வில்லேந்தும் மொழியாளே-4

Quote from Ruthi Venkat on May 26, 2023, 1:56 pmஅத்தியாயம் - 4
வானமகளை ஆதவன் இதழொற்ற, புதுமணப் பெண்ணின் குங்குமக் கன்னங்களாக சிவந்து விடிந்தது அன்றைய பொழுதும். கனடாவின் மிதமான குளிருடன் விடிந்த அக்காலைப் பொழுதை மனதிற்கு மிகவும் ரம்மியமாக உணர்ந்தாள் மொழி.
பருத்தியின் வெண்மையில் குழைந்து இழைக்கப் பட்டிருந்த ஆளுயர ஃப்ரெஞ்ச் விண்டோக்களை திறந்து வெளியே நடந்தவளுக்கு, காற்றின் குளுமை, மனதில் ஏற்பட்டிருந்த இரவின் வெம்மையை எங்கோ துரத்தி விட்டிருந்தது.
தோட்டத்தில் சிறிதுதூரம் நடந்தவளை, தென்றல் காற்று உரசிச் செல்ல, இரவில் அவள் தனது பைஜாமா பாக்கெட்டில் அவசரமாக செருகி வைத்திருந்த சாக்லெட் கவர், பறந்து அவள் முன்னே விழுந்தது.
அதை குனிந்து எடுத்தவளுக்கு இரவு நடந்ததும் ஞாபகம் வர, கோப வார்த்தைகளுக்கு பதிலாக இப்பொழுது அவளது அதரங்கள் புன்னகையைச் சிந்தியது.
“அவதார்.. உனக்கு ஏன்டா என்னை இவ்வளவு பிடிக்குது?” சாக்லெட் கவரைப் பார்த்து வாய்விட்டுக் கேட்க, அது பதில் சொல்லுமா என்ன?
தூக்காணங் குருவிக் கூட்டின் கட்டமைப்பு ரகசியம் போல, தன்மீதான அவனது பற்றுதலும் இன்று வரை அவளுக்கு கேள்விக்குறியே?
“என்னை எந்த மூலையில் ஒளிச்சு வச்சுருக்கே மிஸ்டர். சார்லஸ்? ஆம், வில்லியமின் முழுப்பெயர் சார்லஸ் வில்லியம். வின்சென்ட்டின் தாத்தாவின் பெயரைத்தான் மகனுக்கு வைத்திருந்தான்." சாக்லேட் கவருடனே உரையாட, அதுவரை காற்றில் ஆடிக்கொண்டிருந்தது, எதிர்காற்றால் நிமிர்ந்து நின்றது. அதை பார்த்து பக்கென்று சிரித்து விட்டாள்.
அவன் தனது பெயரைக் கிண்டல் செய்ததும், அவனை துரத்திக்கொண்டு ஓடியதுமாக அன்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டது, இன்று நினைத்துச்சிரித்து மகிழும் நினைவாக மாற்றிய காலத்தின் விந்தையை நினைத்து பூரிப்பாகத் தான் இருந்தது. நினைத்துப்பார்க்க மகிழ்வாகவும் இருந்தது.
அவர்களது சிறுபிராயத்தில் எப்பொழுதும் விடுமுறைக்கு இந்தியாவிற்கு வரும் பொழுது நடக்கும் அடிபிடி சண்டைகள் நடந்து முடிந்து, வில்லியம் தனது அத்தையின் மடியில் சாய்ந்து கொண்டும், மொழி வின்சென்டின் மடியில் அமர்ந்து தோட்டத்தில் இருந்து அப்பொழுது தான், கொண்டு வரப்பட்டிருந்த திராட்சைப் பழங்களை அவன் ஊட்டிவிட, சொகுசாக மாமனின் நெஞ்சில் சாய்ந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.
தந்தை அவளை கொஞ்சுவது பார்த்து வில்லியம் அவளை சீண்டிக் கொண்டே தாட்சாயிணியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“வாட் இஸ் தி மீனிங் ஆஃப் மென்மொழி அத்தே?" தாட்சாயிணியின் மடியில் தலை வைத்து ஒய்யாரமாக கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தவனை முறைத்துக் கொண்டிருந்தாள் வின்சென்ட்டின் மடியில் அமர்ந்திருந்த மென்மொழி.
“லிட்டில் ப்ளம்.. சாப்பிடு" திராட்சை பழங்களை மருமகளுக்கு ஊட்டிக் கொண்டிருக்க, அவனது கன்னத்தில் திரும்பி முத்தம் வைத்தவள், மீண்டும் திரும்பி வில்லியமை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“மென்மொழினா... பேசுவதுக்கு மிருதுவான மொழின்னு அர்த்தம்... சாஃப்ட் லைக் சில்க்னு சொல்லலாம்" விளக்கமளித்தாள் தாட்சாயிணி.
“ஓ...லைக் திஸ்...” தாட்சாயிணி அணிந்திருந்த மென்பட்டை சுட்டிக் காண்பிக்க,
“எம்மருமவனுக்கு கற்பூர புத்தி" அன்னையின் நெட்டி வழித்தலில் காதில் புகை வந்தது மென் மொழிக்கு.
“சவுண்ட்ஸ் குட்... பட் இவளுக்கு எதுக்கு இந்த பெயர் அத்தே?" மென்மொழியை சுட்டிய அவனது கேள்வியில், மொழிக்கு கோபம் வர,
“ஆமால்ல... கரெக்டு மருமவனே.. கொஞ்சம் யோசிச்சுருக்கலாமோ?" அன்னையின் ஒப்புதலில், அவனை அடிக்கப் பாய்ந்து வந்தாள் அருளின் இளவரசி. அவளின் பிடிக்குச் சிக்காமல் எழுந்து ஓடினான் வில்லியம்.
அருள் அங்கு இருந்திருந்தால் நடக்கும் கதையே வேறு. ஆனால் அன்று தனது தொழிற்சாலைக்கு லினாவை அழைத்துக்கொண்டு சென்றிருக்க, வீட்டிலிருந்தது பிள்ளைகளும் தாட்சாயிணியும். பெரியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அருணும், தருணும் தமயந்தியின் வீட்டில் அவர்களது மகனை அழைக்கச் சென்றிருந்தனர்.
“அம்மணி.. இவன் என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கான்.. நீ பாத்துட்டே இருக்க?" அவனை பிடிக்க முடியாது ஓடிக்களைத்தவள், தாய் அமர்ந்திருந்த சோஃபாவின் பின் நின்று கொண்டு, மூச்சிரைக்க அவள் காதில் கத்த, அவளது பேச்சை ரசித்துச் சிரித்தான் வின்சென்ட்.
கையை பின்னால் நீட்டி, மகளை முன்னால் இழுத்தவள், “குட்டிகழுதை.. எத்தனை தடவை என்னை அம்மணி கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன்லடி? கொஞ்ச மாச்சும் அம்மாங்கற பயமிருக்கா? என் மருமவன் கரெக்டா தான்டி கேட்டுருக்கான். பண்ற தெல்லாம் ரவுடித்தனம். உனக்கு மிருதுவானவள்னு பேரு வைச்சிருக்கேன் பாரு" மகளை இழுத்து, அவளது மாம்பழ கன்னத்தில் அழுந்த முத்தமிட, அவளது கன்னத்தை அழுந்தக் கிள்ளும் ஆர்வம் வில்லியமின் கண்களில். அதே ஆர்வத்தோடு அவர்களது அருகில் வர, அன்னையிடம் இருந்து தவ்விக் குதித்தவள்,
“டேய் சார்லஸீ அங்கனயே நில்லுடா?" என்றவள் செவிப்பறை கிழியும் அளவு கத்தினாள்.
“ஹேய் சில்க்கி கால் மீ சார்ல்ஸ்" அவளது அழைப்பில் எரிச்சலுற்றவனாக பதிலுக்கு வில்லியமும் கத்தினான். ஏனோ மொழி அவனது இந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், அவனுக்கு அவ்வளவு கோபம் வரும்.
“போடா.. நீ பெரிய பிரின்ஸ் சார்ல்ஸூ?" என்று கத்தியவள் அவனது பிடிக்கு அகப்படாமல் வெளியே ஓடிவிட்டாள்.
பெரியவர்கள் சமாதானப்படுத்தினாலும், அவள் தனியாக சிக்கிய நேரத்தில் மொழியைப் பிடித்தவன், அவளது இரு கன்னங்களையும் பிடித்து பேசவிடாது, அவனது பெரிய கைகளில் அதக்கிக்கொண்டவன்,
“என்னடி சொன்ன? பிரின்ஸ் சார்ல்ஸ்ன்னா?? ஆமா நான் ப்ரின்ஸ் சார்ல்ஸ்தான் அண்ட் நீ என் சப்பி டையானா" வலியில் நீர்கோர்த்த அவளது விழிகள் ஆழப்புதைந்த படிமங்களின் எச்சமாக, ஆழமாக அவனது நெஞ்சில் புதைய, அவனது சிறிய தளர்வில் அவனை பிடித்துத் தள்ளிவிட்டு தான் ஓடியது இன்றும் நினைவிருந்தது மொழிக்கு.
நினைவுகளின் தாக்கமாக, கொஞ்சம் கொஞ்சமாக காலத்தை முந்தி, கன்னியின் மனதில் தான் முந்திக் கொண்டிருந்தான் வில்லியம். இங்கு கிளம்பிவரும் வரை கூட, அவளது மனதில் வில்லியமிற்கான இடம் என்னவென்றே அறியாமல்தான் கிளம்பி வந்தாள்.
ஆனால் நேற்றைய இரவு, அவன் எப்பொழுதும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கும் ஏதோ ஒரு சங்கதியை உணர்ந்தாற் போன்று மனதிற்குள் மின்சாரல்கள் சிலிர்ப்பூட்டினாலும், அவனது குறும்பின் அளவை தெரிந்து வைத்திருந்தவளுக்கு நூற்காற்றாடியாக மனம் ஊசலாடிக் கொண்டு இருந்தது. அதிலும் அவனது குறும்பினால் ஏற்பட்ட உயிர்பலியை இப்பொழுது நினைத்தாலும் வேதனையும் பயமும் ஒருங்கே தோன்ற, முயன்று அவனது நினைவுகளை ஒதுக்க முயன்றாலும், அது முடியவில்லை.
அத்தனை நேரமிருந்த இலகுத்தன்மை மறைந்து, வீட்டை நோக்கித் திரும்ப, வெள்ளைநிறப் பளிங்கு மாளிகையின் தோற்றம் அவளது கண்களை விரியச் செய்தது.
லினாவிற்கு வெள்ளைநிறம் மிகவும் பிடித்த நிறமென்பதாலும், இந்தியாவிற்கு வந்து தாஜ்மஹாலைப் பார்த்து விட்டுச் சென்ற பின்பு, அதைப் பற்றியே மனைவி பேசிக் கொண்டிருந்ததாலும், வில்லியம் பிறந்த மறுவருடத்தில் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக இந்த வெள்ளை மாளிகையை அளித்திருந்தான் வின்சென்ட். இந்த விஷயம் மொழியும் அறிந்த ஒன்றே. ஆனால் இப்பொழுது இவர்களது செல்வநிலை சற்று மிரட்சியையும் ஏற்படுத்தியது.
கோவை சுற்று வட்டாரத்தில் அருளின் குடும்பம்தான் பெருந்தனக்காரர்கள் என்று அறியப்பட்டாலும், இவர்களது செல்ல வளத்திற்கு முன், அது அரைப்பங்கோடு நின்றுவிடும். இத்தனை வளமிருந்தும் மிக இயல்பாக பழகும் லினாவையும் வின்சென்ட்டையும் நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. வில்லியமை சொல்லவே வேண்டாம்? அவளுக்கே பலநேரங்களில் சந்தேகம் வந்ததுண்டு.
‘இவனை எந்த வகையில சேர்க்கிறது? வின்சென்ட் மாமா மாதிரி வளர்ந்ததால மட்டுந்தான் அவதார்னு கண்டுபிடிக்க முடிஞ்சது? இல்லைன்னா இவன் மனுஷ வகையில சேர்த்தியே இல்லை.. வானரமேதான்.' வீட்டின் பிரம்மாண்டத்தையும் அழுக்கு படிந்த மேகங்களாக முகப்பில் இழைக்கப்பட்டிருந்த சலவைக்கற்களையும் அண்ணாந்து ரசித்தவாறே, முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டவள், எதிரில் வந்த வில்லியமின் மீதும் மோதிக்கொண்டாள்.
“ப்ச்.. ம்மா அவதார் பார்த்து வரமாட்டியாடா?” அவனது மார்பில் பலமாக மோதியதில், அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே தலையை தேய்த்துக் கொள்ள, அவளது கையை பிடித்து இழுத்தவன்,
“நீ இடிச்சு எனக்குதான்டி வலிக்குது? இங்க பார்.. உன் ராக் மண்டைய வச்சு இடிச்சதுல... என் நெஞ்சு ஓட்டை விழுகறதுக்கு முத ஸ்டேஜ்ல இருக்கு" என்றவன், அவளது கைகளை வைத்து பரபரவென்று நெஞ்சில் தேய்க்க, நசுங்கிய உடையுடனும், கலைந்த தலையுடனும் தன்முன்னே நின்றவனைக் கண்டு, ஏதோ ஒரு உணர்வு உள்ளுக்குள் உயிரெடுக்க, முதன்முறையாக அவனை ஆர்வமாகப் பார்த்தாள் மொழி.
அதுவரை அவளது கைகளின் ஸ்பரிசத்தையும் காதல் காரிகையின் அருகாமையையும் ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, அப்பொழுதுதான் அவளது அமைதி கவனத்தில்பட, குனிந்து பார்த்தவனுக்கு மொழியின் விழி உணர்த்திய உணர்வுகள் திக்குமுக்காடச் செய்தது.
“சில்க்கி...” அவளது இரு கைகளையும் தனது இரு கைகளுக்குள் பொதித்துக் கொண்டவன், உற்சாகப் புன்னகையுடன் அவள் முகத்தைப் பார்த்து புன்னகைக்க, உறை நிலையில் நின்றிருந்தவளைக் கண்டு மனம் உள்ளுக்குள் குதூகலித்தாலும், பதில் கூறாது சற்றே பிளந்த உதடுகளுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் சிகையில் வாயைக் குவித்து மெதுவாக ஊதினான்.
அந்த சிறு மென்மையான செய்கையில் மொழியின் விழிகள் தாமாக மூட, அவளது முகத்தருகே நெருங்கியவன், மெல்லொலியாக,
“இன்னும் ப்ரஷ் பண்ணலயா சில்க்கி? சாக்லேட் பல்லுல ஒட்டியிருக்கு?" என்று கேட்க, அவனது கேள்வியில் தன்னிலை மீண்டவள், முழுவதும் வார்த்தைகளை ஊகிக்க முடியாது,
“எ..என்ன சொன்ன?" என்று கேட்க,
“இன்னும் ப்ரஷ் பண்ணலயான்னு கேட்டேன்டி சில்க்கிஈஈஈஈஈ.....” அவளது காதில் உரக்க கத்த, அவனது கத்தலில் வெடித்த ஆத்திரத்தில் கைகளை ஓங்க முற்பட, அந்தோ பரிதாபம்!! அவளால் ஓங்கத்தான் முடியவில்லை.
“எருமை...எருமை.. அவதார் எருமை... விடுடா.. விடுடா...! எப்ப பாரு விளையாண்டுகிட்டு" அவனது கைகளில் இருந்து தனது கைகளை உருவ முற்பட, வெற்றிகரமாக ஒருகையை எடுத்தும் விட்டாள்.
ஒற்றைக் கையால் அவனது தோள்களில் குத்திக்கொண்டே, “உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களாடா? உன் வாலை ஒட்ட நறுக்கறேனா இல்லையா பாரு? எப்பபாரு என்னை வம்பிழுக்கறதே உனக்கு வேலையாப் போச்சு? ஏன்டா.. ஏன் இப்படி பண்ற?" கற்றைக்குழல் பறக்க, ஆவேசத்துடன் தன்னை அவள் தாக்கிக் கொண்டிருந்தாலும், சுக வலியெடுக்கும் ஏகாந்தத்தை உணர்ந்து கொண்டிருந்தான், அவளது கரம்பிடிக்க துடித்துக் கொண்டிருக்கும் அவளது அருமை மணாளன்.
“ஹ்ம்.. நீ பாடிபில்டர் தான் பேபி... ஸ்டாப் இட்.. ஜஸ்ட் ஸ்டாப் இட் யா.... கை வலிக்கப் போகுது..” என்றவன் மற்றொரு கையை விடுவித்து, அவளைவிட்டு சற்று தள்ளி நிற்க, சற்றே ஆசுவாசமடைந்தவள், தனது சுண்டு விரலால், அவன் கத்திய காதில் அடைப்பெடுக்க,
“நான் வேணுனா ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றான் வில்லியம்.
“எதுக்கு இன்னொரு காதையும் அடைக்க வைக்கவா?” என்றவளின் முகமோ கோபத்தில் கன்றிப் போயிருந்தது.
அதற்குமேல் எதுவும் பேசாது, மொழி அவனைக் கடந்து செல்ல முற்பட, அவளுக்கு முன்னால் ஓடி மீண்டும் வழிமறித்தான் வில்லியம்.
“இன்னைக்கு டாட் உன்கிட்ட, இன்னும் இரண்டு நாள்ள நீ கேம்பஸ் போறதுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ் பத்தி கேட்பாரு? கார் வேண்டான்னு சொல்லிட்டு என்கூட வர்றேன்னு சொல்லு சில்க்கி." குத்தூசியாய் தன்னைத் துளைக்கும் அவன் விழிவீச்சை உணர்ந்து கொண்டாலும்,
“எதுக்கு போறவழில என்னை உருட்டிவிட்டு ஸ்டன்ட் காண்பிக்கவா? நானே நல்லா ஸ்டன்ட் பண்ணுவேன். போடா அவதார்" என்றவள் அவனை தள்ளிவிட்டு வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
“ஓ.. அப்படிங்களா சித்தி?” தமயந்தி பேசிக் கொண்டிருக்க, அதை மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த அருணைக் கண்டு, பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது ஷண்மதிக்கு.
“அச்சோ... தேவையில்லாம இவனை முறைச் சுட்டேனே? ஏதாவது இவன் கேட்டு அத்தை மனசை சங்கடப்படுத்திவான் போலயே?" கொண்டு வந்த காஃபியை அவன் முன்பு வைத்துவிட்டு, ஹாலின் ஒரு ஓரத்தில் நின்று பதற்றத்துடன் துப்பட்டா நுனியின் நூலைப் பிரித்து பிய்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு, ஒரு திருப்தி புன்னகையுடன், காஃபியை அருந்தினான் அருண்.
“பாத்தியாடா அருணு... உங்க ஆத்தா எங்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டா? சொல்லியிருந்தா நானும் கூட போயிருப்பேனுல்ல?" தமயந்தியின் சலசலப்பில் சிரித்தான் அருண்.
முதல்நாளைய சந்திப்பின் பிறகு தமயந்தியின் வீட்டுற்கு சென்று மீன்களை கொடுத்துவிட்டு வர முடிவெடுத்தவனால் போக முடியாமல் வேறு வேலைகள் வந்துவிட, வேலையாட்கள் மூலமாக கொடுத்தனுப்பி விட்டான். அவனது வரவை நினைத்து பயந்து கொண்டிருந்த ஷண்மதிக்கு, அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது. பின்னே அவளது அண்ணனுக்கு கொடுத்த வாக்கையும் மீறி, தனது செய்கையால் அருணை தூண்டிவிட்டது போல் ஆகிவிட, காலங்கடந்த ஞானோதயத்தால் பலன்தான் பூஜ்யமாகப் போயிற்று.
ஆம்.. மறுநாளே அவள் முன்னால் வந்து நின்றான் அருண். அதுவும் தமயந்தியின் வீட்டிற்கு வந்துவிட்டான்.
“யெய்யா.. அருளு.. வாய்யா பாத்து எம்புட்டு நாளாச்சு? வா ராசா" தமயந்தியின் உற்சாக வரவேற்பில் உறைந்து நின்றாள் ஷண்மதி.
“பாப்பா. சீக்கிரம் போய் தண்ணி கொண்டாடா" அருணின் கையைப் பிடித்து அழைத்துவந்து அமர வைத்தவள், தானும் அவனருகே அமர்ந்து பேச ஆரம்பிக்க, நேற்றைய தைரியம் இன்று மறைந்து போனது ஷண்மதிக்கு.
அவனை நிமிர்ந்தும் பாராமல், தமயந்தி சொன்னதை செய்து விட்டு ஓரமாய் ஒதுங்கி நிற்க, அரிதாய் கிடைத்திருக்கும் அருணின் வரவை சந்தோஷமாக பேசி தீர்த்துக் கொண்டிருந்தாள் தமயந்தி.
“சிவா சித்தப்பா, எப்ப வருவாருங்க சித்தி?" அருணின் கேள்வியில் வியர்க்க ஆரம்பித்தது ஷண்மதிக்கு.
“இன்னைக்கு இராவுக்கு தான் வருவேன்னு சொன்னாங்க அருணு. பொள்ளாச்சி ஃபேக்டரில ஏதோ யூனியன் சம்பந்தமா பேச்சுவார்த்தை இருக்குன்னு சொன்னாங்க. நேத்து கூட ரவிக்கு சரியான திட்டு விழுந்துச்சு. எப்பதான்டா பூனாவில இருந்து திரும்புவன்னு? அதுக்கு அவன் தருணோட தான் வருவேன்னு சொல்லிட்டான் அருணு. இப்ப அவருக்கு கண்டிப்பா ஒரு ஆளோட உதவி தேவைப்படுது." மகனை நினைத்துக் கவலைப்பட்டாள் தமயந்தி.
தருணை நினைத்து மெல்லிய கோபம் முளைத்தாலும், “நான் ரவிகிட்ட பேசறேன் சித்தி. சித்தப்பாக்கு வேணுன்னா நான் இப்ப என்னால முடிஞ்ச உதவியச் செய்றேன்." ஆறுதல் படுத்தினான் அருண்.
“அருளண்ணனுக்கு விஷயம் தெரியாம இருக்கும்னு நினைக்கிறியா தம்பி? அதெல்லாம் அண்ணன் முக்காவாசி வேலையப் பாத்துக்க, ஆள் ஏற்பாடு பண்ணிட்டாரு. இருந்தாலும் நம்ம சொத்துக்களை நாமதான தம்பி பாத்துக்கணும். பொறுப்பு கொஞ்சமாவது இப்பவே எடுத்துக்க ஆரம்பிச்சாதான, பின்னால எல்லாம் சரிவர கவனிக்க முடியும்." தமயந்தியின் கூற்றும் நியாயமாகப்பட்டது அருணுக்கு.
“சரிங்க சித்தி. நான் ரவிகிட்ட கண்டிப்பா பேசறேன். உங்ககிட்ட ஒண்ணு கேட்கனுமே?" பீடிகையுடன் நிறுத்த,
“என்கிட்ட என்ன தயக்கம்? கேளு ராஜா" கேள்விக்காக அவனது முகத்தை எதிர்நோக்கினாள் தமயந்தி.
“நம்ம வேலுமாமா எப்படி இறந்தாரு? யார்கிட்ட கேட்டாலும் சரியா விவரம் தெரிய மாட்டிங்குது." என்றவனின் கேள்வியில், தமயந்தியின் முகம் சங்கடமுறுவதை பார்த்த ஷண்மதிக்கும், தான் செய்த மடத்தனத்தின் வீரியம் புரிந்தது.
“அ.. அ..அது வந்து.. எனக்கும் தெரியலயே தம்பி" சித்தியின் பதிலிலேயே அவர் தன்னிடம் விஷயத்தை மறைக்கிறார் என்பதை புரிந்து கொண்டவனின் இதழ்கள் மென்னைகையை சிந்த, அதைக் கவனித்தாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் தமயந்தி.
“சரி.. நா வாரேனுங்க சித்தி." விடைபெற எழுந்தவன், இன்னும் பதைபதைப்புடனே நின்றிருந்த ஷண்மதியைப் பார்த்து,
“காஃபி நல்லாருந்துச்சுங்க அம்மணி." என்றவனின் முறுவலில் பலத்த யோசனைக்குச் சென்றாள் அவள். வெளியில் பார்க்கும் போதெல்லாம் தைரியமாக முறைக்க முடிந்தவளால், தமயந்தியின் முன்பு அதைச் செய்ய இயலவில்லை. அவளது அண்ணனின் அறிவுரை தான் அதற்குக் காரணம்.
“ஆமா.. இவங்க யாருங்க சித்தி?" அருணின் கேள்வியில் இப்பொழுது தைரியமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷண்மதி.
‘ஏன்டா நேத்து நீ என் ஆவியவா பாத்த?' அவளது மனது அவள் கண்களின் வழியே பரிகாசம் செய்வதை, கண்டும் காணாதது போல் நின்றிருந்தான் அவன்.
தமயந்தி ஓரளவு இப்பொழுது மீண்டிருக்க, “நம்ம வேலண்ணன் பொண்ணுதான் தம்பி. மக மாதிரி நாந்தான் வளர்த்துட்டு வரேன். பேரு ஷண்மதி." அறிமுகம் செய்ய, அதை அங்கீகரிக்க வேண்டுமென்பதற்காக, அவனைப் பார்த்து வேண்டா வெறுப்பாக தலையசைத்து வைத்தாள் ஷண்மதி.
“ஓ சரிங்க சித்தி.. அப்ப நம்ம சந்தீப் தங்கச்சியா? இப்ப இரண்டு நாளைக்கு முன்னாற கூட, நம்ம ஃபேக்டரில மெக்கானிக் வேலை அந்த பையன்தான் பார்த்தாருங்க." இந்த பதிலில், அவனுக்கு வேண்டிய தகவலை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த ஷண்மதிக்கு, அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை.
“அத்தை எனக்கு ப்ராஜெக்ட் வேலை இருக்குதுங்க.. நான் என்ற ரூம்புக்கு போறேனுங்க.” என்றவள், தமயந்தியின் அனுமதியை எதிர்பாராமலேயே அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவளது நடவடிக்கையை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே “தப்பா எடுத்துக்காத ராஜா.. அவளுக்கு படிப்புன்னா அம்புட்டு ப்ரியம். நீ இருந்து மதியத்துக்கு சாப்பிட்டு கிளம்புய்யா. நீ அடிக்கடியும் வார ஆள் இல்லை." என்ற தமயந்தியின் வேண்டுகோளை, அவனால் ஏற்க முடியவில்லை.
“இல்லிங்க சித்தி. இந்த ஒரு வாரமா லேபர் சம்பள ரிவிஷன் நடந்துட்டுருக்குங்க. ஏதோ கொஞ்சநேரம் கிடைச்சது, உங்களைப் பார்க்க வந்துட்டேனுங்க. இப்ப நான் கிளம்பியாகனும். வர்றேனுங்க!" என்றவன் தனது வேகநடையில் வெளியே நடந்துவிட்டான்.
“அடிக்கடி வா தம்பி..” என்றவாறே விடைகொடுத்தாள் தமயந்தி.
வாயிலுக்கு வந்தவன், உள்ளுணர்வு உந்த அண்ணாந்து பார்க்க, தவறாது மொட்டை மாடியில் நின்று அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷண்மதி. இவன் பார்ப்பதை அறிந்ததும், வேகமாக உள்ளே திரும்பியும் சென்றுவிட்டாள்.
‘இன்னும் எத்தனை நாளுன்னு பார்க்கறேனுங்க அம்மணி' மனதிற்குள் நினைத்தவனாக, தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இரவை பகலாக்கிக் கொண்டிருக்கும் சோலார் விளக்குகளின் ஒலியில், சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம்.
ரவியின் கைகளில் கார் அத்தனை லாவகமாக சென்று கொண்டிருக்க, மீண்டும் மீண்டும் தனது அலைபேசியில் விடாமல் முயற்சித்துக் கொண்டிருந்தான் தருண்.
“டேய் மச்சான்.. அந்த ஃபோனுக்கு வாய் இருந்தா அழுதுடுன்டா... கொஞ்சநேரம் கழிச்சு தான் பண்ணேன். இல்லைன்னா நாளைக்கு ட்ரை பண்ணு. இப்பவே மணி பத்து ஆகப்போகுது. ஒருவேளை தூங்கிக்கூட போயிருக்கலாம்." ரவியின் குரலில் அவனை ஒரு அழுத்தப் பார்வை பார்த்தவன்,
“உன்னை கார்தான் ஓட்டச்சொன்னேன். உன் வெட்டிப்பேச்சால என் காதுல ஓட்டச்சொல்லல" என்றவனின் கடுப்பான பதிலில் சிரித்தான் ரவி.
“எதுகை மோனைலாம் நல்லாதான்டா இருக்கு. ஆனா, காரியத்துக்கு தான் ஆகுற மாதிரி தெரியலையே?" ரவியின் நக்கலில் அவனைப் பார்த்துச் சிரித்தான் தருண்.
‘சிரிக்கிறானே… இது சரியில்லையேடா ரவி' அவன் மனது எச்சரித்ததைப் போலவே தான் நடந்தது.
“என்னை இந்த பூனாவை விட்டுப் போகவே விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா மச்சான்?" அமைதியாக தருண் கேட்க, அவனது கேள்வியில் விழித்தான் ரவி.
“டேய் என்னடா இது.. இப்ப நம்ம ஊருக்கு கிளம்பறதுனாலும் நான் ரெடி. உனக்காக நான் அப்பாகிட்ட திட்டு வாங்கிட்டு இங்க உட்கார்ந்துருக்கேன்னு தெரியும்ல? அப்பறம் ஏன்டா இப்படிக் கேட்குற?” என்றான் ரவி.
“உன்னைக் கொன்னுட்டா.. நான் பூனா ஜெயில்லதான கிடக்கனும். அந்த அளவுக்கு நீ கிளப்புற கடுப்பு லிமிட் தாண்டிப் போயிட்டுருக்கு. என்ன செஞ்சுராலாமா?" நன்றாக அவனைப்பார்த்து திரும்பி வேறு உட்கார, தோழனின் பாசத்தில் மிரண்டு போனான் ரவி.
“அடேய் ராசா!! இனி உன்னை கேள்விகேட்டா என்னை என்னன்னு கேளு? இப்ப நீ பாட்டைக் கேளு" என்றவன் மியூசிக் ப்ளேயரை உயிர்ப்பிக்க பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.
இரவு நேரத்து ஏகாந்தத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த இனிமையான பாடல்கள் கூட, அவனது மனதுக்கு இனிமையைத் தரவில்லை. என்னதான் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும், நண்பனின் தேடலை நினைத்து, கவலையாகத் தான் இருந்தது ரவிக்கு.
மனதை அழுத்திக்கொண்டிருக்கும் நங்கையின் நினைவுகளை, ஒலித்துக் கொண்டிருந்த காதல் பாடல்கள் உயிர்ப்பித்துக் கொண்டிருக்க, அவன் கண்களை நிறைக்கும் விதமாக, எண்ணத்தின் நாயகியே எதிர்பட்ட நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்க, பரபரப்பானான் தருண்.
“டேய் ரவி.. வண்டியை நிறுத்து. தனிஷா தான் போறா…" என்றவனின் பரபரப்பில் குழப்பமானான் ரவி. அவனுக்கு அவளது பின்பக்கம் தான் தெரிந்தது.
“மச்சான் வேற ஏதாவது பொண்ணாக் கூட இருக்கும். நிதானாமா நாளைக்கு போய் பேசு" ரவி காரின் வேகத்தை அதிகப்படுத்த, அவன் சொல்லி முடிக்கும் முன்பே, காரின் கதவை திறந்து சாலையில் குதித்து, நடைபாதையில் சென்ற பெண்ணை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் தருண்.
அத்தியாயம் - 4