KMK 9
"இதுதான் சார் ஃபைனல் அலைன்மென்ட்.." சிரிஷ் தனது மடிக்கணினியில் காட்டி சொல்லி கொண்டிருக்க, "நோ.. இன்னும் இரண்டு ஆள் தேவைப்படும்.. முன்னாடி என்ட்ரன்ஸ்ல தான் செக்யூரிட்டி ஸ்ட்ராங் பண்ணனும் சிரிஷ்.. ராபர்ட், வினித் இரண்டு பேரையும் அசைன் பண்ணுங்க", கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தாடையை தடவி யோசனையுடன் கணினியை பார்த்து கொண்டிருந்த கணவனை, ரசனையுடன் கண்களால் தழுவி கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜமுனா.
கையில் பிரேஸ்லெட்டிற்கு பதிலாக அவன் டாட்டூ குத்தியிருந்த கருப்பு நிற பிரேஸ்லெட் டாட்டூ இன்னும் மிடுக்காக ப்ரையனை காட்டி கொண்டிருக்க, கொலுசொலியில் கவனம் கலைந்தவன்," ஜாமூன்...." எழுந்து அவளருகே வர, ஓரெட்டு பின்னால் நகர்ந்தவள், புருவங்களை உயர்த்தி கண்களால் எதிரில் இருப்பவனை சுட்டினாள்.
"ஹூ... ஜாமூன்.. லவ் யூ க்யூட்டி..." பற்றாக்குறைக்கு அறையிலிருந்த கோல்டி வேறு கத்த, புன்னகையில் விரிந்த தன்னவளின் அதரங்கள் ப்ரையனை மிகவும் சோதித்தது.
"கோல்டி...ஈ..." தனது செல்லக்கிளியை முறைக்க, குனிந்த தலை நிமிராது இதழ் பிரிக்காமல் சிரித்து கொண்டு அமர்ந்திருந்தான் சிரிஷ்.
"ஓகே..டார்லிங்" அது பதில் வேறு கொடுக்க, "எடுத்துக்கங்க அண்ணா..." ஜமுனா கையிலிருந்த காஃபியை சிரிஷிடம் கொடுக்க, "ஹாப்பி மேரீட் லைஃப் மேம்.. தாங்க்யூ..." புன்னகையுடன் எடுத்து கொள்ள, மற்றொரு காஃபி கப்பை தன்னவனிடம் நீட்டியவள், நேராக கிளியிடம் சென்று விட்டாள்.
"கோல்டி.. நான் க்யூட்டியா?!"
"எஸ்.. க்யூட்டி...க்யூட்டி..." பதில் கொடுத்தது அதுவும்.
"சார்.. இங்க ரெஸ்ட் ரூம்..." சிரிஷ் எழ," இதோ.. இங்..." இங்க என ஜமுனா சொல்லும் முன்பே," வெளியே பாட்டி இருப்பாங்க சிரிஷ்.. அவங்ககிட்ட வழி கேளுங்க.. ஐ திங்க் இங்க இருந்து வெளியே ரைட்ல இருந்து லாஸ்ட் லெஃப்ட்.." பதில் சொல்லியிருந்தான் ப்ரையன்.
"ஓ.. தாங்க்யூ சார்..."சிரிஷ் வேகமாக வெளியேற, அவனை விட வேகமாக மனைவியை நெருங்கினான் ப்ரையன்.
"ஜாமூன்.." அவள் எதிர்பார்க்கும் முன்பே பின்னிருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைக்க, கூச்சத்தில் நெளிந்தாள் பெண்ணவள்.
"அச்சோ.. ஜீனி?! என்ன இது?! கிடைக்கிற நேரமெல்லாம் இப்படி ஒட்டிக்கிட்டு!விடுங்க!" திரும்ப முயற்சித்தவளால் முடியவில்லை.
"எல்லா நேரமும் ஒட்டிக்க என்ன பண்ணலாம் ஜாமூன்?!" மீண்டும் அவளிடமே கேள்வி கேட்டவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது, கைகளால் முகத்தை மூடிக்கொள்ள போக, தடுத்து தன்புறம் திருப்பியிருந்தான்.
"ஜீனி.. ஜீனி..." கோல்டி வேறு கத்தி, கூண்டிற்குள் சிறகை விரித்து படபடவென அடித்து துள்ளியது.
அதன் செயலை புரியாது பார்த்தவள், " அச்சோ.. ஏன் இப்படி பண்ணுது?! இந்த இடம் அதுக்கு சௌகரியமா இல்லையா?" அக்கறையுடன் கேட்டவளின் இமைகளை ஒற்றி எடுத்தது ப்ரையனின் இதழ்கள்.
"டோன்ட் பேனிக்.. சந்தோஷமா இருந்தா தான் இப்படி பண்ணுவா?"
"ஓ...." பெண்ணவள் இதழ் குவிக்க, அதை சுண்டிவிட்டவனை, முறைத்தாள்.
"ப்ச்.. இதோ இங்கதான் இருக்கு பாத்ரூம்.. பாவம் அவரை ஏன் அவ்வளவு தூரமா அனுப்பினிங்க?! பாட்டி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க! அதான் நான் கூப்பிட வந்தேன்! ரொம்ப நேரம் நான் போகலன்னா தேடி வந்துடுவாங்க!" அவனது கைகளை விலக்க முயற்சிக்கும் போது,அவளது கை நிறைய அணிந்திருந்த பொன் நிற கண்ணாடி வளையல்கள் சத்தம் எழுப்ப, அப்பொழுது தான் அதை கவனித்து பார்த்தான் ப்ரையன்.
"இதென்ன இவ்வளவு பேங்கல்ஸ் போட்டிருக்க ஜாமூன்?! நல்ல சவுண்ட் கொடுக்குதே? ஐ லைக் இட்.."
"அ..அது..வந்து.. இங்க கல்யாணம் ஆகப்போற பொண்ணுங்களுக்கு போடற முகூர்த்த வளையல்?! நமக்கு அவசரமா கல்யாணம் நடந்ததால பாட்டி இன்னைக்கு பூஜை பண்ணி எனக்கு போட்டு விட்டாங்க..."
"ஓ.. ஆனால் புதுசா மேரேஜ் ஆனவங்களுக்கு இது டிஸ்டர்பா இருக்குமே ஜாமூன்? நீ வேற ஏன் இவ்வளவு வெட்கப்படுற?!"
"நான் ஒண்ணும் வெட்கமெல்லாம் படலை! என்னை விடுங்க! நேரமாச்சு!?" பெண்ணவள் தப்பிக்க பார்க்க, மறுப்பாக தலையாட்டினான் கொண்டவன்.
"காலைலயும் இப்படிதான் சிரிஷ் வந்ததும் ஓடிட்ட?! கோல்டி கிட்ட கூட நிறைய நேரம் நின்னு பேசின?! என்கூட டைம் செலவழிக்கவே மாட்டேங்குற?! எனக்கு நீ வெட்கப்பட்ட காரணம் தெரிஞ்சே ஆகனும்" செல்ல சண்டை இடுபவனை சமாளிக்க முடியாது திண்டாடி கொண்டிருந்தாள் பேதை.
உண்மைதான்!!..காலையில் சபர்மதியிடமும் நிர்மலாவிடமும் பேசி கொண்டிருக்கும் பொழுது," பேராண்டி உங்களை தேடி சிரிஷ்னு ஒரு பையன் வந்துருக்காரு.. "பாட்டி தகவல் சொல்ல வந்தவர்,"நீயும் இங்க தான் இருக்கியா அம்மாடி?! புதுப்பெண்ணை பார்க்க ஆளுங்க வரப்போக இருப்பாங்க.. சீக்கிரம் போய் குளிச்சு தாயாராகுடா!" பேத்தியின் அருகே வர," அத்தை நீங்க கூட எனக்கு ஒரு வார்த்தை சொல்லலை?!" திடீரென கேட்ட நிர்மலாவின் குரலில் ஜமுனாவின் கையில் இருந்த அலைபேசியை பார்த்த மங்கையர்கரசி சங்கடத்துடன் புன்னகைத்தார்.
"எல்லாம் அவசரமா நடந்து போச்சுடியம்மா?! அதான் இப்ப சொல்லிட்டேனே!! நீ எப்போ கிளம்பி வர?!" அலைபேசியை வாங்கியவர், பேசிக்கொண்டே வெளியில் சென்றுவிட, காதலுடன் மனைவியை ஆரத்தழுவி கொண்டான் ப்ரையன்.
"உனக்கும் என்னை பிடிச்சுருக்குன்னு நீ உன் சித்திகிட்ட சொன்னதும்.. எனக்கு க்ளவுட் நைன்ல பறக்குற ஃபீல் ஜாமூன்.." ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொண்ட நேசத்தின் வாய்மெழியில், தானும் தன்னவனின் மார்பில் நிம்மதியுடன் தஞ்சமடைந்து கண்மூடிக்கொண்டாள்.
"எனக்கு உன்கூட லாங் டிரைவ் போகனும் போல இருக்கு ஜாமூன்?! ஏதாவது ஹில் ஸ்டேஷன் போகலாமா?!"
"போகலாம் தான்!? ஆனால் இப்போ அனுப்ப மாட்டாங்களே?!" நிமிர்ந்து பதில் சொன்னவளின் முகம் வாடிவிட்டது.
"ஏன்?"
"அது இங்க பழக்கம்..அதாவது கல்யாணம் ஆன புதுசுல மலை ஏறக்கூடாதுன்னு பாட்டி சொல்லுவாங்க!"
"அப்போ நமக்கான நேரம் எப்போதான் கிடைக்கும் ஜாமூன்!? எனக்கு உன்கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்!?" அவளிடமே தீர்வு கேட்டவனை இன்னும் இன்னும் பிடிக்க, பாவமாய் பார்த்தாள் பெண்ணவள்.
"அது தானா அமையும் ஜீனி! எனக்காக கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்..." கண்களை சுருக்கி ஒருபுறமாய் தலைசாய்க்க, கொண்டையாய் முடிந்திருத்த அவளது கூந்தலும் அவிழ்ந்து அவளின் பாவனைக்கு ஏற்ப துள்ளிவிழ, மனதை இன்னும் கொள்ளையிட்டவளை அப்பொழுதே தூக்கி கொண்டு வையமெல்லாம் சுற்றி வர, ஆசை கொண்ட மனதை, கட்டுக்குள் கொண்டு வர முடியாது, அவளது சிகைக்குள் கை நுழைத்து, கன்னத்தோடு கன்னம் இழைந்தவனோ," இந்த ப்ளீஸ் என்னை ப்ளீஸ் பண்ணல ஜாமூன்..." இதழ்களை நெருங்கும் நேரம்,"ஊஹூ... பென்னி(Benny)....டார்லிங்.. டார்லிங்" கீறிச்சிட்ட குரலில், பதறி அவனிடமிருந்து பதறி விலகினாள் ஜமுனா.
"குட்மார்னிங் சார்.." அவர்களின் அறை வாயிலில் பெட்டியை இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்தான் சிரிஷ். அதற்குள் அவன் கையிலிருந்த கூண்டில் இருந்து ப்ரையனின் செல்லக்கிளி சத்தமிட்டிருந்தது.
"உள்ளே வா சிரிஷ்.."
"இதுதான் நீங்க சொன்ன கோல்டியா? வெரி க்யூட்... ஹேய்..க்யூட்டி..." சிரிஷ் பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே வர, வாயிலில் இருந்த கூண்டை கையில் தூக்கி, கிளியை கொஞ்சினாள் ஜமுனா.
புதியவளை அமைதியாக பார்த்த கிளி, சில நொடிகளில், "க்யூட்டி... க்யூட்டி..." கத்த, சுவாரசியத்துடன் கிளியை பார்க்க ஆரம்பித்து விட்ட மனைவியை பார்த்து, பெருமூச்சு விட்டவன், தனது உதவியாளனிடம் திரும்பினான்.
"உங்களுக்கு கால் பண்ணிட்டே இருந்தேன் சார்! லைன் ரொம்ப பிஸியாவே இருந்தது. கோல்டியை பிக்கப் பண்ண தான் டிலே ஆகிடுச்சு!" வந்த தகவலை சொல்லி முடித்தான்.
"இட்ஸ் ஓகே.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகு.. நம்ம ஜிவி குரூப்ஸ் செலிப்ரேஷன் ஃபைனல் அலைன்ட்மென்ட் மட்டும் ஒரு தடவை ரீசெக் பண்ணிட்டு.. வேலையை ரெஷ்யூம் பண்ணிக்கோ சிரிஷ்..." என, "ஓகே சார்..." அமர்ந்து தனது பையிலிருந்த மடிக்கணினியை எடுத்து வெளியே வைத்து கொண்டிருந்தான் அவன்.
"நானா க்யூட்டி?! நீ தான் செம க்யூட்டா இருக்கே பட்டு..." இதழ் குவித்து பறக்கும் முத்தம் கொடுக்க, ஒய்யாரமாக அதன் ஊஞ்சலில் நடந்து கொண்டிருந்தது கோல்டி.
அவர்களை நோக்கி ப்ரையன் அருகில் வரவும்," பென்னி பென்னி..." கத்த, கூண்டை திறந்து கையில் எடுத்தான் ப்ரையன்.
வெளிர் மஞ்சள் நிற கொண்டையுடன், உடலெல்லாம் வெண்மையும் மஞ்சளும் கலந்து கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன் இருந்ததை, ஆசையுடன் தொட்டு பார்த்தாள் ஜாமூன்.
"எவ்வளவு சாஃப்டா இருக்கு?"
"உன்னை விட இல்லை ஜாமூன்.." அவளது நெற்றி முட்டியவனின் விழிச்சிறையில் சிக்கி கொண்டவளுக்கு விடுபடும் வழிதான் தெரியவில்லை?!
"ஹூ..டார்லிங்.. டார்லிங்..." கத்தி அவளை காப்பாற்றியது கோல்டி.
"டார்லிங்கா?! நல்லா பேச ட்ரெயினிங் கொடுத்திருங்கிங்க?!"
"உனக்கும் டார்லிங்தான் ஜாமூன்!.. யூ நோ..கோல்டி ரொம்ப இன்டெலிஜென்ட்.. ஒருதடவை பேசினா போதும்..அழகா திருப்பி பேசுவா.."
"நான் கையில் வச்சுக்கட்டுமா?! என் கையில் நிற்பாளா?"
"தாரளமா..." தன்னவளின் கைபிடித்து நிற்க வைக்க, "க்யூட்டி..." கோல்டி செல்லமாய் அவளை அழைக்க, " சமத்து சக்கரைக்கட்டி..." உற்சாகத்தில் அதை முத்தமிட்டாள் ஜமுனா.
"சக்கரே.. சக்கரே.." தனது அலகால் அவள் கன்னம் உரசிய கோல்டியை பட்டென்று கையில் தூக்கியிருந்தான் ப்ரையன்.
"ஏன் தூக்கினிங்க? எவ்வளவு அழகா பேசுது?"
"அழகா பேசுனதுக்கு ட்ரெயினிங் கொடுத்தது நான்தான் ஜாமூன்.. என்னை விட்டுட்டு இவளையே கொஞ்சிட்டிருக்க?" என்றவன் அவளை நோக்கி குனிந்து தனது கன்னத்தை காட்டி, ' எனக்கும் முத்தம்' சைகை செய்ய," ஜமுனா.. " கத்தி அழைத்து கொண்டிருந்தார் பாட்டி.
"சார்..." சிரிஷீம் ஏதோ மடிக்கணினியில் இயக்கிக் கொண்டு அவனை அழைக்க, "பாட்டி கூப்பிடுறாங்க.. நீங்க ஃப்ரெஷ் ஆகுங்க.. நான் வர்றேன்" ப்ரையன் மீண்டும் இழுக்கும் முன்பே ஓடிவிட்டாள்.
அப்பொழுது சென்றவளின் தரிசனம் இப்பொழுது தான் கிடைக்க, வாய்ப்பை நழுவ விடுவதாய் இல்லை அவன்.
"சொல்லு ஜாமூன்...அப்பறம் பாட்டி கூப்பிடறாங்கன்னு நீ ஓடிடுவ?"
"இந்த லைட்கிரீன் ஷர்ட்டும் க்ரீம் பேன்டும் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு! இந்த டாட்டூவும்!" என்றவள் அவன் கையிலிருந்த டாட்டூவை வருட, அங்கம் சிலிர்த்தாலும், " பேச்சை மாத்தாதே ஜாமூன்!" என்றவன் அவளது இரண்டு கைகளையும் இழுத்து தன்னை கட்டிக்கொள்ள வைத்திருந்தான்.
"ப்ச்... விடமாட்டிங்களே!?புதுசா கல்யாணம் ஆன பொண்ணு கண்ணாடி வளையல் போட்டுகிட்டா, புருஷன் பொண்டாட்டி ஒன்னா இருக்கும் போது கேட்கும் இதோட சத்தம், சூழ்நிலையை இன்னும் இதமாக்கி,அன்யோன்யம் இன்னும் அதிகமாக்குமாம்.. வளையல் உடையற கணக்கை வைச்சு இரண்டு பேரும் சந்தோஷமா தான் இருக்காங்களான்னும் தெரிஞ்சுப்பாங்களாம்"
"வாவ்.. ஜாமூன்.. ரொமான்ஸ் பேங்கில்ஸா இது?" குதூகலித்தவனின் உற்சாகம், எதிரில் இருப்பவளின் நாணத்தை அதிகரிக்க, அவன் முகம் பார்க்க முடியாது, மார்பில் தலை சாய்த்து கொள்ள, அவளிடம் இருந்து வரும் முதல் அணைப்பில், முகமெல்லாம் பூரிப்புடன் இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான் ப்ரையன்.
"இப்படி கேள்வி கேட்டு கேட்டே என்னை ஒரு வழியாக்குறிங்க ஜீனி?" தன்னவளின் வார்த்தைகள் நெஞ்சில் எதிரொலிக்க," எல்லாம் தெரிஞ்சுக்கற வரைக்கும் உன்னை தான் கேட்டு தொந்தரவு பண்ணுவேன் ஜாமூன்?! அதுக்கப்பறம் உனக்கு கத்து கொடுக்கிறது தான் மை ட்யூட்டி!?" இரட்டை அர்த்தத்தில் பேசியவனை நிமிர்ந்து பார்த்து செல்லமாய் முறைத்தாள் மனையாள்.
"அச்சோ.. மை ஜாமூன் காட் ஆங்க்ரி... வேணுன்னா பேங்கில்ஸை உடைச்சு உடைச்சு விளையாடுவோமா?"
"யூ.. நாட்டி?! " அவனின் மார்பில் கைகளால் குத்தியவளின் கைகளை பிடித்து வளையல்களில் முத்தமிட்டான் மன்னவன்.
"காத்திருக்கறதும் சுகமா தான் இருக்கு ஜாமூன்.. உன்கூட புதுசா பழகுற ஃபீலே எனக்கு இல்லை.. காலம் காலமா நாம பழகின மாதிரியே தோணுது! பேங்கில்ஸ் உடைஞ்சா உனக்கு வலி கொடுக்குமே?! இதை கழட்டி வச்சுடு பேபி" மென் குரலில் அவள் கண்களை பார்த்து சொல்ல, பார்த்து கொண்டிருந்த பெண்ணவளின் விழிகளில் மட்டுமல்ல, மனமெங்கும் நிறைந்திருந்தான் கொண்டவன்.
"ம்ம்..எனக்கும் தான் ஜீனி! ஒரே நாள்ள நம்ம வாழ்க்கை பக்கமெல்லாம் காதல் மட்டுமே நிரம்பி வழியுற மாதிரி மேஜிக் பண்ணிட்டிங்களே?! ம்ஹூம்.. கழட்ட மாட்டேன்.. புதுப்பொண்ணோட தனி அடையாளம் இது! இதுக்கு இன்னொரு சைன்டிஃபிக் ரீசனும் இருக்கு! இப்படி கண்ணாடி பேங்கல்ஸ் போட்டுகிட்டா இது உரச, உரச மணிக்கட்டை சுற்றி இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.. அது மூளையை சுறுசுறுப்பாக்கி உடலுக்கு இன்னும் எனர்ஜியை கொடுக்கும்.. அதனாலயே இங்க கண்ணாடி வளையல் வச்சுத்தான் வளைகாப்பு போட்டு விடுவாங்க.. இதோட சத்தம் வயிற்றில் இருக்குற குழந்தைக்கும் நல்லதுன்னு..." விவரம் சொன்னவளின் கன்னங்கள் தன்னை மீறி சூடானது, எதிரில் தன்னை பார்த்து கொண்டிருப்பவனின் உரிமை பார்வையில்.
"ஐ லவ் இந்தியன் கல்ச்சர் ஜாமூன்.. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் இவ்வளவு பெனிஃபிட்ஸ் யோசிச்சே வச்சுருக்காங்களே?! பட்... பேபி ரெடியாகறதுக்கு மட்டும் ரெட் சிக்னல் போட்டுட்டாங்களே? நீ ஆசைப்பட்டா க்ரீனா மாத்திடலாம் ஜாமூன்?"
"ம்ஹூம்.. இது சரியில்லை.. சாப்பிட நேரமாச்சு.. இன்னைக்கு உங்களுக்கு தான் விருந்து.. சீக்கிரம் சாப்பிட வாங்க" அவனிடமிருந்து நழுவி ஓட, எதிரே வந்து கொண்டிருந்தான் சிரிஷ்.
"நீங்களும் சாப்பிட வந்துடுங்கண்ணா.." நில்லாது அழைத்து கொண்டே ஓடியவளை வாயிலில் நின்று புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் ப்ரையன்.
"இந்தியன் மேரேஜ் உங்களுக்கு செட் ஆகிடுச்சா பாஸ்? இங்க ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒவ்வொரு ரிச்சுவல்ஸ் வேற ஃபாலோ பண்ணுவாங்க!" சிரிஷ் உண்மையான அக்கறையுடன் கேட்க, புன்னகையுடன் அறைக்குள் சென்று அமர்ந்தான்.
"நீங்க சிரிச்சே சமாளிச்சுடுவீங்க பாஸ்! சொன்னபடி உங்களுக்கு அப்டேட் அப்பப்ப கொடுத்துட்டே இருக்கேன்?! எப்ப ரிடர்ன் ஆவிங்க?"
"இப்போதைக்கு இல்லை சிரிஷ்.. " கால் மேல் காலிட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தவனை, குழப்பமாக பார்த்தான் சிரிஷ்.
"நீங்க சொன்ன மாதிரிதான் இங்க நிறைய ரிச்சுவல்ஸ் சொல்றாங்க! அதை முடிச்சு தான் வர முடியும்!! அதுவரைக்கும் நீதான் பொறுப்பா ஹாண்டில் பண்ணனும். இப்போதைக்கு நாம செக்யூரிட்டிஸ் அனுப்பற முப்பது கம்பெனிஸ் போதும்! க்ளையன்ட்ஸ் அப்ரோச் பண்ணா புது கான்ட்ராக்ட் இப்போதைக்கு எதுவும் எடுக்கறதில்லைன்னு சொல்லிடுங்க! ஆனால் இன்னும் புதுசா ஆள் சேர்க்குறதுக்கு ஒருமாசத்துக்கு அப்பறம் நான் சொன்னபடி ரெக்ரூட்மென்ட் விளம்பரம் பத்திரிக்கைகள்ள கொடுங்க! நமக்குள்ளேயே ஷிஃப்ட் மாத்திவிட மேன்பவர் அதிகமாக்கனும்!இன்னும் குறைஞ்சது இருபது பேராவது இந்த வருஷத்துக்குள்ள வேலைக்கு எடுத்து ட்ரெயினிங் கொடுக்க வேண்டி இருக்கும்.. எப்படியும் அடுத்து நம்ம மீட்டிங் ஜிவி குரூப்போட வெள்ளிவிழா ஃபங்கஷனா தான் இருக்கும். அதுவரைக்கும் நீங்களும் சுந்தரும் மேனேஜ் பண்ணிக்கோங்க.. நம்ம செட் பண்ணி வச்சுருக்கற ப்ரோட்டோக்கால் மட்டும் மாறிட கூடாது!" உத்தரவிட்டவனின் கட்டளைகள் அனைத்தையும் தெளிவாக தனது மடிக்கணினியில் பதிவாக எழுதியிருந்தான் சிரிஷ்.
"இதை நம்ம ஸ்டாஃப்குள்ள சர்குலேட் பண்ண டிஜிட்டல் சைன் பண்ணி கொடுத்து.. நீங்களே அனுப்பிடுங்க பாஸ்! அப்போதான் சிஸ்டம் சரியா மூவ் ஆகும்" அவனது ஆலோசனையில் மெச்சுதலாய் பார்த்தான் ப்ரையன்.
"ஷ்யூர்.. நீ எனக்கு ஃபார்வட் பண்ணிடு! சுந்தர் கிட்டயும் ஒரு வீடியோ மீட்டிங் போட்டுட்டு நான் அனுப்பிக்கறேன்.. " எழுந்து சிரிஷை தொழில் மார்க்கமாக அணைத்து விடுவிக்க, "யண்ணே!! சீக்கிரம் கிளம்பியாங்க!பாட்டி கைமணத்துல வீடே மணமணத்துட்டுருக்கு?! வந்து விருந்தை ஒரு கட்டு கட்டுங்க!" அவனை தேடி அங்கு வந்திருந்தாள் மலர்.
பாவாடை தாவணியில் புத்தம் புது மலராய், கைகளில் வாழை இலைகளுடன் எதிரில் அறை வாயிலில் நின்று ப்ரையனை அழைத்து கொண்டிருந்தவளை, வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சிரிஷ். நகரத்தின் நாகரிக அலங்கார பெண்களை பார்த்தவனுக்கு, எந்த வித ஒப்பனையும் இல்லாமல், மிக எளிமையுடன் அவள் கையில் வைத்திருக்கும் வாழை இலையை போல் பளிச்சென இருப்பவளிடம் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை!?
"இதோ வந்துட்டேன் தங்கச்சிம்மா.. " ப்ரையன் பதில் மொழி சொன்னதும், "டார்லிங்..டார்லிங்" உள்ளிருந்த கிளி கத்த, அப்பொழுது தான் அதை கவனித்தவள்," ஹை.. கிளி..." ஆசையுடன் உள்ளே ஓடிவந்தவள், எதிரில் நின்றிருந்த சிரிஷை கண்டு கொள்ளாமல் நேராக கிளியிடம் செல்ல," இதான் நீங்க சொன்ன கிளியா?! ரொம்ப அழகா இருக்கே!" அருகில் நிற்பவளை நிதானமாக ரசித்து கொண்டிருந்தான் சிரிஷ்.
"அழகு..அழகு.." கோல்டியும் கத்தியது.
"என்ன மாப்ள?! மஞ்சக் கிளியை பச்சைக்கிளி கொஞ்சிட்டிருக்கு!" வாயிலில் கேட்ட பரிதியின் குரலில் திரும்பவில்லை மலர்.
"யண்ணே! அந்தாளுக்கும் எனக்கும் பேச்சில்லை! போகச்சொல்லுங்க" என்றுவிட, பரிதியின் தோளில் புன்னகையுடன் தட்டினான் ப்ரையன்.
"என்ன மேன் ரொம்ப பிஸியாகிட்ட? நேத்து ஜாமூன் அத்தனை தடவை கால் பண்ணா உன்னை பிடிக்கவே முடியலை? அண்ட் தங்கச்சிம்மாவ வம்பிழுக்காதே!? " ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து, புதிதாக வந்தவனிடம் பரிட்சயத்துடன் பேச, சிரிஷின் பார்வை பரிதியிடம் திரும்பியது.
"பருத்தி காட்டுல திருட்டுத்தனமா நெருப்பு பத்த வைக்க வந்துருக்கானுங்க மாப்ள! பிடிச்சு விசாரிச்சா அடியவும் வாங்கிகிட்டு பக்கத்து காட்டுக்கு தான் வந்தோம்னு சாதிச்சுட்டு, கட்டி வைக்கறதுக்குள்ள ஓடிட்டானுங்க! பிடிக்க ஓடுனதுல மொபைல் காட்டுக்குள்ள விழுந்துடுச்சு?! இப்பதான் நம்ம பயலுக தேடி எடுத்துட்டு வந்து கொடுத்தாய்ங்க!இருந்தாலும் ஆளு யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்"
"நீ பெரிய ஆளுதான் மச்சி! என்ன ஹெல்ப்னாலும் சொல்லு ஐம் ரெடி" என்றவன் தன் புஜத்தின் வலுவை காட்ட தசைக்கோளங்கள் பிரிந்து நின்றது.
"நீரும் பெரிய ஆளுதான்யா மாப்ள.. இப்படி ஆர்ம்ஸ் காட்டுறீரு?ஆனா உம்ம பொண்டாட்டி?!கரும்பை கட்டை தூக்கி அவருக்கு கால்ல அடிபட்டுருச்சு? எல்லாம் உன்னால தான் அண்ணே?! நீதான் ஒழுங்கா ஆள் அனுப்பலைன்னு!?இந்த ரூம்குள்ள வர்றதுக்குள்ள என் காதை கிழிச்சு தான் அனுப்பிருக்கா?" காதை குடைந்து கொண்டவனின் பேச்சில் வாய் விட்டு சிரித்தவனை ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தான் சிரிஷ்.
"ஆமா இது யாரு புது டிக்கெட்டு?!" சிரிஷை பார்த்து கேட்டவன்," இந்தாம்மா ஃப்ளவரு?! எல்லாருக்கும் இலைல சோறு போட போறிகளா? இல்லை கைல உருண்டையா கொடுக்க போறிகளா?! அங்கன பாட்டி இன்னும் வரலைன்னு கத்திட்டுருக்காங்க!"வேண்டுமென்றே கத்தி சொல்ல, அவனை முறைத்து கொண்டே ஓடிவிட்டாள் மலர்.மலரின் பின்னால் தாவிய சிரிஷின் பார்வையும் கண்டு கொண்டான்.
"என்கிட்ட தான் வேலை பார்க்குறான்? என்னோட செக்யூரிட்டி ஸ்டாஃப் தான்" ப்ரையன் அறிமுகப்படுத்த, அறிமுகமாய் புன்னகைத்தான் சிரிஷீம்.
"அடடே அப்ப வசதியா போச்சு?! என்ன ப்ரோ?! இப்ப போனுச்சே அதான் நம்ம ஆளு?! சீக்கிரமே இழுத்துட்டு கல்யாணம் கட்டிக்க சென்னைக்கு தான் ஓடிவரலாம்னு இருக்கேன்!!" கண்ணடித்து சிரிக்க, இஞ்சி தின்றதை போல் ஆகி விட்டது அவனது முகம்.
"ஓ.. கங்கிராட்ஸ் ப்ரோ... " வாய் வார்த்தைக்கு வாழ்த்தியவன், "போகலாம் பாஸ்..." முன்னே நடந்து விட, "என்னை மன்னிச்சுடுங்க மாப்ள!! நேத்து உதவ முடியாம ஆகிடுச்சு! இது தாத்தாவோட வேலை தான்னு பசங்க முன்னாடியே சொல்லிட்டாங்க! இருந்தும் உங்களை எச்சரிக்காம அவசரமா கிளம்பற மாதிரி ஆகிடுச்சு.. மன்னிச்சுக்கங்க" மனதார சொல்ல, அவனது கைகளை பிடித்து கொண்டான் ப்ரையன்.
"நோ இஷ்யூஸ் மச்சி.. எனக்கு அது ஒரு வேலையே இல்லை?! இருந்தாலும் தாத்தாவை கடுப்பேத்த தான் கால்ல வேணுன்னே போட்டேன்!" கண்ணடிக்க, "அசத்துறிங்களே மாப்ள!அப்ப வாங்க தாத்தாவை இன்னும் கொஞ்சம் கடுப்பேத்துவோம்!?" உற்சாகத்துடன் கட்டி கொண்டான் பரிதி.
இருவரும் உணவருந்த வர," வாங்க ! வாங்க! பேராண்டிகளா!? இந்தாட்டி பர்வதம் இலையை வைத்தா! யம்மா ஜமுனா.. உன் புருஷன் வந்தாச்சு..நீயும் சாப்பிட வா" என்றழைக்க, சமையல்கட்டிலிருந்து தூக்கி சொருகிய தாவணியுடன் வெளியே வந்தாள் ஜமுனா.
"நீ ஏன்டி கூட்டி சுத்தம் பண்ணின?"
"பாட்டி..அந்தக்கா பாவம் ஒரு ஆளா எவ்வளவு சுத்தம் பண்ணுவாங்க?! எல்லாரும் பரிமாற வந்துட்டாங்க! அதான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்!" நெற்றியை துடைத்து கொண்டு பதில் கொடுத்தவள் அப்பொழுது தான் கணவனை கவனித்தாள்.
அவளை கண்டதும் கண்களை சிமிட்டியவன், தனது அருகே இருந்த இடத்தை சைகையில் தட்டி காட்ட, அவனுக்கான பிரத்யேக வெட்கப்புன்னகையில் மலர்ந்த முகத்துடன் அருகே வந்தமர்ந்தாள் ஜமுனா.
மலர் இலையை போட்டு கொண்டு வர," இலை மட்டும் போடுவிங்களா? ஊட்டியும் விடுவிங்களா ஃப்ளவர்?!" பரிதி தன்னவளை சீண்ட," ம்ம்.. கொழுப்புதேன்.." பட்டென்று அவன் முன்னால் போட்டவள்," ஜம்மு.. உங்கண்ணைன சொல்லி வையி?! இல்லை கொதிக்கிற கறிக்கொழம்பை மேல ஊத்திப்புடுவேன்?" என வாயை பொத்தி கொண்டு சிரித்தாள் அவள்.
"ஆத்தி! முரட்டு விருந்தாவுல்ல இருக்கு?" மீண்டும் இழுத்தவனை கண்டு கொள்ளாது நகர்ந்து விட்டாள் மலர்.
"ஜாமூன்... உனக்கு என்ன கிஃப்ட் வாங்கனும்னு இவ்வளவு நேரமா யோசிச்சுட்டுருந்தேன்? இப்ப முடிவு பண்ணிட்டேன்!" தன்னவளிடம் குனிந்து கிசுகிசுக்க, அது தவறாது சற்று தள்ளி உணவருந்தி கொண்டிருந்த தாத்தாவின் கண்களிலும் பட்டது.
"என்ன திடீர்னு கிஃப்ட் ஜீனி?"
"என் வைஃப்கு நான் கொடுக்கற முதல் மேரேஜ் கிஃப்ட்! என்ன தெரியுமா?! உன் கால்ல அழகா ஒட்டிட்டுருக்கே ஆங்க்லெட்..அதே மாதிரி தங்கத்துல வாங்கிட்டு வரப்போறேன்! அதை என் கையால உனக்கு இன்னைக்கு நைட் போட்டு விடப் போறேன்!... அப்பவும் இதே காஸ்ட்யூம்ல வா ஜாமூன்?! எனக்கு எல்லாம் பார்க்க வசதியா இருக்கு!" உதவிக்கு அழைத்திருந்த பணிப்பெண்கள் இனிப்பை பரிமாறி கொண்டே போக, அதை எடுத்து மனைவியின் வாயில் ஊட்டி கொண்டே சொல்ல, அவளுக்கு தொண்டையில் சிக்கி புரை ஏறியது.
அருகிருந்து தண்ணீரை எடுத்து வேகமாக அருந்தி தன்னை சமன் செய்து கொண்டவள், நீர் கோர்த்த விழிகளுடன் கணவனை பார்க்க, தித்திப்பாக அவன் காதலும் சேர்ந்தே உள்ளே இறங்கியது.
"மலரு.. நீயும் ஜம்மு கூட உட்கார்ந்து சாப்பிடுடா! நீ ஏன் பரிமாற வர? அதுக்குதான் ஆள் கூப்பிட்டுருக்கோமில்லை?!" பாட்டி அவளை கூப்பிட,"தவம்.. வா புள்ள.." ஜமுனாவும் அழைத்தாள்.
"நீ சாப்பிடு ஜம்மு.. நான் பாட்டிக்கு ஒத்தாசை பண்ணிட்டு வர்றேன்.." புதுமண தம்பதிகளை பார்க்க சில உறவுக்காரர்கள் விஷயம் கேள்விப்பட்டு வந்திருக்க, அவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தாள் மலர்.
வெள்ளைப்பஞ்சு இட்லிகளும், பாட்டி முதல் நாள் சொன்னதை போல, அயிரை மீன் குழம்பும் பரிமாறப்பட,"பெரியம்மா.. நாளைக்கு நம்ம மாரியம்மன் கோவிலுக்கு அனுப்ப கேழ்வரகு மாவு மூட்டையை கேட்டுவிட்டாக" விடிந்தால் ஆடி மாதம் பிறப்பதால், எப்பொழுதும் முதல் கொடை கைலாசம் தாத்தா வீட்டில் இருந்து தான் கொடுக்கப்படும் என்பதால், அதை கேட்டு கோவிலில் வேலை பார்க்கும் ஊழியன் வந்திருந்தான்.
"நல்ல நேரம் பார்த்து வந்துருக்கயா? அங்கன அய்யா ரூமுல தான் மூட்டை கட்டி வச்சுருக்கு.. சீக்கிரம் எடுத்துகிட்டு போ.. " பாட்டி பதில் கொடுக்க, " உள்ளே போய் தூக்கு மூர்த்தி... நீ ஒருத்தன் தான் வந்துருக்க? இரண்டு மூட்டைல்ல அரைச்சு வச்சுருக்கா!? குறைஞ்சது முப்பது கிலோ இருக்குமே?" கூடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த தாத்தா கேள்வி கேட்க, தலையை சொறிந்தான் அவன்.
"இரண்டு மூட்டை தானுங்களே நானே தூக்கிட்டு போயிடுவேன் பெரியைய்யா"
"சரி.. சரி.. பார்த்து தூக்கு" என்றவர் அர்த்ததுடன் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பார்க்க, பரிதியுடனும், ஜமுனாவுடனும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தான் ப்ரையன்.
புரிந்தாற் போல் தலையாட்டிய மூர்த்தி, இரண்டு மூட்டையையும் முதுகில் சுமந்து கொண்டு முற்றத்தில் இறங்கி அவர்களை கடந்து செல்லும் நேரம், ஒரு மூட்டையை கீழே தவற விட, விழுந்த வேகத்தில் மாவு சிதறி காற்றில் கலந்து, அனைவரது முகத்திலும் உண்டு கொண்டிருந்த உணவிலும் தெறித்து, அமர்ந்திருந்தவர்களை நிதானமில்லாமல் எழ வைத்து, விருந்தை பாழாக்கி இருந்தது.
"மூர்த்தி என்னலே பண்ணிருக்க?" சமையல் கட்டில் தண்ணீர் எடுக்க சென்ற பாட்டி கத்த, அதிலும் ப்ரையன் அதிமாக இருமி, தும்மி கொண்டிருக்க, தோளில் இருந்த துண்டால் முகத்தை பொற்றி கொண்டு திருப்தியுடன் அவனை பார்த்து கொண்டு எழுந்த தாத்தா, நிதானமாக உண்டு கொண்டிருந்த இலையை மூடி வைத்தது தவறாமல் மங்கையர்கரசியின் கண்களில் பட, கணவனின் இத்தனை வீரியமான செயலை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார்.
மின்னும்
...