இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 6

Ruthivenkat

Moderator
Staff member
KMK 6:

"எடுத்துக்கோ ஜமுனா.. மாங்காய் போட்ட மோர்... ரொம்ப டேஸ்டியா இருக்கு.. நீயும் சாப்பிடுடா.." மாலினி உபசரிக்க, முதல் ஆளாக எடுத்து அதை உறிஞ்சினாள்‌ தவமலர்.

"ம்ம்.. ஆமாக்கா செம டேஸ்டா இருக்கு..." சப்பு கொட்டியவளை‌ பார்த்து ரசித்து சிரித்தாள் மாலினி.
அவள் அருகில் அமர்ந்திருந்தவளோ, கையிலெடுத்த மோர் டம்ளர் காற்றிலேயே நிற்க, கௌதமுடன் நின்று தீவிரமாக எதையோ பேசிக்கொண்டு இருக்கும் கணவனை தனை மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.
கைகளை குறுக்கே கட்டி கொண்டிருந்தவனின் வெண்மை நிற‌ புஜங்களும், குவித்து வைத்த வெண்ணையில் அழகாக கண் மூக்கை செதுக்கியதை போல் அவனது முகமும் கூர்நாசியும், கௌதமிற்கு நிகராக நிமிர்ந்து நின்றிருந்த தோள்களும், அங்குல அங்குலமாக நெஞ்சில் படமெடுத்து ரசித்து கொண்டிருந்தாள் ஜமுனா.

சற்றுமுன் சாப்பிடும் போது சரியான அமர்க்களம் செய்து தான் அவளுடன் உணவருந்தினான்.

"ஜாமூன்.. இது என்ன?!"

"ஜாமூன் இது எப்படி சாப்பிடனும்?"

"ஜாமூன் நானும் உன்னை மாதிரியே இலைல பாயாசம் ஊத்தி அப்பளம் நொறுங்கி சாப்பிடவா..?" ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஜாமூனாய் அனைவரின் முன்பும் கணவனால் தித்திக்கப்பட்டு கொண்டிருந்தவளுக்கு, நிமிர்ந்து யாரையும் பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.

பரிதி சர்க்கரை ஆலையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றிருந்தான். சர்க்கரை ஆலையின் நிர்வாகத்தை தாத்தாவிற்கும் ஜமுனாவிற்கும் உதவியாக ஷண்முகத்தின் மறைவுக்கு பிறகு அவன்தான் பார்த்து கொண்டிருக்கிறான்.கைலாசநாத தாத்தாவின் பெரியப்பா மகனின் பேரன் பரிதி. அவனது தந்தை அவருக்கு மகன் முறை.. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே விஷக் காய்ச்சல் கண்டு அவர் இறந்து போயிருக்க, அவனது அன்னையையும் தனது ஒன்றுவிட்ட பேரனையும் அரவணைத்து கொண்டது தாத்தா தான். இப்பொழுது கூட அவனது அன்னை அவரது அக்கா மகளுக்கு திருச்சியில் பிள்ளை பிறந்திருப்பதால், பார்த்து கொள்ள உதவிக்கு அங்கே சென்றிருந்தார்.

பாட்டி வீட்டிலிருந்த உறவினர்கள் பெரும்பாலோர் அவர்களது பேத்தியுடன் அவர்களது மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றிருக்க, அவர்களது ஊர்க்காரர்கள் சிலரும், பாட்டியும், கௌதம் மாலினியும் மட்டும் தான் அங்கிருந்தனர்.

"ஜம்மு.. ஹேய்..‌ஜம்மு..‌அண்ணைனை சைட் அடிக்கிறியா? இல்லை பல்லிக்கு மோர் ஊத்த போறியா?! அடியேய்.." தவமலர் அவள் தோளில் தட்ட, எதிர்ப்புறம் சுவரில் நின்று இவளை பார்த்து கொண்டிருந்த பல்லி தெறித்து ஓடியது.

"ஹேய்.. சும்மா இருடி..." மேல் உதட்டை பற்களால் கடித்தவள், அசடு வழிய, புன்னகையுடன் அவளருகே அமர்ந்தாள் மாலினி. மேலே தனது அறையிலிருந்து தவத்தை அழைத்தார் பாட்டி.
"தவம் கொஞ்சம் மேலே வாம்மா. இந்த அலமாரில இருக்க ஜமுக்காளம் எனக்கு எட்டலை! வந்து கொஞ்சம் எடுத்து கொடு" கத்தி அழைக்க," வர்றேன் பாட்டி..அக்கா கூட பேசிட்டு இருடி.. இதோ வந்துடறேன்" ஒரே ஓட்டமாக ஓடினாள் அவள்.
"உன் ஃப்ரெண்ட் ரொம்ப க்யூட்... பரிதி எவ்வளவு ஓட்டினாலும், உன்னை விட்டு நகர மாட்டிங்கறாளே?" மாலினி சொல்ல, பெருமையுடன் தோழியை தழுவியது ஜமுனாவின் பார்வை.

"ப்ரையன் ரொம்ப நல்ல டைப் ஜமுனா..உண்மையிலேயே நீ ரொம்ப லக்கி!! பொண்ணுங்களை அவ்வளவு சீக்கிரம் நிமிர்ந்து கூட பார்க்காம விரைப்பா நிற்கிற ஆளு?! உன்னை பார்த்த சில மணி நேரத்திலேயே நீதான் வேணும்ன்னு ஒரு முடிவோட நின்னது?! ரியலி... காதலோட மேஜிக் மொமன்ட்.. கண்டதும் காதல்னு கேள்விபட்டுருக்கேன். ஆனால் நேரடியாகவே பார்க்க வைச்சது உன் புருஷன் தான்!" சந்தோஷத்துடன் சொல்ல, மனம் முழுக்க தன்னவனே நிறைந்திருக்க, நிறைவாக புன்னகைத்தாள் அவள்.

"ஆமாக்கா.. ஆரம்பத்துல எனக்கும் கூட பயமா இருந்துச்சு?! ஆனால் எல்லாத்தையும் ரொம்ப பொறுமையாவே சமாளிச்சாரு!"

"ம்ம்.. ரொம்பவே பொறுமைசாலி தான். ஆரம்பத்துல எங்களுக்கு பாடிகார்டா சேர்ந்தாலும், இன்னைக்கு அவருக்கு கீழே ஐம்பது பேர் வேலை பார்க்குற ஒரு டீமே இருக்கு. செக்யூரிட்டி ஏஜென்சியாவே ஆரம்பிச்சு எங்களுக்கு அவங்க ஆளுங்க மட்டுமே தனிப்பட்ட முறையில செக்யூரிட்டி கொடுக்கற அளவுக்கு ஆறே மாசத்துல டீமை ரெடி பண்ணின ஆளு!! அதிகமான பொறுமை! ஆனால் கோபப்பட்டு ரோஷப்பட்டுட்டா அதுக்கப்பறம் நாம எவ்வளவு சமாளிச்சாலும் முடிவெடுத்து வேண்டாம்னு போயிட்டே இருப்பாருன்னு என் ஹஸ்பென்ட் சொல்லிருக்காரு!" கடைசி வரியில் ஏனோ கலக்கமாக அவனை பார்த்தாள் அவள். தாத்தா தான் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வாரென்று புரியவில்லையே?!

"மேரேஜ் இப்படி உடனே நடந்தது?! அதாவது தெரியாத ஒரு ஆளை கல்யாணம் பண்ணது உனக்கு ரொம்ப கஷ்டமா ஏதும் இருக்கா ஜமுனா?" சட்டென வாடிவிட்ட அவளது முகத்தை பார்த்து விட்டு அக்கறையுடன் கேட்டாள் மாலினி.

"இல்லை.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லைக்கா..‌ நம்ம ஊர்ல முக்கால்வாசி கல்யாணம் பெரியவங்க ஏற்பாடு பண்றது தானே? பேசி பழக எல்லாம் விட மாட்டாங்க! அதனால தான் இவர் யாரு என்னன்னே தெரியாம இந்த கல்யாணம் நடந்தப்போ மனசார ஏத்துக்க முடிஞ்சது! இனி.. நல்லபடியா நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்ந்தாலே போதும்!"

"இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பக்குவமா பேசறியேடா.. வெரி ஸ்வீட். நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.. ப்ரையனும் நீயும் ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை தான் வாழ்விங்க!!" ஆருடம் சொல்ல, ஜமுனாவின் இதழும் கண்களும் ஒரு சேர மலர்ந்தது.

"நீ ஆசைப்பட்ட மாதிரி இந்தியன் கேர்ளயே மேரேஜ் பண்ணிட்ட மேன்!! சந்தோஷமா?" ப்ரையனின் தோளில் தட்டி கொடுத்தான் கௌதம்.

"அதுக்கு நான் உங்களுக்கு தான் தாங்க் பண்ணனும் சார். என்னோட மனசை புரிஞ்சுகிட்டு எனக்கு முழு ஆதரவும் கொடுத்திங்களே?"

"அது என்னோட கடமை ப்ரையன்.‌ நீ என்கிட்ட வேலை பார்த்தாலும், நீயும் என் குடும்பத்துல ஒருத்தன் தான்!! செய்யாம இருப்பேனா?!
அப்பறம் கல்யாணத்துலயே உன்னை தாத்தா நல்லா முறைச்சுகிட்டே இருந்தாரு?வீட்டுக்கு போனப்போ என்ன ஆச்சு? அவருக்கு எல்லாருமே பயப்படறாங்கப்பா? ஏன் எங்க பாட்டி கூட இங்க பேத்தியை விட்டுட்டு அவரை சமாதானப்படுத்துறது தான் முதல் வேலைன்னு அங்கே ஓடி வந்துட்டாங்களே?! ரொம்ப மூஞ்சி காட்டுறாரா?" அக்கறைப்படுவது போல் கேட்டாலும் தாத்தாவை பற்றி பேசும் போது சிரிப்பை அடக்குவது நன்றாக தெரிந்தது ப்ரையனுக்கு.

"நீங்க கன்ட்ரோல் பண்ற மாதிரி எனக்கும் அவர் நடந்துக்கறதை பார்த்து ரொம்ப சிரிப்பு வருது சார்! பட்.. அவரோட உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறதால அவரோட ப்ளெசிங்கோடவே இங்க இருந்து ஜாமூனை கூட்டிடுட்டு போகனும் நினைக்கிறேன்..." என்றவன், நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்.

"பிரச்சனையே இல்லை! எல்லா உறவுகளும் சேர்ந்தது தான் குடும்பம். அவங்க எல்லாரும் சந்தோஷமா உங்களை வழியனுப்பி வைச்சா தான் உங்க இரண்டு பேரு மனசுக்கும் நிம்மதியா இருக்கும்! நீ எல்லாம் முடிச்சுட்டே கிளம்பி வா!"

"இல்லை சார்.. எப்படியும் நான் இடைல சென்னை வர்ற மாதிரி தான் இருக்கும்?! நம்ம ஜிவி குரூப்போட வெள்ளிவிழா கொண்டாட்டம் நடக்கப்போகுதில்ல? எல்லா ஏற்பாடும் முடிஞ்சது? டீம் பாய்ஸ் பார்த்துகிட்டாலும், நானும் அங்க இருக்கனும்னு எதிர்பார்ப்பாங்க! அதுக்குள்ள நான் இங்க இருந்தே இன்னும் சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க வேண்டியிருக்கு. என்னோட திங்க்ஸ் இங்க பேக் பண்ணி அனுப்ப சொல்லிருக்கேன்" தொழிலில் கண்ணும் கருத்துமாக பேசுபவனை நினைத்து பெருமையுடன் புன்னகைத்தான் கௌதம்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மேன்! நீ புதுசா கல்யாணம் ஆனவன், கொஞ்சநாள் நல்லா என்ஜாய் பண்ணு?" கண்ணடிக்க, வெட்கத்துடன் கண்களை தடவிக்கொண்டு புன்னகைத்தான் அவன்.

"எங்கே? அதான் ஆடி சென்டிமென்ட்ஸ் பேசுறாங்களே சார்? ஜாமூன் கிட்ட வந்தாளே?! என்னால ஃபீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை?! அட்லீஸ்ட் அவளை டச் பண்ணிகிட்டே இந்த ஊர் முழுக்க சுத்தி வரனும்?! என்னை அவளுக்கு புரிய வைக்கனும்? அவளுக்கு என்கிட்ட என்ன எதிர்பார்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கனுன்னு அவ்வளவு ஆசையா இருக்கு? ஆனால் இவங்க பேசற ரூல்ஸை பார்த்தா என் வைஃப கண்ல பார்க்குறதே பெரிய விஷயமா இருக்குமோன்னு தோணுது?" சற்று தள்ளி மாலினியுடன் சிரித்து பேசி கொண்டிருந்தவளின் யவ்வனமும், இதழசைவும் இன்னும் போதையேற்ற பெருமூச்சு விட்டான் ப்ரையன்.

"லவ்வுக்கு சென்டிமென்ட்ஸ்லாம் தடையா என்ன?"

"சார்?!"கௌதமன் கேள்வியில் உற்சாகத்துடன் அவனை பார்த்தான்.

"தாத்தா இனி ஜமுனாக்கு உறவு தான் ப்ரையன்?! ஆனால் அவளுக்கான அத்தனை உரிமையும் உனக்கு தான்! அதேபோல தான் உன் வைஃபுக்கும். உன்கிட்ட மறுத்து பேச அவளுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.‌ உனக்கு அவ.. அவளுக்கு நீ.. இரண்டு பேருக்கும் நடுவுல வர எந்த தடையும் கண்டுக்காம, தாராளமா உங்க இரண்டு பேருக்கான நேரத்தை சந்தோஷமா செலவழிங்க!! மத்ததெல்லாம் தானா நடக்கும்!" என, உற்சாகத்துடன் மனைவியை பார்த்தவனோ, அருகிலிருந்த மாலினியை பார்த்து யோசனையுடன் திரும்பினான்.

"எல்லாம் ஓகே சார்..‌மேடம்கு எப்பனாலும் டெலிவரி ஆகும்!? வெள்ளி விழா செலிப்ரேஷனுக்கும் நாள் கம்மியா தான் இருக்கு! நான் இல்லாம உங்களுக்கு சமாளிக்க கஷ்டம் சார்!" மாலினியின் மீது அக்கறையுடன் சொல்பவனை கண்டு பெருமையுடன் பார்த்தான் கௌதம்.

"ரொம்ப யோசிக்காத மேன்!! இது உனக்கான டைம்.. சரி.. அதுக்கும் மேல நீ இருந்தா தான் சரியா இருக்கும்னா நான் உன்னை கண்டிப்பா கூப்பிடறேன்.. அப்போ ஜமுனாவையும் கூட்டிட்டு நீ கிளம்பி வா! ஹாப்பி?!"

"வெரி ஹாப்பி சார்!" கௌதமை தழுவிக்கொண்டான்.

"இப்படி கட்டிக்க இன்னொரு ஆள் வந்தாச்சு? அங்க பார்த்துட்டுருக்காங்க பாரு?!" ப்ரையனின் காதில் முணுமுணுக்க, சட்டென விலகி நின்று மனைவியை பார்க்க, மாலினியும் ஜமுனாவும் அவர்களை தான் பார்த்து கொண்டிருந்தனர்.

இருவரும் பேசிக்கொண்டே, அவர்களது அருகில் வர," என்ன மிஸ்டர் ப்ரையனுக்கு ஞானம் கொடுத்திட்டிங்களா கௌதமா?" வந்து அமர்ந்தவர்களை கலாய்த்தாள் மாலினி.

கௌதம் மாலினியின் தோளை சுற்றி கைபோட்டு அமர, எதிரில் அமர்ந்த ப்ரையனோ ஜமுனாவின் கையோடு கையை கோர்த்து கொண்டான்.

"எல்லாம் இங்க இருந்து கத்துக்கிட்டது தானே?! என் குட்டி பொண்ணு ஒழுங்கா சாப்பிட்டாளா?" கௌதம் மனைவியின் வயிற்றில் கைவைத்து கொஞ்ச, முறைத்தாள் மாலினி.

"ஏற்கனவே ஒருத்தி என்னை படுத்துறது பத்தாதா?! எனக்கு பையன் தான் வேணும்!"

"அதெல்லாம் முடியாது பொண்ணு தான்!" இருவரும் செல்ல சண்டையிட்டனர்.

"என்ன வேடிக்கை பார்க்கறிங்க?! அடுத்து உங்க வீட்லயும் இந்த சண்டை தான் நடக்கும்!" மாலினி எதிரிலிருக்கும் புதுமண ஜோடியை வம்பிழுக்க, "நோ.. ஃபைட்.. ஒன்லி ஜாமூன் கேட்கற பேபிஸ் தான் மேம்..!! " ப்ரையன் உடைத்து பேச, நாணத்துடன் அவன் தோளில் முகம் புதைத்து கொண்டவளை,கலைத்தது தவத்தின் குரல்.

"ஏன் பாட்டி.. உங்க வீட்டு விருந்துல நாலு வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டேன்னு என்னை இப்படி அலமாரிக்கு அலமாரி குரங்கு கணக்கா தாவ விட்டிகளே? ஆத்தி!.. என் இடுப்பே போச்சு!?" என்றவள் ஜமுனாவை இடித்து கொண்டு அமர, ப்ரையனின் மேல் விழுந்தாள் அவள்.

"கோச்சுக்காதடி செல்லம். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு விருந்து கொடுக்கனுமில்ல?! இந்த சாமானுகளை மட்டும் எடுக்க மறந்துட்டேன்! கொஞ்சம் இரு.. பஞ்சாமிர்தம் கேட்டல்ல.. வீட்ல செஞ்சதே இருக்கு.. உனக்கு எடுத்து வைக்கிறேன்.. மறக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போ.."

"இன்னும் இரண்டு அலமாரி தாவனும்னாலும் சொல்லுங்க பாட்டி.. ஐம் ரெடி.. அப்பறம் அந்த பஞ்சாமிர்தத்தை சின்ன டிபன்ல வைக்காம பெரிய தூக்கு நிறைய வைங்க..." வேகமாக எழுந்தவள், பாட்டி பின்னால் ஓட, தவத்தின் அந்தர் பல்டியில் ப்ரையனின் மேல் சாய்ந்து கொண்டு குலுங்கி சிரித்தாள் ஜமுனா.

அவளின் புன்னகையை ரசித்து பார்த்து கொண்டிருந்தவனை பார்த்த கௌதமும் மாலினியும் மெதுவாக அந்த இடத்தை காலி செய்திருக்க, அவன் தோள் மீது சாய்ந்து சிரித்து கொண்டிருந்தவளை," ஜாமூன்..." மெதுவாக அழைக்க, தோளில் இருந்தவாறே தலையை மட்டும் நிமிர்த்தி அவனை‌ பார்த்தாள் ஜமுனா.

கண்ணில் காதல் மின்னும் அவனது பார்வையில் கன்னங்கள் சூடாக, அவளது கையிலிருந்த அலைபேசியை வாங்கி கேமராவை திறந்தான் ப்ரையன்.

"செல்ஃபீ..." நொடியும் தாமதிக்காது அழகிய தருணத்தை புகைப்படமாக பதிவு செய்தான் அவன். மயக்கும் புன்கையுடன் அவனை பார்த்து கொண்டிருந்தவள் , கணவனுடன் புகைப்படத்திலும் அழகாக பதிந்திருந்தாள்.

"ரொம்ப அழகா இருக்கு..." வேகமாக அலைபேசியை வாங்கி பார்க்க, " எனக்கும் அனுப்பிட்டு கொடுக்கிறேன்.." என்றவனின் கையில் அலைபேசியை கொடுத்தாள் அவளும்.

"அம்மாடி.. ஜமுனா.." பூஜை அறையிலிருந்து பாட்டி குரல் கொடுக்க, "உங்க நம்பரை சேவ் பண்ணுங்க ஜீனி.. என்னன்னு கேட்டுட்டு வரேன்!" எழுந்து செல்ல, இருவரின் வால்பேப்பரும் சற்றுமுன் எடுத்த புகைப்படமாக மாற்றி கொண்டிருந்தான் ப்ரையன்.

அப்பொழுது கையில் தூக்குவாளியுடன் அங்கே வந்த தவம்," அண்ணே.. பாட்டி உங்களையும் உள்ளே கூப்பிடுறாங்க!" அழைக்க, கார்சாவியை கையில் சுழற்றி கொண்டு உள்ளே நுழைந்தான் பரிதி.

"உங்களை விட உயரமாக இருக்கற தூக்கு வாளியை தூக்கிகிட்டு எங்க கிளம்பிட்டிங்க ஃப்ளவர் மேடம்? ஆனாலும் நீ சாப்பிட்டது மட்டுமில்லாம இந்த ஊருக்கே பாயாசம் ஊத்தனும்னு‌எடுத்துட்டு கிளம்பிருக்க பாரு?! உன்‌நல்ல மனசை பாராட்டியே ஆகனும். சரி..‌சரி சட்டுபுட்டுன்னு திறந்து மாமனுக்கு ஒரு டம்ளர் பாயாசத்தை ஊத்தி எடுத்துட்டு வா பார்ப்போம்" என்றவனின் பேச்சில் ," யண்ணே.. இந்தாள மாமன் கீமன்னு பேச வேண்டான்னு சொல்லுங்க! என்னை கட்டிக்கிற என் முறைப்பையன் ரெடியா இருக்காரு..." சுறுசுறுவென கோபமேற பதில் கொடுத்தாள் தவம்.

"யாரு?! உன் அயித்தை மகன் அந்த முக்குத்தெரு நாராயணனையா சொல்ற?! ஏன் மாப்ள?! ஓடில்லாத ஆமை நடந்து போய்‌ பார்த்துருக்கிங்களா?!" ப்ரையனையும் பேச்சில் இழுத்தான்.

"இல்லையே?!" பதில் சொல்லும்போதே, சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகி போனது அவனுக்கு.

"அப்படி ஒரு அழகுநடை சுந்தரன் அவன். அந்த சுந்தரனுக்கு தான் இந்த சுந்தரி காத்துருக்காளாம்?! " என்றவன் அந்த நாராயணனை போல் நடந்து வேறு காட்ட, அடக்க மாட்டாது சிரித்தான் ப்ரையன்.

"யண்ணே நீங்களும் இவன்கூட சேர்த்துட்டிங்களா?" தவம் அழுவதை போல் முகத்தை சுருக்க பாவமாகி போனது ப்ரையனுக்கு.

"நோ.. நோ.. தங்கச்சிமா..மச்சி போதும்!" தவத்திற்கு ஆதரவாக பேச, " அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க ஜமுனாகிட்ட போங்க மாப்ள!" ஞாபகப்படுத்த, வேகமாக உள்ளே சென்று‌விட்டான் அவன்.

"இங்க பாரு?! இப்படி எங்க மாமாவை கேலி பண்ணிட்டு திரியறது நல்லால்லை!! சொல்லிட்டேன் ஆமா!" கையிலிருந்த தூக்கை நங்கென்று தரையில் வைத்தாள்.

"ஆமா... இவங்க மாமா பெரிய சூரி?! அவன் நடந்து வந்து உன் கழுத்துல தாலி கட்டுறதுக்குள்ள, நாம இரண்டு பிள்ளை பெத்து முடிச்சுடலாம் ஃப்ளவர் மேடம்!!" கடைசி வரிகளில் அவன் குரல் கிறங்குவது, அவனுக்கே தெரிந்தது. அது எதிரில் இருப்பவளுக்கும் புரிய, அவனது இந்த உரிமை‌பேச்சில் முறைக்க முயன்று தோற்றவளோ, ஏக்கத்துடன் அவனை ஒரு பார்வை பார்த்தவள், உள்ளே ஓடி விட்டாள். அவளது பார்வையில் குழம்பிப்போனான் பரிதி.

"பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழனும்.." வடிவு இருவரையும் ஆசிர்வதித்து ஜமுனாவிற்கும் ப்ரையனுக்கும் உடைகளும், தங்கச்சங்கிலிகளையும் கொடுக்க, வேண்டாமென மறுத்தவளிடம்," என் பேரன் பேத்திக்கு நான் செய்றது.. வாங்கித்தான் ஆகனும்" வாங்கி கொள்ள செய்தார் வடிவு.

அருகில் நின்றிருந்த மாலினி, தனது கழுத்தில் அணிந்திருந்த வைர பென்டன்ட் கோர்த்திருந்த முத்து மாலையை கழற்றி ஜமுனாவின் கழுத்தில் போட்டு விட," அச்சோ.. அக்கா என்ன இதெல்லாம்?" அதிர்ந்தவளை பார்த்து புன்னகைத்தாள் அவள்.

"எங்க வீட்டு பொண்ணுக்கு எங்க சார்பா ஒரு பரிசு... போட்டுக்கோம்மா.." கௌதம் சொல்ல, ப்ரையனை பார்த்தவளிடம், சம்மதமாய் தலையசைத்தான் அவன்.

"ஹாப்பி மேரேஜ் லைஃப்! எப்பவும் சந்தோஷமா இருக்கனும்!" இருவரும் மனமார வாழ்த்த,ப்ரையனிடம் இருந்த ஜமுனாவின் அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்க்க தாத்தா தான் அழைத்து கொண்டிருந்தார்.

"அச்சோ நேரமாச்சு போலவே!! அதான் தாத்தா கூப்பிடறாங்க!" தன்னவள் பதற, அலைபேசியை அவளிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையில் வைத்து கொண்டான் ப்ரையன்.

"உன்னை இவ்வளவு டென்ஷன் ஆக்குற காலை நீ அட்டென்ட் செய்ய வேண்டாம் ஜாமூன். கிளம்பலாம்..." என, பார்வையில் மெச்சுதலுடன் அவர்களை வழியனுப்பி வைத்தான் கௌதம்.

பரிதி காரில் ஏறி யோசனையுடன் அமர்ந்திருக்க, வந்த போது இருந்த கலகலப்பில்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் தவமலர்.

"சந்தோஷமா போயிட்டு வாம்மா..." காரில் ஏறியவர்களுக்கு கையசைக்க, அதற்குள் வடிவின் அலைபேசி ஒலிக்க, எதிரில் இருந்தவளை பார்த்து கொண்டே அழைப்பை ஏற்றவர் " வீட்டுக்கு தான் வந்துட்டுருக்காங்க பெரியமாமா.." என, பரிதியின் வேகத்தில் வடிவின் குரல் காற்றோடு மறைந்து கொண்டிருந்தது நன்றாகவே காதில் விழுந்தது ஜமுனாவிற்கு. தாத்தாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற பெருமூச்சுடன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் ஜமுனா.

வீட்டு வாசலில் கார் நிற்க, " டீ..‌ ஜம்மு.. அம்மா ஒரு வேலை சொல்லுச்சு.. முடிச்சுட்டு வரேன்னு பாட்டிகிட்ட சொல்லிடு" பரிதியை திரும்பியும் பாராது அருகிலிருக்கும் தனது வீட்டுக்குள் ஓடிவிட்டாள் தவமலர். அவளின் நடவடிக்கை புதிராக இருக்க, யோசனையுடன் உள்ளே நுழைந்தான் அவன்.

"ஹப்பாடி... வந்துட்டிங்களா? இவ்வளவு நேரம் வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்தே தரையை தேய்ச்சுட்டு கிடந்ந மனுஷன்.. வண்டி சத்தம் கேட்டதும்..‌ உள்ளே போயிட்டாருடா!" வந்தவர்களை பார்த்து அங்கலாய்த்தார் பாட்டி.

"மாப்ளயை பார்த்து அவருக்கும் வெட்கமா இருந்திருக்கும் பாட்டி?! அதான் போய் ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கறாரு போல?" பரிதி நக்கலடிக்க, வாய் விட்டு சிரித்தான் ப்ரையன்.

"போக்கிரி படவா.. வர வர உன் வாய் கூடிகிட்டே போகுதுடா!..." பாட்டி அவன் தோளில் அடிக்க, " அண்ணே!! தாத்தாவை ரொம்ப தான் கலாய்க்கறிங்க?" கண்டனத்துடன் பார்த்தாள் ஜமுனா.

"நான் ஒண்ணும் சொல்லல தாயி!! போ.. போய்.. உள்ளேன் ஐயான்னு தாத்தாகிட்ட அட்டென்டென்ஸ் போட்டுட்டு வந்துடு.. இல்லைன்னா மறுபடியும் மாப்ள கூட ஐஸ் பாய்ஸ் விளையாட ஆரம்பிச்சுடுவாரு?" பரிதி இன்னும் கலாய்க்க," கண்ணா.. ஜமுனா..." தாத்தாவும் அதே நேரத்தில் அழைக்க, பரிதி காலரை தூக்கி விட, வாயை பொத்தி கொண்டு சிரித்தார் பாட்டி.

"நீங்க கொஞ்சம் ஓய்வெடுக்க மாப்ள. உங்களுக்கு பாட்டி புது துணி கொண்டு வரச்சொல்லு.. வேற ஏதாவது கேஷீவல்கு மாறிக்கங்க.. அவசரத்துக்கு வேஷ்டி சர்ட் தான் கிடைச்சது!" பரிதி ப்ரையனை அழைத்து கொண்டு அறைக்கு செல்ல, தாத்தாவின் அறைக்கு ஓடினாள் ஜமுனா.

இரவு உணவுண்ணும் நேரம் வரை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. முற்றத்தில் நான்கு பேரும் அமர்ந்து சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருக்க, மீண்டும் பாவாடை தாவணிக்கு மாறியிருந்த மனைவியை விழிகளால் அளவெடுத்து கொண்டு அமர்ந்திருந்தான் ப்ரையன்.

"யண்ணே!! நம்ம பருத்தி காட்டுல யாரோ புகுந்துட்டாங்கன்னு கலவரமா இருக்கு!" தாத்தாவின்‌ வீட்டிற்கு வந்து தகவல் சொன்னான் ஊர் ஆள் ஒருவன். பருத்திக்காடு பரிதியின் தந்தைக்கு சொந்தமானது, அவன்தான் பராமறித்து வருகிறான்.

"இதோ வர்றேன்.. நீ போடா..." என்றுவிட்டு திரும்பியவன், "மாப்ள.. எந்த உதவின்னாலும் உடனே ஃபோன் பண்ணுங்க!" தனது அறைக்குள் புலி போல் நடந்து கொண்டிருந்த தாத்தாவை ஒரு பார்வை பார்த்து சொல்லி விட்டு கிளம்பி சென்றான்.

அவன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், அலைபேசியில் யாரையோ அழைப்பதும், துண்டை உதறி தோளில் போடுவதுமாக, வீட்டுக்கும் வாசலுக்கும் நடை பயின்று கொண்டிருந்தார் தாத்தா.

சிறிது நேரம் பொறுத்த ஜமுனா," தாத்தா என்ன ஆச்சு? ஏன் இப்படி வாசலுக்கும் வீட்டுக்குமா டென்ஷனா நடந்துட்டு இருக்கிங்க?" எழுந்து தாத்தாவிடம் சென்றாள் ஜமுனா.

"நேரமே சரியில்லைடா கண்ணா.. எப்பவும் நமக்கு கரும்பு கட்டை ஏத்துற பயலுக அடுத்த ஊர் திருவிழாக்கு போயிட்டானுங்க!! அதான் வேற ஆளுங்களை வர சொல்லியிருந்தேன்! அவனுங்களையும் இப்ப வரைக்கும் காணோம்! நாளைக்கு லோட் அனுப்பலைன்னா கூட்டுறவு சங்கத்துல பிரச்சனை ஆகும்!" முத்து முத்தாக வியர்த்த வியர்வையை துண்டில் துடைத்து கொண்டார்.‌

"அச்சோ.‌.. ப்ரஷர் ஏறப்போகுது!! கொஞ்ச நேரம் உட்காருங்க! நான் வேணும்ன்னா பரிதி அண்ணனுக்கு கூப்பிடறேன்!" என, " என்னாச்சு ஜாமூன்?" எழுந்து வந்தான் ப்ரையன். அவன் வரவும் தாத்தா தனது நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார்.

"இல்லை..‌ லோட் ஏத்தனும்.. ஆள் வரலை!"

"நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றவனை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டார் தாத்தா.

"இது என்ன புல்லு கட்டு தூக்குற வேலைன்னு நினைச்சாரா உன் புருஷன்? ஐம்பது கட்டு கரும்பையும் வண்டில ஏத்தனும்.. முடிஞ்சா ஏத்த சொல்லு?! " என, முழித்தாள் ஜமுனா.

"ஓகே.. நான் செய்யறேன்.."

"அச்சோ.. மாப்ள.. இந்நேரமா? வேண்டாம் நாளைக்கு ஆள் வச்சு பண்ணிக்கலாம்?" பாட்டி வேகமாக வந்து தடுத்தார்.

"இட்ஸ் ஓகே பாட்டி. என்னால முடியும்! இடத்தை மட்டும் காட்டுங்க!"

"நம்ம குடவுன்கிட்ட போகனும்.. நீ போக வேண்டாம்..என் பின்னால வரச்சொல்லு கண்ணா!" தாத்தா நடந்து முன்னே செல்ல, பின்னே சென்றான் ப்ரயைன். மலை போல கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்படிருக்க, மனது கேட்காமல் அங்கு ஓடி வந்திருந்தாள் ஜமுனா. இடத்தை காண்பித்து விட்டு தாத்தா சென்றுவிட, ஒவ்வொரு கட்டாக நிதானமாக இறக்கி ஏற்றி கொண்டிருந்தான் ப்ரையன்.

"ஜீனி... போதும்!! இதோட நிறுத்துங்க? ச்சே.. இந்த பரிதி அண்ணன் வேற ஃபோன் எடுக்க மாட்டேங்குது?" சிவந்து வியர்த்து முகத்துடன் அசால்டாக அவன் தூக்கி போட்டு கொண்டிருந்தாலும், ஜமுனாவிற்கு வலித்தது.

அவள் தவிக்கும் தவிப்பை பார்த்தவன்," முடியப்போகுது.‌.. நீ போ ஜாமூன். நோ வர்ரீஸ்.." வேஷ்டியை மடித்து கொண்டு, நின்றவனை கண்டு உள்ளம் பூரித்தாலும் மனது கேட்கவில்லை.

"நான் சொன்னா கேளுங்க..." படியின் மேல் நின்றிருந்தவள் அருகே வர, அப்பொழுதுதான் சற்று பின்னால் சூட்சம புன்னகையுடன் தாத்தாவும் நின்று அவர்களை பார்த்து கொண்டிருப்பதை பார்த்தான் ப்ரையன்.

'ஓ.. வேணுன்னு தான் தூக்க விடுறிங்களா ஓல்டு மேன்?' மனதிற்குள் சிரித்து கொண்டவன், கையில் தூக்கி வைத்திருந்த கட்டை வேண்டுமென்றே வேகமாக காலில் போட்டு," ஆ..." அலறினான்.

"அச்சோ.. ஜீனி.. பார்த்திங்களா? நான் பயந்த மாதிரியே ஆகிடுச்சு!" வேகமாக கணவனிடம் வந்தவள், அவனை அழைத்து படிக்கட்டில் அமர வைத்து காலை பார்க்க, கரும்பு பட்ட இடத்தில் சிவந்திருந்தது.

"ஷ்... தொடாதே.. வலிக்குது ஜாமூன்.." என்றவன் அவளை கட்டிக்கொண்டு தோளில் முகம் புதைத்து கொண்டு, தாத்தாவை பார்த்து புன்னகைக்க, கோபத்துடன் துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு சென்றுவிட்டார் தாத்தா.

"ரொம்ப வலிக்குதா? இருங்க ஐஸ் கட்டி எடுத்துட்டு வரேன்.." கலங்கிய கண்களுடன், அவனை விட்டு விலக, " என்னோட ஐஸ் க்யூப் நீதான் ஜாமூன்...நோ டியர்ஸ்.." இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டவனின் கன்னத்தோடு கன்னம் இழைந்தவனின் முகமெங்கும் முத்த மழையை கொட்டி தீர்த்தாள் அவளது ஜாமூன்.

மின்னும் 💖 💖....
 
Back
Top