IIN-1

Quote from Sudha Hari on May 25, 2023, 4:09 pmநொடி -1
இன்று:
சென்னையின் பரபரப்புக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருந்த ஓஎம்ஆர் பகுதி, பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவே…, ஒரே மாதிரியான மூன்று தனிபங்களாக்கள்.
கீழே இருந்து வந்த குழந்தைகளின் சத்தங்களுக்கு நடுவே, அவளின் கைபேசியும் தன் இருப்பை காட்ட, மெல்ல விழி திறந்தாள் மதுமித்ரா. நேற்று வெகுநேரம் கணினியின் முன்னிருந்ததின் பயனாக கண்களிலிருந்த எரிச்சலில், கண் திறக்க முடியாமல் போக கண்களை மூடிக் கொண்டே, போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.“மேம்..”
“யா நிதிஷ்.”
“மேம்” ஒரு பெரிய டைரக்டரின் பெயரை சொல்லி”அவர்களின் திரைப்படத்திற்கு அனிமேஷன் பார்ட் மட்டும் நம்மளை பண்ணி தரச் சொல்றாங்க, மேம்”
“ஓ.. எப்போ வேணுமாம்?”
“இன்னும் ஒன் வீக்ல வேணுமாம்”
“ஒன் வீக் என்றால் கண்டிப்பா முடியாது நிதிஷ்”
“மேம், அவர் பெரிய டைரக்டர்”என இழுக்க,
“சோ டூ வாட் ஐ சே” என ஃபோனை வைத்தாள். சில நிமிடங்களில் புதிய நம்பரிலிருந்து மீண்டும் அழைப்பு வர, அட்டென்ட் செய்தவள்.
“ஹலோ” என கூற...
“வணக்கம். நான் அந்தப் படத்தின்... தயாரிப்பாளர் பேசுறேன் மா...”
“சொல்லுங்க” என்றாள்.
“நீங்க கண்டிப்பா என் படம் பண்ணனும். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க...”
“இல்லை சார், நான் அந்த டைம்ல ஊர்ல இருக்க மாட்டேன், அதான்...”
“அதுக்கென்னம்மா, உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ பண்ணிக் கொடுங்க. நான் மெதுவா ரிலீஸ் பண்ணிக்கிறேன். எப்படியும் நீங்க தான் பண்ணிக் கொடுக்கனும்.”
அதற்கு மேல் எப்படி மறுப்பது என தெரியாமல்”பார்க்குறேன் சார்...” என ஃபோனை வைத்தவள். கீழே கேட்ட சத்தத்தில் “ஓ இரண்டு பேரும் எழுந்தாச்சா. இனி வீடு ரணகளம் தான்...” என எண்ணிக் கொண்ட எழ, ஆராதனா வேகமாக வந்து மதுவின் மடியில் விழுந்தாள்.
“ப்ச் ஆரு. என்னடா இது இவ்ளோ வேகமா வர்றீங்க, மெதுவா தான் வரணும்..” என நான்கு வயதான ஆராதனாவை தூக்கிக் கொள்ள,
“யா மாம். நானும் அவ கிட்ட அதைத் தான் சொன்னேன்...” என அர்ஜுன் அருகில் வந்தான்.
பலமுறை அர்ஜுனின் இயல்புகளில் தன்னவனை கண்டிருக்கிறாள். இதோ இப்போதும் கூட அவனின் அணுகுமுறை தன்னவனை நினைவு படுத்த, சிரித்துக் கொண்டே அவன் கன்னம் வருடினாள்.
“நோ அண்ணா, நான் தான் சொல்லுவேன், நான் தான் ஃபர்ஸ்ட்.” என அர்ஜுனை தள்ளி விட்டு, மதுவின் முகத்தை தன் புறம் திருப்ப,
“ஓகே, ஓகே, சொல்லுங்க..” என அவளை சிரித்த படி அணைத்துக் கொண்டே கேட்டாள்.
“பா வந்தாச்சு. உங்களை சீக்கிரம் ரெடியாகி வரச் சொன்னாங்க.” என அவளிடமிருந்து துள்ளி விலகியவள் மீண்டும் கீழே இறங்க,
“ஆரு மெதுவா போ, அர்ஜுன் டேக் கேர் ஆஃப் ஹேர்...”
“யா மாம்” என சிறிது தூரம் சென்ற இருவரும் மீண்டும் வர,
“இப்போ என்னாச்சு...?” என்றாள்... கேள்வியாய்!
“மாம், கார்த்திபா இன்னைக்காவது... உங்களை குளிக்கச் சொன்னாங்க” என கூறி இருவரும் தன் வாயை மூடிச் சிரிக்க,
இருவரின் காதையும் திருகியவள்...
“இது உங்க ரெண்டு பேருக்கும், உங்க அப்பாக்கு உருட்டு கட்டை வருதுன்னு சொல்லு” என இருவரையும் வெளியே அனுப்பி குளிக்கச் சென்றாள்...!லேவண்டரும், வெண்மையும் கலந்த சேலையை கட்டிக் கொண்டு, தன்னைக் கண்ணாடியில் பார்தத மது. ஒரு நிமிடம் தன்னவனின் பார்வை ரசனையாக மோதுவது போல் தோன்ற, அவள் மாநிறம் சற்று சிவந்து தான் போனது.
தலையிலிருந்த துண்டினை அவிழ்த்தவள். அதனை தட்டி நுனியில் முடிச்சிட்டு நிமிர, எதிர் புற சுவர்களிலிருந்த புகைப்படங்கள் அவளை எப்போதும் போல் ஈர்த்தது.
அது அவளவனின் ஏற்பாடு, அவர்கள் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சிறைப்பிடித்து வைத்திருந்தான்.அதன் அருகில் சென்றாள்.
சமீபத்திய வரவான மாநிலத்தின் சிறந்த அனிமேஷன் பங்களிப்பாளர்களுக்கான விருது வாங்கிய போது எடுத்த புகைபடம்… எப்போதும் போல் நண்பர்களுடன் தான். ஆனால் அதில் தன்னவனின் பார்வை காதலுடன் பார்ப்பதை படம் பிடித்து வைத்திருந்தான், ஷிவ்.அப்புகைப்படம் எடுத்த சூழ்நிலை, அவள் நினைவில் தோன்றியது...!
“மது ஒரு வழியா அழுது புடிச்சு, விருதை வாங்கிட்ட” என விருதை வாங்கி பார்த்து, அவள் கையில் திணித்த படி ஷிவ் கூற,கார்த்திக் அவன் தலையில் தட்டி... “என்னடா கிண்டலா! அவ எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த அவார்டை வாங்கியிருக்கா, அம்மு அவன் சொல்றான்னு எல்லாம் யோசிக்காத, யுவர் ஹார்ட் வோர்க் டிசர்வ் திஸ்.
“டேய் நண்பா அவ ஹார்ட் வோர்க் சொல்லாத, எல்லாம் இவன் செஞ்சு கொடுத்திருப்பான்.” என அவனைக் காட்ட, அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை. இருவரையும் மாறி மாறி பார்த்த ஷிவ்,
“ஷப்பா முடியலை டா உங்க இம்சை. நாங்களும் இதை எத்தனை வருஷமா தான் பாக்குறது. பையனும் பிறந்தாச்சு இன்னும் உங்க அலப்பறை தாங்க முடியலைடா”எப்போதும் அவனின் வழக்கமான கிண்டலில் மது முகம் சிவக்க, அதனை கர்வமாய் காதலாய் ஏற்ற படி அவளவன். அதனை அப்படியே நகல் எடுத்திருந்தான், ஷிவ்.
அடுத்த புகைப்படத்தை பார்த்தாள். அது அவர்கள் பள்ளியில் எடுத்தது. ஷிவ்வின் குரங்கு சேட்டைகளுடன்…, கார்த்திக், ஷிவானி, தியா என இவர்கள் நால்வர் கூட்டணி. இது எப்போ எடுத்தது என அவள் யோசிக்கும் போதே, அந்த சீருடையின் நிறத்தை பார்த்தே,
‘ஓ... இது எட்டாவது படிக்கும் போது எடுத்தது போல' கூடவே இதை சமீபத்தில் ஷிவ் வந்திருந்த போது புகை படத்தைப் பார்த்தது.“ஆனாலும் மது இந்த யூனிபார்ம் எல்லாம் எப்படி நம்ம போட்டு இருந்தோம். நினைச்சாலே ஒரே அவோஷனா இருக்கு” என கூற,
“ஏண்டா?”
“பின்ன இங்க பாரு பட்ரோஸ் கலர்ல ஒரு சட்டை, அதுக்கு கேவலமா ஒரு பேண்ட், யு நோ இதுல நான் கூட நல்லாயிருக்கேன். தியாவைப் பாரு, ஒரே காமெடியா இல்லை”
கார்த்திக் உடனே “அப்படிங்களா ஆபீசர் தியா. இங்க வந்து இவனை என்னன்னு கேளு...”
“ஏன் என்னவாம் இவனுக்கு” என தியா அருகில் வர,
“டேய் குல துரோகி, நம்ம தானே பேசிட்டு இருக்கோம். நீ எதுக்கு டா இந்த கோவை சரளாவை உள்ள இழுக்குற!” என கார்த்தியின் காதை கடிக்க,
கார்த்திக் சற்று சத்தமாக”என்னது தியாவையா, கோவை சரளானா சொன்னே…, அடப்பாவி, கொஞ்சம் ஷார்ட்டா இருந்தா கோவை சரளாவா…! பாவம்டா தியா, உன்னை வச்சுக்கிட்டு எப்படி காலம் தள்ளுறா?” என கேட்டு வைக்க, அதன் பின் தியா அவனைத் துரத்த, ஷிவ் அகப்படாமல் தப்பித்ததை நினைத்து இப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அருகிலுள்ள மற்றொரு புகைப்படம், அது பள்ளியில் குரூப் போட்டோவில் ஒன்று. இது பதினோரோம் வகுப்பு என அவர்களின் யூனிபார்மின் நிறத்திலே புரிந்து போனது.
எப்போதும் போல் தியா, கார்த்தி, ஷிவ், மது என அனைவரும் ஒன்றாக இருக்க, அவர்கள் வரிசையில் இல்லாமல் மேலே நின்றிருந்த தன்னவனை தொட்டுப் பார்த்தாள். என்னவோ அப்போதே அவனின் கண்கள் தன்னை பார்ப்பதை போன்று எண்ணம் தோன்ற, வெக்கச் சிதறல்கள் அவள் இதழ்களில், அதிலிருந்து அவளை மீட்பது போல் விடாமல் கைபேசி அழைக்க, அதில் தெரிந்த பெயரில் அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
தொடர்ச்சியாக முத்தங்கள் இட்டவன் “பேபி...” என அழைக்க,அவனின் ஞாபகத்தில் சுழன்றவளால் பதில் பேச முடியாமல் போனது.
அவளின் மவுனத்தில் எதைக் கண்டு கொண்டானோ”ஆர் யூ ஓகே…!” என்றான்.“ம்ம்...” என்றாள் பழைய நினைவுகளின் தாக்கத்தில்…
“பின்ன என்னாச்சு, என் ஊசிவெடி அமைதியா இருக்கு...”
“ஒண்ணும் இல்லை” எனக் கூறியவள்…,
அவனின் வருகையைக் கேட்க,“இன்னும் ஒரு நாலு மணி நேரம் லேட் ஆகும் போல பேபி, டெல்லில ஒரே பனி, சோ ஃப்ளைட் டைமிங்கே மாத்திட்டாங்க. யு நோ, ஐ மிஸ் யூ அ லாட்...” என அவன் குரல் ஒலிக்கும் போதே,
பின்னாலிருந்த ஷிவ்...”டேய் என்னால முடியலைடா, ஒரு நாலு நாள் விட்டுட்டு இருக்க முடியாதா உன்னால, இந்த லவ் பேர்ட்ஸ் தொல்லை தாங்க முடியலைடா ஆண்டவா! இவனுகளுக்கு நடுவில என்னை ஏன் படைச்சே!” என புலம்பிக் கொண்டே சென்றான்.
ஷிவ்வின் புலம்பலில் சிரித்தவள்...
“சரி சரி சீக்கிரம் வாங்க” என ஃபோனை வைக்கப் போக…“பேபி”
“ம்ம்...”
“தலையை ஒழுங்கா டிரையாக விடு, உன்னோட ஹெல்த்துக்கு சீக்கிரம் சளி பிடிக்கும், தென் நேத்து நைட் லேட்டா தான வந்துருப்ப, சோ பசங்களை கார்த்தி பார்த்துப்பான். நீ ரெஸ்ட் எடு. நான் இங்க இருந்து கிளம்பும் முன்னே ஃபோன் பண்றேன். சரியா”
“ம்ம்...”
“பேபி, ஐ மிஸ் யூ” என்றான்.
“டேய் இன்னுமாடா உங்க லவ் சீன் முடியலை, அட கிராதகா!” என ஷிவ்வின் சத்தத்தில்,
“ஓகே பேபி... ரெஸ்ட் எடு... இவனை” என அவனை துரத்த ஓடினான், அவளவன்…
மது சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்தவள், கணவன் சொன்னது போல் தன் தலையின் ஈரத்தை டிரையர் கொண்டு காயவிட்டாள். அவன் எப்போதும் தன்னை சரியாக கணிக்கும் விந்தையை எண்ணியபடியே, மீ்ண்டும் அவள் கண்கள் புகைப்படங்களுக்கு நடுவில் செல்ல, கைகள் அவளையும் அறியாமல் அந்த புகைபடத்தை தடவியது.கோதுமை நிறத்தில் தீர்க்கமான கண்களுடன், அவனின் கூர் நாசியும், தெற்றுபல் சிரிப்பும் பிரபலமான அந்த நடிகரை நினைவு படுத்தும். பள்ளியிலிருந்து இன்று வரை அவன் புன்னகைக்கு ரசிகைகள் ஏராளம் தான்.
ஏன் அவனை முதல் நாள் பள்ளியில் பார்த்த போது தனக்குமே அந்த தாக்கம் தான் என எண்ணிக் கொண்டவள். அவனின் புகைப்படத்தை பார்க்க, அதில் அவனின் வசீகர புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தான் அவளவன், அவன் அரவிந்தன்.
நொடி -1
இன்று:
சென்னையின் பரபரப்புக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருந்த ஓஎம்ஆர் பகுதி, பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவே…, ஒரே மாதிரியான மூன்று தனிபங்களாக்கள்.
கீழே இருந்து வந்த குழந்தைகளின் சத்தங்களுக்கு நடுவே, அவளின் கைபேசியும் தன் இருப்பை காட்ட, மெல்ல விழி திறந்தாள் மதுமித்ரா. நேற்று வெகுநேரம் கணினியின் முன்னிருந்ததின் பயனாக கண்களிலிருந்த எரிச்சலில், கண் திறக்க முடியாமல் போக கண்களை மூடிக் கொண்டே, போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.
“மேம்..”
“யா நிதிஷ்.”
“மேம்” ஒரு பெரிய டைரக்டரின் பெயரை சொல்லி”அவர்களின் திரைப்படத்திற்கு அனிமேஷன் பார்ட் மட்டும் நம்மளை பண்ணி தரச் சொல்றாங்க, மேம்”
“ஓ.. எப்போ வேணுமாம்?”
“இன்னும் ஒன் வீக்ல வேணுமாம்”
“ஒன் வீக் என்றால் கண்டிப்பா முடியாது நிதிஷ்”
“மேம், அவர் பெரிய டைரக்டர்”என இழுக்க,
“சோ டூ வாட் ஐ சே” என ஃபோனை வைத்தாள். சில நிமிடங்களில் புதிய நம்பரிலிருந்து மீண்டும் அழைப்பு வர, அட்டென்ட் செய்தவள்.
“ஹலோ” என கூற...
“வணக்கம். நான் அந்தப் படத்தின்... தயாரிப்பாளர் பேசுறேன் மா...”
“சொல்லுங்க” என்றாள்.
“நீங்க கண்டிப்பா என் படம் பண்ணனும். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க...”
“இல்லை சார், நான் அந்த டைம்ல ஊர்ல இருக்க மாட்டேன், அதான்...”
“அதுக்கென்னம்மா, உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ பண்ணிக் கொடுங்க. நான் மெதுவா ரிலீஸ் பண்ணிக்கிறேன். எப்படியும் நீங்க தான் பண்ணிக் கொடுக்கனும்.”
அதற்கு மேல் எப்படி மறுப்பது என தெரியாமல்”பார்க்குறேன் சார்...” என ஃபோனை வைத்தவள். கீழே கேட்ட சத்தத்தில் “ஓ இரண்டு பேரும் எழுந்தாச்சா. இனி வீடு ரணகளம் தான்...” என எண்ணிக் கொண்ட எழ, ஆராதனா வேகமாக வந்து மதுவின் மடியில் விழுந்தாள்.
“ப்ச் ஆரு. என்னடா இது இவ்ளோ வேகமா வர்றீங்க, மெதுவா தான் வரணும்..” என நான்கு வயதான ஆராதனாவை தூக்கிக் கொள்ள,
“யா மாம். நானும் அவ கிட்ட அதைத் தான் சொன்னேன்...” என அர்ஜுன் அருகில் வந்தான்.
பலமுறை அர்ஜுனின் இயல்புகளில் தன்னவனை கண்டிருக்கிறாள். இதோ இப்போதும் கூட அவனின் அணுகுமுறை தன்னவனை நினைவு படுத்த, சிரித்துக் கொண்டே அவன் கன்னம் வருடினாள்.
“நோ அண்ணா, நான் தான் சொல்லுவேன், நான் தான் ஃபர்ஸ்ட்.” என அர்ஜுனை தள்ளி விட்டு, மதுவின் முகத்தை தன் புறம் திருப்ப,
“ஓகே, ஓகே, சொல்லுங்க..” என அவளை சிரித்த படி அணைத்துக் கொண்டே கேட்டாள்.
“பா வந்தாச்சு. உங்களை சீக்கிரம் ரெடியாகி வரச் சொன்னாங்க.” என அவளிடமிருந்து துள்ளி விலகியவள் மீண்டும் கீழே இறங்க,
“ஆரு மெதுவா போ, அர்ஜுன் டேக் கேர் ஆஃப் ஹேர்...”
“யா மாம்” என சிறிது தூரம் சென்ற இருவரும் மீண்டும் வர,
“இப்போ என்னாச்சு...?” என்றாள்... கேள்வியாய்!
“மாம், கார்த்திபா இன்னைக்காவது... உங்களை குளிக்கச் சொன்னாங்க” என கூறி இருவரும் தன் வாயை மூடிச் சிரிக்க,
இருவரின் காதையும் திருகியவள்...
“இது உங்க ரெண்டு பேருக்கும், உங்க அப்பாக்கு உருட்டு கட்டை வருதுன்னு சொல்லு” என இருவரையும் வெளியே அனுப்பி குளிக்கச் சென்றாள்...!
லேவண்டரும், வெண்மையும் கலந்த சேலையை கட்டிக் கொண்டு, தன்னைக் கண்ணாடியில் பார்தத மது. ஒரு நிமிடம் தன்னவனின் பார்வை ரசனையாக மோதுவது போல் தோன்ற, அவள் மாநிறம் சற்று சிவந்து தான் போனது.
தலையிலிருந்த துண்டினை அவிழ்த்தவள். அதனை தட்டி நுனியில் முடிச்சிட்டு நிமிர, எதிர் புற சுவர்களிலிருந்த புகைப்படங்கள் அவளை எப்போதும் போல் ஈர்த்தது.
அது அவளவனின் ஏற்பாடு, அவர்கள் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சிறைப்பிடித்து வைத்திருந்தான்.
அதன் அருகில் சென்றாள்.
சமீபத்திய வரவான மாநிலத்தின் சிறந்த அனிமேஷன் பங்களிப்பாளர்களுக்கான விருது வாங்கிய போது எடுத்த புகைபடம்… எப்போதும் போல் நண்பர்களுடன் தான். ஆனால் அதில் தன்னவனின் பார்வை காதலுடன் பார்ப்பதை படம் பிடித்து வைத்திருந்தான், ஷிவ்.
அப்புகைப்படம் எடுத்த சூழ்நிலை, அவள் நினைவில் தோன்றியது...!
“மது ஒரு வழியா அழுது புடிச்சு, விருதை வாங்கிட்ட” என விருதை வாங்கி பார்த்து, அவள் கையில் திணித்த படி ஷிவ் கூற,
கார்த்திக் அவன் தலையில் தட்டி... “என்னடா கிண்டலா! அவ எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த அவார்டை வாங்கியிருக்கா, அம்மு அவன் சொல்றான்னு எல்லாம் யோசிக்காத, யுவர் ஹார்ட் வோர்க் டிசர்வ் திஸ்.
“டேய் நண்பா அவ ஹார்ட் வோர்க் சொல்லாத, எல்லாம் இவன் செஞ்சு கொடுத்திருப்பான்.” என அவனைக் காட்ட, அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை. இருவரையும் மாறி மாறி பார்த்த ஷிவ்,
“ஷப்பா முடியலை டா உங்க இம்சை. நாங்களும் இதை எத்தனை வருஷமா தான் பாக்குறது. பையனும் பிறந்தாச்சு இன்னும் உங்க அலப்பறை தாங்க முடியலைடா”
எப்போதும் அவனின் வழக்கமான கிண்டலில் மது முகம் சிவக்க, அதனை கர்வமாய் காதலாய் ஏற்ற படி அவளவன். அதனை அப்படியே நகல் எடுத்திருந்தான், ஷிவ்.
அடுத்த புகைப்படத்தை பார்த்தாள். அது அவர்கள் பள்ளியில் எடுத்தது. ஷிவ்வின் குரங்கு சேட்டைகளுடன்…, கார்த்திக், ஷிவானி, தியா என இவர்கள் நால்வர் கூட்டணி. இது எப்போ எடுத்தது என அவள் யோசிக்கும் போதே, அந்த சீருடையின் நிறத்தை பார்த்தே,
‘ஓ... இது எட்டாவது படிக்கும் போது எடுத்தது போல' கூடவே இதை சமீபத்தில் ஷிவ் வந்திருந்த போது புகை படத்தைப் பார்த்தது.
“ஆனாலும் மது இந்த யூனிபார்ம் எல்லாம் எப்படி நம்ம போட்டு இருந்தோம். நினைச்சாலே ஒரே அவோஷனா இருக்கு” என கூற,
“ஏண்டா?”
“பின்ன இங்க பாரு பட்ரோஸ் கலர்ல ஒரு சட்டை, அதுக்கு கேவலமா ஒரு பேண்ட், யு நோ இதுல நான் கூட நல்லாயிருக்கேன். தியாவைப் பாரு, ஒரே காமெடியா இல்லை”
கார்த்திக் உடனே “அப்படிங்களா ஆபீசர் தியா. இங்க வந்து இவனை என்னன்னு கேளு...”
“ஏன் என்னவாம் இவனுக்கு” என தியா அருகில் வர,
“டேய் குல துரோகி, நம்ம தானே பேசிட்டு இருக்கோம். நீ எதுக்கு டா இந்த கோவை சரளாவை உள்ள இழுக்குற!” என கார்த்தியின் காதை கடிக்க,
கார்த்திக் சற்று சத்தமாக”என்னது தியாவையா, கோவை சரளானா சொன்னே…, அடப்பாவி, கொஞ்சம் ஷார்ட்டா இருந்தா கோவை சரளாவா…! பாவம்டா தியா, உன்னை வச்சுக்கிட்டு எப்படி காலம் தள்ளுறா?” என கேட்டு வைக்க, அதன் பின் தியா அவனைத் துரத்த, ஷிவ் அகப்படாமல் தப்பித்ததை நினைத்து இப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அருகிலுள்ள மற்றொரு புகைப்படம், அது பள்ளியில் குரூப் போட்டோவில் ஒன்று. இது பதினோரோம் வகுப்பு என அவர்களின் யூனிபார்மின் நிறத்திலே புரிந்து போனது.
எப்போதும் போல் தியா, கார்த்தி, ஷிவ், மது என அனைவரும் ஒன்றாக இருக்க, அவர்கள் வரிசையில் இல்லாமல் மேலே நின்றிருந்த தன்னவனை தொட்டுப் பார்த்தாள். என்னவோ அப்போதே அவனின் கண்கள் தன்னை பார்ப்பதை போன்று எண்ணம் தோன்ற, வெக்கச் சிதறல்கள் அவள் இதழ்களில், அதிலிருந்து அவளை மீட்பது போல் விடாமல் கைபேசி அழைக்க, அதில் தெரிந்த பெயரில் அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
தொடர்ச்சியாக முத்தங்கள் இட்டவன் “பேபி...” என அழைக்க,
அவனின் ஞாபகத்தில் சுழன்றவளால் பதில் பேச முடியாமல் போனது.
அவளின் மவுனத்தில் எதைக் கண்டு கொண்டானோ”ஆர் யூ ஓகே…!” என்றான்.
“ம்ம்...” என்றாள் பழைய நினைவுகளின் தாக்கத்தில்…
“பின்ன என்னாச்சு, என் ஊசிவெடி அமைதியா இருக்கு...”
“ஒண்ணும் இல்லை” எனக் கூறியவள்…,
அவனின் வருகையைக் கேட்க,
“இன்னும் ஒரு நாலு மணி நேரம் லேட் ஆகும் போல பேபி, டெல்லில ஒரே பனி, சோ ஃப்ளைட் டைமிங்கே மாத்திட்டாங்க. யு நோ, ஐ மிஸ் யூ அ லாட்...” என அவன் குரல் ஒலிக்கும் போதே,
பின்னாலிருந்த ஷிவ்...”டேய் என்னால முடியலைடா, ஒரு நாலு நாள் விட்டுட்டு இருக்க முடியாதா உன்னால, இந்த லவ் பேர்ட்ஸ் தொல்லை தாங்க முடியலைடா ஆண்டவா! இவனுகளுக்கு நடுவில என்னை ஏன் படைச்சே!” என புலம்பிக் கொண்டே சென்றான்.
ஷிவ்வின் புலம்பலில் சிரித்தவள்...
“சரி சரி சீக்கிரம் வாங்க” என ஃபோனை வைக்கப் போக…
“பேபி”
“ம்ம்...”
“தலையை ஒழுங்கா டிரையாக விடு, உன்னோட ஹெல்த்துக்கு சீக்கிரம் சளி பிடிக்கும், தென் நேத்து நைட் லேட்டா தான வந்துருப்ப, சோ பசங்களை கார்த்தி பார்த்துப்பான். நீ ரெஸ்ட் எடு. நான் இங்க இருந்து கிளம்பும் முன்னே ஃபோன் பண்றேன். சரியா”
“ம்ம்...”
“பேபி, ஐ மிஸ் யூ” என்றான்.
“டேய் இன்னுமாடா உங்க லவ் சீன் முடியலை, அட கிராதகா!” என ஷிவ்வின் சத்தத்தில்,
“ஓகே பேபி... ரெஸ்ட் எடு... இவனை” என அவனை துரத்த ஓடினான், அவளவன்…
மது சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்தவள், கணவன் சொன்னது போல் தன் தலையின் ஈரத்தை டிரையர் கொண்டு காயவிட்டாள். அவன் எப்போதும் தன்னை சரியாக கணிக்கும் விந்தையை எண்ணியபடியே, மீ்ண்டும் அவள் கண்கள் புகைப்படங்களுக்கு நடுவில் செல்ல, கைகள் அவளையும் அறியாமல் அந்த புகைபடத்தை தடவியது.
கோதுமை நிறத்தில் தீர்க்கமான கண்களுடன், அவனின் கூர் நாசியும், தெற்றுபல் சிரிப்பும் பிரபலமான அந்த நடிகரை நினைவு படுத்தும். பள்ளியிலிருந்து இன்று வரை அவன் புன்னகைக்கு ரசிகைகள் ஏராளம் தான்.