எந்நாளும் நீ… என் மோகினி…!!

தலைப்பு: #எந்நாளும் நீ.. என் மோகினி !!

நாயகன்: விஷ்ணு வல்லப ரெட்டி

நாயகி: அனுஜா ஸ்ரீ

முன்னோட்டம்:

“சார்.. சார்..ரெட்டி சார் வந்தாச்சு” தோட்ட வேலை பார்க்கும் முதியவர் பரமசிவம் வேகமாக வந்து பி.ஏவிடம் தகவல் சொல்லி விட்டு போக,

“அய்யோ.. இந்த ஆள வேற இப்ப கூப்பிட்டா வரமாட்டானே? சொந்த பொண்டாட்டி கிட்ட கூட இவ்வளவு நேரம் இவன் இருந்து நான் பார்த்ததில்லை” சலித்துக்கொண்டே அந்த தொகுதியின் மந்திரியான ஜனார்த்தனனை அழைக்க அறைப்புறம் திரும்பியவன் பின்பு சுதாரித்தவனாக, அவரது அலைப்பேசிக்கு அழைப்பெடுத்தான்.

அன்றைக்கு அவனுக்கு அதிர்ஷ்டம் போலும், முதல் அழைப்பிலேயே ஏற்றுவிட்டார் அவர்.

“என்னைய்யா?! முக்கியமான நேரத்துல தான் உனக்கு கூப்பிட தோணும்” எரிச்சலுடனே பேச,

“சார் ரெட்டி சார் உங்களை பார்க்க வநதுருக்காரு சார்” என, மூலைக்கொன்றாக கிடந்த ஆடைகளை அவர் சேகரிக்க முயல, அவருக்கு துணை கொடுத்து கொண்டிருந்தவளோ, சற்றுநேரம் பொறுக்குமாறு ஜாடை செய்து விட்டு எடுத்துக் கொடுத்தாள்.

வேகமாக பேசிவிட்டு வைத்தவர்,” இந்த கடன்காரன் எதுக்கு இங்கயே வந்துருக்கான் தெரியலை தயாம்மா.. நீ எதுக்கும் அவன் கண்ணுல படாத.. சின்னவளையும் கண்ணுல பட விடாத. அவளைத்தான் எனக்கு எப்ப கொடுக்கப்போறன்னு தெரியலை?” ஒருவித பெருமூச்சுடன் கைக்கடிகாரத்தை அணிய முயன்றவர் ஸ்ட்ராப்பை திருப்பி போட, அது கொக்கியில் சிக்கவில்லை.

“முதல்ல வாட்ச்ச ஒழுங்கா போடுங்க மாம்ஸ்.. அப்பறமா மற்றதை வாட்ச் பண்ணலாம். நானும் அவளும் உங்களுக்குதான்னு சொல்லிதானே எங்க இரண்டு பேரையும் அந்த ப்ராஸ்டியூட் பொம்பளை கிட்ட இருந்து பேரம் பேசி கூட்டிட்டு வந்திங்க. வச்சுக்கறதா இருந்தாலும் அடுத்தவன் கைபடாத பொண்ணா வேணுன்னு கூட்டிட்டு வந்து, இப்ப வரைக்கும் எவன் கண்ணிலயும் எங்களை படாம வச்சுருக்கிங்க பாருங்க, அதுக்காகவே காலம்பூரா உங்க காலடில கிடப்போம். கவலைப்படாம கிளம்புங்க” என்றவளுக்கு தன் தாய் அனுபவித்த கொடுமைகள் கண்முன்னே வந்து போனது.

வனிதையர் குலத்தில் பிறந்து விட்டு, பட்ட பாடு கொஞ்சமா?!

அதில் அவள் கண்கள் சற்றே கலங்க,” ஹே.. இதுக்குதான்டி..இந்த பேச்சை நான் எடுக்கறதே இல்லை. கலங்காத.. கவனமா இரு.. ” என்றவர் வேகமாக படியிறங்க, ஐம்பத்தைந்து வயதிலும் நாற்பது வயது ஆண்மகனை போல் வேகம் குறையாதவரை கண்டு சிரித்தவள், தனது தங்கையை தேடிச்சென்றாள்.

###########

“சார் இவனை பார்க்க இங்க வரைக்கும் வரனுமா?”அவனின் காரியதரிசியான அசோக் புலம்ப, எதிர்புறம் அமர்ந்திருந்தவனின் அழுத்த பார்வையில் அவனது வாய் தானாக மூடிக்கொண்டது.

“வேலையை எழுதிக் கொடுக்க ஆசையிருந்தா சொல்லிடு அசோக்” வல்லபனின் பதிலில் மிடறு விழுங்கியவன், வேகமாக இறங்கி வந்து எதிர்ப்புற கதவை திறக்க, இறங்கி நின்றவனை வேகமாக வந்து வரவேற்று விட்டு சென்றான் ஜனாவின் பி.ஏ.

நாட்டின் உள்துறை மந்திரி என்பதால் முதலில் எஸ்கார்ட்டுகளுடன் அசோக் பரிசோதிப்புக்கு செல்ல,

“டேய் விச்சு நில்லுடா.. நில்லு சொல்றேன்ல” எதிர்ப்புற தோட்டத்தில் கேட்ட குரலில் திரும்பி பார்க்க, பாவாடை சட்டை அணிந்திருந்த பருவ மங்கை ஒருவள்  அணிலை துரத்திக்கொண்டிருந்தாள்.

“பரமு தாத்தா.‌‌. அவனை பிடிங்க” என்றவள் அவரை ஏவ,

“அணில்குட்டியை பிடிக்க முடியுமாம்மா? ஆனாலும் அணிலுக்கு பேரு வச்சவங்க நீங்கதான் சின்னம்மா” தளர்ந்த நடையுடன் அவர் செடிகளுக்கு கொத்திக் கொண்டிருக்க,

“நான் அணிலுக்கு பேரு வச்சேன் சரி.. நீங்க சோறு வச்சிங்களா தாத்தா. பாருங்க இன்னைக்கு சாப்பாடு வைக்க லேட் ஆனதும் ஓடிட்டான்” சிணுங்கியவாறே சற்று தள்ளியிருந்த அவுட்ஹவுசை போன்ற வீட்டுக்குள் இரண்டிரண்டு தவ்வலில் ஓட, நடமாடும் மயூரியாக ஐந்தே நிமிடங்களில் கண்களையும் மதுரக்குரலால் காதுகளையும் நிறைத்துவிட்டவளை கண்டு மனம் சொக்கிப்போக, பருந்தின் பார்வையில் பட்டுவிட்டதை அறியாது உள்ளே சென்றுவிட்டாள் பாவை.

#######

“தாத்தா.. ” கைதட்டி அழைத்தவனை கண்டு நடுங்கிக் கொண்டே ஓடிவந்தார் முதியவர். தினம் தினசரிகளில் பார்க்கும் முகம் ஆயிற்றே!!

“யார் அது?” ஒற்றைக் கேள்வி மட்டும் கேட்டவனின் தோரணையில் பிரமித்தவராக, திரும்பி பார்க்க ஜனாவின் ஆசைநாயகி ஸ்ரீவித்யா சென்று கொண்டிருந்தாள். இதற்குள் விஷ்ணுவின் அலைபேசி ஒலிக்க, அவன் சற்று தள்ளி பேசி முடித்தவன் திரும்பி வர,

“அவங்க அம்மா சார்” என, அவன் இளையவளை பற்றி கேட்க, மூத்தவளை பார்த்து சொன்னார் அவர்.

“அம்மாவின் பேர் என்னவோ?” அவனது சிரிப்பை வியப்பாய் பார்த்தவராக,

“ஸ்ரீவித்யா சார்” என, அவர் சொல்லி முடிக்கும் முன்பே அவரது கை இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளால் நிறைந்திருக்க, கொடுத்த மகராசன் தான் அங்கு தென்படவில்லை, சற்று தேடி பார்க்க, அவன் வீட்டு வாயிலில் நுழைவது தென்பட்டது.

#############

“சார்? இதுக்கு வேறவழியே இல்லையா? ப்ளீஸ் கொஞ்சம் தயவு பண்ணுங்களேன்” தன்னைவிட இருபத்தைந்து வருடம் இளையவனிடம் கெஞ்சுவதை நினைத்து உள்ளூற எரிச்சல் மூண்டாலும் இப்போதைக்கு இது ஒன்றுதான் வழியாக தெரிந்தது ஜனாவிற்கு.

“கொஞ்சநஞ்சமா அடிச்சுருக்கிங்க? ” கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் ஒற்றை கால் செருப்பு அவர் மீது பட்டுவிழ, குனிந்து வேகமாக அவனது காலில் மாட்டி விட்டார் அவர்.

அவரது செயலை கண்டு எள்ளலாக நகைத்தவன்,

“இதுக்கு ஒரே ஒரு வழி இருக்கு?” ஜனாவின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம்.

“சொல்லுங்க சார்..”

” நாளைக்கு இந்த வீட்டம்மா என்கூட கூஃபேல கம்பெனி கொடுக்கனும். திருவள்ளூர் ஸ்டேஷன்ல ஏறி ஹைதராபாத்ல இறங்கிக்கலாம்” என்றவன்,

“அசோக் ஏற்பாடு பாதுகாப்பா இருக்கனும்” கைகூப்பி விஷயம் முடிந்து விட்டதென, வெளியே சென்றுவிட, வெளிறிப்போய் அமர்ந்தார் ஜனா. அவருக்குத்தெரியும், இனி இந்த விஷயம் நடந்தே தீர வேண்டுமென்பது.

###############

“விடுங்க மாமா. நான் சகிச்சுக்கறேன்” பேசி முடிக்கும் முன்பே ஜனாவிட்ட அரையில் அறையின் மூலையில் கிடந்தாள் வித்யா.

“உன் இன புத்தியை காமிக்கிறியாடி ** மவளே. ஆசைநாயகியா இருந்தாகூட நீ என்கூட மட்டுந்தான் இருக்கனுன்னு நான் என்னவெல்லாம் பண்ணேன். எல்லாம் தெரிஞ்சும் உனக்கு இப்படி கேட்க எப்படி மனசு வந்துச்சு?” ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டாள் அவள்.

“மன்னிச்சுடுங்க.. ” அவரது காலை பிடிக்க,

“சரி..சரி.. எழுந்திரு.. ” அவள் உதட்டோரம் வழிந்த ரத்தத்தை தனது வேஷ்டியால் ஒற்றி எடுத்தவர்,

“ஒரு ப்ளான் இருக்கு‌‌” என, கேள்வியாய் பார்த்தாள் அவள்.

“எப்படியும் உன் தங்கச்சி எனக்கு உதவ போறதில்லை? கேன்சர் இருக்குன்னு உறுதியாயிடுச்சு. சாகப்போற ** எவனுக்கு இரையானா என்ன? அவளும் உன் ஜாடை தான? கிட்ட பார்த்தா தான் வயசு கம்மியா தெரியும். நாளைக்கு அவளை அனுப்பிடு. மறக்காம இந்த ஜூஸ் பாட்டிலையும் அவ கைல கொடுத்தனுப்பி அவனுக்கு கொடுக்க சொல்லு” என பேச நா எழவில்லை வித்யாவிற்கு?! என்ன சொல்லுவாள்? எதையென்று சொல்லுவாள்?!

#############

நடுக்கத்துடன் கையில் வைத்திருந்த குளிர்பான பாட்டிலை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த அனுஜாவிற்கு, தமக்கை பேசியதே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“குட்டிம்மா.. எப்படியாவது அவன்கிட்ட இருந்து தப்பிச்சுடு. இந்த ஜூஸை பிடி” சொல்லி முடிப்பதற்குள்,

“தயா எவ்வளவு நேரம்?! ” ஜனா பொறுமையில்லாமல் அழைக்க, பதற்றத்தில் குளிர்பானத்திலிருக்கும் விஷத்தை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாள் வித்யா.

இதோ வாழ்வின் முக்கிய போராட்டக்கட்டத்தில் நின்று கொண்டிருந்தவளுக்கோ யோசித்து யோசித்து நா வறள, கையிலிருந்த குளிர்பானத்தை முழுதாக காலி செய்திருந்தாள் அவள்.

#########

வண்ண உடைகளுக்கு விடுதலை கொடுத்து பல வருடமானவனுக்கு அன்று கலர் டீஷர்ட் அணிந்திருந்தது ஏனோ ஒருவித இதத்தை கொடுத்தது.

ஸ்டேஷன் வந்ததும் கூஃபேயில் ஏறியவளை நயனங்களில் நிரப்பியவன்,” உள்ள வா” என்றழைக்க, வைத்திருந்த கைப்பையை மார்போடு அழுத்திப்பிடித்துக்கொண்டே வர, எழுந்து கூஃபேயின் கதவை அடைத்தவன், வெளியில் நின்றிருந்த அசோக்கிற்கு சிக்னல் கொடுக்க, அவனது பாதுகாவலர்களுக்கு கட்டளை இட்டவாறே நகர்ந்தான் அவன்.

“உட்காரு” என, கலக்கத்துடன் அமர்ந்தவளை பேச வைக்கும் முயற்சியாக,

“உன் பெயர் என்ன?” என,

“அனுஜா..” என்றவளை குழப்பமாக பார்த்தான் அவன்‌.

“அப்போ ஸ்ரீவித்யா?” என்றவன் பார்வை கூர்மைபெற,பார்வையை அவனது சவரம் செய்யப்பட்ட கன்னத்தில் பதித்தவள் சுதாரித்தவளாக,

” அ..அதும் என் பேர் தான். அனுஜாஸ்ரீவித்யா” என, புன்னகை பூத்தது அவனது முகத்தில்.

“அலைமகள், கலைமகள், மலைமகள் மூணு பேரையும் பேருல வச்சுகிட்டு , ஒழுக்கமா பிழைக்காம,இந்த தொழிலுக்கு ஏன் வந்த அம்மாயி!”என்றவனின் முகம் கோபத்தில் கொதிக்க, பயந்து எழுந்து கதவை திறக்க போனாள் அவள்.

“ஏய்.. எங்க போற?!” என்றவன் அவளது கைபிடித்து இழுக்க, அடுத்த நொடி அவன்மேலேயே வாயில் நுரை தள்ளி சரிந்து விழுந்தாள் அவள்.

“அச்சோ அம்மாயி.. பங்காரம்.. என்னாச்சு உனக்கு?” கோபமுகம் கெஞ்சும் முகமாக மாறியதில் விரக்தி புன்னகை அவள் முகத்தில் பரவ, உயிர் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டிருந்தது.

“அந்த ஃப்ராடு கிழவனுக்கு நான் உபயோகப்படமாட்டேன்னு? எனக்கு விஷம் வச்சிட்டான் போல” சந்தோஷமாக சிரித்தவள்,

“என்னை காப்பாத்திடாத என்ன? இப்படியே விட்டுடு விஷ்ணு” மழலையை போல் பேசியவள், கண்களை மூடி சரிய,

“அசோஓஓஓஓக்… ” விஷ்ணுவின் காட்டு கத்தலில் ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து முதலில் நிறுத்திவிட்டு தனது எஜமானனிடம் ஓடிவந்தான் அவன்.

#என்மோகினி❤️

டீசர் 2:

இறகைப்போன்ற இமை இரும்பாக கனக்க, முயன்று கண்களை திறந்தவளுக்கு எங்கும் வெண்மையின் தரிசனம்.‌

“ஓ நான் சொர்க்கத்துக்கு வந்துட்டேனா?” என்றவள் எழுந்து அமர, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் அந்த செவிலிப்பெண்.

“என்ன ஏஞ்சல் நர்ஸ் ட்ரெஸ் போட்டுருக்கு?” என்றவளின் கேள்வியில் அடக்கமாட்டாது சிரித்த செவிலிப்பெண்,

“மேடம் நீங்க சாகலை.. உயிரோடுதான் இருக்கிங்க” சிரிப்பில் கையில் குலுங்கிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய  ட்ரேயை அருகிருந்த மேஜையில் வைக்க,

“அய்யய்யோ நான் சாகலையா?” என்றவள் கையை உதறிக்கொண்டு கட்டிலில் ஏறிக்குதிக்க,

” அச்சோ மேடம் கீழ இறங்குங்க” செவிலியின் குரலை காதில் வாங்காது அந்த இடத்தை கண்களால் சுழற்றிப்பார்க்க, அவளுக்கு நேர் எதிரே வல்லபன் அமர்ந்திருக்க, அவன் பின்னே வாயைப்பொத்தி சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான் அசோக்.

அவள் பார்வை அவன்மேல் அதிர்வாய் உறைந்து நிற்க,” மிஸ்டர்.மிர்ச்சி” அவள் வாய் தானாய் முனகியது.

அவளது முணுமுணுப்பை அறிந்தவனாய்,” உனக்கு சொர்க்கத்தை காண்பிக்க தானே நான் வந்திருக்கேன் பங்காரம்” என்றவனை கண்டு சப்தநாடியும் ஒடுங்க, சுவரோடு ஒண்டி நின்றாள் அவள்.

####..

“டெத் சர்டிஃபிகேட் வாங்கியாச்சா?” அசோக்கிடம் கேட்டவனின் பேச்சை காதில் வாங்காது தன்னிலை யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அனுஜா.

அவன் கேட்டதை அசோக் நீட்ட,” முட்டாள்.. இது என்ன? ஸ்ரீவித்யானு இருக்கு. அனுஜா தான் இவளுடைய பெயர்” அதுவரை செயல்படாத நரம்புகள் மூளையிலடிக்க,

“அச்சோ.. டேய்.. எங்கக்காவ என்னடா பண்ணிங்க? ” என்று கத்தியவளை அசோக் விந்தையாய் பார்க்க,

“ரொம்ப சூடாயிட்ட போல? மோர் குடிக்கலாமா பங்காரம்?” என்றவனை கண்டு ஆத்திரம் ஒருபுறமும் தமக்கையின் நிலை குறித்து கவலை ஒருபுறமுமாக அழுகை வந்தது அவளுக்கு.

###..

“அதென்ன அனு சாரை மிஸ்டர்.மிர்ச்சின்னு கூப்பிடறிங்க? அவரும் ஒன்னும் சொல்லாம இருக்காரு” வீட்டு முற்றத்தை பெருக்கி கொண்டிருந்தவளை பார்த்து அசோக் கேட்டாலும், சுற்றும் முற்றும் அவன் கண்கள் அலைபாய்ந்து கொண்டு தான் இருந்தது. பின்னே இவளிடம் பேசவே தடை விதிக்கப்பட்டிருக்கிறதே?

“இவ்வளவு பயத்தோட என்கிட்ட எதுக்குண்ணா கேட்கறிங்க?” நிமிர்ந்து பார்த்தவளின் களைத்த தோற்றம்  கண்டு மனதுக்கு கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

“என்னண்ணா பரிதாபமா இருக்கா? அப்ப என்னை எங்காவது கண்காணாத இடத்துல கொண்டு போய் விட்டுடுங்களே?” என, அசோக்கின் முகத்தில் கவலையின் ரேகைகள்.

அவனது கவலையை பொறுக்க முடியாது,” சரி விடுங்கண்ணா‌. எங்க தலையெழுத்து போல இது. எவனாவது ஒருத்தனுக்கு ஆசைநாயகியா இருக்கனுங்கறது.

உங்க முதலாளி என்ன பார்த்ததுல இருந்து “கார பன்னு.. பன்னு காரம்” சொல்றாரில்ல, அதான் நானும் பதிலுக்கு ” மிஸ்டர். மிர்ச்சின்னு” பேரு வச்சேன் எப்படி?” சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டவளின் குறும்பை ரசித்தவன்,

“அது பங்காரம் தங்கச்சி.. தங்கம்னு அர்த்தம்” என,

“இந்த அர்த்தம் உங்க முதலாளிக்கு தெரியுமா?” ஒற்றை கேள்வியில் அவளிருக்கும் நிலையை உணர்த்தி விட, வல்லபனின் போக்கில் விளங்காத புதிரை நினைத்து கவலையுடன் திரும்பினான்  அசோக்.

###….

“வி.வி.ஆர் நீங்க பண்றது சரியில்ல? அவளை நான் எனக்காகவே வளர்த்தேன்? அக்காக்கும் தங்காச்சிக்கும் சும்மா கொட்டி அழ நான் என்ன கேணையா? மரியாதையா அவளை என்கூட அனுப்பிடு” பெண்பித்து தலைக்கேறிய நிலையில் பணம், பதவி அனைத்தும் பின்னுக்கு போக, சரிக்கு சரியாக நின்று விஷ்ணுவுடன் மல்லுக்கட்டினார் ஜனார்த்தனன்.

“யாரைக் கேட்டு நீங்க வந்திருக்கிங்க மிஸ்டர் ஜனார்த்தனன்? செத்து போனவளையா? அதுக்கு வேற இடம் இருக்கு?” என்றவன் டெத் சர்டிஃபிகேட்டை அவரது முகத்தில் விசிறி எறிய, அதைக்கண்டெல்லாம் அசரவில்லை ஜனா.

#என் மோகினி❤️

டீசர் 3:

“முட்டாள் உங்களை எல்லாம் எதுக்கு இங்க வேலைக்கு வச்சுருக்கேன்?” அவர்களது ராஜைய்யாவின் கோபத்திற்கு ஆளானதை நினைத்து, அங்கு அமைதி நிறைந்திருக்க, மறுபுறம் அசோக்கின் கன்னத்தின் வீக்கத்தில் ஐஸ்கட்டிகளை வைத்து அவனது மயக்கத்தை தெளிவித்து கொண்டிருந்தார் திலகம்மா.

அங்கு நாட்டு வைத்தியம் பார்க்கும் பெண்மணி, அனுவின் கைகளை தேய்த்து ஏற்றி இறக்கி என, கடைசியில் தொண்டை குழியில் வைத்து அழுத்தி இறக்க, கொக்கரிக்கும் கோழி போல், தண்ணீரை தொண்டையிலிருந்து தள்ளிவிட்டாள் அவள்.

“ராஜைய்யா இனி இவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இப்படி மண்ணுல ஈரத்துல உட்கார்ந்திருக்கிங்களே?” என்றவரின் பேச்செல்லாம் அவன் காதுகளில் விழவில்லை.

தனது உடையும்‌‌ ஈரமாகத்தான் இருக்கிறது என்பதை மறந்தவனாக வேஷ்டியின் தலைப்பால் அவள்‌ முகம் துடைக்க, விழித்தவளுக்கு முதலில் கண்கள் கலங்கலாக தான் தெரிந்தது.

அவள் விழித்ததும் திலகம்மா வேகமாக அவளருகே வர, அவனது மடியிலிருந்து அண்ணாந்து பார்த்தவளுக்கு அப்பொழுது தான் வல்லபனின் முகம் தெளிவாக தெரிந்தது.

“அனு… ” அவன் மெதுவாக அழைக்க,

“ஹா..ஹா..பங்காரம் சொல்லு” அவள் சொல்லி சிரிக்க, அவளை கைகளில் தூக்கிக்கொண்டு அசோக்கை அவன் பார்த்த பார்வையில் பரமலோகத்து பிதா கண்களுக்கு தெரிய,

“கிணத்துக்குள்ள விழுந்ததுல இவளுக்கு மூளை குழம்பிடுச்சோ” அசோக் வாய்விட்டே புலம்ப,

“ச்ச..ச்ச.. அப்படி எல்லாம் இருக்காது சார்” வேலைக்கார மணி ஆறுதல்படுத்தினான்.

“ஏன் மணி? இங்க எங்க மலிவான விலையில் நிலம் கிடைக்கும்” சம்பந்தமில்லாது கேட்டவனை புரியாது அவன்‌ பார்க்க,

“எப்படியும் இன்னைக்கு ரெட்டி சார் என்னை கொன்னுடுவாரு? என் சார்பாக நீ அங்க ஒரு நினைவு மண்டபம் கட்டி விட்டுரு” என,

“அட! போங்க சார்.. செத்தபிறகு பார்க்கவா போறிங்க? நான் சேஃபா சுடுகாடு கொண்டு போயிடறேன் சார்” என்றவனின் நக்கலில் நொந்து போனான் அவன்.

######

தரியில் விளையாடும் நூலைப்போல் முன்னும் பின்னும் முல்லைப்பூக்களில் விளையாடி கொண்டிருந்த செங்காந்தள் விரல்களை அடிக்கண்களால் நிரப்பிக்கொண்டே அவன் உணவுண்ண, அப்பொழுது தான் அவனது உணவு தட்டில் காலியாகி இருப்பதை கண்டவள், சுற்றிலும் பார்க்க திலகம்மா அருகில் இல்லை.

கட்டிக்கொண்டிருந்த பூவை அருகில் வைத்தவள், உணவை எடுத்து கொண்டு பரிமாற வர, கைநீட்டி தடுத்து விட்டான் வல்லபன்.

அவள் அவன் முகத்தையே பார்க்க,

“பரிமாறினா பொண்டாட்டி ஆகிடலான்னு நினைக்கிறியா பங்காரம்?” என, அவளது கண்கள் கலங்கியது.

அவளது கைகளில் இருந்த பாத்திரத்தை வாங்கியவன் பரிமாறி கொள்ள, மீண்டும் அவன் முன்னே அவள் பூகட்ட அமர்ந்து விட்டாள்.

அவளது இந்த தைரியத்தில் புன்னகை மலர,”சிதறப்போற பூவை இவ்வளவு நேரம் எதுக்கு உட்கார்ந்து கட்டுற பங்காரம்?” அவன் வேண்டுமென்றே பேசுகிறான் என்று புரிந்து கொண்டாள்.

“இந்த அடிமைக்கு பதில் சொல்ல மட்டும் அனுமதி இருக்கா ராஜைய்யா” என , புரை ஏறியது வல்லபனுக்கு.

அவள் அருகே இருந்த தண்ணீர் குவளையை அவன் பார்க்க,” பொண்டாட்டிக்கு மட்டுந்தான் தலையில் தட்டுற உரிமை இருக்கும் வல்லபா” என்றவள் எழுந்து செல்ல, “சபாஷ்” வல்லபனின் உதடுகள் தானாக முணுமுணுத்தது.

#என்மோகினி❤️

This Post Has 15 Comments

  1. Mithravaruna

    Superb

    1. Oh hani

      Please Rerun this story sis

  2. Indhu Mathy
    Indhu Mathy

    Wow.. 😍😍😍 teaser ellam super sis. Sema interesting a irukku.. waiting for ud..

  3. Chittijayaraman

    Nice teasers dear thanks.

  4. vasumathi Stalin
    vasumathi Stalin

    Woww வல்லபன்😍 ஒப்பு கொள்ள வேண்டிய உண்மை 👍🏻 ஜனா😡👊🏻

  5. Deepa Venkat
    Deepa Venkat

    Hi…
    இன்னிக்கு தான் நான் இந்த அக்ஷரம் நாவல்ஸ் பேஜ் நியூ வா லாகின் பண்ணேன்.. ஃபர்ஸ்ட் உங்க என் மோகினி டீஸர் தான் படிச்சேன்.. WoW.. Really awesome..

    1. Ruthi Venkat
      Ruthi Venkat

      நன்றி டியர்☺️☺️😍.. கதை ஆரம்பிச்சாச்சு☺️

  6. Meenakshi

    மோகினி கதை தொடர்ந்து வருகிறதாi am missing it

  7. Poormila

    Story nailla irruku next episode kedeikuma

  8. Poormila

    Next episode ku yeinne paindrethu akka first time unge page novel padeche but ipdi aageduche

  9. Mavithra

    Please rerun the story

Leave a Reply