சிபி சத்யா கிளம்பியது தெரிந்ததும் அடித்து பிடித்து வந்தவன், இருவரையும், இடையில் நின்ற யஷ்ஷையும் கண்டு அவர்கள் அருகில் வர,
அதனைக் கூட கண்டு கொள்ளாது செல்லும் அவளைக் கண்டு, "ஓ... அது என்ன அத்தனை கஷ்டமான கேள்வியா என்ன?" என்றான் சிரிப்புடன்.
எத்தனை எளிதாய் கேட்டு விட்டான். இது தான் அவன் குணம்..! முன்னால் நிற்பவர்களின் மனதை குத்திக் கிழிக்கும் மூர்க்கம். ‘ப்ச், சத்யா டோன்ட் கிவ் அப்!’ என கண்களை மூடிக் கொண்டவள், முயன்று தன்னை மீட்டு,
"ஏன் சொல்லலாமே!" என்றவள் "யாரா இருக்கும், நீங்களே சொல்லுங்களேன்…!" என யோசித்த பாவனைக்குச் சென்று "ஒருவேளை நீங்க எப்போவும் சொல்றது போல, நந்தாவா இருக்குமா? இல்ல…" என சத்யா தொடங்க,
"சத்யா…!" என அவள் அருகில் வந்தவன், அவள் கழுத்தை பற்றி அப்படியே சுவற்றில் சாய்த்து, “நீ என்னை வெறுப்பேத்துறேன்னு உன்னக் கேவலபடுத்துறடி!" என அவளை இன்னும் இறுக்க,
"பாஸ்" என சிபியும், "மா" என யஷ்ஷும் அருகில் ஓடி வர,
முயன்று தன்னைக் கட்டுப்படுத்தியவன்,
"குழந்தையை கொண்டு போய், அவங்க வீட்ல விட்டுட்டு வா சிபி." என்றவன், அவளைத் திரும்பியும் பார்க்காது உள்ளே சென்று விட,
அத்தனை நிகழ்வுகளையும் தாண்டி, அவள் முகம் புன்னகை பூத்தது. அவனை பற்றி அறியாதவளா அவள்! ஏனோ அவனின் ரௌத்திரம், அவளின் ஆழ் மனதை அமைதியடையச் செய்ய, குழந்தையுடன் நின்ற சிபியிடம் யஷ்ஷை வாங்க,
"மேம், நான் கூட்டிட்டு வரேன்." என்றான்.
"தேவையில்லை…" என்றவள் வாங்க முற்பட,..
"மேம் ப்ளீஸ்…" என்றான்.
அதற்கு மேல் வாதாட விருப்பமின்றி, அவன் முன்னால் செல்லவும்,
அதே நேரம் நவீனும் வேத் வீட்டினுள் வர, அந்த நேரம் அவனை அங்கு எதிர்பாராதவள், திகைத்துப் போய் நிற்க,
"சத்யா, நீங்க எங்க இங்க?" என்றான் கேள்வியாய்,
"அது…" என தொடங்கியவர்களுக்கு முன்,
"பேபி விளையாடிட்டு இருந்தான். அதான் அவனை கூட்டிட்டுப் போக வந்து இருக்காங்க…" என சிபி கூறி விட்டு, "நீங்க என்ன இங்…" என்றான் கேள்வியாய்,..
"ஓ.. அதுவா… என் அப்பா அம்மாவோட கல்யாண நாள் வருது. அதான், ஒரு ஷாக் அண்ட் ஸ்வீட் சர்ப்ரைஸ் எல்லாருக்கும்…!" என்றவன்,
“சத்யா, நீங்க கண்டிப்பா வரணும். இங்க நம்ம ரிசார்ட்ல தான், சின்ன பங்ஷுன் ஆர்கனைஸ் பண்ணி இருக்கேன். நீங்க கண்டிப்பா வரணும், எதிர்பார்ப்பேன்." என்றான்.
"இல்ல நவீன்…" என தொடங்கிய சத்யாவை,
"நோ சத்யா! அம்மாவும் அப்பாவும், நீ வந்தா சந்தோஷப் படுவாங்க." என்றான்.
'அதற்கு மேல் என்ன பேச…' என புரியாது, சரி என தலையசைக்க,
சிபி கையில் இருந்த யஷ்ஷை கண்டு,
"என்னாச்சு? இத்தனை நேரம் அமைதியா இருக்க…" என வாங்க முற்பட,
அவனோ தாவிச்சென்று, சத்யாவை கட்டிக் கொண்டான்.
"சத்யா, யஷ் ஓகே தானே!" என அருகில் வர,
"எஸ்... எஸ்... நவீன் சார். அவன் விளையாடிட்டு இருந்ததால டயர்ட் ஆகிருப்பாரு. நீங்க வந்த வேலையை பாருங்களேன்." என்றான் சிபி.
"அப்படி இருந்தாலும், என்கிட்ட வர யஷ் யோசிக்க மாட்டான்." என சொன்ன நவீனிடம்.
"இல்ல நவீன், அவர் சொன்னது கரெக்ட் தான். நானும் ஆபீஸ்லயிருந்து வந்ததிலிருந்து ரெப்பிரேஷ் ஆகல. நீங்க பாருங்க…" என இருவரையும் கடந்து தன் வீட்டிற்குள் செல்ல,
அவர்களைப் பார்த்த படி நின்ற நவீனைக் கண்டு, "இவன் வேற எரியற நெருப்பில இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை விடுறான்!" என எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவனிடம்,
"சார் மேல இருக்காரு… நான் வேணா சொல்லிடுறேனே!" எனக் கூறவும்,
"நோ நோ.. நான் வேத் சாரை பார்த்தே ஆகணும்." என்றான் நவீன்.
'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா, ராசா. வா…!' என எண்ணிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றான்.
வேத்தோ அங்கிருந்த பார் அறையில், கையில் கோப்பையுடன் நின்றான்.
உள்ளே நின்றவன் மனது, உலைக்கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது. 'என்ன வார்த்தை, ‘ப்ச்..’ அவள் எப்படி?' என எண்ணம் போகும் போதே, 'இதைத் தான் நீயும் செஞ்ச அவளுக்கு!' என அவன் இன்னொரு மனம் எடுத்துரைக்க,
'எத்தனை எளிதாய் சொல்ல முடிந்தது அவளால்..' என மீண்டும் கொதிக்க.. ‘அதை விட அதிகமாய் நீ சொல்லிருக்க!' என அறுதியிட்டுச் சொன்ன மனசாட்சியிடமும் தோற்றுப் போய், தொப்பென அமர்ந்தான்.
'என்ன வார்த்தை அது? அதுவும் குழந்தை முன்னால்…' என மீண்டும் மீண்டும் தோன்ற, ‘ப்ச்’ என கையில் இருந்த கிளாஸை இறுக்கிப் பிடிக்க,
அதனைக் கலைப்பது போல்… "பாஸ்" என்ற சிபியின் அழைப்பில், 'என்ன' என்பதாய் பார்த்தான்.
"நவீன் வந்திருக்காரு!"
"அவனா..!" என்ற கேள்வியில்,
"அவங்க அப்பா அம்மா அனிவெர்சரியாம், அதுக்கு தான்.." என நிறுத்த,
"சோ…"
"உங்கள இன்வைட் பண்ண வந்திருக்காரு."
"நோ நீட் சிபி, அவனை போகச் சொல்லு."
"பாஸ் சொன்னா போவாரா தெரியல" என்றான் தயக்கமாய்,
"ப்ச்... இப்போ என்ன செய்யணும்?"
"உங்கள பார்க்காமப் போக மாட்டாருன்னு தோணுது!"
"கெட் ஹீம்"
"சரி.." என சிபி அவனை அழைத்து வரவும்,
"வாங்க மிஸ்டர். நவீன், எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவன் சிபியை காண,
"எஸ் பாஸ்" என தலையசைத்தவன் கைகள், அவனுக்குத் தேவையானவற்றை கலக்க ஆரம்பித்தது.
"தென்?" என வேத் புருவம் உயர்த்த,
"அப்பாக்கு" என நவீன் தொடங்க,
"எஸ் சிபி சொன்னான்." என முடித்து வைத்தான், வேதாந்த்.
"அதுக்கு மட்டும் உங்கள பார்க்க வரல சார்… ஐ நீட் அ ஹெல்ப்!" என தயங்க,
"ஹெல்ப்பா? இன்வெஸ்ட்மென்ட் பத்தி தான் பேசப் போறீங்கனா, பேப்பர்ஸ் ஆர் ரெடி டூ சைன்!" என்றான்.
"இல்லை... பிசினஸ் பத்தி இல்லை…"
"தென்?"
"பர்சனலா"
"பர்சனலாவா, என்கிட்டயா…?"
"ம்ம்ம்..."
"சொல்லுங்க."
"நான், ஒரு பொண்ணை லவ் பண்றேன்."
'அதற்கு என்னடா?' என்பதைப் போல் வேத் பார்க்க,
"இல்லை, அப்பாகிட்ட சொல்லி நீங்க தான்…" என இழுக்க,
'இவன் வேற…' என தொடங்கும் போதே, கையில் அவன் குடிக்க திரவ வகையுடன் வந்தான், சிபி.
"டேக் இட்!" என நாற்காலியில் சாய்ந்தவன் விழிகள், அவனையும் மீறி சத்யாவின் வீட்டுப் பக்கம் செல்ல, நீண்ட பெருமூச்சு வேத்திடம்!!
சிபி கொடுத்தவற்றை ‘நன்றி’ என சொல்லி, ஒரு மிடறு குடித்தவன்,
"சார்" என்றான்.
"யா.. சொல்லுங்க நவீன்? அதுக்கு நான் என்ன பண்ணனும். யார் அவங்க?" என்றான் வேத், அடக்கப்பட்ட எரிச்சலுடன்.
வேத்தின் குரல் மாற்றத்தில்… “ஆத்தி… அவரு இரிடேட் ஆகிட்டு இருக்காரு… இது தெரியாம.. இவன் என்ன சொல்லப் போறான்.. தெரியலயே!" என சிபி நவீனைக் காண,
"நான் நேரடியா விஷயத்துக்கே வந்துடுறேன், வேத் சார்…"
'இன்னும் சொல்லவே இல்லையா!' என சிபி பார்க்க,
நவீன் சிபியையும் ஓர் பார்வை பார்த்துக் கொண்டே,
"அந்தப் பொண்ணு, நம்ம கம்பெனில தான் ஒர்க் பண்றாங்க." எனக் கூற,
'ஓ... அந்த மேனா மினுக்கியா இருக்குமோ! டேய் யானைக்கு தீனி போட முடியாதுடா, கொஞ்சம் யோசிச்சுகோ!' என்றவன் மனதில், சுருக்கேன ஓர் வலியை உணரத்தான் செய்தான்.
'இதென்ன இப்படி பீல் பண்றேன்?' என தனக்குள்ளே கேட்டவன், ஒருவேளை உன்னோட முதல் காதல் என்ற பற்றா இருக்கும். விடு விடு…' என தன்னையே தேற்றி சிபி நிமிர,
நவீன் அந்தக் கோப்பையை பார்த்த படி இருந்தான்.
'என்னடா, உனக்கு இன்னொரு கிளாஸ் வேணுமா? இப்படி பார்த்து வைக்கிற…' என அவனுக்கு கவுண்டர் கொடுத்து, வேத்தை பார்க்க,
அவனோ இருக்குற நிலைமையில… 'இது அவசியமா?' என்பதை போல் சிபியை முறைக்க,
'அடேய்! நீ பீலிங்ஸை நிறுத்திட்டு, என்னனு சொல்லித் தொலையேண்டா' என நினைத்து கொண்டே,
"நவீன் சார், கொஞ்சம் சீக்கிரம் சொன்னா பெட்டரா இருக்கும், வீ ஹாவ் ஒர்க்ஸ் டு டூ…" என சிபி கூற,
"ஹான்..." என்றவன் “அவங்க நம்ம கம்.." என தொடங்க,
"யாரு அனுவா?" என சிபி சட்டென கேட்டவன் முகத்தில், அவனையும் மீறி வந்த பதட்டக் குரலில்,
வேத், புருவம் சுருக்க,
'அச்சோ, அவரு பாக்குறாரே' என பதறி,
"இல்ல கேட்டேன்" என நவீனைக் காண,
நவீனோ சிபி கூற்றில்… "அட சிபி, நீங்க வேற… அவ எனக்கு சிஸ்டர் மாதிரி." என்றான் வேகமாய்,
"சிஸ்டரா" என சத்தமாய் சொன்னவன்,
'அப்படி சொல்லு மச்சான்' என பாசமாய் நவீனைப் பார்த்து வைத்தான்.
வேத் மனதிலும், ‘அது அனு’ என்ற எண்ணம் தான். ஆனால் இல்லை எனச் சொன்ன நவீனை, கேள்வியாய் காண,
"அது நம்ம..." எனத் தொடங்கியவன், "நம்ம சத்யா தான் சார்…" என முடிக்க,
வேத் கையிலிருந்த கோப்பை தவறப் போனதை… பிடித்தவன் கைகளில் அத்தனை இறுக்கம்,
நவீனோ இது எதுவும் அறியாது, "எனக்கு அவங்க மேல அத்தனை இஷ்டம் சார். அவங்க அறிவு, அழகு, அடக்கம், அமைதினு… ஷீ வாஸ் ஒன் அமோங் தி வேர்ல்ட். அவங்க மேல எப்படி இப்படி ஒரு பீல் வந்ததுன்னு தெரியல…! ஆனா, அவங்கள விட்டுப் போன இந்த கொஞ்ச நாள்ல… என்னோட காதல் எனக்கே தெரிஞ்சது. அதான் வந்துட்டேன். அப்பா அம்மாகிட்ட சொல்லி, அவங்கள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடாலம்னு தோணுது. அப்பா, ஓகே தான் சொல்லுவாங்க… ஆனா அம்மா, கொஞ்சம் முரண்டு பிடிப்பாங்க. அதான்…" என நிறுத்த,
வேத்… மனதுக்கு, அவன் சொன்னவற்றை கிரகிக்கவே சற்று நேரம் பிடித்தது. மீண்டவன், கையில் இருந்தவற்றை வேகமாய் வாயில் சரித்துக் கொண்டவன், அடுத்தற்காக சிபியைக் காண,
அவனோ நவீன் சொன்னதை நம்ப முடியாது பார்த்துவிட்டு, வேத் பார்த்த பார்வையில், அவன் கோப்பையில் அவனுக்கு வேண்டியவற்றை ஊற்றினான்.
நவீன் கேள்வியாய் வேத்தை காண,
"இது சத்யாக்கு தெரியுமா?" என்றான் வேத்.
"இல்லை சார். ஆனா எப்படியும் ஓகே வாங்கிடுவேன். யஷ்ஷுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும் சார்." என்றான்.
"ம்ம்ம்... அவங்க ஹஸ்பண்ட் பத்தி?"
"அவங்க ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு நெனைக்கிறேன்…" என்றான்.
சிபி அவனை முறைக்க,
வேத் சின்னச் சிரிப்புடன், "அப்படியா? அவங்க சொன்னாங்களா?" என கேட்க,
"அப்படி சொல்லலை… ஆனா இதுவரைக்கும் அவங்க ஹஸ்பண்ட் பத்தி எதுவும் சொல்லலையே! செத்துருக்கலாம், இல்லை டிவோர்ஸியா கூட இருக்கலாம்!" என முடிக்க,
'உன்கிட்ட சொன்னாங்களாடா' என வாய் வரை வந்த கேள்வியை சிபி கேட்கப் போக…அவனை தடுத்த வேத்…
"ம்ம்ம்... அதுக்கு, நான் என்ன பண்ண முடியும் மிஸ்டர். நவீன்?" என்றான் எழுந்து நின்று டீபாயில் சாய்ந்த படி,
"நீங்க சத்யாகிட்ட எனக்காகப் பேசி…" என நவீன் நிறுத்த,
இப்போது சத்தமாகவே வேத் சிரித்து விட்டு, "இண்ட்ரஸ்ட்டிங்" என இன்னும் ஒரு பாட்டிலையே எடுத்து வாயில் சரித்தவன், "பேசலாமே! கண்டிப்பா பேசுறேன். அதுவும் உங்களுக்காக…" என நவீனின் தோளில் தட்டி விட்டு, சிபியை பார்த்த படி தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
அறைக்குள் வந்தவன் உள்ளம், அவனை நினைத்தே சிரித்து விட்டு, விஜய் பிரகாஷுக்கு அழைத்தான்.
அவர் ஏற்றதும், "டேட்.." என்றான்.
"எஸ்... வேத்" என்றார் அவரும்,
"டேட், எனக்கு அவ வேணும் டேட்! இப்போவே வேணும்!" என்றான் பிடிவாதமாய்,
"வேத்!" என்றார்.
"டேட், ஐ நீட் ஹேர். இங்க என் பக்கத்துல தான் இருக்கா. ப்ச்… ஆனா… என்னால அவகிட்ட போக முடியல.. ஏன்? நீங்க தான், நீங்க மட்டும் தான் காரணம்…! நீங்க அவள விட்ருக்கக் கூடாது, டேட்!" என்றவன் குரல் கமற,
"விட்டுட்டீங்க டேட்! என் உசுர வேரோட புடுங்குன மாதிரி வலிக்குது டேட், முடியல…"
முடியாது என்ற வார்த்தையை, மகனிடம் முதல் முறையாய் கேட்டவர் மனது, அத்தனை வலித்தது.
"வேத்…" என்றார்.
"முடியல டேட்! முடியல…! எங்க சுத்தியும் அவ தான் நிக்கிறா… என் மைண்டை பிளாக் பண்றா, டேட்!" என்றான்.
"வேத், ட்ரை டூ கன்வின்ஸ் ஹெர்." என்றார்.
"நோ… அவ திமிரு இருக்கு பாருங்க, திமிரு… ஓ...காட்!" என்றவன் பின் ரசனையாய்… "அதான் டேட் அவ அழகு. ஷீ அல்வேஸ் டிரைவ் மீ க்ரேசி டேட்! ஈவன் இப்போவும் கூட…" என உல்லாசமாய் சிரித்தவன், "நீங்க எனக்கு இதை செஞ்சுருக்கக் கூடாது டேட்!" என்றான் மீண்டும் அழுத்தமாய்.
"வேத், ட்ரிங்க் பண்ணிருக்கியா?" என கேட்க,
"எஸ்! டூ லார்ஜ்…"
"வேத் உன்னோட ஹெல்த்…க்கு.."
"ஹெல்த் ……" என ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தவன்... "டேட்" என அழைத்தவன் குரலில், அத்தனை வலி. பின் அவனே சிரிக்க,
விஜய்பிரகாஷ் நாற்காலியிலிருந்து எழுந்தே விட்டார். பின் "வேத், ஆர் யூ ஓகே?" எனப் பதற,
"ப்ச்... டேட் ஐ ஆம் ஓகே." என்றவன் மீண்டும் சிரித்து விட்டு, "டேட், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாளைக்கு அவகிட்ட பேசப் போறேன், கல்யாணம் விஷயமா?" என்றான்.
"வேத்.." என விஜய் பிரகாஷ் புருவம் சுருக்க,
"நவீனுக்கு அவமேல காதலாம்." என சிரித்து விட்டு, "நான் பேசணுமாம்." என மீண்டும் சிரித்து விட்டு, "நல்ல சீன் இல்ல.. டேட்!" என புலம்பத் தொடங்க,
"எல்லாம் சரியாகும், ஜஸ்ட் காம் டவுன் வேத்.." என்றார்.
"நோ டேட், அவ இருக்கா பாருங்க…" என நிதானித்து விட்டு, "அவளா நானான்னு பாக்குறேன்…" என வைத்தும் விட,
விஜய் பிரகாஷ் மனம் தான், யோசனையில் முழ்கியது.
அவரிடம் பேசி வைத்தவனுக்கு, தூக்கம் எல்லாம் தூரப்போய் நிற்க, அழுத குழந்தை அடித்த தாயிடமே போகுமாம். அது போல.. அவன் மனம் அவளையே சுற்றியது.
எத்தனை முயன்றும் முடியாதவன், ‘ப்ச்’ என வேகமாய் சென்றவன், எப்பொழுதும் போல் அதனை எடுக்க, அதன் வாசனை அவன் நுரையீரல் தீண்ட, அவன் ஆழ் மனது அதை உணரவும், அப்படியே அதனை முகத்தில் போர்வையாய் போர்த்திய படி, தூங்கிப் போனான்.