரானாரு!' என்பது போல் சிபி அதிர்வாய் காண,
"இல்லை நம்ம வரவைக்கணும்" என வேத் முடிக்கவும்,
'அதானே பார்த்தேன்' என உள்ளுக்குள் எண்ணியவன்" எஸ் பாஸ்"என்றான் பவ்யமாய்,
அவனை பார்த்து சிரித்து விட்டு" சரி அந்த தீபக்கு கால் பண்ணு" என்றான்.
"யாரு நவீன் அப்பாவா?"
"ம்ம்ம்..."
"சரி! "என அவருக்கு அழைக்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் முன் நின்றார்.
"சார்... சொல்லுங்க சார்"என்றான்.
"உட்காருங்க "என அமர்ந்தவரிடம் "மிஸ்டர். தீபக் எனக்கு உங்களோட பைனான்சியல் ஸ்டேட்டஸ் பத்தி இன் அண்ட் அவுட் தெரியணும். யூ நோ நான் இன்வெஸ்ட் பண்ண போற அமௌன்ட் எனக்கு விஷயம் இல்லை. வி. பி குரூப் ஒரு இடத்தில இன்வெஸ்ட்மென்ட் பண்ணும் போது அதோட மார்க்கெட் வேல்யூ இன் டாப் ஒப் தி வோர்ல்ட்ல இருக்கும்."
"எஸ்... எஸ் ஐ நோ ஐ நோ" என்றவருக்கு தெரியாதா அவனின் வருகையை தெரிந்தவுடனே!எத்தனை அழைப்புகள் எத்தனை விசாரிப்புகள் எல்லாம் வேதாந்த் என்னும் மாயையால் வந்த விளைவுகள் தான் என்று, அதனால் தானே என்ன ஏது என்று கேளாமல் வேத் சொன்ன ஒரு வார்த்தைக்காக நவீனை இரவோடு இரவாக அனுப்பி வைத்தார்.
"என்ன மிஸ்டர். தீபக் என்கிட்ட சொல்றதுல எதுவும் இஷ்யூஸ் இருக்கா?" என வேத் கேட்ட தோரணையில்,
"அச்சோ அப்படி இல்லை இருங்க" என உடனே சத்யாவிற்கு அழைக்க தொடங்கினார்.
சிபி சென்ற நொடியில் இருந்து அனு அவனை பற்றிய எண்ணத்திலேயே சுற்றி கொண்டிருக்க,
அதனை கண்ட சத்யா," என்ன அனு இன்னும் நார்மல் ஆகலையா நீ? சீக்கிரம் நான் சொன்ன டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பார்மட் பண்ணி அனுப்பிவிடு"என சொல்லி கொண்டிருக்க,
அனு சத்யா அருகில் வந்தவள் "அச்சோ மேம் அமைதி அமைதியோ அமைதி, இன்னைக்கு என்னை விட நீங்க தான் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க" என்றவள் அவளின் தலையில் மாட்டியிருந்த கிளட்சை கழட்டி விட்டு "பாருங்க இன்னும் உங்க தலை ஈரமா இருக்கு. நீங்க இப்படியே இருந்தா உங்களுக்கு கோல்டு வரும்.உங்களுக்கு வந்தா என் குட்டி ஹீரோகும் வரும். அப்படி வந்தா என் மனசு தாங்குமா? "என கூறி தன் இருக்கையில் அமர்ந்தாள் அனு.
சில நேரங்களில் நமக்காக அக்கறைப்படும் உறவுகள் தான் வாழ்க்கையை ரசிக்க செய்கின்றன என எண்ணம் எழ, அனுவை பார்த்து சிரித்து விட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்க போனவளை தடுத்து நிறுத்தியது தீபக்கின் அழைப்பு. அதனை சத்யா ஏற்கவும்,
"அம்மாடி சத்யா கொஞ்சம் கேபினுக்கு வந்துட்டு போ மா "என அழைக்கவும்,
"எஸ் சார்" என எழுந்தவள் அவர்கள் இருக்கும் அறையினை தட்டி உள்ளே செல்ல,
"வாம்மா.. சார் கேட்குற டீடெயில்ஸ் எல்லாம் சொல்லிடு மா" என கூற,
"எஸ் சார் "என்றவள் தீபக் அருகில் இருந்த நாற்காலியில் அமர, அவள் வந்தது முதல் அவளை மட்டுமே துளைத்தது அவனின் விழிகள். அவனின் ஊடுருவும் விழிகளை உணர்ந்தாலும் அவன் பக்கம் திரும்பாது "எஸ்" என்றாள்.
"நத்திங் மிஸ் "என ஆரம்பித்தவன் அவள் பார்த்த பார்வையில்" சத்யா" என நிறுத்தி விட்டு தீபக்கின் மொத்த கணக்கு வழக்குகளையும் கேட்க தொடங்க, அனைத்தையும் ஒன்று விடாது கூறி கொண்டிருந்தாள்.
"அப்போ டாக்ஸ் எல்லாம் என்ன அடிப்படையில கொண்டு வந்துருக்கிங்க?"என கேட்க,
அவளோ அவன் கேட்ட விவரங்களை தேடி எடுத்தவள்" சார் "என அவன் பக்கம் அவளின் மடிக்கணினியை தள்ள,
அதனை வாங்கி பார்த்தவன் புரியாத பாவனையை முகத்தில் காட்ட,
'அவனுக்கா புரியாது?' இருப்பினும் என எண்ணி முறைத்து கொண்டே "எனிதிங்க்" என கேட்டாள்.
"வுட் யூ எக்ஸ்ப்ளெயின் ஹியர் "என கேட்க வேறு வழியின்றி எழுந்தவள் அவனருகில் அமர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.
அவர்கள் வேலையில் மூழ்க, மெல்ல தலையசைப்புடன் தீபக் வெளியேற, அவர் சென்றதுமே வேத் பார்த்த பார்வையில் "ஓ..." என சிபியும் நகர, அவளை பார்த்த படி இருந்தான் வேத்.
சில நொடிகள் நகர அவளின் சுருள் கூந்தல் முகத்தில் தவழ, அதனை ஒதுக்கி விட்டு எதோ ஒரு உந்துதலில் அவனிடம் விவரங்களை கூறி நிமிர்ந்து பார்த்தாள்.அவள் பார்த்த நொடி அவனோ மிக தீவிரமாய் மடிக்கணினியை பார்த்த படி இருந்தான்.
மீண்டும் அவள் தொடர ஆணவன் விழிகள் அவள் சுருள் கூந்தல் மீது தான். அவிழ்ந்த கூந்தல் அவனின் ஆழ்மனதின் காதலை மெல்ல தட்டியது. மீண்டும் அவள் முகத்தில் படர துணிந்த முடிகளை சீராக்க விழைந்த கைகளை முயன்று அடக்கியவன். இதற்கு மேல் முடியாது என "ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை சைட்" என்றான்.
அவளோ வேலையில் மூழ்கி இருந்தவள் அவன் கூற்றை கவனிக்காது போக,
"நான் சொன்னது கேட்கலயா வெளிய போ"என்றான்.
"வாட்?"என அவள் எழ,
"எஸ்... ஜஸ்ட் கோ அவுட் "என்றான்.
"ந... நான்" என தொடங்கியவள் அவன் முகம் பார்த்த படி வெளியே செல்ல, அடுத்த நொடி அவனும் அவ்வறை விட்டு சென்று இருந்தான்.
எத்தனை விரைவாய் முடியுமோ அத்தனை விரைவாய் தன் அறைக்குள் வந்தவன் ஷவரை திறந்து அப்படியே நின்று விட்டான்.
கண்களை இறுக்க மூடி கொண்டவனுக்கு சற்று முன் அவள் சுருள் கூந்தல் அலைபாய அவள் வந்த தோற்றம் கண்ட நொடி அவன் எண்ண அலைகள் செல்லும் திசை அறிந்து திணறி தான் போனான் ஆணவன்.என்ன முயன்றும் அந்நிலையை கையாள தெரியாது ஓடி வந்த தன்னை நினைத்தவன் 'ஷிட் வேத் இது நீயா? அவளை பார்த்ததும் அவ உனக்கு செஞ்சது எல்லாம் மறந்துட்டு இப்படி உருகி குலையுற!பெண்களை அறியாதவானா நீ?'என கேட்ட தன் மனசாட்சியிடம் என்ன சொல்வான். அவளால் மட்டுமே என் நுண்ணிய உணர்வுகளை எழுப்ப முடியும் என, அவிழ்த்து விட்ட கூந்தலுடன் அவள் வந்து நின்ற தோற்றம் எல்லாம் அவளோடு கலந்த நினைவுகளை சொல்லி சென்றது என்பதை!அவள் அருகில் வந்த அந்த நொடி சுற்றம் மறந்து அவளை களவாட துடிக்கும் கைகளை முயன்று மீட்டு வந்தான் என்பதை!உணர்வுகள் எல்லாம் உள்ளே பேயாட்டம் போட "சத்யா, சத்யா என சுவற்றை குத்தியவன் யூ மஸ்ட் பே பார் திஸ் என்னை என்கிட்டவே கெஞ்ச வைக்கிற டி நீ? "என கண்களை மூடியவன் விழிகளில் சதிராட்டம் ஆடி கொண்டிருந்தாள் பெண்.
எத்தனை மணி துளிகள் அப்படியே கடந்தனவோ!மெல்ல மீண்டு தன் சிகை கோதிய படி பால்கனியில் நின்றான். மெல்ல வீசிய காற்று அவன் முகத்தில் மோதியது.அவன் உணர்வுகள் எல்லாம் சிதறி கிடக்க அந்த ரம்மியமான சூழலில் மெல்ல கட்டுக்குள் கொண்டு வந்தான்.
அவனை கலைப்பது போன்ற சிரிப்பொலியில் நிமிர்ந்து பார்க்க, எதிரில் யஷ் விளையாடி கொண்டிருந்தான்.
"தாத்தா நீங்க ஒழுங்கா விளையாட மாட்டேங்கிறீங்க" என சிரித்து கொண்டே அவன் அடித்த பந்து இவர்களின் வீட்டுக்குள் விழ,
அவனின் வயதிற்கு இந்த வேகம் வேத்தை புருவம் உயர செய்ய,அவன்புறம் சென்ற பார்வையை முயன்று பிரிக்க முயன்றான். அவளே சொல்லாத உறவை வேத் சொல்ல விழையவில்லை. ஆயினும் உள்ளுக்குள் தோன்றும் நுண்ணிய உணர்வு சிதறல்கள் எல்லாம் அவனை யஷ்ஷிடம் இழுத்து சென்றது.
கேட்டின் அருகில் பாலனுடன் யஷ் நின்று கொண்டிருக்க, உள்ளே வர அங்கிருந்த காவலாளியிடம் அனுமதி கேட்டனர்.அவனோ வேத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என கூறும் போதே,
"லீவ் தெம்" என்ற வேத்தின் குரலில் "எஸ் சார் "என கதவை திறந்து விட, உள்ளே மான் குட்டியாய் ஓடி வந்தான் யஷ்.
வேகமாய் பந்தினை தேட, பந்தை எடுத்த வேத் அதனை இடது கையால் அடிக்க, அதே போன்றே யஷ்ஷும் திருப்பி அடித்தான்.
பாலன் இருவரையும் வியப்பாய் பார்த்து என்ன நினைத்தாரோ "நீங்க விளையாடுங்க" என கூறி விட்டு "யஷ் பாட்டி பால் கேட்டா நான் வாங்கி கொடுத்துட்டு வரேன்"என கிளம்பி செல்ல,
"நானும் வரேன் தாத்தா "என்றான் யஷ்.
"இல்லை யஷ் நீ இவர் கூட விளையாடிட்டு இரு, தாத்தா இப்போ வந்துடுறேன்" என நகர,
"நானும்" என அவர் பின்னால் சென்றவனின் கையை பிடித்து தடுத்து விட்டு,
"ஏன் என் கூட விளையாண்டா தோத்துடுவேனு பயமா?" என்றான்.
"நோ நான் தோற்க மாட்டேன்" என சீறி நின்றான் யஷ்.
"ஓ... அப்போ பார்க்கலாமா?"என கேட்க,
"எஸ்" என்றவன்" தாத்தா நீங்க போங்க நான் வின் பண்ணிட்டு வரேன்" என யஷ் கூறவும்,
அவன் பேச்சில் வேத்திடம் ஒரு புருவ உயர்தல் மட்டுமே!
"லெட்ஸ் பிளே" என கூறிய படி பந்தினை அடிக்க தொடங்க, யஷ்ஷுமே லாவகமாய் தன் வயதுக்கும் மீறிய ஆட்டம் தான் ஆடினான்.
வேத் கிளம்பியதுமே சிபி அவனை தேடி விட்டு எதிரில் தென்பட்ட அனுவிடமும் வாங்கி கட்டிக்கொண்டு புலம்பிய படி வீட்டுக்குள் வந்தான்.
அங்கே வேத்தும் யஷ்ஷும்மாய் சிரித்து கொண்டு விளையாடுவதைக் கண்டு அப்படியே நின்று விட்டான்.
"நீயும் லெப்ட் ஹாண்ட்டா?" என கேட்டு கொண்டே வேத் திருப்பி அடிக்க,
யஷ் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தோள்களை குலுக்கி "எஸ்" என பந்தினை திரும்பி அடிக்க,
அவனின் செயலில் தன்னையும் மீறி வேத் அவனிடம் வந்து கட்டி கொள்ள,
"டோன்ட் டச் மீ, இன்னைக்கு இது போதும். நான் போறேன்" என யஷ் நகர,
"அடேய் ரொம்ப பண்ற டா" என மீண்டும் கட்டி கொண்டவன் மனதில் அப்படியொரு ஆழ்ந்த நிம்மதி!!
யஷ் நகர "ஓகே இப்போ போ,தென் டெய்லி வா விளையாடலாம். இன்னும் நிறைய நீ கத்துக்கணும், நான் சொல்லி தரேன்" என்றான்.
அவனை விட்டு சற்று தள்ளி நின்றவன் யோசிப்பது போல் பாவனை காட்டி" ஓகே என்னை விட கொஞ்சம் பெட்டரா தான் விளையாடுறீங்க, சோ அம்மாகிட்ட கேட்டு நானும் வரேன்" என கூற,
"உங்க அம்மாகிட்டயா!"என வேத் கேட்கவும்,
"எஸ் "என்றான்.
"வேணாமே" என்றான் வேத்.
"ஏன்?" கேள்வியோடு யஷ் புருவம் சுருக்க,
"ஏன்னா உங்க அம்மான்னா எங்க பாஸீக்கு பயம் அவ்வளவுதான்" என சிபி கூறவும்,
வேத் சிபியை முறைக்க,
"அப்படியா பட் எங்க அம்மா ரொம்ப ஸ்வீட் தான்" என்றான் யஷ்.
"அவ ஸ்வீட் தான், அது என்னை விட யாருக்கு நல்லா தெரியும்" என முணுமுணுக்க,
காதல் :13


சிபியின் நினைவுகள் எல்லாம் அவனின் பள்ளி பருவத்திற்கு சென்று வந்தது. பள்ளியின் இறுதியிலும் வாலிபத்தின் முதல் படியிலும் இருப்பவர்களுக்கு உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள் எல்லாம் சிபிக்கும் தொடங்கி இருந்தது.

"டேய் உன் ஆளு வர்றா டா" என நண்பன் ஒருவன் கூற, வேகமாய் பரபரப்பாய் தன் சிகையைக் கோதி கொண்டவன் அவள் வரும் வழியை பார்த்துக் கொண்டிருக்க, வாயில் எதையோ அரைத்தபடி வந்து கொண்டிருந்தாள் அனு.

"இன்னைக்காவது சொல்லித் தொலைடா" என நண்பன் சிபியை விட்டு நகர,
"ம்ம்ம்..." என தன்னை தயார் படுத்தி, டியூஷன் முடித்து வந்து கொண்டிருந்தவளின் எதிரில் நின்றான் சிபி.

'இந்த மாடு ஏன் இப்படி நிக்குது?' என முணுமுணுத்து கொண்டே அவனை தாண்டி செல்ல,

"அனு" என்றான்.

'என்ன' என்பதாய் பார்த்தாள்.

"ந.. நான்... "என தொடங்கியவன் "இந்தா!" என கையில் ஒரு பேப்பரை திணித்துவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவள் பதிலுக்காக வருகையை எதிர்பார்த்து பள்ளியின் வாயிலில் நின்று கொண்டிருக்க,நண்பன் ஒருவன் அவனை தலைமையாசிரியர் வர சொல்லவும் உள்ளே சென்றவன் திகைத்து நின்று விட்டான்.

அங்கே அவனது தந்தை மட்டும் அல்லாது அனுவின் தந்தையும் சேர்ந்து நின்று கொண்டிருந்தனர்.

"அப்பா அவன் தான் "என அனு கூற,

"சரி டா பாப்பா நீ பயப்படாத"என்றவர் "இந்த மாதிரி பையனெல்லாம் முதல் வேலையா ஸ்கூல விட்டு அனுப்புங்க சார்!! இல்லன்னா புள்ளைங்க எல்லாம் கெட்டு போய்டுவாங்க.அதுவும் என்னோட பொண்ணு எல்லாம் குழந்தை மாதிரி சார் அவளுக்கு எதுவும் தெரியாது. அவளுக்கே லவ் லெட்டர் குடுத்து இருக்கான்!? இவன என்ன செஞ்சா தேவலாம் சொல்லுங்க!"என முறையிட,

சிபியின் தந்தையோ, சிபியை கண்டு," என்ன?" என்பதாக கேட்க வேகமாய் தலையை குனிந்து கொண்டான் சிபி.

"பாருங்க சார் செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி நிக்கிறான்னு?" என அதற்கும் அனுவின் தந்தை வாதாட,

'இந்தாளு என்ன லூசா? நானே எங்கயும் போக முடியாம?குறுக்கு சந்துல நிக்கிற மாதிரி இங்குட்டும் போக முடியாம அங்குட்டும் போக முடியாம நிக்கிறேன்.இந்தாளு மீண்டும் மீண்டும் வந்து என்கிட்ட மோதறாரு' என பாவமாய் அவரைக் காண,

"பாருங்க சார் நல்ல பையன் மாதிரி பாவமா பாக்குறான். என் பொண்ணை பாருங்க சார் நல்லா படிக்கிற பொண்ணு சார்.முதல்ல அவனுக்கு டீசி கொடுங்க இல்ல எங்களுக்கு டீசி கொடுங்க "என அவர் சத்தம் போட,

"சார், என் பையனுக்கு டிசி வாங்கிக்கிறேன்" என சிபியின் தந்தை சொல்லவும், அனைத்தையுமே ஒரு நொடி பொழுதில் முடித்து அந்த பள்ளியை விட்டு வந்து விட்டான் சிபி.

இறுதியாய் செல்லும் முன் அவளைப் பார்த்தவன் இதழ்கள் தானாய் "சரியான மேனாமினுக்கி" என, அங்கே நின்ற அவள் அருகில் சென்றவன், "இந்த ஸ்கூல விட்டு போறது கூட கவலையா தெரியல போயும் போயும் உனக்கு லவ் லெட்டர் கொடுத்து அதுக்காக போறேன் பாரு! அதுதான் எனக்கு கேவலமா இருக்கு.." என கூறி செல்ல அப்படியே ஸ்தம்பித்த நிலையில் நின்று விட்டாள் அனு.

அன்று அவளை கண்டது தான் அதற்கு பின் இப்போதுதான் அவளை காண்கிறான்.

அவளுடைய எண்ணங்களிலேயே வேத்தின் முன்னால் யோசனையுடன் நிற்க,அதுவரை சத்யாவை பற்றிய எண்ணங்களிலே சுழன்றவன் அவன் முன்னால் ஏதோ யோசித்து கொண்டு நின்ற சிபியை கண்டு புருவம் சுருக்கினான்.
 
Status
Not open for further replies.
Back
Top