Please or Register to create posts and topics.

4.என் வாழ்வின் தேடல் நீயே!!!

ஆதி கான்பிரன்சிங் ஹாலுக்குள் நுழைந்ததும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்..ஆதி அவர்கள் அனைவரையும் தன் பார்வையாலே உட்கார சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து ஓகே இந்த வீக் நீங்க போட்ட பிளான் எல்லாத்தையும் ஸ்கிரீன்ல டிஸ்பிளே பண்ணுங்க என்று சொல்ல அப்போது ஒவ்வொரு டீமில் இருந்தும் அவர்கள் போட்ட பிளான்களை கண்பித்து எக்ஸ்பினை செய்ய ஆதி அதை கூர்ந்து கவனித்தபடி அமர்ந்து இருந்தான்..

அவனின் அமைதி அங்கு இருந்தவர்களின் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது..அப்போது ராஜேஷ் ஆதியிடம் சார் எல்லாரும் அவுங்க பிளானை காட்டிட்டாங்க நீங்க அதுல எது பெஸ்ட்டுனு சொலைக்ட் பண்ணுனா அதை கிளைண்ட்டுக்கு அனுப்பிருலாம் என்று சொல்ல அப்போது ஆதி அங்கு இருந்த அனைவரையும் ஒரு அழுத்தமான பார்வையை பார்த்து இது எல்லாம் பிளான்னா? என்று கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியில் அனைவரின்  முகத்தகலும் ஒருவித பயம் தோன்ற ஆரம்பித்தது.

சார் அது வந்து ரெண்டு நாள் டைம்ல இது தான் ரெடி பண்ண முடிஞ்சுது..

என்ன ஒரு 10000 ஸ்கொயர் பிட் புராஜக்ட்டுக்கு ரெண்டு நாள் டைம் பத்தாதா?

சார் அது வந்து என்று சொல்லிக்கொண்டு இருக்க ஆதி சட்டென தன் லேப்டாப்பை ஆன் செய்து அவனே பிளான் போட ஆரம்பித்தான்...அவன் எதுவும் பேசாமல் அமைதியாக பிளான் போடுவதிலேயே கவனம் வைத்துக்கொண்டு இருக்க அவன் லேப்டாப்பில் பிளான் போடுவது எல்லாம் ஸ்கிரீனில் டிஸ்பிளே ஆனது..அவனின் வேகத்தையும் அவன் பிளானின் நேர்த்தியையும் பார்த்து அங்கு இருந்த அனைவரும் வாயடைதுது நிற்க சரியாக இருபது நிமிடத்தில் பிளானை போட்டு அதை கிளைண்டிற்கும் அனுப்பி வைத்துவிட்டு அங்கு அமர்ந்து இருந்தவர்களின் முகம் பார்க்க அனைவரும் ஆதி என்ன சொல்ல போகிறானோ என்று பயத்தில் அமர்ந்து இருந்தனர்.

ஆதி தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு இப்ப என்னால எப்படி 20 நிமிஷத்துக்குள்ள பிளான் போட முடிஞ்சுது? முதல்ல நாம செய்யர வேலையில கவனம் வேணும் அப்ப தான் அந்த வேலை ஒழுங்கா நடக்கும்...ஏதோ தானோனு செஞ்சா இப்படி தான்..ஒரு டீம் போட்ட பிளான்ல முன்னாடி கார் பார்க்கிங் அளவு கம்மியா இருக்கு, இன்னோ டீம் போட்ட பிளான்ல அளவு எல்லாம் உங்க இஷ்டத்துக்கு போட்டு இருக்கீங்க..மத்த டீம்லயும் இதே மாதிரி மிஸ்டேக் தான்...இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் இதே மாதிரி நெக்ஸ்ட் டைம் இதே மாதிரி ரிப்பீட் ஆனா அப்புறம் நீங்க எல்லாரும் வேற பக்கம் வேலை தேட வேண்டிய சூழ்நிலை வரும் என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கு இருந்து தன் அறைக்கு சென்றான்..

பிரதாப் தன் ஆபீசிற்கு சென்று தன் இருக்கையில் அமர அப்போது HR மேனேஜர் அவரின் அறைக்கு வந்தார்.

சார் இன்னைக்கு உங்க PAவுக்கு இன்டர்வியூ செலைக்ஷன் இருக்கு என்றார்..

ஓஓஓ அப்படி எத்தனை பேரை நாம இன்டர்வியூ பண்ணனும்?

சார் நாங்க நாலு பேரும் சேர்ந்து மையூராங்க ஒரு பொண்ணை மட்டும் தான் இன்டர்வியூ பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்..எங்களுக்கு அவுங்களோட ரெஸ்யூமை பார்ததும் ஒரு நல்ல இம்பிரஷன் வந்து இருக்கு.அவுங்களை முதல்ல இன்டர்வியூ பண்ணுலாம்..நீங்க சரினு சொன்னா இன்டர்வியூக்கு அவுங்களை வர சொல்லுலாம்..

இன்னைக்கு வேண்டாம்..

சரிங்க சார் நீங்க எப்பனு சொல்லுங்க அப்ப இன்டர்வியூ வெச்சுக்கலாம் என்று சொல்லி அவர் வெளியே செல்ல பிரதாப் இந்த கம்பெனியை அவளிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது எப்படி அவளுக்கு அதுவும் PA வேலை தருவது எதற்காக இவள் PA வேலை வேண்டும் என்று நினைக்கிறாள் என்று புரியாமல் அமர்ந்து இருந்தார்...

தியா தன் அறையில் இருந்து கீழே இறங்கி வர அப்போது கௌரி மையூராவிற்கு கேசரியை ஊட்டிக்கொண்டு இருந்தார்..

அம்மா இது எல்லாம் ரொம்ப அநியாயம் சின்ன பொண்ணு இருக்கும் போது நீ எப்பவும் உன்னோட பெரிய பொண்ணுக்கு தான் ஊட்டி விடுர என்று பொய் கோபத்துடன் சோபாவில் அமர அப்போது மையூரா அம்மா ஊட்டலனா என்ன நா ஊட்டி விடுறேன் என்று சொல்லி மையூரா கேசரியை அவள் வாயில் வைக்கக உடனே அக்கானா அக்கா தான் என்று சொல்லி மையூராவை கட்டிக்கொள்ள உடனே கௌரி காரியம்னா அக்கா இல்லனா மையூ, வாடி, போடினு சொல்லுரது என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்கு செல்ல தியா நீ வா மையூ நாம ரூம்க்கு போலாம் என்று சொல்லி அவளை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஏய் எதுக்குடி இப்படி உள்ள இழுத்துட்டு வந்து டோர் லாக் பண்ணுர?

ம்ம்ம்...உன்கிட்ட பேசரதுக்கு தான்.

டோர் லாக் பண்ணீட்டு பேசர அளவுக்கு அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?

எதுக்காக நீ நம்ம கம்பெனியில அதுவும் PA வேலைக்கு அப்லே பண்ணி இருக்க?

இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?

ம்ம்ம்...இன்னைக்கு காலையில உன்னை பிக் பண்ண வரும் போது அப்பாவுக்கு நம்ம ஆபீஸ் இருந்து HR மேனேஜர் உன்னோட ரெஸ்யூமை அனுப்பி இந்த பொண்ணோட ரெஸ்யூம் தான் பெஸ்ட்டா இருக்கு அனுப்புனாங்க அதை பார்த்ததும் அப்பா முகமே வாடி போயிருச்சு தெரியுமா?

அம்மா கூட கேட்டாங்க என்ன ஆச்சுனு அதுக்கு அப்பா ஒன்னும் இல்லனு சொல்லிட்டாரு ஆனா நா டிரைவ் பண்ணிட்டு இருக்கும் போது அவருக்கு தெரியாம மெயிலை படிச்சுட்டேன்...ஏன் மையூ நீ இப்படி பண்ணுர அப்பா உன்னை நம்ம கம்பெனில அவரோட சீட்ல உட்கார வைக்கனும்னு ஆசைப்படுராருனு உனக்கு தெரியும்ல அது தெரிஞ்சும் எதுக்காக இப்படி பண்ணுன?

என்னால உடனே போய் அப்பா சீட்ல உட்கார முடியாது தியா. அப்பா கஷ்டப்பட்டு உருவாக்குன கம்பெனி அதுக்கு நா தகுதியானவ தான்னு அவருக்கு புரூஃப் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் தான் அவரோட சீட்ல உட்காருவேன்.

மையூ நீ ஏற்கனவே நிறையா பிளான் எல்லாம் போட்டு தந்து இருக்கல..

அது நம்ம கம்பெனியோட இன்ஜினியர்ஸ் கூட செய்ய முடியும்..அப்புறம் அப்பா நா அவரோட பொண்ணுங்கரதால தான் நம்புறாரு அவனோட பொண்ணுங்கரதை கொஞ்சம் தள்ளி வெச்சு பாத்தா நா ஜீரோ தான் தியா..

இப்ப நீ என்ன தான் பண்ண போற?

நா நம்ம கம்பெனியிலயே அப்பாவுக்கு PAவா வேலை செய்ய போறேன்..அவருக்கு ஒரு பையன் இருந்தா எந்த அளவுக்கு நம்புவாறோ அதே மாதிரி நம்பிக்கை என்மேலயும் வைக்கனும்..

இப்ப உன்மேல நம்பிக்கை இல்லனு யாரு சொன்னா? அப்பா பையன் பொண்ணுனு என்னைக்கும் வித்தியாசம் பார்த்தது இல்லை மையூ.

எனக்கு தெரியும் ஆனா இந்த சமுதாயத்துக்கு முன்னாடி நா அதை வெறும் வாய் வார்த்தையால இல்லாம என்னோட செயல் மூலமா சொல்லனும்..அப்பா பெறுமையா பொண்ணும் பையனும் ஒன்னு தான்னு சொல்லனும் போது அவரை கிண்டலா பாத்த நம்ம சொந்த காரங்க முன்னாடி நம்ம அப்பா கெத்தா நிற்கனும்..அதுக்கு நா கீழ இருந்து மேல வரனும் நேரா போய் சீட்ல உட்கார கூடாது..

இதுக்கு அப்பா ஒத்துக்குவாரா?

நான் தான் பேசி ஒத்துக்க வைக்கனும்...ஆமா நம்ம வீட்டு வாசல்ல நிற்கர ஸ்கூட்டி யாரோடது?

அது நம்ம வாட்ச்மேனோடது அப்ப அந்த ஸ்கூட்டி எனக்கு வேணும்..அதுல தான் நா தினமும் ஆபீஸ் போக போறேன்..

என்ன ஸ்கூட்டிலயா என்று கேட்க அதற்கு மையூரா ஆமா ஸ்கூட்டில தான் நா போய் அவர்கிட்ட கேட்டுட்டு வந்துடுறேன் என்று சொல்லி அங்கு இருந்து வெளியே செல்ல தியாவோ இவ பண்ணுரது எல்லாமே இப்படி தான் லூசு தனமா இருக்கும் இருந்தாலும் ஆனா அது சரியாவும் இருக்கும் என்று நினைத்து நில்லுடி நானும் வறேன் என்று சொல்லி அவளின் பின்னால் ஓடினாள்..

வைதேகி மேட்டிரிமோனியில் ஆதிக்காக சிறந்த பெண்ணை தேர்வு செய்யும் வேலையில் இறங்கி இருந்தார்..அவர் போட்டோவை பார்ப்பதும் பின்பு அவரின் முகம் மாறுவதும் தன் தலையில் கை வைத்து மீண்டும் வேறு பொண்ணை பார்ப்பதுமாக இருக்க அப்போது அதை கவனித்துக்கொண்டு இருந்த விஜயா அங்கு வந்து என்ன ஆச்சுமா உடம்பு சரி இல்லையா என்று கேட்டார் ஒருவித அக்கறையுடன்..

உடம்புக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு விஜயா ஆனா மனசு தான் சரி இல்ல..

என்ன ஆச்சு மா..

ஆதிக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சது உனக்கு தெரியும் தான..

ஆமா மா தம்பி கூட இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கே.

அதுக்கு தான் விஜயா நா அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணு பாத்து அவன்கிட்ட அந்த போட்டோவை காட்டுனா ஒத்துக்குவானு நினைச்சு தேடிக்கிட்டு இருக்கேன்..இதோ இத்தனை பொண்ணுக இருக்காங்க ஆனா நம்ம ஆதிக்கு ஏத்த மாதிரி பொண்ணு ஒன்னு கூட இல்ல.

அம்மா வருத்தப்படாதீங்க இங்க பக்கத்துல இருக்க அம்மன் கோவில்ல வெள்ளிக்கிழமை தவறாம விளக்கு போடுங்க கூடிய சீக்கிரமே உங்களுக்கு புடிச்ச மாதிரி மருமகள் கிடைப்பா ஆதிக்கும் கல்யாணம் நடக்கும்..

உண்மையாவா?

ஆமா மா எங்க வீட்டு பக்கத்துல இப்படி விளக்கு போட்டு தான் நிறையா பேருக்கு கல்யாணம் ஆகி இருக்கு..

அப்ப நாளைக்கு தான வெள்ளிக்கிழமை நாளையில இருந்தே விளக்கு போட ஆரம்பிச்சுக்கறேன்..

சரிங்கமா உங்க மனசு போல எல்லாமே நடக்ககும் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வந்து சாப்பிடுங்க என்று சொல்லி அங்கு இருந்து செல்ல அப்போது வைதேகியின் மனதிலும் சிறு நம்பிக்கை ஏற்பட்டது..

ஆபீஸ் முடிந்து 8 மணிக்கு வீட்டிற்கு வந்தார் பிரதாப்...அப்போது வீடே வெறிச்சோடி போய் இருக்க கௌரி மட்டும் சோபாவில் அமர்ந்து இருந்தார்..

என்ன கௌரி வீட்டுல யாரையும் காணோம்..

அப்ப நா இருக்கரது உங்க கண்ணுக்கு தெரியலையா?

அப்படி இல்ல தியாவையும் மையூவையும் காணோமா அது தான் அப்படி கேட்டேன்.

அவுங்க ரெண்டு பேரும் தூங்க போயிட்டாங்க.

இப்பவே தூங்க போயிட்டாங்களா? மணி எட்டு தான ஆகுது.

ஆமாங்க..நாளைக்கு தியாவுக்கு எக்ஸாம் இருக்குல அதுனால அவ தூங்க போனா...மையூ மதியம் எல்லா தூங்கவே இல்ல தியா கூட சேர்ந்து ஒரே ஆட்டம் தான் அதுனால அவளும் டையர்டா இருக்குனு அவ கூடவே தூங்கரனு போயிட்டா..

சாப்பிட்டாங்காளா ரெண்டு பேரும்..

அது எல்லாம் சாப்பிட்டாங்க..

தியாவுக்கு இன்னைக்கு கால் தரையிலயே படுலங்க மையூ கூட சேர்ந்து படம் பாக்கரது என்ன அவளை அடிச்சு விளையாடுரது என்ன ஒரே ஆட்டம் தான்..எனக்கே ஒரு சமயம் இவுங்க ரெட்ட குழந்தைகளோனு சந்தேகம் வந்துருச்சுங்க அப்படி ஒரு ஒத்துமை.

இருக்காதா பின்ன அவுங்க பிரதாப் பொண்ணுக என்றார் கர்வமாக..

சரி சரி உங்க பொண்ணுக தான் இப்ப யார் அதை இல்லனு சொன்னாங்க..சரி போய் பிரஸ் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றார்..

சிறிது நேரத்தில் பிரதாப் சாப்பிட வந்து அமர அவருக்கு பரிமாறிக்கொண்டே என்ன முடிவு எடுத்து இருக்கீங்க என்று கேட்டார் கௌரி.

வீட்டுக்கு வந்ததும் அவகிட்ட பேசலாம்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள அவ தூங்கிட்டாலே...நாளைக்கு அவ என்கூட ஜாக்கிங் வருவால அப்ப பேசி ஒரு முடிவு எடுக்கறேன் என்றார்.

அதுவும் சரி தான்...நீங்க அவளை கட்டாயப்படுத்தாதீங்க அவளோட விருப்பம் தான் நமக்கு முக்கியம்..

எனக்கு புரியுது கௌரி அவகிட்ட சொல்லி பாக்கறேன் அவ முடியாதுனு சொன்னா அவ என்ன முடிவு எடுக்கறாளோ அதுக்கு நா  துணையா இருக்கேன்..அது தான ஒரு அப்பாவா என்னோட கடமை என்று சொல்ல கௌரியும் ஆமாம் என்பது போல தலை அசைத்தார்.

---விரைவில் சந்திப்போம்...