இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 5

Ruthivenkat

Moderator
Staff member
KMK 5

"புதுப்பொண்ணு இப்படியா அழுது வடிஞ்சுட்டு இருக்கிறது?! ப்ரையன்தம்பி கல்யாணம் முடிஞ்சு நேரா இங்க வந்தாச்சு? நம்ம ஊர் சம்பிரதாயப்படி மாப்பிள்ளை வீட்டுக்கும் அழைச்சுட்டு போகனும்?! நீங்க சென்னை வரைக்கும் போயிட்டு வர்றது இப்போதைக்கு சாத்தியமில்லை.. அதனால மாப்பிள்ளை வீட்டு சார்பா நான் உங்களை எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகட்டுமா? நீங்க சரின்னு சொன்னா நான் மங்கை கிட்ட பேசறேன்!?" வடிவம்மை எடுத்து சொல்ல, தன்னவளை சிறிது நேரம் வெளியில் அழைத்து செல்வது சரியென பட்டது ப்ரையனுக்கும். அவனது முதலாளி கௌதமிடமும் அவனுக்கு சில விஷயங்கள் நேரில் பேச வேண்டியிருந்தது‌.

"ஓகே..பாட்டி.." என்றவன் தன்னவளை பார்க்க, சம்மதமாக தலையசைத்தாள் ஜமுனாவும்‌.

தாத்தாவின் அறையில் இருந்து, அவருக்கு உணவும் மருந்தும் கொடுத்து விட்டு பாட்டியும் வெளியில் வர," மங்கை... மாப்பிள்ளை வீட்டு சடங்குக்கு இவங்களை நான் எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போயிட்டு கூட்டிட்டு வர்றேன்‌. மதியம் அங்க சாப்பிட்டுட்டு சாயங்காலம் இங்க வந்ததும், புதுப்புடவை மாத்தி ஜமுனாக்கு புது விளக்கு கொடுத்து இங்கேயே ஏத்த சொல்லு.. புருஷன் வீட்டுக்கு போறப்போ அவ எடுத்துட்டு போகட்டும். மாமா கிட்ட நீயே சொல்லிடு" தனது ஆலோசனையை சொல்ல, அவருக்கும் அது சரியாகபட்டது.

"அந்த மனுஷன் கிட்ட என்ன கேட்டுகிட்டு? நீ தாரளமா கூட்டிட்டு போயிட்டு வா வடிவு. இவ்வளவு நேரமும் ஒரு பிடி பிடிச்சுட்டு தான் வர்றேன்!! இருந்தாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு வீம்பு ஆகாது?! நீ கிளம்பு அம்மு. முகத்தை கழுவிட்டு எப்பவும் நம்ம வீட்ல இருக்க மாதிரி அலங்காரம் பண்ணிட்டு வா. நான் தவத்து பாட்டிகிட்ட சொல்லி மல்லிகைப்பூ எடுத்துட்டு வரச்சொல்றேன். பூஜையறைல சாமி கும்பிட்டு நீங்க வடிவு பாட்டியோட கிளம்புங்க" ஜமுனாவை அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்.

"மாப்பிள்ளை.. நீங்களும் தயாராகனும்னா ரெடியாகிட்டு வாங்க! இதோ எதிர்த்தாப்புல தெரியுற அறை தான் என் புள்ளையும் மருமகளும் இருந்த அறை. உங்களுக்காக அதை ரெடி பண்ணிட்டேன்‌. ஏசியும் இருக்கு. புதுசா பேஸ்ட் ப்ரஷ் சோப்பெல்லாம் கூட வச்சுட்டு வந்துருக்கேன். ஆடி மாசம் முடியற வரைக்கும் அங்கேயே தங்கிக்கோங்க! அதுக்கப்பறம் அம்முவும் உங்க கூட வந்து இருக்கட்டும்.. உங்களுக்கு வேற துணிமணி புதுசா வேணுன்னா பரிதி கிட்ட சொன்னா அவனே எடுத்துட்டு வந்துடுவான்" தயக்கத்துடன் சொல்லி முடித்தார்.

"ஐம் ஓகே பாட்டி.. ஜாமூன் ரெடியாகிட்டு வரட்டும். அங்கே வெளியே தெரியறது தோட்டம் தானே? நான் கொஞ்சநேரம் அங்க இருக்கட்டுமா?" அனுமதி கேட்க, இவ்வளவு நாகரிகத்துடன் நடந்து கொள்பவனிடம் அநாகரிமாக நடக்கும் தனது கணவனை நினைத்து உள்ளுக்குள் எரிமலை வெடித்தது பாட்டிக்கு.

"அச்சோ.. மாப்ள என்ன அனுமதி எல்லாம் கேட்டுகிட்டு? இங்க இருக்குற எல்லாமே இனி உங்களுக்கும் ஜமுனாவுக்கும் தான் சொந்தம்! இது உங்க வீடு! தாரளமா எல்லா இடத்துக்கும் போய்ட்டு வாங்க! நாளைக்கு நம்ம ஜமுனா கிட்ட சொல்லி தோப்பு வயலெல்லாம் சுத்தி காட்ட சொல்றேன்‌‌!!" சொல்லிக் கொண்டிருக்கும் போதே, " பாட்டி.. " கத்தி கொண்டே உள்ளே வந்தாள் தவமலர்.

"இந்தாங்க.‌.‌ பெரியாத்தா ஜமுனாக்கு பூ கொடுத்து விட்டுச்சு" வாழைஇலை சுருளில் கொஞ்சமாக வெளியில் வழிந்து எட்டி பார்த்து கொண்டிருந்த மல்லிகையின் மணம் நொடிக்குள் அந்த இடத்தையே மணக்க செய்து கொண்டிருந்தது.

"ஏண்டி?! ஜமுனா கூட கொஞ்சநேரம் இருக்காம? அதுக்குள்ள எங்க ஓடுனவ?"

"ஹான்.. இங்கதான் வாலில்லாத குரங்கு ஒண்ணு சுத்திகிட்டுருந்துச்சே?! அது ஓயாம சண்டை போட்டுகிட்டே இருந்துச்சு? அதான் ஓடிட்டேன். ஜமுனா எங்கண்ணே?!" காலம் காலமாக பழகியவளை போல், மிக சகஜமாக ப்ரையனை பார்த்து கேட்க, புன்னகைத்தான் ப்ரையனும்.

"அவ ரூம்ல இருக்காம்மா!! இந்த ஜாஸ்மினை ஏன் இதுல கொண்டு வந்துருக்க?" கேட்டவனின் கையில் பூவை கொடுத்தாள் தவம்.

"எப்படி இருக்கு?"

"சில்லா இருக்கு"

"சூட்டுல வாடி போகாம இருக்கனும்ல அதுக்குதேன்.. அதுவுமில்லாம வாழை இலைல கட்டுனா பூ சீக்கிரம் மலராம இருக்கும்..‌இப்படி ஜில்லுன்னு இருக்குண்ணே" என்றவளிடம் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தியவனின் கண்கள் எதிரே நிலைகுத்தி நின்றது.

சற்றுமுன் இருந்த களைப்பு முகத்தில் மாறி, மிக அழகாக பின்னலிட்டு, புதுமஞ்சள்தாலி கழுத்தில் மின்ன, புதுமணப்பெண்ணின் பொலிவுடன், நெற்றியில் அவனிட்ட குங்குமத்துடனும், அவனுக்கான பிரத்யேக புன்னகையுடன் எதிரே வந்து கொண்டிருந்தாள் ஜமுனா.

"ம்ம்... உங்க பொண்டாட்டி சரியான நேரத்துக்கு தான் வந்துருக்காண்ணே. நீங்களே பூவை வச்சு விடுங்க.."

"ஏய்.. சும்மா இருடி..கொடுங்க நானே வச்சுக்கறேன்" ப்ரையனின் அருகே வர, கைகள் தானாக பூவை அவளிடம் நீட்டியது.

"ஏண்டி? ஒத்த செயினை மட்டும் போட்டுட்டு வந்துருக்க? நான்தான் உன் நகையெல்லாம் மேஜைல எடுத்து வச்சுட்டு தானே வந்தேன்?! போட்டுட்டு வாம்மா..
இந்த பரிதியை வேற நம்ம செட்ல இருக்க காரை எடுத்துட்டு வர சொன்னேன்? இன்னும் ஆளை காணலை?"

'ஹப்பாடி.. அதான் வீடு அமைதியா இருக்கு' மனதிற்குள் நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் தவமலர்.

"எனக்கு இதுவே போதும் பாட்டி?!" இரண்டு பக்கமும் மல்லிகையை தோளில் தவழவிட்டு தலையில் சூட்டி கொண்டு அருகிலிருப்பவனை புன்னகையில் போதை ஏற்றி கொண்டிருப்பதை அறியாமல், புன்னகைத்து கொண்டிருந்தாள் ஜமுனா.

"அவ விருப்பப்படி போடட்டும் மங்கை!! புதுப்பொண்ணு களை முகத்துல தாண்டவமாடுது! என் கண்ணே பட்டுடும் போல?! என் பேத்தியா அவ்வளவு அழகு" வடிவு திருஷ்டி கழித்தார்.

சற்றுநேரம் முன்பு புழுக்கத்திற்காக தோட்டத்திற்கு செல்ல நினைத்தவனுக்கு, இப்பொழுது முன் அந்தி மழைக்காற்று, பூந்தூறலாய் அவன் மீது பொழிவதை போன்ற உணர்வு உள்ளுக்குள் குத்தாலமிட, தன்னவளின் அருகாமையை ரசித்து கொண்டு நின்றிருந்தான் ப்ரையன்.

"பாட்டி..‌கார் எடுத்துட்டு வந்துட்டேன்!.." உற்சாகமாக குரல் கொடுத்து கொண்டே, பரிதி உள்ளே வந்தான்.

அவனை‌ பார்த்ததும், ஜமுனாவின் அருகில் நின்றிருந்த தவமலர் ப்ரையனின் அருகே சென்று நின்று கொள்ள, " என்ன மாப்ள? கிளம்பலாமா? நல்லா தாராளமா தங்கச்சி தோள்மேல கைபோட்டு கூட்டிட்டு வாங்க!" தாத்தாவின் அறைவரை கேட்க வேண்டுமென்றே கத்தியவன்," ஜம்மு.. உனக்கு ஹெல்ப்புக்கு புதுமணப்பெண் டோலியா அந்த எக்ஸ்ட்ரா அழகியையும் சேர்த்து வண்டில ஏறச்சொல்லு" வம்பிழுத்தவனின் காதை பிடித்து திருகினார் மங்கை.

"எதுக்குடா அவளை எப்ப பார்த்தாலும் வம்பிழுத்துட்டுருக்க?"

"நல்லா கேளுங்க பாட்டி.. சும்மா என்னை சீண்டிகிட்டே இருக்காரு!" முகம் சுருக்கி புகாரளித்தவளை பார்த்து கண்ணடித்தான் பரிதி.

"என்ன தான் உனக்கு கட்டிக்கிற முறைக்காரின்னாலும் நீ ஓவரா போறடா?! நாளைக்கு உங்க அம்மா ஊர்ல இருந்து திரும்பட்டும் இருக்கு உனக்கு கச்சேரி?"

"அம்மா வர இன்னும் இரண்டு நாள் ஆகும் பாட்டி. நானே உங்களுக்கு மறக்காம ஞாபகப்படுத்துறேன்! அப்போ வச்சுக்கோங்க.." பாட்டியின் பிடியிலிருந்து நழுவி அவரை பின்னாலிருந்து கட்டி கொண்டு காதில் கத்த, சத்தம் தாங்காமல் குடைந்து கொண்டிருந்தார் அவர்.

"சரி..‌சரி.. கம்ப்ளெயின்ட் வாசிச்சு முடிச்சாச்சுன்னா.. சட்டுபுட்டுன்னு போய் வண்டில ஏறச்சொல்லு ஜம்மு. அதுவும் முன்னாடி சீட் மட்டும் தான் காலியா இருக்கு.. " பரிதி சொல்ல, தவமலரை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினாள்‌ அவள்.

"அண்ணே இவர் வந்தா நான் வரலை! ஜமுனாவும் அவங்க அண்ணனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவா!" அவளின் பிள்ளைத்தனமான புகாரில் வாய்விட்டு சிரித்தான் ப்ரையன்.

"நோ வர்ரீஸ்.. த...."

"தங்கச்சி.. உங்களுக்கு தங்கச்சிம்மா தான் மாப்ள!!" தவம் என்று சொல்லி முடிப்பதற்குள், வேகமாக சொல்லி முடித்தான் பரிதி.

"நான் உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் தங்கச்சிமா.. நீங்களும் எங்ககூட வாங்க.. மச்சி உங்களை வம்பிழுக்க மாட்டான்!? என்ன மச்சி?!" கண்களை மூடி திறந்தவனிடம் வேகமாக தலையசைத்தான் அவன்.

"அப்போ சரி.." என்றவள் நிம்மதியுடன் சம்மதிக்க, பூஜையறக்கு அவர்களை அழைத்து சென்று‌ ஆசிர்வதித்து, வடிவம்மையுடன் அனுப்பி வைத்தார் பாட்டி. கிளம்பும் முன்பு பாட்டி எத்தனையோ மறுத்தும், தாத்தாவின் அறைக்கு சென்று அவரிடம் சொல்லி கொண்டு தான் கிளம்பினாள்‌ ஜமுனா.

"பத்திரமா போய்ட்டு வா கண்ணா.." வழியனுப்பி வைத்தவர், அறையை விட்டு வெளியே வரவில்லை.

காரில் இதமான ஒரு பயணம். தவமலர் எத்தனை மறுத்தும் அவளை தன்னுடன் முன்னால் அமர வைத்து, காரை ஓட்டி கொண்டிருந்தான் பரிதி‌‌. அவன் ஏதோ வாய் கொடுப்பதும், அவள் பதில் கொடுப்பதுமாக தான் இருந்தார்கள்!

காரின் ஜன்னல்கள் திறந்திருக்க, ஏசியே இல்லாமல், தோப்பு நிறைந்த வழியில் சென்றதால் இதமான காற்றுடன் செடிகளின் பச்சையத்தின் வாசனை நாசியில் நிறைய, உடல் முழுதும் இதம் பரவி கொண்டிருந்நதென்னவோ உண்மை?! ஆசை மனைவியின் அருகாமையுடன், காலநிலையும் புத்துணர்ச்சி கூட்ட, புன்னகையுடன் தன்னவளை‌ பார்த்து திரும்பி அமர்ந்தான் அவன். வடிவம்மைக்கும் ப்ரையனுக்கும் நடுவில் அமர்ந்திருந்தாள் ஜமுனா.‌

"ரொம்ப அழகா இருக்க ஜாமூன்..." கோர்த்திருந்த கைகளில் அவளது உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து முணுமுணுக்க, "நீங்களும் தான்..." மெதுவாக முணுமுணுத்தாள் அவளும். இப்படி ரகசியமாக பேசுவது சுவாரசியமாக கூட இருந்தது!!

"ரியலி.. என்னை பிடிச்சுருக்கா ஜாமூன்?"

"தாலி கட்டிட்டு கேட்கறிங்க பாருங்க?! சமத்து தான்!"

"யூ மீன் ஸ்மார்ட்..."

"ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் எடுக்கறிங்களா என்ன?"

"வேற க்ளாஸ் எடுக்கனும்னு தான் எனக்கும் ஆசையா இருக்கு ஜாமூன்.." கணவனின் குலையும் குரலில், மெதுவாக தள்ளி அமர்ந்தாள் ஜமுனா.

"ப்ச்..‌இப்ப ஏன் தள்ளி போற?"

"பாட்டி இருக்காங்க..."

"அவங்க தூங்குறாங்க..." அவளது தோளை சுற்றி கையை போட்டவன், தன்புறம் இழுக்க, "என்ன பண்றிங்க? அண்ணா பார்க்க போறான்!?" கண்ஜாடை காட்ட, அவர்களை பார்த்து சத்தமில்லாமல் குலுங்கி சிரித்தான் அவன்.

'நீ என்னவேண்டுமென்றாலும் பேசிக்கொள்?! நான் பதில் சொல்லமாட்டேன்!' என்பதை போல் பரிதி ஏதோ வம்பிழுத்து கொண்டே இருக்க, அமைதியாக ஜன்னல் புறம் திரும்பி அமர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் தவமலர்.

"இன்னொசென்ட் கேர்ள்.. " தவமலரை பார்த்து சொல்ல, சிரித்தாள் ஜமுனா.‌

"யாரு அவளா? அவகிட்ட பழகி பாருங்க அப்பத்தான் தெரியும்"

"எனக்கு உன்கூட தான் பழகனும் ஜாமூன்!" என்றவனின் தோளில் அடிக்க கையை உருவ முயல, அவளால் முடியவில்லை.

"தெரியாம சொல்லிட்டேன்! ஜோடியா தான் போகனும்னு.. அப்ப இருந்து பிடிச்ச கையை விட மாட்டறிங்க?! விடு ஜீனி?" என, முடியாதென தலையசைத்தான் ப்ரையன்.

"உன் கையை பிடிக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஏதோ மேஜிக் நடக்குது ஜாமுன். என்னோட ஆறடிக்கும் பரவுற அந்த ஃபீல் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!" உற்சாகத்துடன் சொன்னவனை கண்களில் நிறைத்து கொண்டாள் மனையாள்.

"தாத்தா இப்படி நடந்துக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா ஜீனி? சின்ன வயசுல இருந்தே தாத்தான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அப்பாம்மா விட அதிகமாக அவர் கூடவே தான் இருப்பேன். அவங்களை இழந்தப்போ கூட என்னால மீண்டு வர முடிஞ்துன்னா அது தாத்தா பாட்டியால தான்.. அவர் இப்படி நடந்துக்கறதை எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க" அவன் கண்களை பார்த்து யாசிக்க, அவளை விட அதிதமாக துடித்து அவனது மனம்.

"ஜாமூன்... இந்தியன்ஸ் ஃபேமிலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். எனக்கும் அப்படி ஒரு ஃபேமிலி வேணுன்னு நான் ரொம்பவே ஆசைப்பட்டேன். அதேபோல நீ எனக்கு கிடைச்சிருக்க?! நாம பேச வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!! அதுக்கு காலமும் நிறைய இருக்கு.. நீ ஆசைப்பட்ட மாதிரி தாத்தாவே நம்மளை சந்தோஷமா ஏத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. அண்ட் என்னால சந்தோஷமா இருக்கறது மட்டுமே இனி உனக்கு வேலை?! ஓகே?" என, நெஞ்சம் நெகிழ அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்.

"ஜாமூன்..."

"ம்ம்...‌"

"உன்னோட சாஃப்ட்னெஸ்கு இந்த ஜாஸ்மின் தனி ஃப்ளேவர் கொடுக்குது?! எனக்கு உன்னை என்னென்னவோ பண்ணனும் போல இருக்கு?!என்ன பண்ணட்டும்?"
'இப்படி அறியா பிள்ளை போல கேள்வி கேட்டே என்னை கிறங்கடிக்கிறானே?' அப்பாவியாய் கேட்பவனை பார்த்து முழித்தாள் பேதை.

"ம்க்கும்..‌மாப்ள.. வீடு கிட்ட வந்துட்டோம்!!" இருபது நிமிட பயணத்தில் இருபது வருடம் காதலித்தவர்களை கண்ணோடு கண் கலந்திருந்தவர்களை கலைத்தது, தொண்டையை செருமிய பரிதியின் குரல்.

"பாட்டி.. வீட்டு வாசல்கிட்டயே நிப்பாட்டுறேன்.." குரல் கொடுத்து வடிவம்மையையும் எழுப்பி விட்டான் பரிதி.

இருபது நிமிட இனிமையான பயணத்தில் புத்துணர்ச்சியுடன் முகம் மலர, இறங்கியவர்களை, ஆரத்தி கரைத்து வரவேற்றாள் மாலினி. அவனது முதலாளியின் சமதர்மினி.‌
"வெல்கம் புது மாப்பிள்ளை..." கௌதம் அன்போடு அவனை அணைத்து கொள்ள, " தாங்க்யூ ஜி.வி சார்.. " சந்தோஷத்துடன் தழுவி கொண்டான் ப்ரையனும்.

அப்பொழுது பரிதியின் அலைபேசி அழைக்க, ஜமுனாவையும் தவமலரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் மாலினி.

"காரை அந்த பக்கம் நிறுத்திட்டு வர்றேன் பாட்டி.." அனைவரும் உள்ளே சென்றிருக்க, மீண்டும் ஒலித்தது அலைபேசி.

"சொல்லுடா இளா.. என்ன இத்தனை தடவை அடிச்சுருக்க?"

"டேய் மச்சான்..‌ நாளைக்கு நம்ம சக்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டிய கரும்பை எல்லாம் லாரில ஏத்த ஆள் அனுப்ப வேண்டாம்னு தாத்தா திருப்பி அனுப்பிட்டாருடா.. எதுக்குன்னு தான் புரியலை? நீ தாத்தா மேல ஒரு கண்ணு வைக்க சொன்னல்ல? அதான் சொன்னேன்!"

"ஓ..."

"நாளைக்குள்ள அனுப்பலன்னா.. கூட்டுறவு சங்கத்துல இருந்து சண்டைக்கு வருவாங்களேடா.. அது தெரியாம அந்த மனுஷன் கரும்பு கட்டை பார்த்து சிரிச்சுட்டு இருக்காருடா? பேத்திக்கு கல்யாணம் ஆனதுல இந்த மனுஷனுக்கு கிறுக்கு பிடிச்சு போச்சா? " அங்கு வேலை பார்க்கும் அவனது நண்பன் இளஞ்செழியன் ஆற்றாமையுடன் பேச, தாத்தாவின் திட்டம் புரிவதை போலிருந்தது.

"சரி விடுடா.‌‌.. நான் என்னன்னு பார்த்துக்கறேன்!" பரிதி யோசனையுடன் அழைப்பை துண்டித்தான்.

இங்கு வீட்டில் பரிதியின் நண்பன் புலம்பியதை போல," வாடா வெள்ளைக்கார பலசாலி மாப்பிள்ளை.... இன்னைக்கு நைட்டு முழுக்க கரும்பை கட்டை தூக்குற தூக்குல, நேரா சென்னைக்கு நீ பெட்டியை கட்டனும்" தனக்குத்தானே சொல்லி சிரித்து கொண்டு நின்றிருந்தார் தாத்தா.

மின்னும் 💖💖💖......
 
Back
Top